யாழில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது!

 

யாழில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது!



யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் இன்று சனிக்கிழமை (28) கரையொதுங்கியுள்ளது.

மணல்காட்டை சேர்ந்த 38 வயதுடைய மீனவரின் சடலமே கரையொதுங்கியுள்ளார்.

சடலமாக கரையொதுங்கிய மீனவர் மணல்காட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை (26) அதிகாலை கட்டுமரத்தில் தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார்.

கடலுக்கு சென்ற மீனவர் வழமையாக காலை 09 மணியளவில் கரை திரும்பி விடுவார். ஆனால் அன்றைய தினம் அவர் கரை திரும்பாததால் , சக தொழிலாளிகள் அவரை தேடி கடலுக்கு சென்ற வேளையில், அவரது கட்டுமரம் மாத்திரம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.

அதனை மீட்டு மீண்டும் கரை சேர்த்த தொழிலாளிகள் காணாமல்போன மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

அதேவேளை, சட்டவிரோத கடலட்டை தொழில் செய்பவர்களின் படகு கட்டுமரத்தில் மோதி விபத்தினை ஏற்படுத்தி இருக்கலாம் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !