Posts

Showing posts from March, 2025

கர்ப்பிணி தாய்மாருக்கு பழுதடைந்த அரிசி விற்பனை; ரூ. 35,000 தண்டம் விதிப்பு !

Image
  கர்ப்பிணி தாய்மாருக்கு பழுதடைந்த அரிசி விற்பனை; ரூ. 35,000 தண்டம் விதிப்பு ! புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் ரூ. 35,000 தண்டம் நீதிமன்றினால் இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் பழுதடைந்த அரிசியை கர்ப்பிணி தாய்மாருக்கு விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 22ஆம் திகதி வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன், விஸ்வமடு பொது சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் ஆகியோர் இணைந்து புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேந்கொண்டிருந்தனர். இதன்போது திகதி காலாவதியான 700kg அரிசி, பிஸ்கட் பைக்கட்டுகள் கைப்பற்றப்பட்டிருந்தது. காலாவதி பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிரபல விற்பனை நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக இன்று முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் றொய்ஸ்ரன் மற்றும் சந்திரமோகன் ...

கல்வி உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் வவுச்சருக்கான செல்லுபடியாகும் காலம் நீடிப்பு !

Image
  கல்வி உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் வவுச்சருக்கான செல்லுபடியாகும் காலம் நீடிப்பு ! பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் வழங்கி வரும் ரூ. 6,000 பெறுமதியான வவுச்சருக்கான செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் இன்று (28) கல்வியமைச்சு தெரிவிக்கையில், ”அதற்கான காலத்தை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் குறித்த வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் கால எல்லை மார்ச் 31 ஆம் திகதி வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் நலன் கருதி இந்த கால நீடிப்பை மேற்கொண்டதாக” கல்வி யமைச்சு தெரிவித்துள்ளது.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் உட்பட நால்வருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு !

Image
  கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் உட்பட நால்வருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ! நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு, அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார். வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவரை கடத்திச் சென்று 16 இலட்சம் ரூபா கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை வாழைத்தோட்ட பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடாமடுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு !

Image
  குடாமடுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு ! தொடுவாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாமடுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (28) மாலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொடுவாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசபந்துவுக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது !

Image
  தேசபந்துவுக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது ! பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. கடந்த பெப்ரவரி 17 முதல் மார்ச் மாதம் 19 வரையான காலப்பகுதியில் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருப்பதற்காக குறித்த இருவரும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து நிலநடுக்கம்; மியான்மரில் பலி எண்ணிக்கை 163 ஆக உயர்வு !

Image
  அடுத்தடுத்து நிலநடுக்கம்; மியான்மரில் பலி எண்ணிக்கை 163 ஆக உயர்வு ! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. ​ே தாய்லந்து தலைநகர் பாங்கொக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ப...

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு !

Image
  உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு ! கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வௌியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பரீட்சை முடிவுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் தவறான செய்திகளைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து ஜீப் வாகனம் விபத்து ; இருவர் படுகாயம்

Image
  சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து ஜீப் வாகனம் விபத்து ; இருவர் படுகாயம் நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிளக்பூல் சந்தி பகுதியில் ஜீப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கினிகத்தேனவியில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, ஜீப் வாகனத்தில் பயணித்த மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜீப் வாகனத்தின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் இடம் பெற்ற மகளிரை வலுப்படுத்தும் விற்பனைக் கண்காட்சி

Image
  மட்டக்களப்பில் இடம் பெற்ற மகளிரை வலுப்படுத்தும் விற்பனைக் கண்காட்சி (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கிறிசலிஸ் நிறுவனமும் இணைந்து மகளீர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த விற்பனைக் கண்காட்சியும் சந்தையும் நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. "நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்" எனும் தொனிப்பொருளில் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள ஸ்ரீ முருகன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் கலந்து சிறப்பித்தார். ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் மிச்சேல் மற்றும் கிறிசலிஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிறிசலிஸ் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, சண் சைன் கிரண்ட் விடுதியில் இடம் பெற்ற பிரதான நிகழ்வின் போது கிறிசலி...

நாட்டின் பொருளாதாரம் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் – ரணில் விக்ரமசிங்க

Image
  நாட்டின் பொருளாதாரம் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் – ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை அழித்த நோயாளி இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்தியா இந்த நாட்டின் நண்பன் என்றும், இந்த நாட்டின் தேவைகளுக்காக இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார். ராஜகிரியவில் உள்ள இலங்கை மத்திய வங்கியில்  நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுதிய “இலங்கை பொருளாதாரத்தின் ஐந்து ஆயுதங்கள்” என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் சபாநாயகர்களான கரு ஜெயசூரிய மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருடன் பல அரசியல்வாதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், “.. இந்தப் பொருளாதாரத்திற்கு நாம் என்ன செய்துள்ளோம்? ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட நோயாளிக்கு கம்பிகள் துண்டிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டு, அவர் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். நாம் அங்கு இருக்கும்போது, ​​நமது பொருளாதாரத்தின் இதயம் எவ...

