Posts

Showing posts from November, 2022

சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் சில சமயங்களில் கசப்பாக இருக்கும்! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி

Image
  சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் சில சமயங்களில் கசப்பாக இருக்கும்! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அது தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக கசப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்றும், அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி முகாமைத்துவம் ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இலங்கை மத்திய வங்கியை அபிவிருத்தி வங்கியாகக் கருதாது அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்ப...

ஓமான் மற்றும் சவுதி அரேபியாவில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

Image
  ஓமான் மற்றும் சவுதி அரேபியாவில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை! ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அந்தந்த நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். இதனிடையே, ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் செயலாளர் ஈ.குஷான் என்பவர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் அவர் நேற்று(29) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் செயலாளர் ஈ. குஷான் என்பவர் நேற்று(29) அதிகாலை 3.55 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது ...

இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கின்றது: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

Image
இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கின்றது: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த நாட்டில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அப்பால் தீவிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றாடல் அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட தூசித் துகள்களின் தரப் பெறுமதி மீறப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி (காற்றுத் தரக் கல்வி) சரத் பிரேமசிறி தெரிவித்தார். 24 மணி நேரத்தில் இருக்கக்கூடிய தூசித் துகள்களின் அளவு (ஒரு கன மீட்டரில் இருக்கக்கூடிய மைக்ரோகிராம் அளவு) சுமார் 50 ஆகும். இந்த நாட்களில் இது சாதகமற்ற முறையில் 75 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் நடுப்பகுதி முதல் மார்ச் வரை இந்தியாவில் ஏற்படும் பாதகமான காற்று மாசுபாடு இந்த நாட்டை பாதிக்கிறது என்றும், இதன் காரணமாக இந்த நாட்டில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார். பங்களாதேஷில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...

மின்சார சீர்திருத்தங்களுக்கான நாமலின் குழுவின் பிரேரணைகள் 08ஆம் திகதி

Image
  மின்சார சீர்திருத்தங்களுக்கான நாமலின் குழுவின் பிரேரணைகள் 08ஆம் திகதி இலங்கையில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்களை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பான தேசிய கொள்கை உபகுழுவின் முன்மொழிவுகள் டிசம்பர் 8ஆம் திகதி தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை கண்டறிவதற்கான தேசிய சட்டமன்ற உப குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த அறிக்கை கடந்த அமைச்சரவை அங்கீகாரம் பெற்றதுடன், தேசிய கொள்கை உபகுழுவின் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் நாமல் ராஜபக்ஷவிடம் நேற்று (29) கையளிக்கப்பட்டது. நாளாந்தம் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய இயலாமையினால் ஏற்படும் மின்வெட்டு மற்றும் அதிகளவிலான மின் கட்டண அதிகரிப்பு உட்பட இலங்கையில் மின்சாரத்துறை எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கிய பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட அறிக்கையை ஆர...

ஒரு மாதத்தில் மட்டும் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளது!

Image
  ஒரு மாதத்தில் மட்டும் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளது! ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 51 ஆயிரத்து 865 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். கடந்த வருடம் ஏப்ரலில் 62 ஆயிரத்து 980 சுற்றுலாப் பயணிகள்நாட்டிற்கு வருகைத் தந்ததன் பின்னர், இலங்கை 50,000 இலக்கைத் தாண்டியது இதுவே முதல் தடவையாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுற்றுலாத்துறையில் மீள் எழுச்சி காணப்படுவதாக அந்தச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 ஏழைக் குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோரைத் தேடும் திட்டம்

Image
  போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 ஏழைக் குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோரைத் தேடும் திட்டம் போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளின் போசாக்கு தேவையை பெற்றோர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், அந்த குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதுவரை 21,000 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள 40,000 குழந்தைகளை இலக்காகக் கொண்டு இந்த வளர்ப்பு பெற்றோர் தேடல் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான திட்டத்திற்காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், இந்திய நிறுவனம் ஒன்றும் இலங்கையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றும் இதற்காக ஒரு பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முழு நிர்வாகத்துடன் ராஜினாமா செய்த ஜுவென்டஸ் தலைவர் ஆக்னெல்லி

