Posts

Showing posts from February, 2023

ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம் தீட்டியது குறித்து சிஐடி விசாரணை

Image
  ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம் தீட்டியது குறித்து சிஐடி விசாரணை #Ranil wickremesinghe #Sri Lanka President #Sri Lanka #sri lanka tamil news #Investigation #Lanka4 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள அரசியல் கட்சியொன்றுக்கு தொடர்புடையவர்கள் குழுவொன்று வெளிநாடு ஒன்றில் படுகொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி செயற்பாட்டாளர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள் சந்திப்பு

Image
  யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள் சந்திப்பு #sri lanka tamil news #Sri Lanka #Japan #Student #College Student #Tamil Student #Meeting #Lanka4  யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை 4மணியளவில் கலைப்பீட மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்பொழுது  ஜப்பானிய தூதுவராலயத்தின் அரசியல் ஆய்வாளர் ஹனா குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில் இலங்கையின் சுதந்திரதினத்தை  வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்பட்ட போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கா சார் பொதுஜன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும் வடக்கு கிழக்கு தழுவிய திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட நிலஅபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர், மகாவலி அபவிருத்தி திட்டமும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கமும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரவை பிரச்சினைகள், தமிழ் மாணவர் சமூகத்தின் மீதான அர...

Facebook ல் உள்ள ஒரு பக்கம் அதாவது Page ஐ முழுமையாக நீங்களே அழிக்கும் முறை.

Image
  Facebook ல் உள்ள ஒரு பக்கம் அதாவது Page ஐ முழுமையாக நீங்களே அழிக்கும் முறை. #தொழில்நுட்பம் #இன்று #தகவல் #முகநுால் #லங்கா4 #technology #today #information #Facebook #Lanka4 சமூக வலைத்தளங்களில் Facebook -ம் ஓன்று என்பதை பலரும்  அறிவார்கள். நாம் Facebook -யை பயன்படுத்தி விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக அதை வேண்டாம் என்று Delete செய்கின்றோம். அப்படி Delete செய்யும் போது நமக்கு மட்டும் தான் அந்த Facebook ID Delete ஆகும். அதனால் உங்களுடைய Facebook Page -யை நிரந்தமாக நீக்குவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..! ஸ்டேப் -1 முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Facebook உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே இருக்கும் உங்களுடைய Profile Picture –யை கிளிக் செய்யவும். ஸ்டேப் -2  அடுத்து அதில் சில ஆப்சன் பாக்சில்  கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Pages என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஸ்டேப் -3 அடுத்து அதில் உங்களுடைய Fb இல் இருக்கும் ID அனைத்தும் காட்டும். அதில் எந்த Page உங்களுக்கு வேண்டாமோ அதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் மேலே சில ஆப்சன் கொடு...

ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை தாக்குதல்: 24 மணித்தியாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

Image
  ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை தாக்குதல்: 24 மணித்தியாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு #Sri Lanka #Protest #Human #Human Rights #Human activities #Colombo #Police #Lanka4 நேற்றைய தினம் கொழும்பு யூனியன் பிளேஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  

எப்போதும் தனிமையில் மகிந்த: தவிர்க்கும் பெரமுனவின் நெருங்கிய சகாக்கள்!

Image
  எப்போதும் தனிமையில் மகிந்த: தவிர்க்கும் பெரமுனவின் நெருங்கிய சகாக்கள்! #Sri Lanka #Sri Lanka President #Mahinda Rajapaksa #Mahindha #srilanka freedom party #Parliament #Lanka4 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் எதிர்காலத்தில் அந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.  மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது, ​​பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அவருடன் சாப்பிடுவதற்கு எம்.பி.க்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர், ஆனால் தற்போது அவர் பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுகிறார். அவர் பிரதமராக இருந்தபோது, ​​நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, ​​அவரை வரவேற்க ஏராளமான எம்.பி.க்கள் கூட்டம் நுழைவு வாசல் அருகே திரண்டிருந்த நிலையில், இன்று அவர் பாதுகாப்பு போலீஸ் அதிகாரியுடன்தான் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைகிறார். அவருக்கு மிக நெருக்கமான இரண்டு அல்லது மூன்று எம்.பி.க்கள் மட்டுமே அவ்வப்போது அவருக்கு நெருக்கமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கலைக்கப்படுகின்றன!

Image
  அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கலைக்கப்படுகின்றன! #Sri Lanka #Sri Lanka President #Election #Election Commission #Tamilnews #sri lanka tamil news #Lanka4 தேர்தல் நடக்கும் சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி நள்ளிரவுடன் நாட்டின் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கலையவுள்ளன. இதன் பின்னர் உள்ளூராட்சி அமைச்சர் அனைத்து சபைகளுக்கும் விசேட ஆணையாளர்களை நியமிக்கவுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் வரை இவர்களின் கீழேயே அனைத்து சபைகளும் இயங்கவுள்ளன. நாட்டின் 341 உள்ளூராட்சி சபைகளுக்கான ஆயுட்காலம் கடந்த 2022 மார்ச் 20ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்த நிலையில் உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் ஒரு வருடத்தால் அதிகரிக்கப்பட்டது. உள்ளூராட்சி சட்டவிதிகளின்படி அமைச்சரால் ஒரு வருடத்திற்கு மட்டுமே சபைகளின் ஆயுட்காலத்தை நீடிக்க முடியும். இதன் பிரகாரம் ஏற்கனவே 2023 மார்ச் 20ஆம் திகதி வரை உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவாக வாய்ப்பில்லை....