"இன்று இறுதி நாள்" பாடசாலையை விழுந்து வணங்கிய இரத்தினபுரி தமிழ் மாணவர்கள் !

Image
  "இன்று இறுதி நாள்" பாடசாலையை விழுந்து வணங்கிய இரத்தினபுரி தமிழ் மாணவர்கள் ! க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை தொடர்ந்து இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினம் தமது பாடசாலையை பேராலயமாக மதித்து விழுந்து வணங்கிய செயற்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறித்த செயற்பாட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பரீட்சைகள் முடிவடைந்ததும், பரிட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர்களை வணங்கி விடை பெற்றதுடன், தமது பாடசாலை சூழலை சிரமதான பணிகளின் ஊடாக தூய்மைப் படுத்தியிருந்தனர். குறித்த செயற்பாடானது இளையவர்களுக்கான வழிகாட்டலாகவும் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்த மாணவர்களை வளர்த்த ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது !

Image
  ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது ! எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடும்தீவு கடப்பாரப்பில் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அழைத்துவரப்பட்டு, பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைதான மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சடலமாக மீட்பு

Image
  மட்டக்களப்பில் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சடலமாக மீட்பு மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு  தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த செல்லத்துரை கெங்காதரன்  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர். குறித்த நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த  நிலையில்  அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதான தடை - மஹிந்த விசேட அறிக்கை !

Image
  முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதான தடை - மஹிந்த விசேட அறிக்கை ! இலங்கையின் முன்னாள் ஆயுதப்படைத் தளபதிகளுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "குறித்த குற்றச்சாட்டுகள் எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த நான்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்த முடிவு செய்தேன். "இலங்கை ஆயுதப்படைகள் அந்த முடிவை செயல்படுத்தின." "முப்பது தசாப்த கால விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் 27,965 ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உயிரை மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரையும் பறித்தது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க FBI ஆல் உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட அமைப்பை 2009 ஆம் ஆண்டில் இலங்கை தோற்கடித்தது. "பல்வேறு தரப்பினரிடமிருந்து சட்டரீதியான அழுத்தங்களிலிருந்து தனது ஆயுதப் படைகளைப் பாதுகாக்க பிரித்தானி...

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள அதிகரிப்பு

Image
  அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச சேவையின் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது. அதற்கமைய அன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சம்பள அளவுத்திட்டத்திற்கமைய சம்பளக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுதல் தொடர்பான நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவை கீழ்க்காணும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அரச சேவையின் சம்பளத் திருத்திற்கு ஏற்புடைய அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலமான ஆலோசனை வழங்குவதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கல், அரச கூட்டுத்தாபனங்கள், நி...

பாரிய மின்னல் தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் முன்னெச்சரிக்கை !

Image
  பாரிய மின்னல் தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் முன்னெச்சரிக்கை ! பாரிய மின்னல் தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

வியாழேந்திரன் கைதானமையை வெடி கொளுத்திக் கொண்டாடிய இளைஞர்கள் !

Image
  வியாழேந்திரன் கைதானமையை வெடி கொளுத்திக் கொண்டாடிய இளைஞர்கள் ! இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார் இந்நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து ஒன்றினைந்த சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று இரவு வெடி கொழுத்தி கொண்டாடினர். முன்னாள் அமைச்சர் கைது விவகாரத்தையடுத்து மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிய நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் ஒன்றினைந்து வெடிகளை கொளுத்தி சந்தோசத்தை வெளிப்படுத்தியதையடுத்து அந்த பகுதி வெடி சத்தத்தினால் அதிர்ந்ததையடுத்து மக்கள் மத்...

பிக்கு ஒருவர் மடாலயம் ஒன்றினுள் ப டு கொ லை !