Image
  முழு நிர்வாகத்துடன் ராஜினாமா செய்த ஜுவென்டஸ் தலைவர் ஆக்னெல்லி ஆண்ட்ரியா அக்னெல்லி தலைமையிலான ஜுவென்டஸ் வாரியம், "நிறுவனத்தின் நலனுக்காக" ராஜினாமா செய்துள்ளதாக இத்தாலிய சீரி ஏ கால்பந்து அணி தெரிவித்துள்ளது. ஜுவென்டஸின் நிதிநிலை அறிக்கைகள் சமீபத்திய மாதங்களில் வழக்குரைஞர்கள் மற்றும் இத்தாலிய சந்தை கட்டுப்பாட்டாளர் கான்சாப் ஆகியோரிடமிருந்து தவறான கணக்கியல் மற்றும் சந்தை கையாளுதலுக்காக ஆய்வு செய்யப்பட்டதை அடுத்து இந்த கூட்டு ராஜினாமா வந்துள்ளது. நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளது. திங்களன்று நடந்த கூட்டத்தில் அதன் இயக்குநர்கள் இந்த பிரச்சினையை விவாதித்ததாகவும், "நிலுவையில் உள்ள சட்ட மற்றும் தொழில்நுட்ப/கணக்கியல் விஷயங்களின் பொருத்தத்தை" கருத்தில் கொண்டு, ஒரு புதிய குழுவால் இது சிறந்த முறையில் தீர்க்கப்படும் என்று முடிவெடுத்ததாகவும் Juventus கூறியது. ஜூன் 2022 இல் முடிவடையும் நிதியாண்டிற்கான அதன் நிதிநிலை அறிக்கைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று அது கூறியது. ஆக்னெல்லி குடும்பத்தின் ஹோல்டிங் நிறுவனமான எக்ஸார் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம், தலைமை நிர்வாக...

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுலுக்கு

Image
  இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுலுக்கு இன்றும்(29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ மண்டலங்களுக்கு பிற்பகல் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் ஆதரவு

Image
  கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் ஆதரவு கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு  யோசனைக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் தங்களது ஆதரவை வெளியிட்டுள்ளனர். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆயுர்வேத மருத்துவர்கள் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்கும் யோசனை ஆதரித்ததுடன் ஏற்றுமதிக்கான கஞ்சா சாகுபடியை மருத்துவ மூலிகையாக ஊக்குவிக்க வேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கஞ்சா சாகுபடிக்கான தடையை நீக்குவதற்கான அரசின் முன்மொழிவை பாராட்டிய அவர்கள், அதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

பெண்கள் கடத்தல் விவகாரம்: ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது

Image
  பெண்கள் கடத்தல் விவகாரம்: ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளராகப் பணியாற்றிய ஈ. குஷான் என்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று (29) அதிகாலை 3.57 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கை திரும்ப கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார். சுற்றுலா விசாவில் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் மனித கடத்தல் உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (28) திறந்த பிடியாணையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், ஈ. குஷான் ஓமானிய இலங்கைத் தூதரகத்தில் தங்கியிருந்தார், மேலும் அவர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் செல்வாக்கு செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதே நபர் மீது இதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும், அதிகாரிகளுடனான உறவுகளின் ஊடாக அவ...

ரஷ்யா நடத்தி வரும் இந்த ஒன்பது மாத போர் தாக்குதலில் சுமார் 16,000 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டுள்ளது

Image
  ரஷ்யா நடத்தி வரும் இந்த ஒன்பது மாத போர் தாக்குதலில் சுமார் 16,000 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டுள்ளது ரஷ்யா நடத்தி வரும் இந்த ஒன்பது மாத போர் தாக்குதலில் சுமார் 16,000 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யர்கள் அதிகம் குடியிருக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதியான டான்பாஸை மீட்பதாக தெரிவித்து தொடங்கிய ரஷ்யாவின் போர் தாக்குதல், உக்ரைனிய நகரங்கள் முழுவதும் பரவி அந்த நாட்டின் பெருவாரியான உள்கட்டமைப்பு வசதிகளை அழித்தொழித்து உள்ளது. கடந்த பெப்ரவரி 24 ம் திகதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்ய போர் தாக்குதலானது இன்று ஒன்பது மாதங்களை கடந்தும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதல் முடிவை எட்டப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிலையில் கடந்த ஒன்பது மாத போர் தாக்குதலில் ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 16,000 ஏவுகணைகளை ஏவி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த ஏவுகணை தாக்குதலில் 97 சதவிகிதத்தை ரஷ்யா பொது...

