Posts

போலி கடவுசீட்டுகளைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல இரண்டு இளைஞர்கள் கைது !

Image
  போலி கடவுசீட்டுகளைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல இரண்டு இளைஞர்கள் கைது ! போலி கடவுசீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் !

Image
  கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் ! தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

தமிழரசுக்கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி

Image
  தமிழரசுக்கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தாம் கட்சிப்பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று (24) கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு - ஒருவர் கைது

Image
  மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு - ஒருவர் கைது மன்னார் நகரில் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதோடு, இதில் தொடர்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலைப்பகுதி முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், அவரது சிலைக்கு அருகிலிருந்து சிலையின் தலைப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. இதனையறிந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கள நிலையை பார்வையிட்டனர். இதனையடுத்து, விசாரணைகளை நடத்திய மன்னார் பொலிஸார் சந்தே...

அனுமதிப் பத்திரத்தில் மோசடி - மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகன சாரதிகள் மூவர் கைது

Image
  அனுமதிப் பத்திரத்தில் மோசடி - மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகன சாரதிகள் மூவர் கைது மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பாத்திரங்களில் மோசடி செய்து மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் மூன்று கனரக வாகன சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பகுதியில் இருந்து ஆற்று மணல் ஏற்றிச் சென்ற மூன்று கனரக வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (24) தனங்கிளப்பு பகுதியில் வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது, தரை மணலை ஏற்றுவதற்கான அனுமதிப் பத்திரத்தினை பெற்று, பொலிஸார் பார்த்தபோது, அதில் ஆற்று மணலை ஏற்றுவதற்கான அனுமதி என மோசடியாக மாற்றம் செய்து மணலை ஏற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து மூன்று கனரக வாகனங்களையும் கைப்பற்றிய பொலிஸார், அதன் சாரதிகளையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாரதிகளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் ; 22 மாணவர்கள் இடைநீக்கம் !

Image
  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் ; 22 மாணவர்கள் இடைநீக்கம் ! தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்களே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் மேலும் தெரிவித்துள்ளார்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி !

Image
  தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி ! தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த மிருககாட்சிசாலை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. Dehiwala Zoo - இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலை" என்ற போலி சமூக ஊடகக் கணக்கைப் பராமரித்து, மிருகக்காட்சிசாலையின் நற்பெயரை தவறாகப் பயன்படுத்தி பேஸ்புக் கணக்கு பயனர்களிடமிருந்து பணம் பெறப்படுகின்றமை தொடர்பில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேஸ்புக் கணக்குடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய மிருகக்காட்சிசாலை, தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஆண்டு நிறைவையொட்டி ஒரு சீட்டிழுப்பு நடத்தப்படும் என்றும், சீட்டிழுப்பின் முடிவில் வெற்றியாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்றும் கூறி பணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது. அதன்படி, மிகுந்த புகழ் பெற்றுள்ள ...