Posts

Showing posts from April, 2023

சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுப்பு - வெளிவிவகார அமைச்சு

Image
  சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுப்பு - வெளிவிவகார அமைச்சு           சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வேலை இழக்க நேரிடும் என்று கூறி, ஒரு குழு சூடானில் தங்க விருப்பம் தெரிவித்ததாக, வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.  எவ்வாறாயினும், இதுவரையில் சூடானில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்த 34 இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்களில் 14 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேர் சவூதி அரேபியாவின் ஜித்தாவை சென்றடைந்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.  மேலும் 14 இலங்கையர்கள் போர்ட் சூடானில் தங்கியுள்ளதாகவும், அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொலிஸார் விசேட அறிவித்தல்

Image
  உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொலிஸார் விசேட அறிவித்தல் #Sri Lanka           உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.  அதன்படி, நாளை (01) வெளி மாகாணங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், மாவட்டப் பொறுப்பதிகாரிகளான பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான எஸ்.எஸ்.பி.க்களுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்கியுள்ளது.  இதன்படி, நுகேகொட, நுவரெலியா, கண்டி மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள மே மாத பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தேவையான பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் விசேட போக்குவரத்து திட்டமும் திட்டமிட்டபடி பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கண்டி நகரிலும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், ...

அநுராதபுரத்திலிருந்து காங்கேசந்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் - பந்துல குணவர்தன

Image
  அநுராதபுரத்திலிருந்து காங்கேசந்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் - பந்துல குணவர்தன           அநுராதபுரத்திலிருந்து காங்கேசந்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள் இரண்டு மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அநுராதபுரம் ஓமந்த வரையான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகளின் முன்னேற்றத்தை அவதானிக்கும் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.  அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “.. அநுராதபுரத்திலிருந்து ஓமந்த வரையிலான பழைய ரயில் பாதையின் நவீனமயமாக்கல் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வீதியை முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, புதிய ஸ்லீப்பர்கள் மற்றும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, மணிக்கு 100 மைல் வேகத்தில் ரயில்களை இயக்கக்கூடிய அதிநவீன ரயில்பாதையாக இந்த ரயில் பாதைகள் மாறும்.  மஹவ முதல் ஓமந்த வரையிலான இத்திட்டத்திற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் ரூ. 3,500 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. தற்போதைய பொருளாதார...

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி

Image
  இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி           advertisement இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திடமிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் முன்னதாக அறிவித்திருந்தது.  நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.  எனினும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் மேல் மாகாணத்தில் உள்ள பாரியளவில் உற்பத்தியில் ஈடுபடும் வெதுப்பகத் தொழிற்துறைக்காக மாத்திரமே விற்பனை செய்வதற்கு இது வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  இதேவேளை, கடந்த 26 ஆம் திகதி ஒரு மில்லியன் முட்டைகளுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூடானிலிருந்து வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்!

Image
  சூடானிலிருந்து வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்! சூடானில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் பாதுகாப்பாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் சனிக்கிழமை (29) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சூடானிலிருந்து வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவர்களை வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சிசிர சேனவிரத்ன வரவேற்றார். வெளிவிவகார அமைச்சின் ஒருங்கிணைப்பு மற்றும் சவூதி அரேபியா அரசாங்கத்தின் தாராளமான உதவியினால் அவர்களது வெளியேற்றம் எளிதாக்கப்பட்டது. ரியாத் மற்றும் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் ஜெட்டாவில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை சவூதி அரேபிய, இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் இணைந்து கார்ட்டூமில் வசிக்கும் இலங்கையர்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளன. நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய...

புகையிரத சேவையை தனியார்மயப்படுத்த அரசாங்கம் முயற்சி : புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்!

Image
  புகையிரத சேவையை தனியார்மயப்படுத்த அரசாங்கம் முயற்சி : புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்! புகையிரத சேவையை தனியார்மயப்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைப்பதன் நோக்கம் முறையற்றது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், புகையிரத சேவையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின், புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கான சட்ட திருத்தத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். புகையிரத தொழிற்சங்கங்களின் பிரதானிகளுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும், புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இதனையே எ...

மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள் : பொதுஜன பெரமுன

Image
  மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள் : பொதுஜன பெரமுன! எமது மக்கள் பலத்தை வெளிப்படுத்துவோம். மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மே தின கூட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்; மேலும் குறிப்பிட்டதாவது, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் கூட்டத்தை நடத்த முடியவில்லை.அதே போல் 2022 ஆம் ஆண்டு முறையற்ற போராட்டத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியவில்லை. பாரிய போராட்டத்துக்கு மத்தியில் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.மே தின கூட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்பை சகல அரசியல் கட்சிகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எமது மக்கள் பலத்தை நாளைய தினம் கெம்பல் மைதானத்தில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் வெளிப...

QR இல்லை: கார் கழுவுதல், சேர்விஸ் கடைத்தொகுதி வசதிகளை வழங்கத் தயாராகின்றன வெளிநாட்டு எரிபொருள் நிலையங்கள் !