பேருந்து வண்டிகளுக்காக டிஜிட்டல் அட்டை ஒன்றை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பம்

Image
  பேருந்து வண்டிகளுக்காக டிஜிட்டல் அட்டை ஒன்றை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பம் பொதுப் போக்குவரத்து பேருந்து வண்டிகளுக்காக டிஜிட்டல் அட்டை ஒன்றை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்து சேவைகள் மற்றும் ரயில் சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் துறைக்காக மாறுபடாத தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். வெளிவிவகார அமைச்சு, போக்குவரத்து மற்றும் பெருந் தெருக்கள் அமைச்சு, ஊடக அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார். 

இலங்கையில் மேலும் உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை

Image
  இலங்கையில் மேலும் உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை இலங்கையில் மேலும் உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க அந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் 450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 975 ரூபாவாக இருந்த 450 கிராம் உள்ளூர் பால்மா பொதியின் புதிய விலை 1150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த உயர் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் பொலிஸார் அட்டகாசம்!

Image
  முல்லைத்தீவில் பொலிஸார் அட்டகாசம்! மமாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில துயிலும் இல்லங்களுக்குச் சென்றவர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு நினைவு வளைவுகளையும் கொடிகளையும் அறுத்தெறிந்து அட்டாகாசம் புரிந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை செய்துகொண்டு மக்கள் நின்றவேளை அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார் நுழைவாயில் வளைவு மற்றும் கொடிகள் என்பனவற்றை அறுத்தெறிந்து அட்டகாசம் புரிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து ஏற்பாடுகளை செய்தவர்களை சுடுவோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர். மேலும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றிச் சென்றுள்ளனர். அத்தோடு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு நேற்றிரவு சென்ற பொலிஸார் வாயிலில் கட்டியிருந்த பதாதைகளைக் கழட்டிச் சென்றுள்ளதோடு எற்பாடுகளைச் செய்தவர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்வோம் எனவும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் முல்லைத்தீவு நகர கடற்கரை துயிலும் இல்லங்களுக்கு...

இன்றும், நாளையும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு- வெளியான விசேட அறிவிப்பு!

Image
  இன்றும், நாளையும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு- வெளியான விசேட அறிவிப்பு! இன்று  (28) நாளை (29) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் இரவு நேரத்திலும் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூர் சட்டங்களை அமுல்படுத்த தயார்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Image
  போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூர் சட்டங்களை அமுல்படுத்த தயார்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒடுக்குவதற்கு சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கூட போதைப்பொருள் பாவனைக்கு பலியாகி வருவது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும், அதனை கட்டுப்படுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மோசடிக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்வதற்கான சோதனைகள் தொடர்வதாகவும், அவர்களின் நிலை என்னவாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கடத்தல் வர்த்தகத்தை ஒழிப்பதற்காக சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ளதைப் போன்ற சட்டங்களை அமல்படுத்த அமைச்சகம் தயாராக இருப்பதாக அவர் கூறினார். அரச பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், மாணவர் சங்கங்கள் அரசியல் க...

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகளவான கைதிகள்!

Image
  நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகளவான கைதிகள்! நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை தடுத்து  வைக்க முடியும் என்ற போதிலும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் தற்போது அதனை விட இருமடங்கு கைதிகள்  அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில சிறைச்சாலைகள் அதன் கொள்ளளவை  300% அளவில்  தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாக அதிகரித்து, நவம்பர் 25 ஆம் திகதி  வரை நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 26,000 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10,000 கைதிகளில் சுமார் 38% போதைவஸ்து தொடர்புடைய கைதிகள் ஏக்கநாயக்க கூறியுள்ளார். தரவுகளின்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை, மொத்த கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 50% அதிகமாக உள...

