Posts

Showing posts from September, 2024

புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு போராட்டம் !

Image
  புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு போராட்டம் ! சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி கல்விமைச்சின் முன்பாக பெற்றோர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து பாடசாலை மாணவன் பலி ; காத்தான்குடியில் சம்பவம் !

Image
  மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து பாடசாலை மாணவன் பலி ; காத்தான்குடியில் சம்பவம் ! காத்தான்குடி பகுதியில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி சந்தை வீதி, தொகுதி 05 இல் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு முன்னால் உள்ள சிறிய வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளுடன் தவறி கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி அல்ஹிரா மகா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்ற குறித்த மாணவன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய பிள்ளையாவார். உயிரிழந்த மாணவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் !

Image
  நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ! சர்வதேச சிறுவர் தினமான நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். காணாமல் போனோர் விவகாரத்தில் நாட்டின் புதிய ஜனாதிபதி தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உரமானியக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு ; விவசாயிகள்,ஜனாதிபதிக்கு நன்றி !

Image
  உரமானியக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு ; விவசாயிகள்,ஜனாதிபதிக்கு நன்றி ! ஹெக்டயருக்கான உரமானியம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து அம்பாறை மாவட்ட பெரும்போக விவசாயிகள்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இதுவரை ஹெக்டயருக்கு 15 ஆயிரம் ரூபாவே உரமானியமாக வழங்கப்பட்டுவந்தது.இந்நிலையில் உரமானியக் கொடுப்பனவு, ஒக்டோபர் 01ம் திகதி அமுலுக்குவரும் வகையில் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது போன்று, உரமானியக் கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவசர நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இதற்கு அம்பாறை மாவட்ட பெரும்போக விவசாயிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விவசாய மூலப்பொருட்களை உரியவாறு முகாமைத்துவம் செய்யும் நோக்கில், நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட மூலப்பொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயன மற்றும் சேதன உரம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதிய அ...

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து !

Image
  இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ! யாழ்ப்பாணத்தில் ஹயஸ் ரக வாகனமும் கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில்,வாகனங்களில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், கொடிகாமம் – புத்தூர் சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிஸார் கப் ரக சாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

Image
  பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு ! பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் சுகாதார துவாய்கள் (சானிட்டரி நாப்கின்) வவுச்சர்களின் B பிரிவு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது. இதன்படி, வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியின் கீழ் போட்டி !

Image
  ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியின் கீழ் போட்டி ! இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் குழுக்களும் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இன்று (26) கலந்துரையாடல்கள் சில இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இது தொடர்பில் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் மற்றும் சின்னம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, கூட்டணி அமையுமாயின் அதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்கும் இடையில் ...

திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்கும் ஜனாதிபதி அநுர - ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு !

Image
  திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்கும் ஜனாதிபதி அநுர - ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு ! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு தயங்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அமைச்சு செயலாளர்களை நியமிக்கும் போது திறமையற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகள் புதிய அரசாங்கத்திலும் செயலாளர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். தற்போதைய அரசாங்கம் அமைச்சுகளை நிர்வாகம் செய்வதற்காக அமைச்சுக்களின் செயலாளர்களை இவ்வாறு நியமித்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பில் திருப்திக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசு நிர்வாகத்தின் பிரதான செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் அவர் மேல் மாகாண பிரதா...

வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து !

Image
  வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து ! சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வைத்தியர் அர்ச்சுனா சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறியமை, பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை காரணமாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் பிணை இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளை கடந்த தவணையில், வைத்தியர்களின் பிணையாளிகள் மன்றில் நேரில் தோன்றி தம்மை பிணையாளிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

Image
  ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ! நாடாளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 85 பேர் ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் குறித்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக முன்கூட்டி கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் உறுப்பினர் ஒருவருக்கு அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது. மேலும் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்துடையவர். 1977 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஓய்வூதிய சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற...

கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து !

Image
  கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து ! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் ஊடாக கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு பேரவை மாத்திரம் கலைக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதிய குழுக்கள் நியமிக்கப்படும் வரை அதன் உறுப்பினர்களாக மாத்திரம் செயற்பட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் நிமல்சிறிபால டீ சில்வா செயற்பட்டிருந்தார். இந்த நிலையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம், சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதிநிதிகள் குழுக்களின் தலைவர், சபை முதல்வர் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகிய பதவிகள் இரத்துச் செய்யப...

