Posts

அடுத்த 10 நாட்களுக்குள் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் : பரீட்சைகள் திணைக்களம் !

Image
  அடுத்த 10 நாட்களுக்குள் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் : பரீட்சைகள் திணைக்களம் ! 2023 (2024) ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த வாரத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு இல்லையெனில் அடுத்த 10 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 387,648 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் அடங்குவர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக நுழைவாயில் கதவை பூட்டி மக்கள் போராட்டம் !

Image
  கல்முனை வடக்கு பிரதேச செயலக நுழைவாயில் கதவை பூட்டி மக்கள் போராட்டம் ! (வி.ரி.சகாதேவராஜா) கல்முனையில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் போராட்டம் இன்று (24) திங்கட்கிழமை 92 வது நாளில் புது வடிவம் பெற்றுள்ளது. பிரதேச  செயலகத்தை மூடி பொது மக்கள் ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 91 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர்.  92 ஆவது நாளாகிய இன்று ( 24)கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய மக்கள் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனும கோஷத்துடன் பெருந்திரளாக குவிந்துள்ளனர். அரச அரச அதிகாரிகளே எமது நியாயமான கோரிக்கைக்கு பதில்என்ன? எனும் விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் தொடர்கிறது.
Image
  பொல்லால் தாக்கப்பட்டு மூதாட்டி கொ லை ; சகோதரனின் மகன் தப்பியோட்டம் ! on  Monday, June 24, 2024 By  kugen காலி பிரதேசத்தில் கொனபீனுவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமகம, அளுத்வல பகுதியில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொனபீனுவல பொலிஸார் தெரிவித்தனர். சாமகம, அளுத்வல பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது சகோதரனின் மகனுடன் நீண்ட காலமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் பொசன் பௌர்ணமி தினத்தன்று வழிபாடுகளை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்குச் சென்ற பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன. இந்த கொலை சம்பவமானது கடந்த 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான கொலை செய்யப்பட்டவரின் சகோதரனின் மகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொனபீனுவல பொலிஸார் மேற்கொண்டு வர...

தாய் சித்திரவதை புரிவதாக யாழ் பொலிஸில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன் !

Image
  தாய் சித்திரவதை புரிவதாக யாழ் பொலிஸில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன் ! கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவன், தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாக கூறி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தான்.  சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவன் எனவும், அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும், இங்கு இலங்கையைச் சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதேவேளை, சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு, கொழும்பில் இருந்து வெளியேறி மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால், பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான்.  சிறுவனின் தாயை பொலிஸார் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை செய்த வேளை சிறுவ...

தெங்கு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரிப்பு !

Image
  தெங்கு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரிப்பு ! கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் (2024) தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து - முச்சக்கரவண்டி மோதி விபத்து 2 பேர் பலி , 2 பேர் காயம் !

Image
  பேருந்து - முச்சக்கரவண்டி மோதி விபத்து 2 பேர் பலி , 2 பேர் காயம் ! பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரம் - பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23) அதிகாலை இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. எப்பாவல பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா செல்வதற்காக பயணித்த பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த ஏனைய இருவரும் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மற்றியனுப்பப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறு குழந்தைகளிடையே வைரஸ் நோய்களின் தாக்கம் அதிகரிப்பு : வைத்தியர் எச்சரிக்கை !

Image
  சிறு குழந்தைகளிடையே வைரஸ் நோய்களின் தாக்கம் அதிகரிப்பு : வைத்தியர் எச்சரிக்கை ! நிலவும் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பல்வேறு காரணங்களினால் சிறு பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக சிறுவர் வைத்தியர் கல்லூரியின் செயலாளர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகம் காணப்படுவதாகவும் அதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் சிறுவர்களிடையே அதிகமாக பரவுவதாகவும் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவிக்கின்றார். இந்த நோய்கள் மிக இலகுவாகப் பரவும் என்பதால், சிறு குழந்தைகளை முடிந்தவரை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என விசேட வைத்தியர் வைத்தியர் சன்ன டி சில்வா மேலும் தெரிவிக்கின்றார்.