Posts

Showing posts from September, 2023

பயணியின் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் கைது!

Image
 பயணியின் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் கைது! நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் வியாழக்கிழமை (28) இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபர், விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பாதுகாப்புப் பரிசோதகர் ஆவார். விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஊழியர் மினுவாங்கொடை ஹீனட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெண்ணிடம் இருந்து திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ், பென்டன் மற்றும் 03 மோதிரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை இலுப்பைக் குளம் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம்!

Image
  திருகோணமலை இலுப்பைக் குளம் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம்! திருகோணமலை இலுப்பைக் குளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக் கோரியும் திருகோணமலை மக்களால் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இலுப்பைக்குளம் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் காலாகாலமாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்...

நாளை முதல் பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் அமுலுக்கு...!

Image
 நாளை முதல் பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் அமுலுக்கு...! ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்தார். அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது தொடர்பான திடீர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச வாய்ப்பு!

Image
 தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச வாய்ப்பு! ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை அன்றைய தினம் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக் காட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி,பண மோசடி - சந்தேக நபர் கைது...!

Image
 வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி,பண மோசடி - சந்தேக நபர் கைது...! வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 137,000 ரூபாய் பண மோசடி செய்த நபரொருவர் கடுகண்ணாவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர் கடுகண்ணாவை பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்தபோது நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் காலி, மீரன்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடையவர் ஆவார். இந்நிலையில், சந்தேக நபருக்கு எதிராக மத்துகம, மஹர, பன்னல, கோட்டை, கேகாலை, தம்புள்ளை, நுவரெலியா, காலி, பலப்பிட்டிய, அநுராதபுரம், நுகேகொடை, களுத்துறை மற்றும் புதுக்கடை நீதிமன்றங்களில் 13 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன்,கென்யப் பிரஜை விமான நிலையத்தில் கைது...!

Image
 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன்,கென்யப் பிரஜை விமான நிலையத்தில் கைது...! 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கென்யப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகாளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவில் இருந்து வரும் போதே 26 வயதான குறித்த கென்யப் பிரஜை சுமார் 4 கிலோ நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருளை எடுத்துவந்துள்ளார். கென்யப் பிரஜை எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து கட்டாரின் தோஹாவுக்கு வந்து அங்கிருந்து கத்தார் ஏயார்வேஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரது பயணப் பொதியில் 3 பிஸ்கட்கள் டின்களில் 04 கிலோ எடையுள்ள 180 கொக்கெய்ன் வில்லைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட கென்யப் பிரஜை முதல் தடவையாக இலங்கைக்கு வந்திருந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சினோபெக் எரிவாயு நிலையங்கள் 50 செயற்பாட்டில்...!

Image
 சினோபெக் எரிவாயு நிலையங்கள் 50 செயற்பாட்டில்...! சீன சினோபெக் நிறுவனம் இப்போது நாடு முழுவதும் ஐம்பது எரிவாயு நிலையங்களில் செயல்படத் தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையில் தனியார் வர்த்தகர்களுக்கு சொந்தமான நூற்றைம்பது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வர்த்தகம் செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த நூற்றி ஐம்பது எரிபொருள் நிலையங்களில் 12 இன்னும் சீன சினோபெக்குடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை,  மேலும் இது பல தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் கூறுகிறது. சில காரணங்களால் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வர்த்தக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்கும் திறன் நிறுவனத்திற்கு இருப்பதாகவும் சங்கம் குறிப்பிடுகிறது.

மட்டக்களப்பில் மின்சார மீட்டரில் மோசடி ; வீட்டு உரிமையாளர்கள் இருவர் கைது!

Image
  மட்டக்களப்பில் மின்சார மீட்டரில் மோசடி ; வீட்டு உரிமையாளர்கள் இருவர் கைது! மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீட்டரில் மோசடி செய்த வீட்டு உரிமையாளர்கள் இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இரு வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீட்டரில் சட்டவிரோதமாக மோசடி செய்து மின்சாரத்தை பெற்றுவந்துள்ளமை மின்சார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கொழும்பில் இருந்து வருகை தந்த உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் குறித்த இரு வீட்டை முற்றுகையிட்டனர். இதன்போது, மின்சார மீட்டரை சோதனையிட்டபோது அதில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை பெற்றுள்ளதை கண்டுபிடித்ததையடுத்து, அந்த இரு வீட்டின் உரிமையாளர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது..!பால் வார்த்தது இறக்குமதியாளர் சங்கம்...!

Image
 வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது..!பால் வார்த்தது இறக்குமதியாளர் சங்கம்...! இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டாலும் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது. இதனை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மாவிற்கு நேற்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீதத்தால் வரி அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பஸ்ஸில் பயணித்த 18 வயதுடைய மாணவிக்குப் பாலியல் தொந்தரவு : பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்!

Image
 பஸ்ஸில் பயணித்த 18 வயதுடைய மாணவிக்குப் பாலியல் தொந்தரவு : பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்! தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையின் பின்னர் சீத்தாவகபுர பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் குறித்த பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ருவன்வெல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தத் துன்புறுத்தல் குறித்து மாணவி பஸ் நடத்துனரிடம் தெரிவித்ததையடுத்து, நடத்துனர் மாணவியிடம் அவரது தந்தையின் கைத்தொலைபேசி இலக்கத்ததை பெற்று இது குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காதல் தொடர்பின் அடிப்படையில் இரு பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்!

Image
  காதல் தொடர்பின் அடிப்படையில் இரு பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்! காதல் தொடர்பின் அடிப்படையில் இரு பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் மற்றும் கைகளால் தாக்கியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளான பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவர் பாணந்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை (21) பாடசாலை முடிந்து தங்களது வீடுகளுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சந்தேக நபர்கள் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அணு ஆயுத தவிர்ப்பு மற்றும் அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும் : அலி சப்ரி !

Image
  அணு ஆயுத தவிர்ப்பு மற்றும் அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும் : அலி சப்ரி ! முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty) அங்கீகரிப்பதாக அறிவிப்பதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாட்டுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தினார். முழுமையான அணு சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிவு 14 மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கடந்த ஜூலையில் முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) இலங்கை உத்தியோகபூர்வமாக ஒப்பந்தத்தை அங்கீகரித்தாகவும், இலங்கையின் முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அணுவாயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடு ஆகியவற்றின் நீண்டகால மற்றும் நிலையான கொள்கையுடன் ஒத்துப்போகிறது என்றும் தெரிவித்தார். 1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், முழுமையான அணு-சோதனை தடை ஒப்ப...

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

Image
 லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு! லங்கா சதொச ஊடாக அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, சோயா மீட் ஒரு கிலோகிராம் 45 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 580 ரூபாவாகும். உள்நாட்டு உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 290 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. நெத்தலி ஒரு கிலோகிராம் 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1100 ரூபாவாகும். வௌ்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 620 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.  ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு 6 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 299 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல் - ஆளுநர் செந்தில் தொண்டமான்

Image
 திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல் - ஆளுநர் செந்தில் தொண்டமான்   அபு அலா -   நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்குள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால் பொலிஸ் அனுமதியின்றி சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவிச்சென்றது. இது இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை இல்லாமலாக்குகிறது.   தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதி கவனத்துடன் செயற்படக்கூடிய பொறுப்புள்ளது. அப்பொறுப்பில் அவதானக்குறைவாகச் செயற்படுவது நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதுடன், சட்ட ஒழுங்கும் பாதிப்படைகின்றது.   எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் எந்தச்செயற்பாட்டையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.  இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவித்துள...

நிர்வாண படங்கள், காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை!

Image
  நிர்வாண படங்கள், காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை! நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. காதல் தொடர்புகளின்போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிக விலைக்கு விற்பனையாகும் தேசிக்காய்...!

Image
 அதிக விலைக்கு விற்பனையாகும் தேசிக்காய்...! இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை நேற்றைய தினத்தில் 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாத்தளை மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன்,  நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பெருந்தோட்ட பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 58 ரூபாவாக காணப்பட்டுள்ளது. அத்துடன், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1200 ரூபாவாக பதிவாகியுள்ளது. தேசிக்காய் அருவடை குறைந்துள்ளமையை, விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என தெரிய வருகின்றது. ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும்,  தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்றைய தினத்தில் 2000 கிலோகிராம் தேசிக்காய் மாத்திரமே கிடைத்துள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது...!

