Posts

Showing posts from December, 2023

முகநூலில் பெண் போல பேசி, நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது..!

Image
முகநூலில் பெண் போல பேசி, நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது..! முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார். இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார். விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீர் கட்டணம் அதிகரிப்பு...!

Image
நீர் கட்டணம் அதிகரிப்பு...! தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவலின்படி, ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் VAT திருத்தத்தின் காரணமாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும். அதன் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத இதனைத் தெரிவித்தார். இதன் காரணமாக நீர் கட்டணம் 03 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

காவத்தமுனை உதவும் உள்ளங்களின் வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்காலத்திட்டங்கள் மீளாய்வுக்கூட்டமும்

Image
காவத்தமுனை உதவும் உள்ளங்களின் வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்காலத்திட்டங்கள் மீளாய்வுக்கூட்டமும் காவத்தமுனை உதவும் உள்ளங்கள் அமைப்பின் 4 வருட பூர்த்தியை முன்னிட்டு அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் இதுவரையில் எம்மோடு இணைந்து தூய பணியில் கைகோர்த்துக்கொண்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பல வகையிலும் உதவி, ஒத்தாசை, ஒத்துழைப்பினை நல்கி வரும் தனவந்தர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 07.12.2023ம் திகதி அமைப்பின் அலுவலகத்தில் தலைவர் M.A.அஸ்மீர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது அமைப்பினுடைய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் பிரதான திட்டம் பற்றியும் எதிர்வருகின்ற 2024ம் ஆண்டு அதனை வழங்கி வைப்பது சம்பந்தமாகவும் பேசப்பட்டது. நிகழ்வில் வருகை தந்திருந்த அமைப்பின் தனவந்தர்களினால் ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு, அமைப்பின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களும் முன்மொழியப்பட்டன. குறித்த நிகழ்வில் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்கள், ஏனைய சங்கங்கள், கழகங்களின் நிர்வாகத்தினர், வியாபாரதள உரிமையாளர்கள் மற்றும் கல்வ...

அதிகளவில் டெங்கு நோய் பரவும் நாடுகளில் இலங்கையும்...!

Image
அதிகளவில் டெங்கு நோய் பரவும் நாடுகளில் இலங்கையும்...! டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் அதிகளவில் டெங்கு நோய் பரவும் முதல் 30 நாடுகளில் இலங்கை உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. உலகளவில் டெங்கு நோய்த்தொற்றாளர்களில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள அதிகரிப்பு பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு உலகளவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான டெங்கு நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, 5,000க்கும் அதிகமான மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக டெங்கு அச்சுறுத்தலை எதிர்நோக்கும் முதல் 30 நாடுகளின் தரவரிசையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியுடன் அ/சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை இணைப்பது காலத்தில் தேவை

Image
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியுடன் அ/சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை இணைப்பது காலத்தில் தேவை இலங்கையில் இன்றுள்ள ஆசிரியர்கள் நியமன நியதிகளின் படி தற்காலத்தில் ஆ.ப. கல்லூரிகள் அவசியமற்ற ஒன்றாக மாறிவருது யாவரும் அறிந்ததே. இதனடிப்படையில் ஆ.ப.களின் வளங்களை அதனை ஆன்மித்திருக்கும் கல்விக் கல்லூரி அல்லது அரசின் தேவைக்காக அது பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டவுள்ளது இந்நிலையில் அ.தே.பா (MMV) மிக கடுமையான இட நெரிசலில் இருப்பதையும் உயர் தர வகுப்புகளை நடத்த இடமற்ற சூழ்நிலை நிலவுவதை அனைவரும் அறிந்ததே எனவே இதற்காக தற்காலிகமாக ஆ.ப.க. யில் சில பிரிவுகளை ஆரம்பித்து நாளடைவில் அதனை நிரந்தரமாக ஆக்குவதற்கு ஊரின் பிரமுகர்கள் அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினர் இதில் அக்கரை கொள்ள வேண்டும் இது அட்டாளைச்சேனை ஊரின் குறிப்பாக தே.பாடசாலையின் பின்னுள்ள 25 வருட கால தேவையினை இது ( பிரச்சினைகளை) நிவர்த்தி செய்யும் என்பது யதார்த்தமாகும். இவ்விடயத்தில் சமூகம் பாரமுகமாகச் செயற்பாடுமாயின் எதிர்காலத்தில் ஊரின் தனித்துத்துவம் பாதிப்படும் (இதில் பல்கலைக்கழகம் போன்ற ஒரு நிறுவனத்தின் பகுதிகள் அல்லது ஏனை...

அரச ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பு...!

Image
அரச ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பு...! 2022 நிதியாண்டில் நிறுவனங்கள் இலாபம் ஈட்டியிருந்தால் மற்றும் குறைந்தபட்சம் 30% வரிக்குப் பிந்தைய இலாபத்தை ஈவுத்தொகையாக ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தியிருந்தால், வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, 2023க்கான போனஸ் செலுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மக்களை மிரட்டி பணம் வசூலித்து வந்த, பெண் உள்ளிட்ட 11 பேர் கைது..!

Image
கொழும்பில் மக்களை மிரட்டி பணம் வசூலித்து வந்த, பெண் உள்ளிட்ட 11 பேர் கைது..! நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பலவித அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூலித்த பெண்ணொருவர் உட்பட 11 பேர் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும், அவர்கள் போதை பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பணம் தேடும் நோக்கில் குறித்த இடத்தில் தங்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாரஹேன்பிட்டி நகரத்திற்கு அருகில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம்...!

Image
மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம்...! பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் வாய்பகுதியை சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் காணப்படுமாயின் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். துரித உணவுகள் மற்றும் பொதியிடப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணியாற்றும் விசேட வைத்தியர் ஏ.எச்.பி.எஸ்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார். பெற்றோர்கள், இது தொடர்பில் அறிந்து அதற்கு ஏற்றாற் போல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை.!

Image
ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை.! டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரி முதல் வழங்கப்படவுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்களின் தரவுகளும் அடங்கும். முன்னதாக, டிஜிட்டல் ஐடிக்கு விண்ணப்பிக்கும் போது 76 பயோ டேட்டா கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் ஐடியைப் பெற 6 பயோ டேட்டா மட்டுமே தேவை. அதன்படி, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் அளிக்க வேண்டும். புதிதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கி அதன் பிறகு, படிப்படியாக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதே அரசின் நோக்கமாகும்.

அலிகாரின் இமாலய சாதனையோடு அலி ஸாஹிர் மௌலானாவின் முயற்சி வெற்றியை நோக்கி..! பாடசாலை மைதான அபிவிருத்திக்கு கல்வி அமைச்சு நடவடிக்கை.!

Image
அலிகாரின் இமாலய சாதனையோடு அலி ஸாஹிர் மௌலானாவின் முயற்சி வெற்றியை நோக்கி..! பாடசாலை மைதான அபிவிருத்திக்கு கல்வி அமைச்சு நடவடிக்கை.! அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவனாக அதன் முன்னேற்றத்தில் என்றும் இணைந்து பயணிக்கும் ஒருவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் காணப்படுகிறார்கள். அந்த வகையில் அண்மையில் உதைபந்தாட்ட போட்டியில் தேசிய ரீதியில் சாதித்த மாணவர்களது வெற்றியை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிறைவாக சகல வளங்களையும் கொண்ட பெரும் நகர பாடசாலைகளை எல்லாம் அடிப்படை வளங்களும் வசதிகளும் இல்லாத சிறு நகர பாடசாலை ஒன்று தோற்கடித்து வெற்றி வாகை சூடி திறமையை பறை சாற்றி உள்ளது. கொழும்பிற்கு வெளியிலும் வசதிகளும் அபிவிருத்திகளும் விளையாட்டு ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் தேசிய சாதனை நிலைநாட்டிய ஏறாவூர் அலிகார் மாணவர்கள் பயிற்சி பெற்ற அடிப்படை வசதிகள் அற்ற இந்த மைதானத்தை பாருங்கள் என பாடசாலை மைதானத்தின் புகைப்படத்தையும் ஊடகங்கள் வாயிலாக வெள...

