Posts

Showing posts from November, 2024

“ஃபெஞ்சல்” புயலின் தாக்கம் காரணமாக காற்றின் தரம் குறைவடையலாம் - மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) எச்சரிக்கை !

Image
  “ஃபெஞ்சல்” புயலின் தாக்கம் காரணமாக காற்றின் தரம் குறைவடையலாம் - மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) எச்சரிக்கை ! தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” புயலின் தாக்கம் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (30) காற்றின் தரம் குறைவடையலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் சில பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 92 - 120 வரை காணப்படலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, குருணாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, புத்தளம், பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் தரம் குறைவடைவதன் மூலம் வளிமண்டலத்தில் மாசு அதிகரிக்கக்கூடும். இதனால் காற்று மாசுபாடு ஏற்படும். காற்று மாசுபாடு ஏற்படுவதால் மனிதர்கள் மத்தியில் நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். குறிப்பாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்...

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது !

Image
  6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது ! ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 9 பேர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் 10ஆம் திகதி லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம், 7 பவுண் தங்கம் மற்றும் 2 பொம்மை கைத்துப்பாக்கிகள், கத்தி மற்றும் வேன் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகிறது. சந்தேகநபர்கள் வத்தேகம, சபுகஸ்கந்த, பொல்பித்திகம, குருநாகல், இரத்தினபுரி மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மக்களுக்கு நிவாரணம் வழங்க 4 மாவட்டங்களுக்கு 16 பேரிடர் மீட்பு குழுக்கள் நியமனம் !

Image
  மக்களுக்கு நிவாரணம் வழங்க 4 மாவட்டங்களுக்கு 16 பேரிடர் மீட்பு குழுக்கள் நியமனம் ! நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 மாவட்டங்களுக்கு 16 பேரிடர் மீட்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது. அம்பாறை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், உதவி வழங்குவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, வட பிராந்தியத்திலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை மீண்டும் கொண்டு வருவதற்கு, பெல் 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

அடுத்த 06 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் புயல் !

Image
  அடுத்த 06 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் புயல் ! தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து இன்று (27) அடுத்த 06 மணித்தியாலங்களில் புயலாக வலுவடையும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ச...

சீரற்ற வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் !

Image
  சீரற்ற வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ! நாட்டில் தற்போது நிலவும் மிகமோசமான சீரற்ற வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில், எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உயர் தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல் !

Image
  உயர் தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல் ! கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார். நிலவும் வானிலை தொடர்பில் அறிவுறுத்துவதற்காக இன்று (27) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், தற்போதைய வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் வானிலை நிலைமைகளை மீளாய்வு செய்து தேவையான பொருத்தமான நிலைமைகளை அமைத்துக் கொண்டு உயர்தரப் பரீட்சையை மீண்டும் ஆரம்பிப்போம் என நம்புகின்றோம். அது குறித்த தகவல்கள் பரீட்சை திணைக்களத்தால் உரிய நேரத்தில் வழங்கப்படும்”. என்றார். கடும் மழை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை 3 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நேற்று (26) தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, இன்று, நாளை மற்றும் 29ஆம் திகதி ஆகிய மூன்று நாட்கள் உயர்தரப் பரீட்சை நட...

கிழக்கு பல்கலைக்கழக விடுதிகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டன !

Image
  கிழக்கு பல்கலைக்கழக விடுதிகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டன ! சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகள் புதன்கிழமை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டு மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் அமரசிங்கம் பகிரதன் தெரிவித்தார். மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் நிகழ்நிலை மூலம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பிரதான வீதிகளில் வெள்ள நீர் மட்டம் உயர்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடமைக்கு வருவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியதுடன் பலர் கடமைக்கு சமூகமளிக்கவில்லை. இதனைக் கருத்திற்கொண்டு மாணவர்களை வீட்டுகளுக்கு அனுப்பியதுடன் நிகழ்நிலை மூலம் க...

மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை விடுத்த ஜனாதிபதி !

Image
  மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை விடுத்த ஜனாதிபதி ! தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைத்து தேவையான உணவு மற்றும் மலசலகூட வசதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அந்த மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிகாரிகளுக்கு ...

மதமாற்றிய குழுவினர் மீது மலம் வீசி தாக்குதல் !

Image
  மதமாற்றிய குழுவினர் மீது மலம் வீசி தாக்குதல் ! நோய்களைக் குணப்படுத்த மத வழிபாடு நடத்துகிறோம் என்ற போர்வையில் மதம் மாறிய குழுவினர் மீது மல தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மொனராகலை வராகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. வராகம பத்தஹகல, சியாம்பலாண்டுவ, பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டில் உள்ள நோய்வாய்ப்பட்ட பெண்களை தெய்வ வழிபாடு நடத்தி குணமாக்குவதாகவும், அவர்கள் மேலும் குணமடைவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வரகம பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், குறித்த பெண் வாரகமவில் உள்ள தனது வீட்டில் சமய வழிபாடு நடத்தி நோய்களை குணப்படுத்தி வருகின்றார். இவ்வாறு சேவையை மேற்கொண்ட நோயாளிகள் குழுவொன்று மேலதிக சிகிச்சைக்காக ஜாஎல வெலிகம்பிட்டிய பிரார்த்தனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் போதே பஸ் மீது இந்த மலக்கழிவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் பஸ்ஸில் பயணித்த மக்களின் வேண்டுகோளின் பேரில் பொலிஸார் தலையிட்டு அவர்களை மீண்டும் ஜாஎல பகுதிக்கு அனுப்பி வைத்தனர். சியாம்பலாண்டுவ சாசனார்ஷக சபையின் தலைவர் புத்தம ரஜமஹா விஹாரதி பனமாயே ...

காதலால் பாடசாலை மாணவிகள் இருவர் எடுத்த விபரீத முடிவு !

Image
  காதலால் பாடசாலை மாணவிகள் இருவர் எடுத்த விபரீத முடிவு ! விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவி நேற்று (23) பிற்பகல் மற்றுமொரு நண்பியுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீரில் மூழ்கிய இரு மாணவிகளில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றைய மாணவியின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெல்தெனிய, புடலுஉயன பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி தனது தோழியின் கையைப் பிடித்தவாறு நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிர் பிழைத்த மாணவி தற்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த மாணவி தனது காதலுக்கு பிரதேசவாசிகள் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதிய கடிதத்தின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது !

Image
  10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது ! நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் ஒருவரை கஹதுட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கஹதுட்டுவ, மீரிகம, கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்களை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் 3 கையடக்கத் தொலைபேசிகளையும் சந்தேகநபரிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆடிஅம்பலம பகுதியில் இரண்டு இடங்களில் ஒன்றரை இலட்சம் ரூபாவிற்கு அடகு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன்படி, அடகு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பொலிஸ் காவலில் எடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களை அடகு வைத்து பெறப்பட்ட பணத்தை சந்தேக நபர், திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படுவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர். சம்பவம் தொடர்பான ...

அதானி குழுமத்தின் திட்டங்கள் குறித்து இலங்கை இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை - அதிகாரிகள் !

Image
  அதானி குழுமத்தின் திட்டங்கள் குறித்து இலங்கை இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை - அதிகாரிகள் ! அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து உலக நாடுகள் அதன் திட்டங்கள் குறித்து ஆராய்ந்துவரும் நிலையில் இலங்கை அதானி குழுமத்தின் மீள்சக்தி திட்டங்கள் குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்னார் பூநகரியில் அதானி குழுமத்தின் மீள்சக்தி திட்டங்கள் குறித்து ஆராய்ப்படுவதாகவும் எனினும் அவை குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை எனவும் இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் தனுஸ்க பராகிரமசிங்க தெரிவித்துள்ளார். காற்றாலைமின் திட்டம் குறித்த யோசனைகள் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அதனை ஆராய்ந்து இறுதிமுடிவை எடுக்கும்,இந்த திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராயும் நிலையில் உள்ளோம்,நிதிரீதியான சாத்தியப்பாடு சூழல் பாதுகாப்பு குறித்தும் ஆராய்கின்றோம் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் தனுஸ்க பராகிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான பாரிய திட்டங்கள் குறித்து வெளிப்படை தன்மை பொறுப்புக்கூற...

இலங்கைக்கு கடத்தவிருந்த 330 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தில் மூவர் கைது !

Image
  இலங்கைக்கு கடத்தவிருந்த 330 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தில் மூவர் கைது ! ஆந்திராவில் இருந்து தஞ்சாவூர் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற மூவரை தஞ்சாவூர் பொலிஸார் வெள்ளிக்கிழமை (22) கைது செய்துள்ளனர். இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 படகுகளும், 330 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு என்ற இடத்தில் கொள்கலன் லொறிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லொறியின் உரிமையாளர் அண்ணாதுரை, லொறியின் சாரதி உட்பட மூவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அண்ணாதுரைக்கு சொந்தமான லொறி, கார் மற்றும் போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த மூன்று ஃபைபர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுகாதார நடைமுறைகளை மீறிய 18 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

Image
  சுகாதார நடைமுறைகளை மீறிய 18 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ! கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட உணவகம், சில்லறைக் கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 18 கடை உரிமையாளர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொட்டகலை நகருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார பாதுகாப்புடனான உணவுகள் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தால் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபையிடம் வர்த்தக அனுமதி பத்திரம் பெறாமல், சுகாதாரம் அற்ற முறையில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை நடத்திவந்த 18 உரிமையாளர்கள் கண்டறியப்பட்டனர். அத்துடன், சுகாதார பாதுகாப்பற்ற பல உணவுப் பொருட்களும் இதன்போது அழிக்கப்பட்டன.

கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் மீட்பு - பாணந்துறையில் சம்பவம் !

Image
  கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் மீட்பு - பாணந்துறையில் சம்பவம் ! பாணந்துறை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர்காப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை, வலான பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டுள்ளார். பொலிஸார் அந்த நபரை மீட்டு, அடிப்படை முதலுதவிகளை வழங்கிய பின்னர், அவரை மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சினை பசுவை இறைச்சிக்காக வெட்டியவர்கள் தப்பியோட்டம் !

Image
  சினை பசுவை இறைச்சிக்காக வெட்டியவர்கள் தப்பியோட்டம் ! சினை பசுவொன்றை இறைச்சிக்காக வெட்டியுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில், நேற்று (22) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. உயர் ரக கேப்பை இனத்தைச் சேர்ந்த சினை பசுவொன்றை, ஆள் நடமாற்றம் இல்லாத இடத்துக்கு கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் சிலர், அப் பசுவை வெட்டி, வயிற்றினுள் இருந்த கன்றினை வெளியே வீசியுள்ளதுடன், பசுவினை இறைச்சிக்காக துண்டுகளாக வெட்டியுள்ளனர். இதனை அவதானித்த பிரதேச மக்கள், சந்தேகநபர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் தமது மோட்டார் சைக்கிள் மற்றும் இறைச்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக அம் மக்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோட்டார் சைக்கிளையும், சுமார் 200 கிலோ எடையுடைய மாட்டிறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தீவக பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் சட்டவிரோத நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் அதனை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் கூடாரம் அமைத்து போராட்டம் !

Image
  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் கூடாரம் அமைத்து போராட்டம் ! E8 விசா முறையின் கீழ் கொரியாவில் பணிக்கு செல்ல எதிர்பார்த்துள்ள குழுவினர் இன்று காலை வரை அதே இடத்தில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குழுவினர் நேற்று (23) காலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரியாவில் பணிபுரிய விசா கிடைத்துள்ள நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலட்சியத்தால் தங்களுக்கு கொரியாவுக்கு பயணிக்க முடியாமல் போனதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அருகே உள்ள நடைபாதையில் தற்காலிக கூடாரங்களை அமைக்க போராட்டக்காரர்கள் முயன்றபோது, அங்கு வந்த பொலிஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. தற்போதுள்ள அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் முறையான நடைமுறையைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமையினால் குறித்த நபர்களை E8 விசா முறையின் கீழ் பதிவு செய்வது கேள்விக்குறியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே, இந்த விவகாரம் தொடர்...