வகுப்பறையை மூடி மாணவன் மீது ஆசிரியை தாக்குதல்: மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்ப்பு! கிளிநொச்சி பாடசாலையில் சம்பவம்

Image
  வகுப்பறையை மூடி மாணவன் மீது ஆசிரியை தாக்குதல்: மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்ப்பு! கிளிநொச்சி பாடசாலையில் சம்பவம் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் வகுப்பறையை மூடி மாணவன் மீது ஆசிரியை ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளதை அடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் செல்வச்சந்திரன் கலைச்செல்வன் என்ற மாணவனே இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தரம் 8 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன், ஆரம்ப பிரிவிற்கு நண்பர்களுடன் சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில், ஆரம்ப பிரிவு ஆசிரியை அழைத்து வகுப்பறை ஒன்றில் அடைத்து அகப்பையினால் குறித்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் குறித்த மாணவன் மயக்க முற்றுள்ளான். பின்னர் கூட சென்ற மாணவர்கள் கதவை உதைத்து உட்சென்று குறித்த மாணவனை மீட்டதுடன், ஆசிரியையை அங்கு அடைத்துவிட்டு முதலுதவி செய்ததுடன் பாடசாலை அதிபருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும், மாணவன் சிகிச்ச...

இலங்கையில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக தாங்கள் உண்பதைக் குறைத்துக்கொண்டுள்ளனர் - உலக உணவுத் திட்டம்

Image
  இலங்கையில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக தாங்கள் உண்பதைக் குறைத்துக்கொண்டுள்ளனர் - உலக உணவுத் திட்டம் இலங்கையில் உள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக தாங்கள் உண்பதைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அவசரகால நடவடிக்கையாக பிரான்சிடம் இருந்து 500,000 யூரோ (சுமார் 190 மில்லியன் ரூபாய்) நன்கொடையை பெற்றுக்கொண்ட நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 9,000 குடும்பங்கள் அதிக அளவு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றன. இந்தநிலையில் பிரான்ஸின் உதவியின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஒரு உணவுப் பொதியை பெறவுள்ளது. 15,000 ரூபா பெறுமதியான இந்த உணவுப்பொதியில் மற்றும் முட்டை, அரிசி, புதிய பால், சிவப்பு பருப்பு மற்றும் பிற புரதம் நிறைந்த பருப்பு வகைகள் இதில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு வருட காலத்திற்கு இது குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த உதவியை பெற்றுக்கொள்ளும் நிகழ்வின்போது கருத...

பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனின் பிரத்தியேகமாக அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை

Image
  பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனின் பிரத்தியேகமாக அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை இந்தியாவின் முன்னணி பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனின் குரல், உருவம், பெயர் அல்லது அவருடன் பிரத்தியேகமாக அடையாளம் காணக்கூடிய வேறு எந்தப் பண்புகளையும், அனுமதியின்றி, பயன்படுத்த தடை விதித்து புதுடில்லி மேல்;நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 'கேபிசி லொத்தர்' (பரிசூதிய) மோசடிக்கு பின்னால் உள்ள ஒருவர் உட்பட பலர், பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தனது குரலை பயன்படுத்துவதை ஆட்சேபித்து அமிதாப் பச்சன், தாக்கல் செய்த மனு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 80 வயதான பச்சன் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான கவுன் பனேகா க்ரோர்பதி (கேபிசி)யின் தொகுப்பாளராக செயற்படுகிறார். பச்சன் நன்கு அறியப்பட்ட ஆளுமை என்பது மறுக்க முடியாது. இந்த நிலையில் அவருக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டால் ஈடுசெய்ய முடியாத இழப்பு மற்றும் அவப்பெயரை சந்திக்க நேரிடும் என்றும், தமது உத்தரவில் நீதிபதி நவீன் சாவ்லா கூறியுள்ளார். இதேவேளை பச்சனின் உரிமைகளை மீறும் வகையில் உள்ளடக்கத்தை வழங்கும் இணையதளங்களை ந...

