Posts

தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து மேலும் இருவர் இராஜினாமா

Image
  தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து மேலும் இருவர் இராஜினாமா? தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலும் இரு உறுப்பினர்கள் பதவி விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாராந்த சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களை நீக்குவதற்கு பல சக்திவாய்ந்த நபர்கள் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமையினால் இரண்டு உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, அவர்களின் பாதுகாப்பிற்காக தலா 4 பொலிசார் வீதம் எட்டு பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படும் எம்.ஜி.சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ஜன்டீனாவின் நிலையே இலங்கைக்கு – ஹர்ஷ டி சில்வா

Image
  ஆர்ஜன்டீனாவின் நிலையே இலங்கைக்கு – ஹர்ஷ டி சில்வா ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களை இடை நிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலையே இலங்கைக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், இலங்கை கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடாக கருதப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்

அனைத்து பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு

Image
  அனைத்து பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும், அது தொடர்பான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதிமன்றில் ஆஜராகாததால் மைத்திரிபால சிறிசேனக்கு எச்சரிக்கை!

Image
நீதிமன்றில் ஆஜராகாததால் மைத்திரிபால சிறிசேனக்கு எச்சரிக்கை! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (27) கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார். திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட மைத்திரிபால சிறிசேன ​​நீதிமன்றில் ஆஜராகாததால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தாக்குதல்களை தடுக்க தவறியதை சவாலுக்கு உட்படுத்தி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் மார்ச் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணை நடத்த நீதவான் உத்தரவிட்டார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒரு காலை இழந்தவர் மற்றும் வணக்கத்திற்குரிய சிறில் காமினி ஆகியோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு!

Image
  ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு! தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் போலி செய்திகள் வெளியாகுவதனை அவதானிக்க முடிகிறது. ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலக உள்ளதாகவும், ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சுயமாக பதவி விலகல் அல்லது பதவி விலகியதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படும் கடிதத்தின் பிரதிகள் ஏதும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதுவரை உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அரசியலம...

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் ஏற்படவுள்ள மாற்றம்!

Image
  இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் ஏற்படவுள்ள மாற்றம்! 75வது சுதந்திர தின நிகழ்வை குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும்  கொண்டாடுவது தொடர்பான  கலந்துரையாடல் நேற்று (ஜன. 26) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துவது அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகார சபைகளின் பொறுப்பாகும் எனவும், அதற்காக தேவையான செலவினங்களை மதிப்பீடு செய்து செலவு செய்வதாகவும் குறிப்பிட்டார். 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு காணப்படுவதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்தி அதற்கான செலவீனங்களை குறைக்க முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுதந்திர தின விழாவை ஒட்டி ஜனவரி 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், சுதந்திர தின விழாவை ஒட்டி நகர்ப்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாத...

யாழில் உயிரிழந்த தமிழ் இராணுவ அதிகாரிக்கு 21 வேட்டுக்கள் முழங்க இறுதி மரியாதை!

Image
  யாழில் உயிரிழந்த தமிழ் இராணுவ அதிகாரிக்கு 21 வேட்டுக்கள் முழங்க இறுதி மரியாதை! யாழ். – கீரிமலையில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலத்துக்கு 21 வேட்டுக்கள் முழங்க இன்று மரியாதை செலுத்தப்பட்டது. அவர் கடந்த 1958 ஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையில் இணைந்து, 1980 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் மூப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை கீரிமலையில் உள்ள தனது இல்லத்தில் உயிர் பிரிந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்றன. அதன்பின்னர் கீரிமலை இந்து மயானத்தில் 21 துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க இராணுவ மரியாதையுடன் அவரது உடல் தீயில் சங்கமமானது. இந்த இறுதி நிகழ்வில் யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் போத்தொட்ட, இராணுவப் படைப்பிரிவு அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.