Image
  பிக்கு ஒருவர் மடாலயம் ஒன்றினுள் ப டு கொ லை ! எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம் ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (25) பிற்பகல் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட பிக்குவிற்கு 69 வயது, அவர் கிரலோகம பகுதியில் உள்ள ஒரு மடாலயத்தில் வசித்து வந்துள்ளார். உயிரிழந்த பிக்குவை சந்திப்பதற்காக வந்த நபரொருவரும் மற்றும் வேறொரு விகாரையைச் சேர்ந்த பிக்குவும் இந்தக் கொலையைக் கண்டு பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் அளித்ததாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர். பின்னர், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், பிக்குவிற்கு முச்சக்கர வண்டி மற்றும் சாரதி ஒருவர் இருப்பதும் தெரியவந்த நிலையில், குறித்த சாரதி தற்போது மடாலயத்தில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. குறித்த முச்சக்கர வண்டி சாரதி பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கொலையை யார் செய்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொலிசார் மேலும் தெரிவிக்க...

தொலைத்தொடர்பு கோபுரங்களில் மின்கலங்களை திருடிய கடற்படை சிப்பாய் உட்பட ஐவர் கைது !

Image
  தொலைத்தொடர்பு கோபுரங்களில் மின்கலங்களை திருடிய கடற்படை சிப்பாய் உட்பட ஐவர் கைது ! யாழ்ப்பாணத்திலுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் மின்கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை சிப்பாய் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, அவர்களுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறையில் பதுங்கியிருந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு வலையமைப்புகளின் கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின்கலங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்துள்ளன. இதுதொடர்பில், கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளின் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இந்த முறைப்பாடுகளின் பிரகாரம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் முன்னாள் கடற்படை சிப்பாய் என்று அறிய வந்துள்ளது. மற்றொருவர், அந்த மின்கலங்களை கொள்வனவு செய்தவர் என்றும் ஏனைய மூவரும் திருட்டுகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ...

29% மானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை !

Image
  29% மானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை ! 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பின்படி, இலங்கையில் உள்ள 3.5 மில்லியன் இளம் பருவத்தினரில் (10-19 வயதுடையவர்கள்) 71 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்கிறார்கள், அதே நேரத்தில் 29 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார். 13 முதல் 17 வயதுக்குட்பட்ட எடை குறைந்த மாணவர்களின் சதவீதம் 21.4 ஆகும் என்றும், அதிக எடை கொண்டவர்களின் சதவீதம் 12.1 என்றும் அறிக்கை காட்டுகிறது. பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில், ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகளை புகைக்க முயற்சித்த அல்லது பரிசோதித்த மாணவர்களின் சதவீதம் 12.8 சதவீதமாகும் என்றும் அறிக்கை காட்டுகிறது. மேலும், 22.4 சதவீத மாணவர்கள் தனிமையை உணர்ந்ததாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 11.9 சதவீதமானோர் பதற்றம் காரணமாக தூங்குவதில் சிரமப்படுகிறார்கள், மேலும் 18 சதவீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், 7.5 சதவீதமானோருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை. கூடுதலாக, 62.6 சதவீதமானோர் பாடசாலை நாட்களில் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதாக தெரிவித்தனர். இந்த க...

வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

Image
  வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம் நாட்டில் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஞாயிற்றுக்கிழமை (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். மாவட்ட செயலகங்களிலிருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், நிறுவப்பட்ட நடைமுறையின்படி வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதை எளிதாக்குவதற்காக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (22) புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் விரைவாகச் சமர்ப்பிக்க EC செயலி உதவுகிறது. "இந்த செயலி மூலம் புகார்களை அளிக்கலாம், மேலும் பயனர்கள் தங்கள் புகார்களின் நிலையைக் கண்காணிக்கலாம். இந்த செயலி பயனர்கள் தங்கள் கூற்றுக்களை ஆதரிக்க வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவும் அனுமதிக்கிறது" என்று தலைவர் ரத்நாயக்க கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த விலங்குகள் !

Image
  ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த விலங்குகள் ! விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இமாலயன் பிரவுன் கரடி, மூன்று ஜோடி பாலைவனக் கீரி (Meerkat) மற்றும் ஒரு ஜோடி புள்ளிக் கழுதைப்புலிகள் (Spotted Hyena) இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விலங்குகள் கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட விலங்குகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள ரிதியகம சபாரி பூங்காவிற்குள் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இமாலயன் பிரவுன் கரடி, மூன்று ஜோடி பாலைவனக் கீரி (Meerkat) ஆகியன தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் விடுவிக்கப்படும் என்றும், ஹம்பாந்தோட்டையில் உள்ள ரிதியகம சபாரி பூங்காவிற்குள் ஒரு ஜோடி புள்ளிக் கழுதைப்புலிகள் (Spotted Hyena) விடுவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, மார்ச் 25 முதல் இந்த விலங்குகள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த இமாலயன் பிரவுன் கரடிகள் பெரும்பாலும் இமயமலை மலைத்தொடர், வட இந்தி...