வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் தலை சிதறிய நிலையில் மீட்பு!

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் தலை சிதறிய நிலையில் மீட்பு! வவுனியா நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நகரில் பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக தலை சிதறிய நிலையில் காயங்களுடன் ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் இரவு அனுமதித்தனர். எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (27.05.2022) இரவு 11.45 மணியளவில் வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் இரவு தலை சிதறிய நிலையில் வீதியின் நடைபாதையில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதனை அவதானித்த மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து தற்கொலை செய்திர...