பகிடிவதையை தவிர்க்க வழிகாட்டுதல் தொகுப்பு !

Image
  பகிடிவதையை தவிர்க்க வழிகாட்டுதல் தொகுப்பு ! அரச பல்கலைக் கழகங்களில் நிகழும் பகிடிவதை சம்பவங்களை தவிர்ப்பதற்கு வழிகாட்டுதல் தொகுப்பொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்கான உத்தரவு ஒன்றை வௌியிடுமாறு கோரி, 2020 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவொன்று, ஜயந்த ஜயசூரிய, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா, அரச பல்கலைக் கழகங்களில் நிகழும் பகிடிவதை சம்பவங்களைத் தடுப்பதற்காக வழிகாட்டுதல் தொகுப்பொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இதன்போது, வழிகாட்டுதல் தொகுப்பினை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி, ஏதேனும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டால், அவற்றைப் பெற்று இறு...

ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார் - சீனா !

Image
  ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார் - சீனா ! இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில், நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை கடைப்பிடித்து, அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றுவதற்கு சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அண்மைய ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான், செப்டெம்பர் 21 ஆம் திகதி தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாகவும், இலங்கையின் நட்பு அண்டை நாடான சீனாவும், இலங்கையும் எல்லா நேரங்களிலும் பரஸ்பர மரியாதையுடனும் ஆதரவுடனும் நடந்துகொண்டதாகவும் கூறினார். இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து கொண்ட திஸாநாயக்காவுக்கு சீனா மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார் என்று அவர் கூறினார். சமாதான சகவாழ்வின் ஐந்து கோட்பாடுகளின் உணர்வை நிலைநிறுத்துவதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான பாரம்...

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயம் !

Image
  முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயம் ! புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக பதவியேற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களை கையளிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். இந்நிலையில், குறித்த பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாயமான முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருட்களின் கையிருப்புத் தொடர்பில் வெளியான தகவல் !

Image
  எரிபொருட்களின் கையிருப்புத் தொடர்பில் வெளியான தகவல் ! நாட்டில் உள்ள எரிபொருட்களின் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவொன்றினை வெளியிட்டுள்ளார். இதன்படி, 1 இலட்சத்து 23,888 மெற்றிக் டொன் டீசலும், 13 ஆயிரத்து 627 மெற்றிக் டொன் சுப்பர் டீசலும் கையிருப்பாக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 90,972 மெட்ரிக் டொன் ஒக்டேன் 92 வகை பெட்ரோலும், 18,729 மெட்ரிக் டொன் ஒக்டேன் 95 வகை பெட்ரோலும் உள்ளதாகவம் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 30,295 மெற்றிக் டொன் விமான எரிபொருள் இருப்பதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதேவேளை, தனது உத்தியோகபூர்வ அரச வாகனத்தையும் அமைச்சு அலுவலகத்தையும் நேற்று கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் !

Image
  ரணில் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் ! எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, தேசிய பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு...!

Image
 கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு...! நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் இது குறித்த பதிவொன்றினை இட்டிருந்தார்.. இதன்படி, 123,888 மெற்றிக் டொன் டீசலும், 13,627 மெற்றிக் டொன் சுப்பர் டீசலும் கையிருப்பாக உள்ளன. நாட்டில் 90,972 மெட்ரிக் டொன் ஒக்டேன் 92 வகை பெட்ரோலும், 18,729 மெட்ரிக் டொன் ஒக்டேன் 95 வகை பெட்ரோலும் உள்ளன. நாட்டில் 30,295 மெற்றிக் டொன் விமான எரிபொருள் இருப்பதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதேவேளை, தனது உத்தியோகபூர்வ காரையும் அமைச்சு அலுவலகத்தையும் நேற்று (22) கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகமொன்றுக்கு சீல் !

