Posts

Showing posts from May, 2023

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு - ஆளுநரிடம் கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Image
  கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு - ஆளுநரிடம் கல்வி அமைச்சர் தெரிவிப்பு! கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார். இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு  நிரந்திர தீர்வினை காண்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் பற்றாக்குறையை கூடிய விரைவில் நிவர்த்தி செய்வதாக உறுதிளித்த கல்வி அமைச்சர்,அதற்கு முதல் கட்டமாக மூன்று மாதக்காலத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்கள், கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியாகும் ஆசிரியர்களைக் கொண்டு பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவதாக உறுதியளித்தார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தி...

தாமரை கோபுரத்தில் தங்கள் அடையாளங்களை பொறிக்க முயன்ற காதலர்கள் கைது!

Image
  தாமரை கோபுரத்தில் தங்கள் அடையாளங்களை பொறிக்க முயன்ற காதலர்கள் கைது! தாமரை கோபுரத்தில் தங்கள் அடையாளங்களை பொறிக்க முயன்ற காதலர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தாமரை கோபுரத்தில் தங்கள் பெயர்களை கிறுக்கி அதனை சேதப்படுத்திய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். மே30 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாமரை கோபுரத்தில் கிறுக்குதல் அதனை சேதப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

Image
  தங்கத்தின் விலையில் வீழ்ச்சி! இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (31) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் "22 கேரட்" தங்கத்தின் விலை 149,000 ரூபாவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை இது 154,500 ரூபாவாக பதிவாகி இருந்தது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை 167,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் "24 கேரட்" தங்கத்தின் விலை தப்போது 161,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை!

Image
  விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை! எமது நாட்டு விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு (Bill and Melinda Gates foundation) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விவசாயத் துறையின் நவீனமயமாக்கல், போசாக்கு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்கையில் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான அணுகுமுறை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தொடருமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இதற்காக நிதியுதவி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்க முடியும் என்று ஜனாதிபதியிடம் உறுதியளித்த பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் அதிகாரிகள்,...

மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Image
  மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வங்கி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஒரு ஊடகக் குறிப்பில், இலங்கை மத்திய வங்கியானது தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்துவதாகத் தெரிவித்து சில நிறுவனங்களின் பெயர் விபரங்களை பொதுமக்களின் அவதானத்திற்கு கொண்டு வந்துள்ளது

இறக்குமதி செய்யப்படும் கருவாடு, பழங்களில் கன உலோகங்கள் கலப்பு !

Image
  இறக்குமதி செய்யப்படும் கருவாடு, பழங்களில் கன உலோகங்கள் கலப்பு ! தேசிய உணவுப் பாதுகாப்பு ஆய்வின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட பல பழ மாதிரிகள் மற்றும் கருவாடுகளில் ஈயம் உள்ளிட்ட கன உலோகங்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மற்றும் கருவாட்டு வகைகள் மற்றும் பழங்களில் ஈயம் மற்றும் ஆர்சனிக் போன்ற கன உலோகங்களுக்கான சோதனையை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களிலும் கல உலோகங்களுக்கான பரிசோதனையை ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து அங்கீகாரம் பெற்ற மற்றும் சுதந்திரமான ஆய்வகத்திலிருந்து அறிக்கையைப் பெறுமாறு அனைத்து பழ இறக்குமதியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பண்டங்களில் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவைவிட அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சில இறக்குமதி செய்யப்பட்ட பழங்களில் ஆபத்தான அளவு ஈயம் ...

சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ளது இலங்கை !

Image
  சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ளது இலங்கை ! இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார். இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான இராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு!

Image
  O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு! க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் எந்த பாடசாலைகளிலும் வெளி தரப்பினர் நுழைய அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும், பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று (29) ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 472,553 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பலாப்பழம் பார்வையை மேம்படுத்தவல்லது. அதன் ஏனைய ஆரோக்கியப் பலன்கள்.....

Image
பலாப்பழம் பார்வையை மேம்படுத்தவல்லது. அதன் ஏனைய ஆரோக்கியப் பலன்கள்..... #Health   #Benefits   #Body   #Lanka4   #ஆரோக்கியம்   #உடல்   #பயன்பாடு   #லங்கா4   முக்கனிகளில் பாலப்பழமும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்  பூர்வீகம் எது என்பது அறியப்படவில்லையாயினும் இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.  இலங்கையின் தேன் பலா மிகச்சிறந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் பலாப்பழம் விரும்பி உண்ணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பலாச்சுளையுடன் புட்டு சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இந்தப்பழத்தின் ஆரோக்கியப் பயன்களை நாம் இன்று பார்க்கலாம்.  மலச்சிக்கல் நீங்க  பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.  நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக...

இன்று காலை சீனா முதன்முறையாக ஒரு குடிமகனை விண்ணிற்கு அனுப்பியுள்ளது.

