Posts

Showing posts from July, 2022

எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு

Image
  எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு ! தேசிய எரிபொருள் விநியோக அட்டை QR முறை ஊடாக இதுவரை சுமார் 5 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், நாளைய தினம் முதல் QR முறை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். QR முறையுடன் கூடிய தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான  முறை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு நாளை முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

காதலியின் குறும் தகவலையடுத்து இளைஞன் தூக்கிட்டு தற்கொலை - களுவாஞ்சிகுடியில் சம்பவம் !

Image
  காதலியின் குறும் தகவலையடுத்து இளைஞன் தூக்கிட்டு தற்கொலை - களுவாஞ்சிகுடியில் சம்பவம் ! களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசடி வீதி குருமன்வெளி-12 பிரதேசத்தைச் சேர்ந்த (19) வயதுடைய சசிக்குமார் கஜானணன் என்பவரே தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார். சம்பவ தினத்தன்று வழமைபோல் காலை,மதிய உணவருந்தி விட்டு வெளியில் சென்ற போது குறித்த நபரின் தாயார் அவரின் உறவினர் வீட்டுக்கு சென்று வீடு திரும்பியபோது வீட்டின் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததனை அவதானித்த தாய் அயலவர்களின் உதவியுடன் வீட்டின் கதவினை உடைத்து உட்சென்ற போது குறித்த இளைஞன் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதனையடுத்து தூக்கில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதனை கடமையில் இருந்த வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாகவும் , குறித்த இளைஞன் அதே பிரதேசத்தில் உள்ள யுவதி ஒருவரை காதலித்து வ்ந்ததாகவும் யுவதியின் தொலைபேசியில் இருந்து அனுப்பப்பட்ட ...

இலங்கையில் மீண்டும் கலவரம்வெடிக்கலாம் -ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் பெரமுன பிரதிநிதிகள்

Image
  இலங்கையில் மீண்டும் கலவரம்வெடிக்கலாம் -ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் பெரமுன பிரதிநிதிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி கலவரம் வெடிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகிப்பதாகவும் இதனால், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அந்த கட்சி ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் மீண்டும் கலவரமான சூழ்நிலை ஒன்று எதிர்வரும் 9 ஓகஸ்ட் மாதம் நடைபெறாது இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக தெரியவருகிறது. அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக திகதியையும் நேரத்தையும் ஒதுக்கி தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச மற்றும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள உள்ளனர். நாட்டில் மீண்டும் போராட்டமான நிலைமை ஏற்படும் என சமூக...

மற்றுமொரு எரிவாயு கப்பல் வந்தடைய உள்ளது – லிட்ரோ எரிவாயு நிறுவனம் !

Image
  மற்றுமொரு எரிவாயு கப்பல் வந்தடைய உள்ளது – லிட்ரோ எரிவாயு நிறுவனம் ! மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (31) இரவு நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்ததாகவும், தரையிறங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது பல்வேறு பகுதிகளில் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கான வரிசை முறை முடிவுக்கு வந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்திற்காக ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் பொருளாதாரத்தில் வளர்ச்சிபெற முடியவில்லை – மைத்திரி

Image
  யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் பொருளாதாரத்தில் வளர்ச்சிபெற முடியவில்லை – மைத்திரி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது அவ்வாறு நடைபெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய அவர், நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அமைதிக்கான சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலக அமைதி மாநாட்டின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, நேற்று பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஆரம்பமானது. 28 நாடுகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக உரையாற்றினார். இலங்கை எதிர்நோக்கிவரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச ஒத்துழைப்பும் சகோதரத்துவமும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் மோசடி, ஊ...

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அதி நவீன கண் சத்திர சிகிச்சை உபகரணம் வழங்கிவைப்பு !

Image
  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அதி நவீன கண் சத்திர சிகிச்சை உபகரணம் வழங்கிவைப்பு ! (ஐ.எல்.எம் நாஸிம் ) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவின் வசதிகளை மேம்படுத்தும்வகையில் அதி நவீன கண் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சம்மாந்துறை பொதுமக்களின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஷ் அஷ்ஷூரா, உலமா சபை என்ற முச்சபைகளின் வழிகாட்டலின் கீழ் பொதுமக்களினால் அன்பளிப்பாகவழங்கப்பட்ட 1 கோடிக்கு மேற்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட கண் சத்திர சிகிச்சைஉபகரணங்களை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின்தலைவர் வைத்தியர் ஏ. இஸ்ஸடீன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன பிரதம அதிதியாககலந்துகொண்டு உபகரணத்தொகுதியை வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவிற்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக்,கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணி...

தேயிலை உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி !

