Posts

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட தலைவர் ரணிலுக்கு நன்றிக்கடன் செலுத்த மக்கள் தயார்- சாந்த பண்டார !

Image
  பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட தலைவர் ரணிலுக்கு நன்றிக்கடன் செலுத்த மக்கள் தயார்- சாந்த பண்டார ! பயங்கரவாதத்தை தோல்வியுறச்செய்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தமைக்கு நன்றிக் கடனாக நாட்டு மக்கள் 2005 ஆம் ஆண்டு நிபந்தனைகள் எதுவுமின்றி இன, மத பேதங்களைக் கடந்து மஹிந்த ராஜபக் ஷவை ஜனாதிபதியாக்கினர். அதேபோன்று, தற்போது நாட்டையும் மக்களையும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து நன்றிக்கடன் செலுத்த தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, “இயலும் ஸ்ரீலங்கா” மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று முன்தினம் நாரம்மல நகரில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொது ஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 37 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கு நன்...

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம்!

Image
  தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் ! தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது. இது தொடர்பில் "சுரகிமு தருவன்" தேசிய இயக்கம் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது. இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

400g ஹெரோயினுடன் கைதான நபர் ஒருவருக்கு மரண தண்டனை !

Image
  400g ஹெரோயினுடன் கைதான நபர் ஒருவருக்கு மரண தண்டனை ! கண்டி, யட்டிநுவர வீதியில் 400 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கல்பிஹில்ல, அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து நேற்று முன்தினம் (10) செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நபர் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி வேன் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசென்றச்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி அறிக்கை வெளியிடவுள்ளோம் - தமிழரசுக் கட்சியின் தலைவர் !

Image
  தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி அறிக்கை வெளியிடவுள்ளோம் - தமிழரசுக் கட்சியின் தலைவர் ! ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் விசேட குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏற்கனவே சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஏற்கனவே 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் எமது மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும்?,என்ன அடிப்படையில வாக்களிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், அதற்காக கட்சி ரீதியான கொள்கை, எமது இனப்பிரச்சனை தீர்வு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பவற்றுக்கு ஆதரவான அறிக்கையை நாம் எதிர்பார்க்கின்றோம். அதனடிப...

தபால் மூல வாக்களிப்புக்கு இன்றும் (11) நாளையும் (12) சந்தர்ப்பம் !

Image
  தபால் மூல வாக்களிப்புக்கு இன்றும் (11) நாளையும் (12) சந்தர்ப்பம் ! ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலையலாம் - சுகாதார நிபுணர்கள் சங்கம் அச்சம் !

Image
  தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலையலாம் - சுகாதார நிபுணர்கள் சங்கம் அச்சம் ! ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலைவதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையினால், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, சுகாதார ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் வாக்குச் சாவடியாவது அல்லது அவர்கள் கடமையாற்றும் இடத்துக்கு மாற்றிடம் வழங்க வேண்டுமென இச்சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரமே தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏனைய சுகாதாரப் பணியாளர் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து சுகாதார ஊழியர்களும் வாக்களிக்க தத்தமது தொகுதிகளுக்குச் சென்றால், வைத்தியசாலை செயற்பாடுகள் பாதிக்கப்படலாமென சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பொதுமக்களின் சு...

போதைக்கு அடிமையானவர்களுக்கு நாங்கள் கடனும் இல்லை, பயமும் இல்லை நாம் ஏன் பயப்பட வேண்டும் - ஜனாதிபதி வேட்பாளர் அனுர !

Image
  போதைக்கு அடிமையானவர்களுக்கு நாங்கள் கடனும் இல்லை, பயமும் இல்லை நாம் ஏன் பயப்பட வேண்டும் - ஜனாதிபதி வேட்பாளர் அனுர ! பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை மரியாதையுடன் செய்வதற்குரிய சூழல் உருவாக்கப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். போதைப்பொருள் காரணமாக நாட்டில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். போதைக்கு அடிமையானவர்களுக்கு நாங்கள் கடனும் இல்லை. பயமும் இல்லை. நாம் ஏன் பயப்பட வேண்டும் என்றார்.