புத்தாண்டுக்காக காலண்டர், டயரிகள் அச்சிடுவது 90% நிறுத்தப்பட்டுள்ளது
புத்தாண்டுக்காக காலண்டர், டயரிகள் அச்சிடுவது 90% நிறுத்தப்பட்டுள்ளது 2023ஆம் ஆண்டு புத்தாண்டுக்காக நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகள் அச்சிடுவது 80 தொடக்கம் 90 வீதமானதாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அச்சகத்தின் தலைவரும் அகில இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் புரவலருமான ஆரியதாச வீரமன் தெரிவித்தார். இந்த காலண்டர்கள், டைரிகள், புத்தகங்கள் அச்சிடுவது இன்று கனவாகிவிட்டது என்றார். நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக காகிதத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இந்த நிலைமையை விரைவில் தீர்க்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அச்சுத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையில் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.