Image
  தேயிலை உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ! கடந்த மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 22.7% ஆல் குறைந்துள்ளது. இது 18.5 மில்லியன் கிலோகிராம் தேயிலை என கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் தேயிலை உற்பத்தி 17.8% ஆல் குறைந்துள்ளது. மேலும் மலையக தேயிலை உற்பத்தி 31.6% ஆலும், தாழ்நில தேயிலை உற்பத்தி 16.6% ஆலும் குறைந்துள்ளது. (அரசாங்க தகவல் திணைக்களம்)

எரிபொருளை பெற்றுக்கொள்ளவுள்ள அனைவருக்குமான அறிவிப்பு!

Image
  எரிபொருளை பெற்றுக்கொள்ளவுள்ள அனைவருக்குமான அறிவிப்பு!  எரிபொருள் விநியோகம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல் நாடு முழுவதும் QR முறை நடைமுறைப்படுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி இலக்க அடிப்படையிலான இலக்கத் தகடு முறை, டோக்கன்கள் மற்றும் இதுவரை செயல்பாட்டில் உள்ள பிற முறைகள் குறித்த திகதியின் பின்னர் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக QR குறியீடு மற்றும் கோட்டா முறை முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. QR முறையை பின்பற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட எரிபொருள் இருப்புகளிலிருந்து, QR குறியீட்டைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் எரிபொருள் விநியோகத்தைக் கண்காணித்து எதிர்காலத்திலும் விநியோகம் முன்னெடுக்கப்படும். இதேவேளை, செஸ்ஸி இலக்கத்துடன் பதிவு செய்ய முடியாத வாகன பாவனையாளர்கள் நாளை (31) முதல் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்துட...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலதா மாளிகைக்கு விஜயம் !

Image
  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலதா மாளிகைக்கு விஜயம் ! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை தலதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.  ஜனாதிபதியை கண்டி நகரபிதா கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்கள் வரவேற்று தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் சென்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் நான்கு மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேமார் வரவேற்றனர். அதன் பின்னர், தலதா மாளிகையில் புனித தந்ததாது பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மேல்மாடிக்குச் சென்ற ஜனாதிபதி , அங்கு மலர் அஞ்சலி செலுத்தி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , தலதா மாளிகையில் சிறப்பு விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்துக்குக்குச் சென்று நினைவுக் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பொன்றை இட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மல்வத்து - அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளு...

காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது பாதுகாப்பு அமைச்சு !

Image
  காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது பாதுகாப்பு அமைச்சு ! காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் பாதுகாப்பு கமரா காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடியோ காட்சிகள் மூலம் வளாகத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அடையாளம் காணும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. போராட்டம் தொடர்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வங்கி கணக்குகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது...

ரஞ்சன் ராமநாயக்க வெகுவிரைவில் விடுதலை பெறுவார் என நம்புகின்றேன் - சஜித் பிரேமதாச !

Image
  ரஞ்சன் ராமநாயக்க வெகுவிரைவில் விடுதலை பெறுவார் என நம்புகின்றேன் - சஜித் பிரேமதாச ! மனிதாபிமானம் மிக்க அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்க வெகுவிரைவில் முழுமையான விடுதலை பெறுவார் என்று தான் நம்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிடுகையில், வெகுவிரைவில் தனக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என்ற சாதகமான எதிர்பார்ப்புடன் ரஞ்சன் ராமநாயக்க காத்திருக்கின்றார். அவருக்கு முழுமையான விடுதலை கிடைக்க வேண்டும் என்பதே, என்னுடையதும் முழு இலங்கை மக்களதும் எதிர்பார்ப்பாகும். இதற்காக நாம் பிரார்த்திற்கின்றோம். எமது பிரார்த்தைக்கு ஏற்ப நீண்ட நாட்கள் அன்றி , மிக விரைவில் அவருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என்றும் நம்புகின்றோம். நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க முழுமையான விடுதலை கிடைக்கும் எதிர்பார்பார்ப்பதோடு, அந்நாள் வரு...

ரைஸ் குக்கரால் பலியான நபர்!

Image
  ரைஸ் குக்கரால் பலியான நபர்! மெதிரிகிரிய மஹா அம்பகஸ்வெவ பிரதேசத்தில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ள ரைஸ் குக்கரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக நேற்று (29) காலை மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நாகரபுர மஹா அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.  மெதிரிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்துள்ளது இலங்கை !