சர்வதேச நாணய நிதியத்தின் பணம் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? ஜனாதிபதி கூறுகிறார்

Image
  சர்வதேச நாணய நிதியத்தின் பணம் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? ஜனாதிபதி கூறுகிறார் #Sri Lanka #Sri Lanka President #Ranil wickremesinghe #IMF #Finance #Tamilnews #sri lanka tamil news #Lanka4 சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒதுக்கீடுகள் எதிர்பார்த்தபடி மார்ச் மாதத்தில் கிடைக்காவிட்டால், எதிர்வரும் காலப்பகுதிக்கு ரொக்க கையிருப்பை பேண வேண்டியிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், செலவுகளை நிர்வகிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். குறித்த வருடத்திற்கான செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமையினால் தற்காலிகமாக பணத்தை விடுவிக்க முடியாது எனவும் அந்தப் பதிவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்காக தாம் ஆறு பில்லியன் ரூபாவைக் கேட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பொலிஸாரும் மதிப்பீட்டை விட அதிகமான பணத்தைக் கேட்டதாகவும் சுட்டிக்காட்டினார். தற்போதைய நிலைமைகளின் கீழ் தற்காலிக கொடுப்பனவுகளை வழங்க முடியாது என்பதால், வரவு செலவுத் திட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்குமாறு நிதிய...

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவால் மக்கள் சக்தியை வெல்ல முடியாது: அனுரகுமார திஸாநாயக்க

Image
  தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவால் மக்கள் சக்தியை வெல்ல முடியாது: அனுரகுமார திஸாநாயக்க #Sri Lanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Protest #Colombo #Election #Tamilnews #sri lanka tamil news #Lanka4 நாட்டிலிருந்து குடும்ப ஆட்சியை அகற்றுவதற்காக பெருமளவு மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதால் அச்சமடைந்துள்ள அரசாங்கம் உள்ளூராட்சி  தேர்தலை ஒத்திவைப்பதற்காக சதிசெய்கின்றது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எந்த வழிமுறையையும் பயன்படுத்தி  நாங்கள் போராட்டத்தில் வெற்றிபெறுவோம் என அவர்  என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் தமது போராட்டத்தை கண்ணீர்ப்புகை அல்லது நீர்த்தாரை பிரயோகங்கள் மூலம் மாற்றியமைக்க முடியாது என கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நேற்று  நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் அனுரகுமார திஸாநாயக்கதெரிவித்தார். "மருந்து இல்லாமல் வாடும் மக்களுக்காகவும், வேலையில்லா இளைஞர்களுக்காகவும், விவசாயிகள், மீனவர்கள், கஷ்டப்படும் உழைக்கு...

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு புறப்பட்டது

Image
  இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு புறப்பட்டது #sports #Newzealand #Sri Lanka #Srilanka Cricket #Lanka4 #Tamil People #Tamil #sri lanka tamil news இந்த சுற்றுப்பயணத்தின் போது இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று T-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நியூசிலாந்து நோக்கி புறப்பட்டது. ss 17 வீரர்கள் மற்றும் 12 அதிகாரிகள் அடங்கிய 29 பேர் கொண்ட டூர் பார்ட்டி BIA யில் இருந்து நியூசிலாந்துக்கு பறந்தது. sgf இந்த சுற்றுப்பயணத்தில் அந்த அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52வது அமர்வு இன்று ஆரம்பம்!

Image
  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52வது அமர்வு இன்று ஆரம்பம்! #Sri Lanka #Sri Lanka President #UN #Geneva #Human Rights #Switzerland #swissnews #Lanka4 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52வது அமர்வு இன்று இலங்கை  நேரப்படி பிற்பகல் 03.00 மணிக்கு   சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. . இன்று ஆரம்பமாகும் இந்த அமர்வு ஏப்ரல் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மார்ச் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் இலங்கை சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். சட்ட மா அதிபர் திணைக்களம், வௌிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.  இதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா, இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில்...

இலங்கையில் விவசாய கைத்தொழில் பயிராக அவுஸ்திரேலிய அவகடோ பழம்

Image
  இலங்கையில் விவசாய கைத்தொழில் பயிராக அவுஸ்திரேலிய அவகடோ பழம் #Australia #Fruits #Sri Lanka #Lanka4 #sri lanka tamil news #Tamil #Tamilnews #Tamil People நாட்டிற்கு டொலர்களை ஏட்டெடுப்பதர்காக HASS வகைகளை கொண்ட அவுஸ்திரேலிய வெண்ணெய் பழம் ( avacado fruit)  இலங்கையில் விவசாய கைத்தொழில் பயிராக பயிரிட விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டமான விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் குறித்த  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவகடோ பழத்திட்டத்தின் முதற்கட்டமாக பதுளை மாவட்டத்தில் 200 ஏக்கர் காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இனத்தின் மரக்கன்றுகள் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பண்டாரவளை பிரதேசத்தில் நடப்பட்டுள்ளது. HASS அவகடோ  பழம் வகையின் சிறப்பு என்னவென்றால், பழங்கள் மற்றும் வெண்ணெய் கூழ் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியத்திற்கு உகந்த வெண்ணெய் எண்ணெய்க்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது என்று விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பதுளை மாவட்டத்தில் வி...

புத்தாண்டிற்குள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டம்: பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

Image
    புத்தாண்டிற்குள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டம்: பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்வதாக குறித்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

அனுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Image
அனுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு  நீதிமன்றம் தடை உத்தரவு #Colombo #Court Order #Police #Sri Lanka #Lanka4 #sri lanka tamil news #Tamilnews கொழும்பில்  இன்று (26) எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் படையின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையில் வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.  இதன்படி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல்  வளாகம் உள்ளிட்ட பல பெயரிடப்பட்ட இடங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு மேற்படி பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.