ஞானசார தேரரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது... இதனை எவ்வகையிலும் நியாயப்படுத்தவும் முடியாது.
ஞானசார தேரரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது... இதனை எவ்வகையிலும் நியாயப்படுத்தவும் முடியாது. நீதிமன்றங்களை அவமதித்து, சட்டத்தை மதிக்கத்தவரை ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றும் குழுவுக்கு நியமித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மாளிகைக்காடு நிருபர் ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பொதுபல சேனாவின் செயலாளர் கலக்கட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் எனும் இந்த தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இதுவரை பேணப்பட்டு வந்த மரபுகளும், மாண்புகளும் உடைத்தெறியப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட சட்டங்களை குறியாக வைத்து ஒரே நாடு ஒரே சட்டம் எனும் இந்த கொள்கை கடந்த நல்லாட்சியில் சமர்ப்பிக்கப்பட்டு இப்போதும் பேசுபொருளாக இருந்து வரும் விடயமாக உள்ளது. வெளிப்படையாக கூறுவதாயின் தமிழ் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தெற்கிலுள்ள பல அரசியல்வாதிகள் பேசிவந்தனர். ஆனால் இந்த விடயம் நாடு கொரோனாவில் சிக்கி இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டு தவிப்பதுடன் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ள இந்த காலப்பகுதியில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என ஸ்ரீலங...