வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள அரசாங்கம் திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகளை உருவாக்கி வருகின்றது - நாமல் ராஜபக்ச

 

வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள அரசாங்கம் திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகளை உருவாக்கி வருகின்றது - நாமல் ராஜபக்ச


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதை மறைப்பதற்காக அந்த விடயத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுகளை உருவாக்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி பௌத்தபீடாதிபதிகளின் உதவியை நாடியுள்ளார் என வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார்.

இந்த தகவலை முற்றிலும் பொய்யானது என மறுத்துள்ள நாமல் ராஜபக்ச கௌரவத்திற்குரிய மதத்தலைவர்களை அரசியலிற்குள் இழுக்கும் அவமானகரமான முயற்சி இது என தெரிவித்துள்ளார்

தனது பதவிக்காலத்தின் முதலாவது ஆண்டில் , தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள அரசாங்கம் தற்போது தனது தோல்விகளை மறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.அதனை மறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக பௌத்தமத தலைவர்களின் உதவியை நாடியுள்ளார் என்ற கதையை பரப்பியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது முன்னாள் ஜனாதிபதி மீதான தாக்குதல் மட்டுமல்ல ,நமது மிகவும் மதிக்கப்படும் மத தலைவர்களை அரசியல் சேற்றில் சிக்கவைக்கும் முயற்சி என குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் பொய்யானவை அரசாங்கம் பொலிஸ்திணைக்களத்தை அரசியல் மயப்படுத்த முயல்கின்றது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்காக நீதித்துறையையும் அரசியல் மயப்படுத்துகின்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நானும் எனது குடும்பத்தவர்களும் அச்சமின்றி தொடர்ச்சியாக அரசியல் நோக்கத்துடனான விசாரணைகளை எதிர்கொண்டுள்ளோம்,என அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021