Posts

கடல் அரிப்பை தடுக்க 12 மில்லியன் செலவில் நிந்தவூர் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பம்.

Image
 கடல் அரிப்பை தடுக்க 12 மில்லியன் செலவில் நிந்தவூர் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பம்.   பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில்  கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. முதற் கட்டமாக இத்திட்டம் நிந்தவூர் கடற்கரை சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இதற்கென 12 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட உள்ளதுடன் இது மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகளில் தற்போது நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றன. மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற பகுதிகளில் கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைப்பது அவர்களின் நாளாந்த தொழிலுக்கு தடையாக அமையும் என்பதனால் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் இப்பகுதியில் (Geo bag) மண் மூடைகள் இடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளன. ஜியோ பேக் (GeoBag) பைகளில் மண் இட்டு நிரப்பி கடல் அரிப்பை தடுக்கும் முறைகள் எதிர்வரும் ஜனவரி மாதத...

நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஆகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை..

Image
 நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஆகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.. தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஆகஸ்ட் 30  திங்கட்கிழமைக்கு பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்பதை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டி உள்ளார். பலரின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறி உள்ளார். நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் நாட்டை தொடர்ந்து முடக்குவது சாத்தியமில்லை, அவர் சுட்டிக்காட்டினார். நாட்டை முடக்குவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு நாடும் தனது பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்று அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் கூறினார். ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் இலங்கை தற்போது 10 நாள் முடக்கத்தின் கீழ் உள்வாங்கப்படும்.  நாடு கடந்த சில நாட்களில் 4000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்களையும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 இறப்புகளையும் சந்திக்க நேர்ந்ததை தொடர்ந்து நாடு தழுவிய லாக் டவுன் விதிக்கப்பட்டது. வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்க தற்போதைய லாக் டவுனை நீட்டிக்க அரசு, எதிர்க்கட்சி மற்றும...

நாட்டை திறப்பது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

Image
 நாட்டை திறப்பது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல் நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, 30ம் திகதிக்கு பின்னர் நீடிக்கும் சாத்தியம் கிடையாது என்பதே, தனது தனிப்பட்ட கருத்து என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். நாட்டை முடக்கி, கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்பதனை, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார். பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, நாடு இம்முறை முடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். நாட்டை முடக்கி, முன்னோக்கி செல்வது சிரமமானது என்பதே, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் கருத்தாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை திறந்து வைத்த நிலையிலேயே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் இடத்திற்கு உலக நாடுகள் வந்துள்ளதாக அமைச்சர் கூறுகின்றார். இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளைய தினம் (27) தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி நாளைய தினம் கூடி, இ...

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இரண்டரை கோடி ரூபா பணத்தை பங்கிட்டு கொடுத்த நபர் #இலங்கை

Image
 ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இரண்டரை கோடி ரூபா பணத்தை பங்கிட்டு கொடுத்த நபர் #இலங்கை   களனி பிரதேசத்தைச் சேர்ந்த சீ. மஞ்சுள பெரேரா எனும்  வர்த்தகர், தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டரை கோடி ரூபா பணத்தை பங்கிட்டு கொடுத்துள்ளார். ஹுனுப்பிட்டிய நாஹேன பிரதேசத்திலுள்ள மக்களுக்கே இவர் இத்தொகையை 1000 ரூபா வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க அரசு ஆலோசனை.

Image
 மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க அரசு ஆலோசனை.   நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப் படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதியுடன் முடிவுறுத்தாமல் அடுத்த மாதம் 6ஆம் திகதிவரை அதாவது மேலதிக ஒருவார காலத்திற்கு நீடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது அமுலிலுள்ள பொதுமுடக்கத் துடன் கூடிய ஊரடங்கு வெறுமனே 10 நாட்களுக்கு மட்டுமே அமுலில் இருப்ப தாலும் கொரோளா நோயாளர்களின் எண் ணிக்கை மற்றும்... வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க அரசு ஆலோசித்து வருகின்றது. அத்துடன், அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் மரண வீதம் தொடர்ந்தும் அதிகரிப் பதாலும் குறைந்தபட்சம் மேலும் ஒரு வார காலத்திற்காவது முடக்கத்தை தொடர வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். எவ்வாறாயினும் நாளை வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதால் அதில் இந்த விடயங்களை ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்க அரச உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும...

கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு பல மத்தியநிலையங்களில் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை.

Image
 கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு பல மத்தியநிலையங்களில் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை.   நூருல் ஹுதா உமர் நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும்  கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 முதலாவது தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்று நிலையங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எம்.எம்.அல் அமீன் றிசாட் அறிவித்துள்ளார். தனது அறிக்கையில் மேலும், வொலிபேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதான வீதியில் அமைந்துள்ள சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, அல்-ஜலால் பாடசாலை முன்பாக அமைந்துள்ள கிளினிக் சென்டர் ஆகிய நிலையங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் நிந்தவூர் பிரதேச கற்பிணித்தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான கொவிட் தடுப்பு மருந்தேற்றல்.காலை 8:00 முதல் பகல் 2:00 மணிவரை நிந்தவூர் ம...

சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேச அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு

Image
 சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேச அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு   சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களில்  உள்ள அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பொன்று நேற்று (25) காலை முதல் மாலை வரை அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது. பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக கட்டணங்கள் அறவிடுவது, பொருட்களினை பதுக்கி வைப்பது தொடர்பான பொது மக்களினால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ண தலைமையிலான குழுவினரால் குறித்த தீடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார். -பாருக் ஷிஹான்-