Posts

Showing posts from November, 2023

இளைஞர் சமூகம் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பு...!

Image
இளைஞர் சமூகம் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பு...! இளைஞர் சமூகம் மீண்டும் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பதைக் காணக் கூடும் என பால்வினை நோய்கள் தொடர்பான நிபுணரான வைத்தியர் திலானி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2022ல் எச்.ஐ.வி இனால் பாதிக்கப்பட்ட 607 பேரில் 73 பேர் இளைஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த குழு 15 முதல் 24 வயதுக்குட்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 1ஆம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் :- 2018 முதல், 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர் சமூகத்தில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. 2022 இல் புதிய எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களில் 73 பேர் இளைஞர்கள். அதாவது 12 சதவீதம். அவர்களில் 66 பேர் ஆண்கள். எனவே, இளைஞர்களிடையே எச்.ஐ.வி. தடுப்பு மிகவும் முக்கியமானது.

யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாட்டில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை. வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Image
யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாட்டில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை. வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது. யுத்தம் முடிவடைந்து 14...

உரிமைக்காக போராடிய பொதுமக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு : தவறென குரல் கொடுக்கும் கிழக்கின் கேடயம் SM சபீஸ்

Image
உரிமைக்காக போராடிய பொதுமக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு : தவறென குரல் கொடுக்கும் கிழக்கின் கேடயம் SM சபீஸ் அட்டளைச்சேனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பது மனவேதனையான விடயமாகும் என அக்கரைபற்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான SM சபீஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிதாக நிர்மான நிர்மாணிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைக்கட்டிடத்தை பூரணப்படுத்தாமல் திறக்க வேண்டாமென அவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தும் அக்கட்டிடத்தை வலுக்கட்டாயமாக திறப்பதற்கு ஆயத்தம் செய்துள்ளனர். இக்குறைகளை ஆளுநரிடம் தெரிவித்திருந்தால், நிச்சயம் ஆளுநர் குறைகளை நிவர்த்தி செய்ததன் பின்னரே திறப்பு விழா நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பார். கைது செய்யப்பட்ட பொதுமக்கள் சிறிய இடவசதியில்லாத சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டும் இன்னும் பலரைக்கைது செய்ய தேடி அலையுமளவிற்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? தமது பிரதேசத்தில் நடைபெறும் குறைகளை அடையாளங்காட்டுவதற்கும் அவைகள் நிவர்த்தி...

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறையும்..!

Image
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறையும்..! பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தெரிவித்துள்ளார். வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தால் இந்நிலை மாறலாம் எனவும் அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார். சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால், முட்டையொன்று 35 - 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாக அஜித் குணசேகர மேலும் தெரிவித்தார்.

ஐஸ் போதைப்பொருளுடன் சப் - இன்ஸ்பெக்டர் கைது..!

Image
ஐஸ் போதைப்பொருளுடன் சப் - இன்ஸ்பெக்டர் கைது..! ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக கூறப்படும் திருகோணமலை நிலாவெளி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (10) கைது செய்துள்ளது. இதன் போது குறித்த நபரிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு இந்த சந்தேகத்திற்குரிய உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளைகளை கொலை செய்யப்போவதாக ஆசிரியையை மிரட்டி, கப்பம் பெறமுயன்ற கிராம உத்தியோகத்தர் கைது...!

