Posts

மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி

Image
  மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போதே இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்போது பணம் பெறப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள கணக்கிலிருந்து, அதற்காக வழங்கப்பட்ட ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும் உதித லொக்கு பண்டார மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராகக் கடமையாற்றினார். மேலும் அவர் ஒருமுறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதுடன் கடந்த பொதுத...

பொதுமக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் கோரிக்கை

Image
  பொதுமக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் கோரிக்கை நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால், நுகர்வோர் குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து!

Image
 கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து! இன்று மாலை ஓட்டமாவடி ஜும்மா பள்ளிக்கு முன்பாக  டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் உயிர்ச் சேதம் ஒன்றும் இடம்பெறவில்லை. மோட்டார் சைக்கிளில் பயனித்தவர் சிறு காயத்தோடு உயிர் தப்பினார். 

மட்டக்களப்பு நகரில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Image
  மட்டக்களப்பு நகரில் ஆணொருவரின் சடலம் மீட்பு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி பெரிய உப்போடை வீதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று செவ்வாய்கிழமை காலையில் சடலமாக முச்சக்கரவண்டியுடன் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மாசிலாமணி தர்மரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மட்டு ரயில்நிலையத்தின் முன்னால் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை செலுத்தி வருவதாகவும் கொ ழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தடையும் ரயிலில் இருந்து வரும் பிரயாணிகளை ஏற்றி செல்வதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை 4 வீட்டை விட்டு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். இந்த நிலையில் ரயில் நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து புன்னைச்சோலை பகுதிக்கு பிரயாணி ஒருவரை ஏற்றிச் சென்ற நிலையில் பா ர்வீதி உப்போடையில் வீதியில் காலை 6 மணிக்கு முச்சக்கரவண்டி சேதமடை ந்த நிலையில் அதன் அருகே மர்மாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்...

தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும்

Image
  தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும்! தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இனிமேல் பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என்றும், அதற்கான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களே முழுமையான தடுப்பூசிகளைப்பெற்றுக் கொண்டவர்களாக கணிக்கப்படுவர். தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாமலிருக்க எவருக்கும் உரிமை உள்ளது. எனினும் பிறருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதால் அனைவரும் பொறுப்புடன் தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Image
  பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இது குறித்து கருத்து தெரிவித்தார். மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடமும் சட்டமா அதிபரிடமும் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் அறிகுறிகள் தொடர்பான அறிவிப்பு

Image
  ஒமிக்ரோன் வைரஸ் அறிகுறிகள் தொடர்பான அறிவிப்பு! ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கமைய, ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலேசான இருமல், தடிமன் மற்றும் இலேசான தொண்டை நோவு போன்ற சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிக காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படாது என்பது மற்றொரு முக்கிய விடயமாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவதும் சிறந்ததென வலியுறுத்தப்படுகிறது. இதேவேளை, நாடு முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வேகமாக பரவி வருவதாகவும் நாளாந்தம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட அதிகளவானோர் அடையாளம் காணப்படுவதாகவும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் நிறுவகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். நாடு வழமைக்கு திரும்பியிருக்கும் நிலையில் மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதே இந்...