Posts

கிண்ணியா நகரசபை தலைவர் கைது?

Image
 கிண்ணியா நகரசபை தலைவர் கைது? கிண்ணியாவில் படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்படலாமென அறியமுடிகின்றது. கிண்ணியா – குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்திற்காக படகு சேவைக்கு கிண்ணியா நகரசபை அனுமதி வழங்கியதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்த நிலையில் நகர சபைத் தலைவர் கைது செய்யடலாமென திருகோணமலை செய்திகள் தெரிவிக்கின்றன. நகர சபைத் தலைவரை விசாரணைக்கு அழைக்கவுள்ள பொலிஸார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக கவனம் ஈர்க்கும் கெளரி கிஷன் - அனகாவின் ‘மகிழினி’ பாடல்

Image
 தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக கவனம் ஈர்க்கும் கெளரி கிஷன் - அனகாவின் ‘மகிழினி’ பாடல் தன்பாலின ஈர்ப்பாளர்களை ஆதரிக்கும் விதமாக நடிகை கெளரி கிஷன்-அனகா நடிப்பில் ‘மகிழினி’ ஆல்பம் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஆணும் ஆணும்… பெண்ணும் பெண்ணும் காதலிப்பது திருமணம் செய்துகொள்வது ஃபேஷன் அல்ல. அது, பிறக்கும்போதே உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றம் என்பதை தன்பாலின ஈர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ உலகம் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் இதுகுறித்த புரிதல் மக்களிடம் இல்லை. ஒரு பெண், ஆணை காதலிப்பதற்கே எதிர்க்கும் சமூகம், பெண் பெண்ணை காதலிக்கவும்.. திருமணம் செய்துகொள்ளவும் ஏற்றுக்கொள்வார்களா என்ன? ”பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” என்பதை அழுத்தமாகவும் அழகாகவும் விழிப்புணர்வூட்டுகிறது ‘லெஸ்பியன்’ தன்பாலின ஈர்ப்பை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் ‘மகிழினி’ ஆல்பம் பாடல். மதன் கார்க்கி வரிகளில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் நேற்று வெளியான இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருப்பதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் 5 வத...

மட்டக்களப்பில் மீன்பிடிக்கச்சென்றவர் காணாமல்போயுள்ள நிலையில் அவர் சென்ற இயந்திரப்படகு மீட்பு!

Image
 மட்டக்களப்பில் மீன்பிடிக்கச்சென்றவர் காணாமல்போயுள்ள நிலையில் அவர் சென்ற இயந்திரப்படகு மீட்பு! மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து நேற்று மாலை கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றவர் காணாமல்போயுள்ள நிலையில் அவர் சென்ற இயந்திரப்படகு கிரான்குளம் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீனவர்களினால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்காக திராய்மடு,சுவிஸ்கிராமம் பகுதியை சேர்ந்த எஸ்.சுரேஸ்குமார் என்னும் நபர் இயந்திரப்படகில் மீன்பிடிக்கச்சென்றுள்ளார். நேற்று மாலை நேரத்திற்கு பின்னர் கடலில் சீற்றம் காணப்பட்ட நிலையில் குறித்த நபர் காணாமல்போயிருந்தார்.இந்த நிலையில் இன்று காலை குறித்த நபர் மீன்பிடிக்கச்சென்ற படகு கிரான்குளம் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் அவை மீட்கப்பட்டு முகத்துவாரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் அதில் மீன்பிடிக்காக சென்றவர் காணாமல்போயுள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் பயணம் செய்த படகினுள் அவர் பிடித்த மீன்கள் உள்ள நிலையில் ஒரு தொகுதி வலை மட்டுமே உள்ளதாகவும் மீதி...

சுகாதார பிரிவினர் வேலைநிறுத்தத்தில்

Image
 சுகாதார பிரிவினர் வேலைநிறுத்தத்தில் தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 15 தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று (24) காலை 7 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள பிரச்சினை மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணிக்கும் ஜனாஷாக்களை துரிதமாகப்பெற ஏற்பாடு

Image
 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணிக்கும் ஜனாஷாக்களை துரிதமாகப்பெற ஏற்பாடு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முஸ்லிம் மஜ்லிஸ் கல்குடாத்தொகுதி மக்களின் நலன்கருதி அங்கு மரணிக்கும் ஜனாஷாக்களை துரிதமாகப் பெறும் ஏற்பாட்டினை முன்னெடுத்துள்ளது. கல்குடாத்தொகுதி மக்களின் நலன்கருதி மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடமை புரிகின்ற முஸ்லிம் சகோதரர்களினால் இச்சேவை முன்னெடுக்கப்படுவதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணிக்கின்ற ஜனாஸாக்களை சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கமைவாக உரிய நேரத்திற்கு உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது. சேவையினைப் பெற்றுக்கொள்ள கீழுள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். A. H. Nufail (மீராவோடை ) -0777790397 Mr  Fanoos (வாழைச்சேனை)-0772883838 Mr Rafeek (ஓட்டமாவடி )- 0775821949

அரசின் அசட்டையே படகு விபத்துக்குக் காரணம்! - சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு!

Image
 அரசின் அசட்டையே படகு விபத்துக்குக் காரணம்! - சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு! கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இன்று இடம்பெற்ற படகு விபத்தானது, அரசின் அசட்டை காரணமாகவே நடந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. சபையில் சுட்டிக்காட்டினார். குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்து தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் இன்று சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.இதன்போது, அரசின் அசட்டை காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஹக்கீம் சுட்டிக்காட்டினார். மேலும், முறையான வகையில் அந்தப் படகு பாதை சேவை நடைபெறவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றியே கிண்ணியாவில் இந்தத் தரமற்ற தற்காலிக படகுப் பாதை இயங்கியுள்ளது எனவும், இது தொடர்பில் உடனடி விசாரணை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.இதேவேளை, கிண்ணியா படகு பாதை குறித்து பல தடவைகள் சுட்டிக்காட்டியபோதும் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என இம்ரான் மஹ்ரூப் எம்.பி. தெரிவித்தா...

புதிய அரசியலமைப்பு வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் என்கிறார் பிரதமர் மஹிந்த!புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Image
 புதிய அரசியலமைப்பு வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் என்கிறார் பிரதமர் மஹிந்த!புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதில் எவ்வித இரகசியமான விடயங்களும் இல்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, உலகளாவிய கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கினோம். மக்களின் பாதுகாப்பிற்காக நாம் உரிய நேரத்தில் சகல தீர்மானங்களையும் மேற்கொண்டோம் என்பதனை நாம் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும். அப்பணியை நிர்வகிப்பதற்காக பிரதமர் அலுவலகம் மேற்கொண்ட பணிகளை நினைவூட்டும் முகமாகவே நான் இவ்விடயத்தை கூறுகின்றேன். கொவிட் தொற்றின் ஆரம்பத்தில் எமது அரசாங்கம் அத்தியவசி...