மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் கடத்தல் - ஒருவர் கைது

 

மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் கடத்தல் - ஒருவர் கைது



மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில், சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த ஒருவர், காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாநாயக்கா தெரிவித்ததாவது,

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கிய வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, அனுமதிப் பத்திரம் இன்றி மணல் ஏற்றிய உழவு இயந்திரம் கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து உழவு இயந்திரத்தை இயக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் உழவு இயந்திரத்துடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !