சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் இரண்டு சீன பிரஜைகள் கைது !

 

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் இரண்டு சீன பிரஜைகள் கைது !


சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சீன பிரஜைகள் கடந்த வியாழக்கிழமை (24) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திரிவனகெட்டிய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சீன பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 42 வயதுடைய இரு சீன பிரஜைகள் ஆவார்.

கைதுசெய்யப்பட்ட இரு சீன பிரஜைகளில் ஒருவரிடமிருந்து 800 வெளிநாட்டு சிகரட்டுகளும் மற்றையவரிடமிருந்து 600 வெளிநாட்டு சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021