வவுனியா நெடுங்கேணியில் வீட்டிற்கு செல்லும் நடைபாதையில் ( ஒழுங்கை) உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழப்பு

 வவுனியா நெடுங்கேணியில் வீட்டிற்கு செல்லும் நடைபாதையில் ( ஒழுங்கை) உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழப்பு



வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம்  பகுதியில், நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டுக்கு செல்லும் நடைபாதையில் ( ஒழுங்கையில் ) நித்திரை செய்துகொண்டிருந்த போது அவரது மைத்துனரால் செலுத்தப்பட்ட ரிப்பர் வாகனம் குறித்த குடும்பஸ்த்தர் மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலையே உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது


இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருகையில் தனது வீட்டுக்கு செல்லும் ஒற்றையடி நடைபாதையில் (ஒழுங்கையில்) நேற்றிரவு படுத்து உறங்கிய இளைஞனை கவனிக்காத  ரிப்பர் ரக வாகனத்தைச் செலுத்தி வந்த மைத்துனர் வீடொன்றில் சல்லிக்கல்லினை பறித்துவிட்டு வாகனத்தை திருப்பியுள்ளார். இரவு நேரமாகையால் குறித்த ஒழுங்கையில் இளைஞன் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில்  வாகனம் ஒழுங்கையில் படுத்திருந்த இளைஞன் மீது ஏறியுள்ளது. இன்று காலையிலே குறித்த இளைஞன் வாகனத்துள் நசுங்கி நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதை அறிந்து மைத்துனரான வாகனச்சாரதி நெடுங்கேணிப் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக அறிய முடிகிறது

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !