Posts

Showing posts from October, 2024

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி விபத்து ; இறால் தொகை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு !

Image
  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி விபத்து ; இறால் தொகை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு ! தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீன் ஏற்றிச் சென்ற லொறியொன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மீன் லொறியில் இருந்த ஏழு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இறால் தொகை காணாமல் போயுள்ளதாக லொறியின் சாரதியால் கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் மீன் வியாபாரியான கே. எச்.ஆர். குமார் என்பவர் நீர்கொழும்பில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு தங்காலை நோக்கி பயணித்த போது சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. விபத்தில் மீன் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மீன் லொறியின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் லொறியில் இருந்த இறால் தொகை லொறியின் தரையிலும் வீதியிலும் சிதறிக் கிடந்திருந்துள்ளது. சாரதியின் சகோதரனான லொறியின் உரிமையாளர் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வந்து பார்த்த போது இரண்டு க...

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை !

Image
  அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை ! அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று செவ்வாய்க்கிழமை (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு போதியளவு கடவுசீட்டு கையிருப்பில் உள்ளதால் நீண்ட கால தேவைகளுக்காக கடவுச்சீட்டு தேவைப்படுவோர் காத்திருக்க வேண்டும். தற்போது, தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மொத்தம் 1,600 கடவுசீட்டுகள் திணைக்களத்தில் நாளாந்தம் வழங்கப்பட்டு வருகின்றன.

அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகளின் நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் விசாரணை !

Image
  அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகளின் நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் விசாரணை ! அறுகம்குடாவில் இஸ்ரேலியர்கள் உட்பட சுற்றுலாப்பயணிகள் வர்த்தக மத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். இலங்கையில் சுற்றுலா விசாவில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோத வர்த்தக மத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளா தெரிவித்துள்ளார். அனைத்து சுற்றுலாப்பயணிகளும் குறிப்பாக அருகம்குடாவில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் இலங்கையில் சுற்றுலாவிசாவிலேயே தங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மத வர்த்தக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஹோட்டல்களிற்கும் இது குறித்து அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு முதல் அரச சேவைக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் , உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் : அமைச்சர் விஜித ஹேரத் !

Image
  2025ஆம் ஆண்டு முதல் அரச சேவைக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் , உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் : அமைச்சர் விஜித ஹேரத் ! அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் பணம் உள்ளதா என்பதை கூட அவதானிக்கவில்லை என தெரிவித்தார். “.. ஜனவரி மாதம் முதல் உதய ஆர்.செனவிரத்னவின் குழு அறிக்கையின்படி சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.பணம் கிடைக்கிறதா இல்லையா என்பதை கூட அவர்கள் கவனிக்கவில்லை.அமைச்சரவையில் முடிவெடுக்க முடியும் ஆனால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமே. . அதாவது ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகை அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என்றனர். நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மு...

புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை : அமைச்சர் விஜித ஹேரத் !

Image
  புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை : அமைச்சர் விஜித ஹேரத் ! புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதேபோல், தாம் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தும் வெளிநாட்டுக் கடனைப் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “பொதுவாக, புதிய திரைச்சேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வெளியிடும் முறையை மத்திய வங்கி கொண்டுள்ளது. அந்த செயல்முறை தினமும் நடக்கும் ஒன்று. மேலும், பணம் அச்சிடுவதை எடுத்துக் கொண்டால், உண்மையில் புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை, அதைச் செய்ய முடியாது. புதிய பணத்தை அச்சிட முடியாது என்பது தௌிவாக உள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நாணயத்தாள் ஒன்றை பார்க்க எனக்கும் விருப்பம்தான். ஆனால் இதுவரை அது வெளியிடப்படவில்லை. இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி."

மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது !

Image
  மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது ! மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீராகேணி பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 24, 33 மற்றும் 36 வயதுடையவர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 11 கிராம் 230 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் , 10,500 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லிட்ரோ எரிவாயு குறித்து அமைச்சரவை வழங்கிய அனுமதி !

Image
  லிட்ரோ எரிவாயு குறித்து அமைச்சரவை வழங்கிய அனுமதி ! லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட்டிற்கு 2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை M/s OQ Trading Limited இற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் கீழே. 2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கல் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட்டிற்கு 2025ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரல் முறையைக் கடைப்பிடித்து ஒருகட்ட இரட்டை கடிதவுறை முறையின் கீழ் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்காக M/s OQ Trading Limited மற்றும் M/s Siam Gas Trading Pte Limited ஆகிய இரண்டு நிறுவனங்கள் மாத்திரம் விலைமுறியினை சமர்ப்பித்துள்ளது. தொழில்நுட்ப மதிப்பீட்டின் போது M/s Siam Gas Trading Pte Limited இனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைமுறி நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்...

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ப டு கொ லை!

Image
  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ப டு கொ லை! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்  கிருஷாந்த புலஸ்தி தனது வீட்டில் கட்டிலில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் நேற்று (28) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 75 வயதுடைய குறித்த நபர் ஹெட்டிமுல்ல - புலுருப்ப பிரதேசத்தை சேர்ந்தவராவார். அவரது மனைவி வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு, வீட்டில் இருந்த அலமாரிகள் அனைத்தும் திறந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். சந்தேகநபர்களின் தாக்குதலால் குறித்த பெண்ணும் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களது திருடப்பட்ட கார் பின்தெனிய பொலிஸ் பிரிவில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வ...

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் பணிஷ்கரிப்புக்கு திட்டம் !

Image
  ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் பணிஷ்கரிப்புக்கு திட்டம் ! ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளை இணைத்துக்கொள்ளல் மற்றும் அவர்களின் பதவி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய பின்னர் ரயில் நடத்துனர்களின் பதவி உயர் மற்றும் சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்க தவறினால் பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள போதும் அரசாங்கம் அதனை மேற்கொள்ளாது ரயில் நடத்துனர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள திட்டத்தை தயாரித்துள்ளது. என்றாலும் நத்துனர்களின் சங்கத்தின் எதிர்ப்பு காரணமாக நிலைய பொறுப்பதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு நடைமுறை இடம்பெறாமல் இருந்து வருகிறது. இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் தீர்வு கிடைக்காததால், தமது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்காவிட்டால் உடனடியாக பணி பகிஷ்கரிப்பு போராட்டத்துக்கு செல்ல...

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியவர் கைது !

Image
  வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியவர் கைது ! கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் வாரியபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வாரியபொல பகுதியைச் சேர்ந்த (67) வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கடந்த (27ஆம் திகதி) விமான நிலைய முகாமையாளருக்கும் விமான நிறுவனத்துக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அழைப்பிற்குப் பிறகு, விமான நிலைய செயல்பாடுகள் தடைபட்டன, விமான நிலையமும் பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் விமானங்கள் தாமதமாகின.

தேயிலை தோட்டத்தில் பாய்ந்து சொகுசு கார் விபத்து !

Image
  தேயிலை தோட்டத்தில் பாய்ந்து சொகுசு கார் விபத்து ! வீதியோரத்தில் நடப்பட்டிருந்த மரம் ஒன்றினை பிடிங்கிக்கொண்டு தேயிலை தோட்டத்தில் பாய்ந்து சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்திக்கு அருகாமையில் கொழும்பு பக்கமாக 200 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வருகை தந்த கார் ஒன்றே இவ்வாறு இன்று 29 அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் எவருக்குக காயம் எதுவும் ஏற்டவில்லை என்றும் கார் மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதி வழுக்கும் நிலையில் காணப்படுவதனால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் தெரிவித்தனர். சீரற்ற காலநிலை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதனால் வளைவுகள் நிறைந்த மலையக பாதைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரைத்த கோதுமை மா ப​சையுடன் வேட்பாளர் கைது !

Image
  கரைத்த கோதுமை மா ப​சையுடன் வேட்பாளர் கைது ! கோதுமை மாவை கரைத்து ப​சையாக எடுத்துச் சென்றது மட்டுமன்றி ஒரு தொகை சுவரொட்டிகளையும் தன்னுடைய ஜீப்பில் எடுத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட ஆறு பேர் வத்துகெதர வடுமுல்ல பிரதேசத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (29) காலை கைது செய்யப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகம். கைது செய்யப்பட்டவர்களில் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் அடங்குகின்றார். எனினும், பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள தன்னை கைது செய்தது சட்டவிரோதமானது என்று வேட்பாளர் கூறுகிறார்.

போதையில் முச்சக்கரவண்டி பந்தயம் ;09 பேர் கைது !

Image
  போதையில் முச்சக்கரவண்டி பந்தயம் ;09 பேர் கைது ! கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி செலுத்திய நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 முச்சக்கர வண்டிகள் மற்றும் 09 சாரதிகள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, மோதரை, கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல பிரதேசங்களை சேர்ந்த 18 முதல் 22 வயதுக்குட்பட்ட சாரதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் மாபொல பிரதேசத்தில் நீண்ட காலமாக இந்த பந்தயத்தில் குறித்த குழுவினர் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பந்தயத்தினால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை ராகம பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்திய போது, ​​அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது. ...

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த பாரிய மரம் வெட்டப்பட்டது !

Image
  மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த பாரிய மரம் வெட்டப்பட்டது ! மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த பாரிய மரம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் நேற்று மாலை வெட்டப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் பழமை வாய்ந்த குறித்த மரம் பிரதான வீதியில் முறிந்து விழும் நிலையில் காணப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மாவட்டத்தில் பருவமழை ஆரம்பிக்க இருப்பதால் குறித்த மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்து வீதியில் பயணிக்கின்ற வாகனங்கள் மீதும் மக்களின் மீதும் உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். இதனால் பாரிய மரத்தின் கிளைகளை வெட்டுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்தே குறித்த மரம் வெட்டப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு !

Image
  மின் கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ! மின் கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரி இலங்கை மின்சார சபைக்கு இன்று (28) அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு மீளாய்வுக்காக, இலங்கை மின்சார சபையானது கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை அண்மையில் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது. அதற்கமைய, முன்மொழியப்பட்ட மறு ஆய்வுகள் குறித்து விவாதிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று சந்திக்க உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் மேலதிக திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், மின்சார சபைக்கு கடிதம் மூலம் அறிவிக்க முடியும் .

வருடாந்தம் 19,000 பேர் புற்றுநோயால் மரணிப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு !

Image
  வருடாந்தம் 19,000 பேர் புற்றுநோயால் மரணிப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு ! நாட்டில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கைகளுக்கு அமைவாக, இரத்தப் புற்றுநோய், நிணநீர்க் குழாய் தொடர்பான புற்றுநோய், மூளை தொடர்பான புற்றுநோய், எலும்பு தொடர்பான புற்றுநோய் போன்றன குழந்தகைளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. உலகில் புற்றுநோய் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 35,000 முதல் 40,000 வரை புதிதாக புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இலங்கையில் புற்றுநோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு சராசரியாக 19,000 இற்கும் அதிகமாக உள்ளது. பெண்களிடையே மார்பக புற்றுநோயின் அபாயம் வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு (2023) பதிவான பெண் புற்றுநோய்களில் 26% வீதமானவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளமை தெரியவருகிறது. ஆண்களிடையே அதி...

வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது !

Image
  வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது ! அநுராதபுரம் மாவட்டத்தில் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த நபர்களிடம் இருந்த வெடி பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுமந்திரன் வேண்டுகோள் !

Image
  உயிர்த்த ஞாயிறு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுமந்திரன் வேண்டுகோள் ! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் சம்பந்தமான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை, ஜனத் டிசில்வா தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். உதயகம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் அறிக்கைகளின் உள்ளடக்கம் சம்பந்தமாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவராக விசாரணைகளில் பங்கேற்றிருந்தேன். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையானது அந்த நேரத்தில் காணப்படுகின்ற தரவுகளை மையப்படுத்தியே தயாரிக்கப்பட்டிருந்தது. ஆகவே, மேலதிக விசாரணைகள் அவசியமாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டியிரு...

ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தம்; பெண்ணொருவரை கொ ல் ல தயாரான நபர் கைது !