Image
  சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகமொன்றுக்கு சீல் ! யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையம் ஒன்றிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , 15 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 40,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவு கையாளும் நிலையங்களில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, உரிய முறையில் குளிர்சான பெட்டியை பேணத் தவறியமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, மருத்துவ சான்றிதழ் கொண்டிராமை, சுகாதார முறைப்படி உணவு கையாளும் இடப்பரப்பினை பேண தவறியமை, உபகரணங்களை உரிய முறையில் பேண தவறியமை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக உரிமையாளர்களுக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது 15 உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று, உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 40,000 ரூபா அபராதம் விதித்தது. அதேவேளை, ஒரு உரிமை...

ஊவா மாகாண ஆளுநரும் இராஜினாமா !

Image
  ஊவா மாகாண ஆளுநரும் இராஜினாமா ! ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் ; தேசிய கல்வி நிறுவக திட்டமிடல் பணிப்பாளர் கைது !

Image
  புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் ; தேசிய கல்வி நிறுவக திட்டமிடல் பணிப்பாளர் கைது ! தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் மேலும் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மஹரகம, தேசிய கல்வி நிறுவகத்தில் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன்- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க !

Image
  அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன்- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ! அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை(23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். தேர்தலை நடத்துவதும் , அரச தலைவரை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல, எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன். சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன். அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம் !

Image
  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம் ! மாளிகாவத்தை, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றிரவு (22) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் முன் நின்றிருந்த நபர் ஒருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் காயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதுடன், அவர் தெஹிவளை சோல் பீச் ஹோட்டலின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அனுரகுமார திஸாநாயக்க யார் ?

Image
  நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அனுரகுமார திஸாநாயக்க யார் ? இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, அவர் இன்று (23) காலை பதவியேற்கவுள்ளார். அனுரகுமார திஸாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மாத்தளை தேவஹுவ கிராமத்தில் பிறந்தார். திசாநாயக்க முதியன்சலாகே ரன்பண்டா மற்றும் திசாநாயக்க முதியன்சலாகே சீலாவதி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். திஸாநாயக்க குடும்பத்தில் இரண்டாமவராக இருந்த அனுர, தனது அடிப்படைக் கல்விக்காக தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் பயின்றார். சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இவர் உயர்தரக் கல்விக்காக தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் நுழைந்தார். அங்கு விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் உயர்தரத்தில் சித்தியடைந்து 1992 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். 1987 ஆம் ஆண்டு பாடசாலை மாணவராக இருந்தபோது, ​​இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக சோசலிச மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளராக இருந்த அனுர, பல்கலைக்கழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகராக மாறினார்...

அநுரவுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து !

Image
  அநுரவுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து ! இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான சாகா் முன்னெடுப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு சிறப்பிடம் உள்ளது. இந்நிலையில், இரு நாட்டு மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் நலனுக்காக இந்தியா-இலங்கை இடையிலான பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அநுரகுமாரவுடன் நெருங்கிப் பணியாற்ற ஆவலாக உள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் !

Image
  10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ! எதிர்வரும் 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். "நாங்கள் உருவாக்கும் அரசாங்கத்தின் மூலம் உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பது போல்,கொழுந்து, விவசாயிகளின் மிளகு மற்றும் பால் ஆகியவற்றிற்கு நியாயமான மற்றும் நிலையான விலையை வழங்க நாங்கள் தெளிவாக பாடுபடுவோம் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம். சிறு தேயிலை உரிமையாளர்களுக்கும் உர மானியம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒரு திட்டத்துடன் வேலை செய்கிறோம். மேலும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன், எனது அன்பான தாய் தந்தையரே, அடுத்த 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் வளர்ந்த நாடாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்றுவோம். இக்கட்டான நேரத்தில், சவாலான காலக்கட...

தேர்தல் காரணமாக பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு !

Image
  தேர்தல் காரணமாக பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு ! நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள் நிறுவனங்கள் பல பஸ்களிலும், இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும் விரைவுப் பஸ்களிலும் ஆசனங்கள் முன்பதிவு செய்யப்படுவதாகக் கூறுகின்றன. நாளை 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் அனைத்து ஆசனங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு வரும் பஸ்களில் தொண்ணூறு வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். . அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் பயணிக்கக்கூடிய பஸ்களில் மேற்படி நான்கு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 23ஆம் திகதி வரை சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்...