Image
  QR இல்லை: கார் கழுவுதல், சேர்விஸ் கடைத்தொகுதி வசதிகளை வழங்கத் தயாராகின்றன வெளிநாட்டு எரிபொருள் நிலையங்கள் ! இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், கார் கழுவுதல், சேர்விஸ் பகுதிகள், கடைகள் மற்றும் மோட்டல்களுடன் கூடிய எரிபொருள் நிலையங்களை அமைக்க முன்மொழிந்துள்ளன. சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்எம் பார்க்ஸ்-ஷெல் ஆகிய இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற அண்மையை கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது . இந்த முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுகிறது, இது முக்கியமாக வெளியூர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு பொருந்தும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார் நடைமுறையில் உள்ள QR கோட்டா முறையின் கீழ் எரிபொருள் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது ஒரு எரிபொருள் நிலையத்தின் சாதாரண பரப்பளவு சுமார் 40 பேர்ச் ஆகும், ஆனால் அத்தகைய ஒவ்வொ...

நம் நாட்டு விவசாயிகள் மீது நம்பிக்கை வைத்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் : பிரதமர் !

Image
  நம் நாட்டு விவசாயிகள் மீது நம்பிக்கை வைத்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் : பிரதமர் ! தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்கள் தாம் வாக்களிக்கக் கோரும் தொகுதிக்கு அருகாமையில் உள்ள தொகுதியில் பணிபுரியுமாறு அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார். இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருந்த போதிலும், அவ்வாறான தகவல்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை எனவும் பிரதமர் கூறினார். கடந்த 12 மாதங்களில் அரச சேவையில் இருந்து எவரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், சம்பளம் அல்லது ஓய்வூதியம் நிறுத்தப்படவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான அடித்தளத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, வீண்விரயம் மற்றும் ஊழலை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நம் நாட்டு விவசாயிகள் மீது நம்பிக்கை வைத்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும் நடவட...

3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்!

Image
  3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்! 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை பிரித்தானியா செல்கிறார். சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையை அலங்கரித்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.  இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் சனிக்கிழமை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். முடிசூட்டு விழாவின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மன்னராக 3ஆவது சார்ள்ஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலாவும் திகழ்வார்கள். எவ்வாறாயினும், இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் பக்க நிகழ்வுகள் பலவற்றில...

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்!

Image
  இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்! உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் (Sky diving) இலங்கையில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.. தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் இந்த சாகச விளையாட்டு நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு ஸ்கை டைவிங் சாம்பியன்கள் அண்மையில் இலங்கை வந்திருந்தனர். கண்காட்சி நிகழ்வாக முதல் முறையாக தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். இந்த செயற்திட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் எனவும் அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இலங்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் எனவும் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் அமைப்புகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது இலங்கை அரசாங்கம்!

Image
  புலம்பெயர் அமைப்புகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது இலங்கை அரசாங்கம்! புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின்  பொருளாதாரத்தை முன்னேற்றுமாறு அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுப்பதாக ஐனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும்  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு பெரும்பாலான இடங்களில் நெல் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றார்கள் இலங்கை இராணுவத்தினரின் விவசாய திட்டத்தில் பெரும் போக அறுவடையின் பின்னர் தமது செலவுகளினை கழித்து விட்டு மிகுதி நெல்லினை ஏழை மக்களுக்கு வழங்க  தயாராக இருப்பதாக இராணுவ தளபதி ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். அவர்களுடைய விருப்பத்தின்படி அது மக்களுக்கு வழங்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட யுத்த அழிவுகளுக்கு பின்னர் நாங்கள் கடந்த சில ஆண்டுகளா...

கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு மாதாந்தம் 13 இலட்சம் அரசாங்கம் செலவிடுகிறது !

Image
  கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு மாதாந்தம் 13 இலட்சம் அரசாங்கம் செலவிடுகிறது !  ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தளம் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில்  இந்தத் தகவலைக் கோரியபோதே குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செலவுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. எனவே குறித்த செய்தித்தளத்தின் இந்த தகவல் கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கையொப்பத்துடன் அதற்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் டிசம்பர் மாதத்திற்கான செலவுகளை வெளியிட்ட தகவல் அதிகாரி, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளருக்கான கொடுப்பனவு , தொலைபேசி கட்டணம் போன்றவைக்காக 13 இலட்சத்து 29 ஆயி...

15 மாவட்டங்களின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!

Image
  15 மாவட்டங்களின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!  15 மாவட்டங்களில் உள்ள 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.  கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, அம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்கள் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில்  டெங்கு அபாய பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.  இந்நிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளில் உள்ளடங்கியுள்ளன. இதேவேளை, மேல்மாகாணத்தின் சகல பிரதேசங்களையும் உட்படுத்தி கடந்த 26ஆம் திகதி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது : சாணக்கியன்!

Image
  சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது : சாணக்கியன்! சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தினது ஒப்பந்தம் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் பெருமையாக கூறிக்கொள்வதைப்போல் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாது. மிக நீண்டகாலமாக எமது நாட்டில் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படவேண்டும். அதன்மூலமே சர்வதேசம் மற்றும் பெருமளவான முதலீட்டாளர்களின் கவனத்தினைப் பெறமுடியும். குறிப்பாக புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இப்பொழுதும் தயாராகவே இருக்கின்றார்கள். ஆனால் முதலில் எமது இன...