Image
  ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தம்; பெண்ணொருவரை கொ ல் ல தயாரான நபர் கைது ! ஒரு கோடி ரூபா ஒப்பந்தத்திற்காக பெண்ணொருவரை கொல்ல தயாரான நபர் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் டி-56 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 6 ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையான நபருக்கு பெண் ஒருவரைக் கொல்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாகவும், அவருக்கு ஒரு கோடி ரூபா பணம் தருவதாகவும் உறுதியளித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள து.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Image
  பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 716 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 225 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 491 முறைப்பாடுகளும் 15 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 54 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 01 பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், வன்முறைச் சம்பவங்கள் 6 பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 கிலோவுக்கும் அதிக ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது !

Image
  5 கிலோவுக்கும் அதிக ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது ! 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், 5.26 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆண் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க து.

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பியின் டிபெண்டர் வாகனம் !

Image
  விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பியின் டிபெண்டர் வாகனம் ! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிபெண்டர் வாகனம் நேற்று (25) விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் பின்னர் பிரதேசவாசிகளுக்கும், டிபெண்டர் வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இரு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாகனத்தில் பல்வேறு ஆயுதங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை !

Image
  இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை ! இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். “பொதுத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதன்முறையாக தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவரை நிறுத்தியதன் மூலம் சரித்திரம் படைத்தேன்” என, நிமேஷா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நாட்டிற்குள் பலன் மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதியிடம் உறுதியளித்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் !

Image
  நாட்டிற்குள் பலன் மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதியிடம் உறுதியளித்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பயின்(David Pine) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறிய நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் வலுவான மற்றும் பலன் மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். தற்போது வருடாந்தம் இலங்கைக்கு 7,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், அந்த எண்ணிக்கையை 50,000 வரையில் அதிகரிக்க இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார். இலங்கைக்குள் நியூசிலாந்து முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம், பயிற்சி, வளங்கள் தொடர்பில் நியூசிலாந்தின் நிபுணத்துவ அறிவை பெற்றுக்கொள்வது தொடர்பி...

ஈரான் மீதான தாக்குதலை முடித்துவிட்டோம் - இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு !

Image
  ஈரான் மீதான தாக்குதலை முடித்துவிட்டோம் - இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு ! ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2வது வீடியோ பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும். நாங்கள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். இதன் மூலம், இஸ்ரேல் அரசுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்தோம். ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்" என தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை அவர் வெளியிட்ட முதல் வீடியோவில், "இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரான...

காட்டுப் பகுதியில், மீட்கப்பட்ட படகின் வெளி இணைப்பு இயந்திரம் !

Image
  காட்டுப் பகுதியில், மீட்கப்பட்ட படகின் வெளி இணைப்பு இயந்திரம் ! வடமராட்சி, வெற்றிலைக்கேணி காட்டுப் பகுதியில் படகின் வெளி இணைப்பு இயந்திரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி காட்டுப் பகுதியில் நேற்று படகு ஒன்றின் வெளி இணைப்பு இயந்திரம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஆழியவளையை சேர்ந்த நபர் ஒருவர் நாவல் பழம் பறிப்பதற்காக காட்டு பகுதிக்கு சென்ற வேளை, மணலில் புதையுண்ட நிலையில் 25 குதிரை வலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரத்தை கண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தலைவருக்கு தெரியப்படுத்தியதுடன் பொலிசாருக்கும் தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் வெளி இணைப்பு இயந்திரத்தை மீட்டு, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் .

மாணவிக்கு பா லி ய ல் சேட்டை; அதிபர் கைது !

Image
  மாணவிக்கு பா லி ய ல் சேட்டை; அதிபர் கைது ! ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்தின் அதிபர் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் சேட்டைக்கு தூண்டிய சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர் ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (25) மாலை இவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் அதிபருக்கு வட்ஸ்எப் ஊடாக அனுப்பிய கடிதத்திற்கு, குறித்த அதிபர் அந்த மாணவியை தரம் 04 க்கான கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் கடைக்கு போவதாக கூறி i.c.t.நிலையத்திற்கு வருமாறு அந்த மாணவிக்கு பதில் அனுப்பியுள்ளமை தெரிய வந்ததால், நேற்றைய தினம் பெற்றோர்கள் ஒன்று கூடி பாடசாலை அதிபரை கைது செய்யுமாறும் பாடசாலையை விட்டு வெளியேறுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை குறித்த மாணவி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிபர் இன்று (26) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு...