Posts

பயணியின் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் கைது!

Image
 பயணியின் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் கைது! நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் வியாழக்கிழமை (28) இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபர், விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பாதுகாப்புப் பரிசோதகர் ஆவார். விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஊழியர் மினுவாங்கொடை ஹீனட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெண்ணிடம் இருந்து திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ், பென்டன் மற்றும் 03 மோதிரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை இலுப்பைக் குளம் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம்!

Image
  திருகோணமலை இலுப்பைக் குளம் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம்! திருகோணமலை இலுப்பைக் குளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக் கோரியும் திருகோணமலை மக்களால் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இலுப்பைக்குளம் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் காலாகாலமாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்...

நாளை முதல் பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் அமுலுக்கு...!

Image
 நாளை முதல் பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் அமுலுக்கு...! ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்தார். அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது தொடர்பான திடீர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச வாய்ப்பு!

Image
 தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச வாய்ப்பு! ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை அன்றைய தினம் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக் காட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி,பண மோசடி - சந்தேக நபர் கைது...!

Image
 வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி,பண மோசடி - சந்தேக நபர் கைது...! வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 137,000 ரூபாய் பண மோசடி செய்த நபரொருவர் கடுகண்ணாவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர் கடுகண்ணாவை பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்தபோது நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் காலி, மீரன்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடையவர் ஆவார். இந்நிலையில், சந்தேக நபருக்கு எதிராக மத்துகம, மஹர, பன்னல, கோட்டை, கேகாலை, தம்புள்ளை, நுவரெலியா, காலி, பலப்பிட்டிய, அநுராதபுரம், நுகேகொடை, களுத்துறை மற்றும் புதுக்கடை நீதிமன்றங்களில் 13 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன்,கென்யப் பிரஜை விமான நிலையத்தில் கைது...!

Image
 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன்,கென்யப் பிரஜை விமான நிலையத்தில் கைது...! 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கென்யப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகாளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவில் இருந்து வரும் போதே 26 வயதான குறித்த கென்யப் பிரஜை சுமார் 4 கிலோ நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருளை எடுத்துவந்துள்ளார். கென்யப் பிரஜை எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து கட்டாரின் தோஹாவுக்கு வந்து அங்கிருந்து கத்தார் ஏயார்வேஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரது பயணப் பொதியில் 3 பிஸ்கட்கள் டின்களில் 04 கிலோ எடையுள்ள 180 கொக்கெய்ன் வில்லைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட கென்யப் பிரஜை முதல் தடவையாக இலங்கைக்கு வந்திருந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சினோபெக் எரிவாயு நிலையங்கள் 50 செயற்பாட்டில்...!

Image
 சினோபெக் எரிவாயு நிலையங்கள் 50 செயற்பாட்டில்...! சீன சினோபெக் நிறுவனம் இப்போது நாடு முழுவதும் ஐம்பது எரிவாயு நிலையங்களில் செயல்படத் தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையில் தனியார் வர்த்தகர்களுக்கு சொந்தமான நூற்றைம்பது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வர்த்தகம் செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த நூற்றி ஐம்பது எரிபொருள் நிலையங்களில் 12 இன்னும் சீன சினோபெக்குடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை,  மேலும் இது பல தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் கூறுகிறது. சில காரணங்களால் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வர்த்தக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்கும் திறன் நிறுவனத்திற்கு இருப்பதாகவும் சங்கம் குறிப்பிடுகிறது.