Posts

Showing posts from July, 2025

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள தகவல் !

Image
  இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள தகவல் ! இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டில் உள்ள இலங்கை ஊழியர்களிடம் இருந்து பணம் அனுப்புவது 17.9 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஜனவரி முதல் மே வரை பெறப்பட்ட மொத்த பணப்பரிமாற்றங்கள் 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு மே மாதத்தில் சுற்றுலா வருவாய் 164 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதுவரையான காலப்பகுதியில் மொத்த சுற்றுலா வருவாய் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை தொடர்பில் வெளியான செய்தி !

Image
  எரிவாயு விலை தொடர்பில் வெளியான செய்தி ! ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது, லாப் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் 4,100 ரூபாவிற்கும், 5 கிலோ சிலிண்டர் 1,645 ரூபாவிற்கும் விங்பனை செய்யப்படுகின்றது.

பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

Image
  பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (01) நடைமுறைக்கு வரவிருந்த 2.5% பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிப்பே இதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பஸ் கட்டண அமைப்பை மீண்டும் பரிசீலிக்க தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேச்சாளர் தெரிவிக்கையில், முன்னதாக அறிவிக்கப்பட்ட 2.5% கட்டணக் குறைப்பு இன்று நடைமுறைக்கு வராது. எரிபொருள் விலை மாற்றத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்த பிறகு, இன்று ஒரு புதிய கட்டண அமைப்பு வெளியிடப்படும் என்றார்.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் Seat belt அணிவது கட்டாயம்!

Image
  ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் Seat belt அணிவது கட்டாயம்! 2025 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளுக்கும், 2025 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வித வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைகளில் மாற்றம் !

Image
  எரிபொருள் விலைகளில் மாற்றம் ! மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும். மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாகும். இதேவேளை, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லிட்டர் ஒன்றின் விலையிலும் (325 ரூபா), லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 லிட்டர் ஒன்றின் விலையிலும் (341 ரூபா), எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.