கஜேந்திரகுமார் எம்பி மீது அழுகிய முட்டை வீச்சுத்தாக்குதல்

கஜேந்திரகுமார் எம்பி மீது அழுகிய முட்டை வீச்சுத்தாக்குதல் இன்று (15.12.2023) காலை மாதவனை, மயிலத்தமடு பிரதேசத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கெதிராக அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அழுகிய முட்டை வீச்சுத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், பிரதேச மக்கள் பயிர்செய்கைகளில் ஈடுபட்டு தத்தமது வாழ்வாதரங்களை மேற்கொள்ளும் நிலையில், பொலிசார் அப்பிரதேச மக்கள் நலனுக்காக நடுநிலையான செயற்பாட்டை முன்னெடுக்கும் போது இவ்வாறான அரசியல்வாதிகள் அப்பிரதேசத்திற்கு வருகை தந்து மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி இவ்வாறான குழப்ப நிலையை உருவாக்கி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷமெழுப்பினர். இதன் போது மட்டக்களப்பு மங்களாராம விகாராபதி அம்பிடடிய சுமன ரத்ன தேரரும் களத்திற்கு வருகை தந்திருந்ததுடன், மக்களின் எதிர்ப்பினையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடத்தை விட்டு திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 26, 27ஆம் திகதியளவில் காற்று சுழற்சி உருவெடுக்கும் : - மூத்த வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை...!

Image
எதிர்வரும் 26, 27ஆம் திகதியளவில் காற்று சுழற்சி உருவெடுக்கும் : - மூத்த வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை...! இலங்கையின் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சி, மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதனால், இன்று முதல் நாட்டின் சில பகுதிகளுக்கு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக மூத்த வானிலை ஆய்வாளர் சூரியகுமார் தெரிவித்துள்ளார். இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு தெற்காக வந்து, குமரிக் கடல் வழியாக மாலைத்தீவு, இந்தியாவின் லட்சஷதீவுக்கு இடைப்பட்ட பகுதியின் ஊடாக அராபிய கடல் பிராந்தியத்திற்கு செல்லும். அதேவேளை எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையை நெருங்கி, அது எதிர்வரும் 21, 22, 23ஆம் திகதியளவில் மன்னார் வளைகுடா ஊடாக அரபிக் கடல் பிராந்தியத்தினுள் நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாகவும் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மழை காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது அது மட்டுமல்லாது, எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் அந்தமான் கடல் பிராந்தியத்தில் தெற...

பதினொரு மாதங்களில் 3,000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள்..!

Image
பதினொரு மாதங்களில் 3,000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள்..! இந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை 3,255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றுள் கணிசமான எண்ணிக்கையானது அரச ஊழியர் கட்டமைப்பின் செயற்பாடுகளின் அடிப்படையில் பெறப்பட்ட முறைப்பாடுகளாகும். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 முறைப்பாடுகளும், அதிபர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 50 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இலஞ்ச முறைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் விசாரணைப் பணிகளைத் தொடர்வதற்கு ஆணைக்குழுவில் உள்ள வெற்றிடங்களை, விரைவாக நிரப்ப வேண்டிய தேவை இருப்பதாகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

#கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, #சஹிலா #இஸ்ஸதீன் கடமையேற்பு..!

Image
#கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, #சஹிலா #இஸ்ஸதீன் கடமையேற்பு..! கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி (திருமதி) சஹிலா இஸ்ஸதீன் தனது கடமைகளை இன்று (11) பொறுப்பேற்றுக்கொண்டார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைற்றி வந்த வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராக இடமாற்றப்பட்டதையடுத்து, ஏற்பட்ட இந்த வெற்றிடத்திற்கு பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக செயற்பட்டு வந்த வைத்திய கலாநிதி (திருமதி) சஹிலா இஸ்ஸதீனுக்கு பணிப்பாளர் பதவியுயர்வு வழங்கப்பட்டு இன்று அவர் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த கடமையேற்பு நிகழ்வை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு கேக்வெட்டி இனிப்புப் பொருட்கள் வழங்கி கொண்டாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை...! வேலியேபயிரை மேயலாமா?

Image
அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை...! வேலியேபயிரை மேயலாமா? நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த போக்கு மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வந்துள்ளதால் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. யாழில். மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததை நாம் அறிவோம். இச்சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் மறையும் முன்னமே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சமூட்டும் வகையில் உள்ளன. குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்துவரும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. அண்மையில் கல்முனையிலுள்ள ஆலயமொன்றில் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 வயதான சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏ...