Posts

Showing posts from March, 2023

இலங்கையுடன் தொடர்புடைய சிம்பாப்வே ராஜதந்திரி பதவி நீக்கம்!

Image
  இலங்கையுடன் தொடர்புடைய சிம்பாப்வே ராஜதந்திரி பதவி நீக்கம்! #Sri Lanka #sri lanka tamil news #Lanka4 #Tamilnews ராஜதந்திர பதவியை பயன்படுத்தி jதங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிம்பாப்வேயின் மிகவும் செல்வாக்கு மிக்க இராஜதந்திரிகளில் ஒருவரான யூபெர்ட் ஏஞ்சலின்  இராஜதந்திர அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யூபெர்ட் ஏஞ்சல், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கான சிம்பாப்வேயின் தூதராக  அந்த நாட்டின் ஜனாதிபதி மங்கக்வாவால் நியமிக்கப்பட்டார். இந்தநிலையிலேயே அவர் தங்கம் கடத்தியதாக அல் ஜசீரா அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது. எனினும் தம்மீதான குற்றச்சாட்டை யூபெர்ட் ஏஞ்சல் அண்மையில் மறுத்திருந்தார். இலங்கையின் மத போதகரான ஏஞ்சல் நபி ஜெரோம் பெர்னாண்டோவுடன் உறவைப் பேணி வந்த அவர்  2020 மற்றும் 2022 இல் இலங்கைக்கு வந்திருந்தார். இதன்போது அவர் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்தார். இதேவேளை அவர் சிறைக்கு செல்லக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

இராமாயணம் மற்றும் சீதை பாதைகளை தமது நாடு அபிவிருத்தி செய்து வருவதாக இந்தியா தகவல்

Image
  இராமாயணம் மற்றும் சீதை பாதைகளை தமது நாடு அபிவிருத்தி செய்து வருவதாக இந்தியா தகவல் #sethusamudram #India #Sri Lanka #Lanka4 இராமாயணம் மற்றும் சீதை பாதைகளை தமது நாடு அபிவிருத்தி செய்து வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். ராம நவமி விழாவையொட்டி, மிலிந்த மொரகொட நேற்று வியாழக்கிழமை மும்பையில் உள்ள ராஜ்பவனில் மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பாயிஸை சந்தித்தார். இலங்கை அழகான மென்மையான மணல் கடற்கரைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைகள் மற்றும் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்றது, இதில் பெரும்பாலானவை இராமாயணத்துடன் தொடர்புகொண்டவை என்று மொரகொட குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய குறைந்தது 40 இடங்கள் உள்ளன. இலங்கையில் ஐந்து சிவன் கோயில்கள் உள்ளன, அதில் ஒன்று திருகோணமலையில் உள்ளது. இது இராவணனால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது,' என்று அவர் மொரகொட தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் விபீஷணன் வழிபட்ட பௌத்த விஹாரை ஒன்றும் இருப்பதாகவும் மொரகொட  மகாராஷ்டிரா ஆளுநரிடம் கூறியுள்ளார்.  இதேவேளை இந்தியாவும் இலங்கையும் இண...

நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகளை தடுக்கக்கோரிக்கை

Image
  நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகளை தடுக்கக்கோரிக்கை #Court Order #Police #Law #Sri Lanka #sri lanka tamil news #Lanka4 நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும்  இடையில் தேவையற்ற முரண்பாடுகள் உருவாக்கப்படுவதை தடுக்க நீதி சேவைகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை நீதி சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 1953 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க நாடாளுமன்ற சிறப்புரிமை சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் தேவையற்ற மோதலை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிச்சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.  இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் ஆணையைப் பாதுகாப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் விண்ணப்பம் தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் முறுகலை  தோற்றுவிக்க முயற்சிக்கப்படுகிறது. நிறைவேற்றுத்துறை, நாடாளு...

பலாலியில் பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளது

Image
  பலாலியில் பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளது #Jaffna #Robbery #Temple #Sri Lanka #sri lanka tamil news #Lanka4 யாழ்ப்பாணம் பலாலியில்  இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்பந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் இந்த ஆலயத்துக்கு சென்ற   போது விக்கிரகங்கள் அனைத்தும்; இருந்தன. எனினும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி திருவம்பாவை தினத்திற்கு சென்ற பொழுது முருகன் சிலை காணாமல் போயிருந்தது  தற்போது அம்மன் விக்கிரகம்  காணாமல் போயுள்ளது. வடக்கின் மிகப்பெரும் சிறிலங்கா இராணுவ தளமாக விளங்குகின்ற பலாலி இராணுவ தளத்தின் உயர் பாதுகாப்பு நிலையத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் வி...

திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை முகாமினை பலப்படுத்த முடிவு

Image
  திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை முகாமினை பலப்படுத்த முடிவு #Jaffna #Police #Sri Lankan Army #Sri Lanka #sri lanka tamil news #Lanka4 யாழ்ப்பாண தீவுப் பகுதியில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை முகாமினை பலப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது இதன்படி தீவு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களை பரிசோதனை செய்வதன் மூலம் தீவுப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்று யாழ்ப்பாண மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புங்குடுதீவு பகுதியில் இருந்து படகுகள் மூலம் வேறு பகுதிகளுக்கு மாடு மற்றும் திருடப்படும் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே இந்த விடயத்தில் சிறிலங்கா கடற்படையினரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கோரப்பட்டுள்ளது.

போலி போதைப்பொருள் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியதன் மூலம் கோடிக்கணக்கான அரச பணம் வீணடிப்பு

Image
  போலி போதைப்பொருள் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியதன் மூலம் கோடிக்கணக்கான அரச பணம் வீணடிப்பு #drugs #Investigation #Police #Sri Lanka #sri lanka tamil news #Lanka4 நாடளாவிய ரீதியில் சில பொலிஸ் நிலையங்களால் சமர்ப்பிக்கப்பட்ட போலி போதைப்பொருள் மாதிரிகளை சோதனையிடுவதற்காக  மூன்று கோடியே அறுபது லட்சத்துக்கும் அதிகமான பணம் விரயமாகியுள்ளதாக  இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம்  தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சில காவல் நிலையங்களில் இருந்து அரசு சுவையூட்டல் துறைக்கு அனுப்பப்பட்ட 16466 மருந்து மாதிரிகளில் 1035 மருந்து மாதிரிகளில் எந்த அளவு மருந்தும் இல்லை என்று தகவல் வெளியானது. நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் அரசாங்கத்தின் பரிசோதகர் திணைக்களத்திற்கு விஜயம் செய்த போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. சாதாரணமாக ஒரு மருந்து மாதிரி பரிசோதனைக்கு ரூ. சுமார் இருபத்தைந்தாயிரம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மருந்து இல்லாத மாதிரிகளை பரிசோதிக்க ரூ. 35000 செலவாகும் என்று திணைக்களம் கூறுகிறது. கோவிலி...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காக்கைதீவுக்கு விஜயம்

Image
  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காக்கைதீவுக்கு விஜயம் #Douglas Devananda #Fisherman #Fish #Sri Lanka #sri lanka tamil news #Lanka4 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். அந்தவகையில் இன்றையதினம் காக்கைதீவு பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார். இதன்போது சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்

Image
  பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் #Bus #School #School Student #school van #Lanka4 பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்றமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் உள்ளதாவது, “ பேரூந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் ” என்னும் தலைப்பில் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது சொந்த பிரேரணை அடிப்டையில் விசாரணைகளை ஆரம்பித்து இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்நது. அதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் ( செயலாற்றல் ) அவர்களால் உரிய நடவடிக்கை எடுத்து யாழ்ப்பாணம் , பருத்தித்துறை , காரைநகர் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் வவுனியா சாலை முகாமையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன . அதன் பிரதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிரா...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அவர்களது ஊடக அறிக்கை

Image
  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அவர்களது ஊடக அறிக்கை #Human #Human Rights #Human activities #pressmeet #Sri Lanka #sri lanka tamil news #Lanka4 பாடசாலை மாணவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை பின்பற்றாமல் அதிபர்கள் எதேச்சையாக பாடசாலை விடுகைப்பத்திரங்களை வழங்குவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்துக்குட்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கடந்த 22.03.2023 அன்று பி.ப. 2.00 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் திரு. தங்கவேல் கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டதிலுள்ள வலயக்கல்வி அலுவலகஙள், சட்ட வைத்திய நிபுணர், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அத...

தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே: வவுனியாவில் வெடித்த போராட்டம்

Image
  தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே: வவுனியாவில் வெடித்த போராட்டம் #Sri Lanka #Vavuniya #Protest #Vanni #Mullaitivu #Lanka4 #Sri Lanka President வவுனியா  ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து வீசப்பட்டமைக்குஎதிர்ப்பு தெரிவித்து பாரிய மக்கள் போராட்டம்  ஒன்று இன்று இடம்பெற்றது.  வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி  வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. "தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே" , "தொல்லியல்துறை அடாவடி நிறுத்தப்படவேண்டும்", எழுத்திலும் ஆய்தம் எம் இறைவனும் ஆயுதம், வெடுக்குநாறி தமிழர் நிலம், வெட்டுக்குநாறி தமிழனின் புலம், இன அடையாளத்தை அழிக்காதே, போன்ற வாசகங்களை ஏந்தியாவாறு குறித்த போராட்டம் இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமய பெரியோர்கள், பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்புக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. vavuniya protest vavuniya protest vavuniya protest vavuniya protest vavuniya protest vavuniya protest  

நெதர்லாந்தில் 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர்

Image
  நெதர்லாந்தில் 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர் #world news #Breakingnews #ImportantNews #Netherland நெதர்லாந்து, உறவு முறைக்குள் புணர்ச்சி ஏற்படுவதை தடுக்க, ஒருவர் 12 பெண்களுக்கு மேல் விந்து தானம் செய்யக்கூடாது என்றும், 25 குழந்தைகளுக்கு மேல் தந்தையாக இருக்க கூடாது என்றும் நெதர்லாந்தில் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஜோனத்தான் ஜாக்கப் என்ற இசை கலைஞர், விந்து தானம் செய்துவருவதை மறைத்து 13 வெவ்வேறு மருத்துவமனைகளில் விந்து தானம் செய்துவந்துள்ளார். மேலும் இணையதளம் மூலம் சர்வதேச விந்து வங்கிகளுடனும் தொடர்பில் இருந்துள்ளார். உறவு முறைக்குள் புணர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதால், ஜோனத்தான் ஜாக்கபிடம் விந்தணுக்களை பெற்ற பெற்றோர் 25 பேர், இனி அவர் விந்து தானம் செய்ய தடை விதிக்குமாறும், விந்து வங்கிகளில் சேகரிக்கப்பட்டுள்ள அவரது விந்தணுக்களை அழிக்க உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு பதிலடிகொடுக்க இராணுவத்திற்கு பயிற்சி.

Image
  வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு பதிலடிகொடுக்க இராணுவத்திற்கு பயிற்சி..? #Sri Lanka #sri lanka tamil news #Security #Lanka4 #government #Tamilnews பொதுச் சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருவதாக ஊடகவியலாளர் ஒருவரின் வினாவிற்கு பதிலளித்த அமைச்சர், மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என்றார்.