மியான்மர் பிரஜையை திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவை கோரியுள்ளார்.

Image
  மியான்மர் பிரஜையை திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவை கோரியுள்ளார். பலவந்தம் காரணமாக இடம்பெயர்ந்த மியான்மர் பிரஜைகளான ரோஹிங்கியாக்களை மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள அவர்களின் பூர்வீக நிலங்களுக்கு நிலையான, பாதுகாப்பான மற்றும் தன்னார்வத்துடன் திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று கோரியுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை தனது உத்தியோகபூர்வ இல்லமான கணபபனில் சந்தித்தபோது, பங்களாதேஷ் பிரதமர் இந்த ஆதரவை நாடியதாக பங்களாதேஷ் பிரதமரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான உறவைப் பயன்படுத்தி இந்த உதவி கோரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது மியான்மரில் இருந்து பலவந்தம் காரணமாக இடம்பெயர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் நீண்டகாலமாக பங்களாதேஷ் தங்கியிருப்பது, முழு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ஹசீனா சுட்டிக்காட்டினார். அலி சப்ரி 2022 நவம்பர் 23-26 வரை இந்தியப் பெருங்கடல் ரிம் எசோசியேஷ...

தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை.

Image
 தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை. (கொழும்பில் பொலிஸ் பதிவு தொடர்பில் அமைச்சர் டிரான் அலசுடன் மனோ கணேசன் சபையில் வாக்குவாதம்) கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்போது, “..எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் திருவ அல்ல! பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள்.." என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் உரத்த குரலில் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், போலிஸ் ஆணைக்குழு உட்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றிய வரவு செலவு திட்ட விவாதத்தின் போது மேலும் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி கூறியதாவது, கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, போலீசார் தனிப்...

சூடுபிடித்த பாராளுமன்ற விவாதம்: தாக்குதல் முயற்சி! சபாநாயகரால் வெளியேற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்

Image
  சூடுபிடித்த பாராளுமன்ற விவாதம்: தாக்குதல் முயற்சி! சபாநாயகரால் வெளியேற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்க முயற்சித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற சபையிலிருந்து நீக்கியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்தே குறித்த எம்.பியை பாராளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார். இதனால், நாடாளுமன்றம் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இன்று சபை அமர்வில் பங்கேற்கமாட்டார் என சபாநாயகர் மேலும் அறிவித்தார். பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் 79இற்கு அமைவாகவே இந்த கட்டளையை சபாநாயகர் பிறப்பித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்குவதற்கே அவர் முயற்சித்துள்ளார்.

இலங்கையில் அதிகரித்துள்ள தொழு நோயாளர்களின் எண்ணிக்கை! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Image
  இலங்கையில் அதிகரித்துள்ள தொழு நோயாளர்களின் எண்ணிக்கை! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை இலங்கையில் மீண்டும் தொழு தொழு நோயார்களின் எண்ணிக்கை திரித்து வருவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.  கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்படாத தொழுநோயாளிகள் நடமாடும் சூழல் காணப்படுவதால் அவர்களை இனங்கண்டு சிகிச்சைக்கு அனுப்பும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி இவ்வருடம் கம்பஹா மாவட்டத்தில் 124 தொழுநோயாளிகள் அறிகுறிகளுடன் இனங்காணப்பட்டுள்ளனர். உமிழ்நீர் மூலம் பக்டீரியாவால் பரவும் இந்நோய், பாதிக்கப்பட்ட விலங்கைச் சுற்றி நீண்ட நேரம் தொங்குவதால் பரவுவதாகவும், தோல் நிறமாற்றம், கட்டிகள், வலியற்ற தழும்புகள் போன்றவற்றின் அறிகுறிகள் வெளிப்படுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டினார். மேற்குறிப்பிட்ட தோல் அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் அவதானம் செலுத்தி தோல் நோய் வைத்தியரிடம் பரிந்துரைக்குமாறும், நாட்டில் இனங்காணப்பட்ட தொழுநோயாளிகளில் 13 வீத...