Image
  சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்துள்ளது இலங்கை ! புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் கடந்த கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் ஏப்பிரல் மாதம் ஆரம்பமாகியிருந்தன. இலங்கை அரசாங்கம் 1948 இன் பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அவசியமான ஈஎவ்எவ் உதவியை பெற முயல்கின்றது - இதனை பெறுவதற்கு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டிய நிபந்தனையை அரசாங்கம் எதிர்கொள்கின்றது. பலமாதகாலமாகநீடிக்கும் மருந்து உணவு எரிபொருட்களிற்கான தட்டுப்பாட்டின் காரணமாக உருவான மக்கள் எழுச்சியால் ஜனாதிபதி ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்த விக்கிரமசிங்க கடன் மறுசீரமைப்பில் ஈடுபட எண்ணியுள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் பெரும்வெற்றிகரமானவையாக காணப்படுகின்றன கடன்வ...

QR முறையில் இதுவரை பதிவு செய்யாதவர்களுக்கான அறிவித்தல் !

Image
  QR முறையில் இதுவரை பதிவு செய்யாதவர்களுக்கான அறிவித்தல் ! எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திர QR முறையில் வாகன chassis இலக்கத்தின் ஊடாக பதிவு செய்ய முடியாதவர்கள் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தின் ஊடாக பதிவு செய்துக் கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். ட்விட்டர் செய்தியில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு பதிவு செய்துக் கொள்ளுமாறு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

விவாகரத்து கோரிய மனைவியை கடத்திச் சென்ற கணவன் கைது - மட்டக்களப்பில் சம்பவம் !

Image
  விவாகரத்து கோரிய மனைவியை கடத்திச் சென்ற கணவன் கைது - மட்டக்களப்பில் சம்பவம் ! மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரசேத்தில் விவாகரத்துகோரிய மனைவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கணவர், பெற்றோர் உட்பட கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரசேத்தில் வசித்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவனைவிட்டு பிரிந்து சென்று தனது பெற்றோருடன் வாழ்ந்துவருகின்ற நிலையில் கணவனிடம் விவாகரத்து கோரி நீதிமன்றில் வழக்குதாக்குதல் செய்துள்ளார். சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை (29) காலையில் குறித்த பெண்ணின் வீட்டை கணவர், அவரது பெற்றோர் உட்பட 3 பேர் முச்சக்கரவண்டியில் சென்று முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில், அங்கி...

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற நபர் கைது !

Image
     ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற நபர் கைது ! மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த நிலையில் குறித்த நபர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியைத் திருடியுள்ளார். குறித்த நபர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் காணொளிகளையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், சி.சி.டி.வி. காணொளிகளை மையப்படுத்தி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, கைதான சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

காலிமுகத்திடல் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் !

Image
  காலிமுகத்திடல் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ! (சுமன்) கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொண்டு வரும் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், கைதுகள் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரியதுமான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிவில் அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் க.லவகுசராசா தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அமைதியான போராட்டக் காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்;மையாகக் கண்டிக்கின்றோம், போராட்டக் காரர்களைக் கைது செய்வதை நிறத்துக, அமைதி வழியில் போராடியவர்கைள விடுதலை செய், பேச்சு சுதந்...

மட்டக்களப்பில் எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு ஏற்பட்ட அவலம் !

Image
  மட்டக்களப்பில் எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு ஏற்பட்ட அவலம் ! மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற வாகனங்கள் இன்று அதிகாலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஏழு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. 6, 7, 8, 9 ஆம் இலக்க வாகனங்கள் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்களை இன்று அதிகாலை 5 மணி அளவில் யானையின் தாக்குதலுக்குள்ளாகின. யானை கூட்டங்கள் வீதியை கடக்க முற்பட்டபோது வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டு வீதியை கடந்து சென்றுள்ளதாக மோட்டார் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கட்டாக்காலி யானைக் கூட்டங்களினால் சேதமாக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் மூன்று வாகனங்கள் முற்றாகவும் 4 வாகனங்கள் சிறிதளவு சேதமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Image
  என்னை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது - ஹிருணிகா பிரேமச்சந்திர ! தம்மை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.  ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் அடக்குமுறையை ஆரம்பித்ததாகக் கூறும் ஹிருணிகா பிரேமச்சந்திர, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கைதுசெய்யப்படும் அச்சம் இருப்பதாக நினைத்தால், தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக தம்மைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க அடக்குமுறையை முன்னெடுத்தாலும், இந்த வருட இறுதிக்குள் அனைத்தும் முடிவுக்கு வரும் என கூறும் ஹிருணிகா, வன்முறையில் ஈடுபடவேண்டாம் என அனைத்துப் போராட்டக்காரர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டமைப்பின் தலைமைக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டதா? – சித்தார்த்தன் விளக்கம்

