Posts

Showing posts from August, 2025

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

Image
  மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் ஒன்றை திங்கட்கிழமை (04) வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். லியோபோகான் (LEOPOCON Sri Lanka) எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவின் அடிப்படையிலேயே சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாதுரு ஓயா தேசிய பூங்காவில் இந்த சிறுத்தையின் சடலம் கிடந்ததாகவும், இவ் வருடத்தின் நடுப்பகுதி வரை 14 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளது என லியோபோகான் என தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கொத்மலை, கட்டுகித்துல பகுதியில் ஒரு வயதான ஆண் சிறுத்தை இறந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் கடவுச் சீட்டுக்கள் , மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Image
  கட்டுநாயக்கவில் கடவுச் சீட்டுக்கள் , மதுபான போத்தல்களுடன் இருவர் கைது கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஆடியம்பலம் பகுதியில் வேன் ஒன்றினை சோதனையிட்ட போது, வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இதன் போது, சோதனையிடப்பட்ட வேனிலிருந்து 35 வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்பவம் குறித்து கட்டநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது

Image
  சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது 2025 பெப்ரவரி 22 முதல் ஓகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   கைது செய்யப்பட்டவர்களில் 2,937 இராணுவ வீரர்கள், 289 கடற்படை வீரர்கள், மற்றும் 278 விமானப்படை வீரர்கள் உள்ளடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2024 ஏப்ரல் 20 முதல் மே 20 வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத முப்படை வீரர்களைக் கைது செய்ய, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் 2025 பெப்ரவரி 22 முதல் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட வீரர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

Image
  சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சிறார்களிடையே கலாச்சார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதும், தேசிய பாரம்பரிய இடங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும். இதன்படி, சிகிரியா, யாபஹு, தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான 26 தொல்பொருள் மதிப்புமிக்க தளங்களை நுழைவுச் சீட்டு இன்றி உள்ளூர் சிறார்கள் பார்வையிடலாம். இதற்கு இணையாக, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு சிறார்களுக்கும் இலவச நுழைவு அனுமதி வழங்கப்படவுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார துணை அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்தார்.

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது !

Image
  இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது ! தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 20 கைபேசிகள், 3 மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும், ஆண் சந்தேக நபர்கள் 25, 26, 27 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். தலங்கம பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீர்வை வரிக்குறைப்பைப் பெறுவதற்கு எட்டப்பட்ட உடன்படிக்கைகள் என்ன? - அரசாங்கம் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும் - நாமல் !

Image
  தீர்வை வரிக்குறைப்பைப் பெறுவதற்கு எட்டப்பட்ட உடன்படிக்கைகள் என்ன? - அரசாங்கம் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும் - நாமல் ! அமெரிக்காவினால் இலங்கை ஏற்றுமதிகளுக்கான தீர்வை வரி 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இருப்பினும் இந்த வரிக்குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கத்துடன் எட்டப்பட்ட வர்த்தக மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பான விபரங்களை அரசாங்கம் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் நாமல் ராஜபக்ஷ, அதில் மேலும் கூறியிருப்பதாவது; அமெரிக்காவினால் இலங்கை ஏற்றுமதிகளுக்கான தீர்வை வரி வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைப்போன்று 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இவ்விடயத்தில் அமெரிக்க வர்த்தகத்துறைப் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பாராட்டுகின்றேன். இருப்பினும் இந...

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்!

Image
 மாவடிப்பள்ளி ஆற்றில்  மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்! காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயங்களுடன்  மீட்கப்பட்டு அடையாளமங்காணப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் குறித்து காரைதீவு  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பகுதியைச்சேர்ந்த  பாக்கியராசா கிருபாகரன் என்ற குடும்பஸ்தரே இன்று (3) சடலமாக மீட்கப்பட்டிருந்தார். மேலும், சடலமாக மீட்கப்பட்ட குறித்த குடும்பஸ்தரின் கழுத்து மற்றும் தலை, தோல்பட்டை உள்ளிட்ட பகுதில்  காயங்கள் காணப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. மாவடிப்பள்ளி பகுதியிலுள்ள அரிசி ஆலையொன்றில் தொழிலாளியாக இருந்ததுடன், நேற்று முதல் காணாமற் போனதாக அரிசி ஆலை உரிமையாளர் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது குறிப்பிட்டார். மேலும், சம்பவ இடத்திற்கு கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சென்று மேற்பார்வை செய்து விசாரணை...

கஜேந்திரகுமார் தரப்பு ஐ.நா.கடித்தில் கையெழுத்திடப்போவதில்லை - இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவிப்பு !

Image
  கஜேந்திரகுமார் தரப்பு ஐ.நா.கடித்தில் கையெழுத்திடப்போவதில்லை - இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவிப்பு ! தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பதற்குத் தீர்மானித்து, அதனை அவர்களாகத் தயாரித்துவிட்டு, கையெழுத்துக்கோரி எமது மேசையில் வைத்திருக்கும் கடிதத்தில் கையெழுத்திடுவதில்லை என்று நாம் தீர்மானித்திருக்கிறோம் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களைக் கையாள்வதற்கான குழுவின் கூட்டம் சனிக்கிழமை (02) காலை யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன்,துரைராசா ரவிகரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையசரன், கிழக்கு மாகாணசபை முன...

வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக கடுமையான சிக்கல்கள் !

Image
  வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக கடுமையான சிக்கல்கள் ! சுகாதார அமைச்சின் வைத்திய பிரிவின் நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தர வைத்தியர்களின் வருடாந்திர இடமாற்றங்கள் தொடர்பாக பல கடுமையான சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அதன்படி, சுகாதார அமைப்பில் தேவையற்ற சிக்கல் உருவாக்கப்படுவதாகவும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். இந்த இடமாற்ற நடைமுறைகள் நிறுவன குறியீட்டில் தெளிவாகக் குறிப்பிடப்படடுள்ளதாக கூறிய வைத்தியர் சமில் விஜேசிங்க, சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரிவின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக இந்த சிக்கல்கள் இப்போது எழுந்துள்ளன என்றும் கூறினார். இதன் விளைவாக, நாட்டில் சுமார் 23,000 வைத்தியர்களின் இடமாற்றங்கள் தொடர்பாக சிக்கல்கள் எழுந்துள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட தர வைத்தியர்களின் இடமாற்றங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று வைத்தியர் கூறினார். அத்துடன் நாட்டில் சுமார் 50% வைத்தியர்கள் தற்போது அவர்களுக்கு உரி...

வவுனியா நெடுங்கேணியில் வீட்டிற்கு செல்லும் நடைபாதையில் ( ஒழுங்கை) உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழப்பு

Image
 வவுனியா நெடுங்கேணியில் வீட்டிற்கு செல்லும் நடைபாதையில் ( ஒழுங்கை) உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழப்பு வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம்  பகுதியில், நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டுக்கு செல்லும் நடைபாதையில் ( ஒழுங்கையில் ) நித்திரை செய்துகொண்டிருந்த போது அவரது மைத்துனரால் செலுத்தப்பட்ட ரிப்பர் வாகனம் குறித்த குடும்பஸ்த்தர் மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலையே உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருகையில் தனது வீட்டுக்கு செல்லும் ஒற்றையடி நடைபாதையில் (ஒழுங்கையில்) நேற்றிரவு படுத்து உறங்கிய இளைஞனை கவனிக்காத  ரிப்பர் ரக வாகனத்தைச் செலுத்தி வந்த மைத்துனர் வீடொன்றில் சல்லிக்கல்லினை பறித்துவிட்டு வாகனத்தை திருப்பியுள்ளார். இரவு நேரமாகையால் குறித்த ஒழுங்கையில் இளைஞன் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில்  வாகனம் ஒழுங்கையில் படுத்திருந்த இளைஞன் மீது ஏறியுள்ளது. இன்று காலையிலே குறித்த இளைஞன் வாகனத்துள் நசுங்கி நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதை அறிந...

இஸ்ரேலியர்களால் அறுகம்பை சுற்றுலா தொழிற்துறை பாதிப்பு !

Image
  இஸ்ரேலியர்களால் அறுகம்பை சுற்றுலா தொழிற்துறை பாதிப்பு ! சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக, அந்த பகுதியில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். சுற்றுலா விசாவில் வந்து நாட்டில் வணிகம் செய்த பல வெளிநாட்டினர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் கூறுகிறார். இஸ்ரேலியர்கள் இந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சர்வதேச DJ ஒருவர் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்த நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச DJ டொம் மோங்கல் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அறுகம்பை பகுதிக்குச் சென்றபோது, இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் சென்றது போன்ற அனுபவம் தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். அறுகம்பை பகுதி முழுவதும் இஸ்ரேலியர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்பியுள்ளதாக அவர் கருதுவதாகக் கூறியுள்ளார். அறுகம்பை நாட்டின் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இதற்கு முக்கிய காரணம், அறுகம்பை கடல் பகுதி சர்ஃபிங்கிற்...

செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க தடை !

Image
  செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க தடை ! செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) 1.30 மணி முதல் 05 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு: மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால், கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும். காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்ச...