Image
பிள்ளைகளை கொலை செய்யப்போவதாக ஆசிரியையை மிரட்டி, கப்பம் பெறமுயன்ற கிராம உத்தியோகத்தர் கைது...! ஆசிரியை ஒருவரை மிரட்டி கப்பம் பெற முயன்ற கிராம உத்தியோகத்திர் ஒருவர் ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம பிடிபன தெற்கில் உள்ள சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் மூன்று பிள்ளைகளை கொலை செய்யப் போவதாகவும், மூத்த மகள் மீது அசிட் வீசுவதாகவும் மிரட்டி குறித்த கிராம உத்தியோகத்தர் கப்பம் பெற முயன்றுள்ளார். ஆனால் முன்பள்ளி ஆசிரியையிடம் கப்பம் கொடுக்க பணம் இல்லாததால், ஆசிரியை கிராம உத்தியோகத்தர் தொடர்ந்தும் மிரட்டப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அச்சத்தில் முன்பள்ளி ஆசிரியை கடமைக்கு செல்லாது தனது மூன்று பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பாது தலைமறைவாகியிருந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கிராம உத்தியோகத்தர் கப்பப்பணத்தை பெறும் போது கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்த அறிவிப்பு...!

Image
✅👉அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்த அறிவிப்பு...! 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000/- ரூபா சம்பள உயர்வு கிடைக்குமென அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்து பின்னர் அது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அதன்படி, ஜனவரி முதல் சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்களுக்கு இந்த சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

சட்டவிரோத சிகரெட் பாவனையில் அதீத அதிகரிப்பு...!

Image
சட்டவிரோத சிகரெட் பாவனையில் அதீத அதிகரிப்பு...! சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளால் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் அரசாங்க வருமானம் 52 பில்லியன் ரூபாவால் குறையும் என சந்தை ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்குக் காரணம் பல சந்தர்ப்பங்களில் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு மற்றும் இதன் காரணமாக இந்த நாட்டில் சட்டவிரோத சிகரெட் பாவனையின் போக்கு அதிகரித்து வருகின்றது. கடந்த வருடமும் சிகரெட் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானம் சுமார் 60 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளது. இதேவேளை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சட்டவிரோத சிகரெட் பாவனை 33 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சந்தை ஆய்வில் தெரியவந்துள்ளது.

பலஸ்தீனுக்காக 24 மணி நேரத்தில் 15 கோடி றியாழ்களைச்சேகரித்த சவுதி : மிம்பர்களில் தூண்டுமாறு உத்தரவு

Image
பலஸ்தீனுக்காக 24 மணி நேரத்தில் 15 கோடி றியாழ்களைச்சேகரித்த சவுதி : மிம்பர்களில் தூண்டுமாறு உத்தரவு சவுதி அனைத்து மிம்பர்களிலும் இன்றைய ஜுமுஆவில் பலஸ்தீன மக்களுக்காகச்செய்யப்படும் நிதி சேகரிப்பில் பங்குகொள்ளத்தூண்டுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமார் ஒரு மாத காலமாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ள பலஸ்தீன மக்களின் அடிப்படைத்தேவைகள் உணவு, மருத்துவம், நீர், இருப்பிடங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அனைவரினதும் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக "ஸாஹிம்" விசேட செயலியின் ஊடாக நன்கொடைகளைத் திரட்டும் திட்டத்தினை நேற்றைய தினம் சவுதி அரேபியா ஆரம்பித்தது. தற்போது வரை சுமார் 15 கோடி சவுதி றியாழ்கள்ச் சேர்த்துள்ள நிலையில், உலமாக்கள் இதில் பங்களிப்புச் செய்யுமாறு மக்களைத்தூண்டி வருகின்றனர். இதன் ஓரங்கமாக இன்றைய தினம் சவுதியின் அனைத்துப்பள்ளிகளிலும் குத்பாக்களில் இத்தர்மத்தில் பங்கு கொள்ள மக்களைத்தூண்டுமாறும் அதனால் இவ்வுலகிலும் மறு உலகிலும் ஏற்படவுள்ள பயன்களை விபரிக்குமாறும் தஃவா, வழிகாட்டல், இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் ஆலுஸ் ஷேய்க் அனைத்து கதீப்களுக்கும் உத்தரவ...

மூன்று பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொ...!

Image
மூன்று பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொ...! இன்று முதல் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 540 ரூபாவாகும். பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 998 ரூபாவாகும். 400 கிலோகிராம் பால்மாவின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 948 ரூபாவாகும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.