Posts

நேற்று MSC Messina கப்பலில் பரவிய தீ தொடர்பான அப்டேட்ஸ்..

Image
 நேற்று MSC Messina கப்பலில் பரவிய தீ தொடர்பான அப்டேட்ஸ்..   MSC Messina கப்பலில் பரவிய தீ கப்பல் ஊழியர்களால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. MSC Messina கப்பல் தற்போது சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தென் கடற்பரப்பின் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, MSC Messina என்ற கொள்கலன் கப்பலில் தீ பரவியது. 1995 ஆம் ஆண்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு, லைபீரிய கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த MSC Messina கப்பல், தென் கொரியாவின் டேர்பன் துறைமுகத்தில் இருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. பின்னர் குறித்த கப்பல் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. கப்பலில் 28 பணியாளர்கள் உள்ளதுடன், அவர்களில் ஒருவர் காணாமற்போயுள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அதேவேளை, எம்.எஸ்.சி. மெசீனா என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலால் நாட்டின...

இலங்கை கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் முறைமைக்கு உலக வங்கி பாராட்டு

Image
 இலங்கை கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் முறைமைக்கு உலக வங்கி பாராட்டு   கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதில் இலங்கை பின்பற்றும் முறைமை தொடர்பாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. நேற்று (25) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா கட்டுப்பாட்டு விசேட செயலணி, கூடிய போதே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை கொள்வனவின் போது பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள், தெற்காசிய நாடுகளில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் முன்னிலையில் காணப்படுவதாக உலக வங்கி அடையாளப்படுத்தியுள்ளது. எனவே தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் போது, உலக வங்கியின் இணையத்தளத்தின் ஊடாகக் கொடுப்பனவுகளை செய்வதற்கான வாய்ப்பு, இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன மேலும் குறிப்பிட்டார். Siva Ramasamy

வாடகை அறவீடுகளில் விலைக்கழிவு வழங்க முன்வாருங்கள்..

Image
வாடகை அறவீடுகளில் விலைக்கழிவு வழங்க முன்வாருங்கள்..   நூருள் ஹுதா உமர் வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்கிய  உரிமையாளர்கள் நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலை கருதி விலைச் சலுகைகளை வழங்க முன்வர வேண்டுமென அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது. உலகையே முடக்கி வைத்துள்ள கொரோனாவால் சகல இயல்பு நிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புக்கள் ஏழை பணக்காரன் தொழிலாளி முதலாளி என அனைவரது பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது. வசதிபடைத்தோரால் இந்நிலைமையை எதிர்கொள்ள முடிந்தாலும் தொழிலாளர்கள் இதை எதிர்கொள்வதில் பெரும் சிரமங்களை அனுபவிப்பதையும் எம்மால் காண முடிகின்றது. இந்நிலையில் வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்கிய கட்டிட உரிமையாளர்கள் விலைக்கழிவுகள் அல்லது சலுகைகள் அடிப்படையில் வாடகைகளைப் பெற முன்வரவேண்டும் எனவும் அதன்மூலம் சமூகத்தில் தம்மால் முடியுமான உதவிகளை செய்தவர்களாக மாறிவிடுவோம் எனவும் எஸ்.எம்.சபீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீக்கிரையானதால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈடாக 720 மில்லியன் ரூபாவை வழங்க கப்பலின் காப்புறுதி நிறுவனம் இணக்கம்.

Image
 எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீக்கிரையானதால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈடாக 720 மில்லியன் ரூபாவை வழங்க கப்பலின் காப்புறுதி நிறுவனம் இணக்கம்.   இலங்கை கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய, இந்தியாவின் விசேட கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. நேற்று (25) இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் ஊடாக இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இந்நாட்டுக்கு நட்டஈட்டுத் தொகையாக 720 மில்லியன் ரூபா கணக்கிடப்பட்டுள்ளது. குறித்த தொகையை கப்பலின் காப்புறுதி நிறுவனம் வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பங்காளிகளின் பற்களைப் பிடுங்க மந்திராலோசனை..

Image
 பங்காளிகளின் பற்களைப் பிடுங்க மந்திராலோசனை..   ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும். அதன் பங்காளிக் கட்சிகள் சிலவற்றுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகள் நீண்டு கொண்டே செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்காளிகள், தாம் கொண்டிருக்கும். நிலைப்பாட்டில் உடும்புப்பிடியாக இருப்பதால், மாற்று வழியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆலோசித்துள்ளனர் என அறியமுடிகின்றது. அதன் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, தேசிய பட்டியலின் ஊடாக, பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிய விடுமுறையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் (24) நாடு திரும்பினார். அவர், ஜூலை 6ஆம் திகதியன்று தேசியப் பட்டியல் எம்.பியாக பதவியேற்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பசிலை எம்.பியாக்குவதற்காக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது. அதன்பின்னர், ஜூலை மாதத்தில் அமைச்ச...

கொரோனா தடுப்பூசி மருந்தேற்றும் நகைச்சுவை நாடகங்களும் போலி மருந்து வியாபாரிகளும்..

Image
 கொரோனா தடுப்பூசி மருந்தேற்றும் நகைச்சுவை நாடகங்களும் போலி மருந்து வியாபாரிகளும்..   கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா  தடுப்பூசி மருந்தேற்றும் திட்டமானது மிகவும் மெதுவாக இன்று வரை 11.4% மக்கள் ஒரு தடுப்பூசியை ஆவது பெற்றுக் கொண்டுள்ளதாகவும் 3.9% மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விகிதத்தில் தடுப்பூசிகள் தொடர்ந்து ஏற்றப்பட்டால் போதியளவு நோய் எதிர்ப்பு சக்தியை இலங்கை குடித்தொகை பெற்றுக் கொள்ள 80% மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட வேண்டிய நிலையில் முதலாவது தடுப்பூசி ஏற்றி முடிக்க 3 வருடங்கள் எடுக்கும். அதுபோல இரண்டு ஊசிகளையும் ஏற்றி பூரணப்படுத்துவதற்கு 6 வருடங்கள் எடுக்கும் என்று எதிர்வு கூறும் கணிப்பீடுகள் காட்டுகின்றன. பல நாடுகளில் அரசியல்வாதிகளின் தலையீடு எதுவும் இன்றி விரைவாக இந்த வருடத்துக்குள் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டங்கள் சுகாதாரத்துறையினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் புதிதாக உருவாகி வரும் நிலையில் அவற்றுக்கு எதிராக புதிய தடுப்பூசிகளை ஆண்டுதோறும் ஏற...

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டது, சட்டத்துறையை அவமதிக்கும் செயல்.

Image
 துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டது, சட்டத்துறையை அவமதிக்கும் செயல்.   ஆயுள் தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டமையானது சட்டத்துறைக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்தர ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த தர்மத்திற்கு அமைவாக துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பினை ஏற்றுக்கொண்டாலும், நாட்டின் நீதித்துறையை காப்பாற்ற வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே நாடு ஒரே நீதி என்ற தொனிப்பொருளில் கடந்த ஜனாதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ள ஜனாதிபதி, குற்றவாளிகளை விடுவிக்க முடியுமாயின் சட்டம், நீதிபதிகள் மற்றும் சிறைச்சாலைகள் ஆகிவற்றின் அவசியம் தொடர்பிலும் ஹிருணிக்கா பிரேமசந்தர கேள்வி எழுப்பியுள்ளார் இதேவேளை துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ள பொது ...