Posts

உங்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்களும் சீருடைகளும் கிடைக்கவில்லையா?

Image
உங்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்களும் சீருடைகளும் கிடைக்கவில்லையா? 2024 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச கல்வி அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படாத பாடசாலைகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக பின்வரும் தொலைபேசி/தொலைநகல்/மின்னஞ்சலுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அந்தந்த அதிபர்களுக்கு தெரிவிக்கின்றது. பாட புத்தகங்களுக்கு – *தொலைபேசி எண்கள் – 0112784815/0112785306 *தொலைநகல் – 0112784815 * மின்னஞ்சல் முகவரி – epddistribution2024@gmail.com பாடசாலை சீருடைகளுக்கு – *தொலைபேசி இலக்கம் – 0112785573 *தொலைநகல் – 0112785573 * மின்னஞ்சல் முகவரி – schoolupplymoe@gmail.com

மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில், நான்கு வயது சிறுமி உயிரிழப்பு..!

Image
மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில், நான்கு வயது சிறுமி உயிரிழப்பு..! மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று (11) உயிரிழந்துள்ளார். தாய் வௌிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு..!

Image
சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு..! 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தாதியர் சேவையின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் நாளை (14) கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்.

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும், தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு..!

Image
கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும், தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு..! கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் உங்களுக்குத் தெரியாமல் சிம் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றின் இணைப்பைத் துண்டிப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

Image
11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..! பாண்களின் நிறை குறித்து வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க விற்பனைக்காக தயாரிக்கப்படும் பாண்களின் நிறை குறித்து, வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி ஆகிய நகர்ப் பிரதேசங்களில் ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்களில், பாண்களின் எடை தொடர்பான சுற்றிவளைப்புக்கள் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டதாக அதன் மாவட்டப் பொறுப்பதிகாரி என். எம். சப்ராஸ் தெரிவித்தார். பெப்ரவரி 5ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை 30இற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், குறைந்த நிறையில் பாண்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன் பாண்களின் விலைகளை வெளிப்படுத்தாமை, முறையான லேபல் இடப்படாமை போன்ற குற்றங்களுக்காக 05 பாண் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட...

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த, 2 நீல மாணிக்கக்கற்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன...! அவற்றின் பெறுமதி 37 கோடி ரூபா...!

Image
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த, 2 நீல மாணிக்கக்கற்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன...! அவற்றின் பெறுமதி 37 கோடி ரூபா...! கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள இரு மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது குழந்தை பலி...!

Image
பாடசாலையில் மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது குழந்தை பலி...! கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த அனர்த்தத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.