Image
  கூட்டமைப்பின் தலைமைக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டதா? – சித்தார்த்தன் விளக்கம் புதிய ஜனாதிபதி தெரிவின் போது ஆறு,ஏழு கோடி ரூபா பெறுமதியான பணத்தை நான் பெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல்கள் பரப்படுகிறது. ஆனால் பணத்துக்கு நானோ எனது குடும்பமோ ஆசைப்பட்டதில்லை. கட்சி எடுத்த முடிவுக்கு மாறாகவும் வாக்களிக்கவில்லை என புளொட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சமகால நிலைமைகள் தொடர்பாக கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “தேசிய கல்வியில் கல்லூரியின் காணி தற்போதைய மதிப்பு 60 கோடி வரை வரும். அதனை நன்கொடையாக வழங்கிய எனக்கு பணம் பெரிதல்ல. பணத்துக்காக செயற்படுவதில் எனக்கோ எனது குடும்பத்துக்கோ உடன்பாடில்லை. கூட்டமைப்புக்கு கோடிக்கான பணம் வழங்கப்பட்டதாக தகவல் கடந்த காலத்திலும் கூட்டமைப்பு தலைமைக்கு கோடிக்கான பணம் வழங்கப்பட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இவ்வாறான கதைகள் வர காரணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மலினப்படுத்...

பிரதமரை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் !

Image
  பிரதமரை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ! இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சவாலான காலகட்டத்தில் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து புதிய பிரதமருடன் கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் உட்பட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் உழைக்கும் போது, நாட்டின் தலைவர் ஒருவர் சட்டம் மற்றும் நீதியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை அணுகுவது கட்டாயமாகும் எனவும் அவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு !

Image
  தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு ! சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நெருக்கடிகள் நிறைவடைந்து மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்குத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை பார்வையிடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று வருகை தந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்படுவதாக அறிவிப்பு !

Image
  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்படுவதாக அறிவிப்பு ! இலங்கையில் கல்வி மேம்பாடு, விரிவாக்கம் மற்றும் நவீன மயப்படுத்தலுக்கான பரிந்துரைகளுக்கென முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழு உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் கே. ஆர். பத்மப்பிரிய இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ, அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்பரைக்கமைவாக ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தின் படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி, விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவை ஸ்தாபித்தார். ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவாக்கல் நடவடிக்கைகள் மற்றும் கல்வியை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு வழங்குவதும், கல்வி முன்னேற்றம் பற்றி அறிக்கைகளை வழங்குவதும் இந்த ஆணைக்குழுவின் பிரதான ச...

மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட நிலையில் விமானப்படை வீரர் மீட்பு !

Image
  மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட நிலையில் விமானப்படை வீரர் மீட்பு ! மட்டக்களப்பில் பணிபுரியும் விமானப்படை வீரர் ஒருவர் இனந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளார். விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இதனை உறுதிப்படுத்தியதுடன் குறித்த விமானப்படை வீரர் இன்று (28) காலை மீட்கப்பட்டதாக தெரிவித்தார். வீட்டிலிருந்து கடமை நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் நேற்று (27) மாலை அரலகங்வில பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குழுவினர் விமானப்படை வீரரின் ஆடைகளை அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அருகே “முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள்” என்று தமிழ் மொழியில் எழுதப்பட்ட போர்ட் ஒன்றும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், காயமடைந்த விமானப்படை வீரர் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

மிகப் பெரிய வைரம் அங்கோலாவில் கண்டுபிடிப்பு

Image
 மிகப் பெரிய வைரம் அங்கோலாவில் கண்டுபிடிப்பு அங்கோலாவில் உள்ள சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரம் 300 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அரிய வகை வைரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் அரிய வகை வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த லுகாபா டயமண்ட் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '170 காரட் எடை கொண்ட இந்த இளஞ்சிவப்பு நிற வைரமானது The Lulo Rose என்று அழைக்கப்படுகிறது.  இது அங்கோலாவின் லுலோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரம் இதுதான்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அங்கோலாவின் கனிம வள அமைச்சர் டயமன்டினோ அசெவெடோ இது குறித்து கூறுகையில்,  லுலோ சுரங்கத்தில் இருந்து கண்கவர் வைரம் எடுக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் அங்கோலா முக்கிய இடத்தில் தொடர்ந்து உள்ளது என தெரிவித்தார்.  எனினும், இந்த வைரத்தின்  உண்மையான மதிப்பை அறிய மெருகூட்ட வேண்டும் என்றும், அப்படி செய்யும்பட்சத்தில் அதன் எடை சுமார் 50 ச...

வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது !

Image
  வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது ! 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உண்டியல் முறை மூலம் குறித்த பணத்தொகையை வௌிநாட்டுக்கு அனுப்ப முற்பட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.