Image
 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது...! சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ⭕மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும், ⭕கனிய எண்ணெய் உற்பத்தி, ⭕எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம், ⭕மருத்துவமனைகள்,  ⭕முதியோர் இல்லங்கள்,  ⭕மருந்தகங்கள், பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சைக்கு தேவையான அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு ஆகியவை இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டுள்ளன.

ஓய்வுபெற்ற வைத்தியர்களை அடுத்த வாரம் முதல்,மீள சேவையில் இணைக்க எதிர்பார்ப்பு...!

Image
 ஓய்வுபெற்ற வைத்தியர்களை அடுத்த வாரம் முதல்,மீள சேவையில் இணைக்க எதிர்பார்ப்பு...! ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படும் ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களுக்கான, ஆட்சேர்ப்பு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையில் நிலவும் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இலங்கைக்கு சென்ற தனது மனைவியும் மகனும்,மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என நபர் ஒருவர் முறைப்பாடு...!

Image
 இலங்கைக்கு சென்ற தனது மனைவியும் மகனும்,மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என நபர் ஒருவர் முறைப்பாடு...! இலங்கைக்கு வந்த தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என, ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானில் வசித்து வருவதாகவும் அவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு வந்த நிலையில் தற்போது வரையில் அவர்கள் நாடு திரும்பவில்லை என தந்தை முறைப்பாடளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஜப்பானியரால் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்த முறைப்பாடு சுற்றுலா பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒகஸ்ட் 22 ஆம் திகதி ஜப்பானுக்கு திரும்ப வேண்டியவர்கள் எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆனந்த குமாரசிறி தலைமையிலான தெரிவுக்குழு அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் - விமல் வீரவன்ச!

Image
 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆனந்த குமாரசிறி தலைமையிலான தெரிவுக்குழு அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் - விமல் வீரவன்ச! உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க முன்னர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு சமர்ப்பித்த அறிக்கையை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துகிறார்.அரசாங்கமும் அதற்கு இணக்கம் தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உள்ளதை அவதானிக்க முடிகிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்ப...

நீதிபதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு - சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகரிடம் முறைப்பாடு!

Image
 நீதிபதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு - சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகரிடம் முறைப்பாடு! நீதிமன்றம், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு அழுத்தம் ஏற்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை சந்தித்து அறிவுறுத்தியுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் குழுவினருக்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இதுதொடர்பாக தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் குறிப்பாக தற்பொழுது சேவையாற்றிவரும் நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு கருத்துக்களை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சபாநாயக...

O/L, A/L பரீட்சைகளுக்கான தரங்களை மாற்ற அரசாங்கம் திட்டம்...

Image
 O/L, A/L பரீட்சைகளுக்கான தரங்களை மாற்ற அரசாங்கம் திட்டம்... கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகள் நடத்தப்படும் தரங்களில் மாற்றம் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. இதற்கிணங்க, சாதாரண தர பரீட்சையை தரம் 10 இலும், உயர் தர பரீட்சையை தரம் 12 இலும் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் குறித்து,பொது பயன்பாட்டு ஆணையகத்தின் விசேட அறிவிப்பு...!

Image
 மின் கட்டணம் குறித்து,பொது பயன்பாட்டு ஆணையகத்தின் விசேட அறிவிப்பு...! மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை என  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை 56 வீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அண்மையில் மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த கோரிக்கையும் இதுவரை வரவில்லை என்று தலைவர் கூறுகிறார். கடந்த ஜூலை 3ம் திகதி 14.2 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டு அதற்கு முன் 70 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படுமாயின் அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும்,  வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரமே மின்சாரக் கட்டணத்தை திருத்த முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

சனல் 4 விவகாரம் - ஒய்வுபெற்ற நீதிபதியிடம் விசாரணைகளை ஒப்படைப்பார் ஜனாதிபதி!