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு !

Image
  முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு ! சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா !

Image
  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா ! (பாறுக் ஷிஹான்) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் வெள்ளிக்கிழமை(22) சிறப்பாக நடைபெற்றது. கார்மேல் பற்றிமா கொன்மேன்ற் பெண்கள் கல்லூரியில் இருந்து பாரிய கண்கவர் கலாசார அம்சங்கள் அடங்கிய ஊர்வலம் ஆரம்பமாகியது. கல்லூரியின் 125ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் இதுவரை வாணி விழா மற்றும் மீலாதுன் நபி விழா மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் அண்மையில் நடைபெற்றதை பலரும் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் இடம் பெற்ற ஒளி விழாவிலும் அங்கு கண் கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வடக்கத்துக்குரிய அருட்தந்தை ஏ.அகஸ்டின் நவரெத்தினம் அடிகளார் கலந்து சிறப்பித்தார் .மேலும் பல மத பெரியார்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் . குறித்த பண்பாடு பாரம்பரியம் மிக்க பெரும் கலைத்துவ ஊர்வலம் நேரடியாக பாத்திமா கல்லூரியை அடைந்த பொழுது அங்கு பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி கலை நிகழ்ச்சிகள...

சட்டத்தரணி வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை, பணம் கொள்ளை ; பெண் ஒருவர் உட்பட இருவர் கைது !

Image
  சட்டத்தரணி வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை, பணம் கொள்ளை ; பெண் ஒருவர் உட்பட இருவர் கைது ! யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ்.ஜரூல் வழிகாட்டலில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் கைது செய்தனர். சட்டத்தரணி இல்லாத நேரம் தொடர்பாக பிரதான சந்தேக நபருக்கு வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய குறித்த களவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்...

லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு !

Image
  லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ! நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் லாப் எரிவாயுநிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடம் வினவப்பட்ட போது, தனது விநியோக நிறுவனத்திடம் இருந்து விநியோகிப்பதற்கு தேவையான எரிவாயு இருப்புக்களை கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக லாப் எரிவாயு வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள லாப் எரிவாயு விற்பனை நிலையங்களிலும் லாப் எரிவாயு இல்லாமை மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாள் செயலமர்வு !

Image
  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாள் செயலமர்வு ! பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் நடத்தப்படவுள்ளது. புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு இடம்பெறும் இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் வைத்தியகலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த மூன்று நாள் செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாக...

பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு !

Image
  பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு ! அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தை அடுத்த அமர்வுக்காக டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 வரை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது, இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை !

Image
  தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது, இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை ! புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க, தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது என தெரிவித்தார். இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை என்றும் முழு கட்சியினருக்கும் பிரச்சினை இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதுடன், பலமான அரசியல் சக்தியாக அதனை சரியான பாதையில் வழிநடத்துவதே தமது கவனம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சீனத் தூதுவர் கியு சென்ஹொங் மட்டக்களப்புக்கு விஜயம் !

Image
  சீனத் தூதுவர் கியு சென்ஹொங் மட்டக்களப்புக்கு விஜயம் ! மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கியு சென்ஹொங் இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதியில் ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், மேலும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை, உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர். இதேவேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு சீனாவில் ஊடகத்துறைசார்ந்து புதிய தொழில் நுட்ப பயிற்சியைப் பெற்றுக் கொடுக்குமாறு சிவில் சமூகத்தினர் தூதுவரிடம் விடுத்த வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு பதிலளித்த தூத...