Posts

Image
 பொது இடங்களில் முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை !! பொது இடங்களில் முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் உயிர்த்த ஞாயிரு தாக்குதல் சம்பவத்தை ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிக்கையில் பொது இடங்களில் முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
Image
 அடுத்த மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தயாராக இல்லை. அடுத்த மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வாய்வழி பதில் கோரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இறுதியாக நல்லாட்சி அரசாங்கம் எரிபொருள் விலையை 2019 செப்டம்பரில் அதிகரித்தது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இதுவரை எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.  சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும், எரிபொருள் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். இதன்போது இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்ட திருகோணமலை எண்ணெய் தொட்டிகள் மீண்டும் கைப்பற்றப்படுமா என்று எம்.பி. ஹேஷா விதானகே அமைச்சர் உதய கம்பன்பிலாவிடம் கேள்வி எழுப்பினார். திருகோணமலையில் உள்ள அனைத்து 100 தொட்டிகளையும்  இந்தியாவுக்கு ஒப்படைக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அந்த தொட்டிகளில் பெ...
Image
 பெண்ணிடம் செருப்பில் அடிவாங்கிய அமைச்சர் யார்? இந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, அந்த அமைச்சர் யார்? என வினவினார். இதேவேளை, உயர்த்த ஞாயிறுத் தொடர்பில் விசாரணைகளை மேற்​​கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அடங்கிய உப-குழுவை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஏற்கவில்லை. அதேபோல, இந்த சபைக்குள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்கள் உள்ளனர். அதனால்தான் தான், உப-குழுவை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் யார், சித்தியடையாதவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல்களை தரவும் எனக் கேட்டுக்கொண்டார்.
Image
 இலங்கை T 20 அணித்தலைவர் தசுன் சாணக்கவின் பாஸ்போர்ட்டை காணவில்லை... மேற்கிந்திய தீவு செல்லும் பயணம் ரத்தானது இலங்கை T 20 அணித்தலைவர் தசுன் சாணக்கவின் பாஸ்போர்ட்டை தொலைந்து விட்டதால்  இலங்கை அணியுடன் இவர் மேற்கிந்திய தீவு செல்லும் பயணம் ரத்தானது. இதனால் இவரின் விசா பிரச்சினையை தீர்க்க  இலங்கை கிரிக்கெட் சபை சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.  பிரச்சினை தீர்ந்ததும் அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image
 சமிந்த வாஸ், இராஜினாமா செய்தமை குறித்து தனிப்பட்ட ரீதியில் நான் வருத்தமடைகிறேன். இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், இராஜினாமா செய்தமை குறித்து தனிப்பட்ட ரீதியில் தான் வருத்தமடைவதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களே இருந்த நிலையில் சமிந்த வாஸ், இராஜினாமா கடிதத்தை கையளித்தார். இவ்வாறு அவர் செயற்பட்டமை வருத்தத்துக்கு உரிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், ஊதியம் தொடர்பான பிரச்சினை இங்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
Image
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டு விட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு அமைச்சரவை  பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இது தொடர்பில் அவரிடம் கேட்கப்பட்டபோது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர் என தெரிவித்த அதேவேளை, எப்போது ஏற்றுக்கொண்டனர் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. Cabinet Spokesman, Minister Keheliya Rambukwella says that President and Prime Minister have been vaccinated against COVID 19. Responding to a question at the cabinet press briefing today on asking when the President and Prime Minister are receiving the COVID 19 vaccine, Minister Rambukwella said that both leaders have received the vaccine already. However, he didn’t specify when the President and PM were vaccinated but confirmed that they both have received the vaccine.
Image
 ஆறு பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்கள் அவர்களின் அரசியல் முதிர்ச்சி, அனுபவம் மற்றும் பல்வேறு துறைகளில் உயர் அறிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் இருந்து....  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நியமித்த ஆறு பேர் கொண்ட குழுவுக்கு விரிவான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகையதொரு பாரிய அளவிலான தேசிய பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதன் பிரகாரம் பாராளுமன்றம், நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்புப் படைகள், அரச புலனாய்வு சேவைகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உட்பட ஒட்டுமொத்த செயன்முறையை அடையாளம் காணுதல் மற்றும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் அதில் பிரதான இடம் வகிக்கின்றது. இந்த பரிந்துரைகளை வெற்றிகரமாக செயற்படுத்த தனியொரு நிறுவனத்தினால் முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக  விசாரணை செய்த ஜ...