Image
  இன்று காலை சீனா முதன்முறையாக ஒரு குடிமகனை விண்ணிற்கு அனுப்பியுள்ளது. #China   #world news   #Lanka4   #சீனா   #லங்கா4   #Space உலகில் விண்வெளித்துறையில் நாட்டிற்கு நாடு போட்டியிட்டு தமது விஞ்ஞான வளர்ச்சியை காண்பிக்கையில் சீனா தனது டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பி, முதல் முறையாக ஒரு குடிமகனை விண்ணின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து ஷென்சோ-16 விண்கலம் இன்று செவ்வாய்க்கிழமை காலைவிண்ணிற்கு புறப்பட்டது.

சுவிட்சர்லாந்து 2021ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) உலகில் நான்காம் இடம் வகிக்கிறது.

Image
சுவிட்சர்லாந்து 2021ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) உலகில் நான்காம் இடம் வகிக்கிறது. #Switzerland   #Development   #Lanka4   #சுவிட்சர்லாந்து   #லங்கா4   #Research   #World   2021 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து CHF 24.6 பில்லியனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) முதலீடு செய்துள்ளது, இது தொற்றுநோய் தாக்குதலுக்கு முன்னருந்த 2019 ஐ விட 4% அதிகமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4%க்கு சமமான R&D முதலீட்டுடன், சுவிட்சர்லாந்து சர்வதேச அளவில் அமெரிக்கா (3.5%), தென் கொரியா (4.9%) மற்றும் இஸ்ரேல் (5.6%) ஆகிய நாடுகளுக்குப் பின் நான்காவது இடத்தில் உள்ளது.  சுவிட்சர்லாந்தில் 2021 இல் R&D முதலீடு, கடந்த கணக்கெடுப்பின் ஆண்டான 2019 உடன் ஒப்பிடும்போது 4% அதிகமாகும். R&D நடவடிக்கைகள் முக்கியமாக உயர்கல்வி நிறுவனங்கள் (28%) மற்றும் தனியார் நிறுவனங்களில் (68%) 140,000 மக்களால் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசு மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மீதமுள்ள 4% ஆராய்ச்சியை மேற்கொண்டன.

இலங்கையில் விலங்கு இறைச்சி உண்ண தடை!

Image
  இலங்கையில் விலங்கு இறைச்சி உண்ண தடை! #Sri Lanka   #Food வடமேற்கு மாகாணத்தில் 2000க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் பரவியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடமேற்கு மாகாணத்தில் உள்ள 46 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 33 இடங்களில் கால்நடைகளுக்கு இந்நோய் பரவியுள்ளதாக அதன் வடமேற்கு மாகாண பணிப்பாளர் டொக்டர் பி.சி.எஸ்.பெரேரா தெரிவித்தார்.  இதன் காரணமாக வடமேற்கு மாகாணத்திற்குள் கால்நடைகளை கொண்டு செல்வது மற்றும் வடமேற்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.  நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் இறைச்சியை உட்கொள்வது பாதுகாப்பானதல்ல என வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை புண்ணியஸ்தலத்தை புனிதபூமியாக பிரகடனப்படுத்தும் சன்னஸ் பத்திரம் ஜனாதிபதியால் கையளிப்பு!

Image
  வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை புண்ணியஸ்தலத்தை புனிதபூமியாக பிரகடனப்படுத்தும் சன்னஸ் பத்திரம் ஜனாதிபதியால் கையளிப்பு! வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புண்ணியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி  தரப்பின் சிரேஷ்ட   சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய வண. உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் கையளித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரையின் புனரமைப்புப் பணிகளில் பங்கேற்ற சுதந்திர இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் நேற்று (28) பிற்பகல் மஹியங்கனை விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விஹாராதிபதி உருலேவத்தே தம்மசித்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் விகாரையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார். மெத் சவிய ஸ்தாபகர் வானியலாளர், கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தலைமையில் “மெத் சவிய மனநலக் கல்வி கருணைச் சங்கத்தின்”  மூலம் வில்லுவ...

கைத்தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உட்பட பலவற்றின் இறக்குமதித் தடையில் தளர்வு!

Image
  கைத்தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உட்பட பலவற்றின் இறக்குமதித் தடையில் தளர்வு! இலங்கை மத்திய வங்கியால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான 'பண வரம்பு தேவை' (பண வரம்பு) வரம்பை நீக்கியுள்ளது. இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும், இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் நெருக்கடி!

Image
  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் நெருக்கடி! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையிலான நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்துள்ளது. கடந்த காலங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல், ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்தமையினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பல தடவைகள் தலைவருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர் இது தொடர்பில் பொருட்படுத்தவில்லை என அதன் உறுப்பினர்கள் தெரிவித்தனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பல தடவைகள் தெரிவித்ததாக தலைவர் பல்வேறு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட போதிலும், ஏனைய உறுப்பினர்களிடமிருந்து எவ்வித தொடர்புகளும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கதிர்காமம் சென்ற ஒருவர் மாமாங்கம் ஆலயத்தில் சடலமாக மீட்பு!

Image
  கதிர்காமம் சென்ற ஒருவர் மாமாங்கம் ஆலயத்தில் சடலமாக மீட்பு! கதிர்காமத்திற்கு சந்நதியில் இருந்து பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்த யாத்திரிகர் ஒருவர் இன்று (29) ஆலயத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி கதிர்காமத்துக்கான பாதயாத்திரை யாழ். சந்நதி முருகன் ஆரலயத்தில் ஆரம்பித்த பாத யாத்திரை குழுவில் பங்கேற்று நேற்று (28) இரவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்து ஆலைய வளாகத்தில் குறித்த நபர் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் குறித்த நபர் பணிஸ் உண்ட பின்னார் அமர்ந்திருந்த நிலையில் திடீரென நிலத்தில் சரிந்து வீழ்ந்ததை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தவைமையக பொலிஸார் மேற்கொண்டு ...

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

Image
  விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு! இம்முறை நெற்செய்கைக்கான உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் வவுச்சரில் எந்தவொரு உர வகையையும் கொள்வனவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க வலியுறுத்தியுள்ளார். அண்மைய நாட்களில் 30 வீத சேதன உரங்களும், 70 வீத இரசாயன உரங்களும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இரண்டு மாவட்டங்களில் உள்ள சில சிறு விவசாயிகள் குழுவொன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட சில வகையான உரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அது உண்மையல்ல என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இரசாயன உரங்கள் அல்லது சேதன உரங்களை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வவுச்சர்களை வழங்குவதன் மூலம் விவசாயிகள் இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை அரச துறை விவசாய சேவை நிலையங்களிலோ அல்லது தனியார் துறையிலோ கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

Image
  மேலும் வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி! அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (29) டொலரின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை 303.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த விமானத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் உயிரிழப்பு

Image
  அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த விமானத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் உயிரிழப்பு #Sri Lanka   #Death   #Airport   #Lanka4   #sri lanka tamil news ங அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்து அதே விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.  நேற்றிரவு 10:35 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 605 ல் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  விமானம் தரையிறங்கிய பின்னர், சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதற்கான காரணம் வெளியானது

Image
  நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதற்கான காரணம் வெளியானது #Sri Lanka   #Arrest   #Airport   #Lanka4   #sri lanka tamil news கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்காக பேசப்பட்டு வரும் நடாஷா எ தி ரிசூரிய, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசன சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இன அல்லது மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் சட்டத்தின் 03 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய, சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.  குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் போலீஸ் சைபர் கிரைம் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டார்.  நடாஷா எதிரிசூரிய வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்த போது அவரை கைது செய்யுமாற...

மீண்டும் ஜெனிவா பொறியில் இலங்கை

Image
  மீண்டும் ஜெனிவா பொறியில் இலங்கை #Lanka4   #Tamilnews ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது,    எனினும் இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகின்றது.  நிகழ்ச்சி நிரல்களின் படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டார்க் வரும் 19 ஆம் திகதி இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார் . அன்றைய தினமே அவர் ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வரி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு முன்மொழிவு

Image
  வரி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு முன்மொழிவு #Sri Lanka   #Lanka4   #srilankan politics வரி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  சட்ட நடவடிக்கைகளுக்கு தனி நீதிமன்றம் இல்லாததால் தற்போதுள்ள வரி தொடர்பான விவகாரங்களில் பாரிய தாமதம் ஏற்படுவதாக அவர் கூறினார்.  இதேவேளை, தற்போதைய வரி அறவீட்டில் நிலவும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை நீக்கி வரி செலுத்துதலை முறைப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  இந்த யோசனை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ருவன்வெல்லவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சுற்றுலா மற்றும முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விரைவில் விமான சேவை!

Image
சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விரைவில் விமான சேவை! #Sri Lanka   #Colombo   #Province   #Lanka4 கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.  கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டு வந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த ஆண்டில் இதுவரை 26 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு

Image
  இந்த ஆண்டில் இதுவரை 26 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு #Sri Lanka   #Police   #Crime   #Lanka4   #Gun_Shoot   #sri lanka tamil news இந்த வருடத்தில் இதுவரை 26 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார். நேற்றும் பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது.   அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் தல்துவ நகருக்கு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் தங்கியிருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  இதேவேளை, நேற்று அம்பலாங்கொட பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அம்பலாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர்.  இவர் பிரபல பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர் எனவும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  மற்றைய துப்பாக்கிச் சூடு அம்பலாங்கொட, அண்டடோல பகுதி...