Image
 சனல் 4 விவகாரம் - ஒய்வுபெற்ற நீதிபதியிடம் விசாரணைகளை ஒப்படைப்பார் ஜனாதிபதி! சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியொருவரை நியமிப்பார் என தகவல்வெளியாகியுள்ளது. சண்டே டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது. சனல் 4 தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள்குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஓய்வுபெற்ற நீதிபதியொருவரை நியமிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. சனல் 4 தொடர்பானா நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான முன்னரான நடவடிக்கையாக இது காணப்படும். ஓய்வு பெற்றநீதிபதி சனல்4 தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என தெரிவித்தால் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படும். ஏற்கனவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவும ஜனாதிபதி ஆணைக்குழுவும் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. சனல் 4 தொடர்பிலான இந்த நிலைப்பாட்டின் மூலம் ஜனாதிபதி சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். சனல் இன் சர்ச்சைக்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர்!

Image
  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, வரலாற்று மாற்றத்தின் சவால்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Image
  5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு வின்சன்ட் கல்லூரியிலிருந்து இம்முறை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் பல்கலைக்கழகம் தெரிவு!

Image
  மட்டக்களப்பு வின்சன்ட் கல்லூரியிலிருந்து இம்முறை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் பல்கலைக்கழகம் தெரிவு! இம்முறை இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.   2022 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04ஆம் திகதி வெளியான நிலையில் வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் மாவட்ட ரீதியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் ஆறாவது இடத்தையும் வணிகப்பிரிவில் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தையும் கணிதப்பிரிவில் பத்தாவது இடத்தையும், கலைப்பிரிவில் நான்காவது ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.  இதனடிப்படையில் இப்பாடசாலையிலிருந்து மருத்துவத் துறைக்கு 9 மாணவிகளும், பொறியியல் துறைக்கு 9 மாணவிகளும், வர்த்தகத் துறையில் 13 மாணவிகளும், கலைத்துறையில் சட்டத்துறைக்கு 4 மாணவிகள் உட்பட 18 மாணவிகளும் பல்களைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதுதவிர ஏனைய துறைகளுக்காக 52 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்ல தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். கடந்த இரண்டு வ...

மண்முனைப் பற்றில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னைமரங்கள் வழங்கி வைப்பு!

Image
  மண்முனைப் பற்றில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னைமரங்கள் வழங்கி வைப்பு! மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச சபை கட்டிடத்தில்  நேற்று  இடம்பெற்றது. ஆரையம்பதி பிரதேச சபை எல்லைக்குள் தேசிய வீடமைப்புத் அபிவிருத்தி அதிகாரசபை திட்டத்தின்கீழ் புதிய வீடுகளை கட்டுபவர்கள் மற்றும் புதிதாக வீடு கட்டுவதற்கென அனுமதி பெற்றவர்களுக்கான தென்னை மரங்கள் இன்று (06) மண்முனைப் பற்று பிரதேச சபை செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் அரசின் வேலைத்திட்டத்தின்கீழ் இத்தென்னை மரங்கள் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் 136 தென்னை மரங்கள் 68 பயனாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன. இதே வேளை மண்முனைப் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கும் தென்னைமரங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் திருமதி. ரவீந்திரன், ஆரையம்பதி பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ...

சிங்கள பௌத்த அரச தலைவரை உருவாக்க 9 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - சரத் வீரசேகர!

Image
  சிங்கள பௌத்த அரச தலைவரை உருவாக்க 9 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - சரத் வீரசேகர! பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் அல்லாவுக்காக உயிர்தியாகம் செய்தார்களே தவிர தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை உருவாக்குவதற்கல்ல. ஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சியாளர்கள் தொடர்பில் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்துக்கு விசேட கவனம் செலுத்தியிருந்தால் குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம். நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. ஆகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற ஆயுர்வேதம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது; தென்னிலங்கையில் சிங்கள பௌத்த அரச தலைவரை உருவாக்குவதற்காக 09 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. செனல் -04 இலங்கை தொடர்பில் ப...

உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பிற்போட முடியாது - கல்வி அமைச்சர்!

Image
  உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பிற்போட முடியாது - கல்வி அமைச்சர்! 2023 கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் மாற்றம் செய்ய முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கிணங்க விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் அடுத்த வாரத்திலேயே ஆரம்பிக்கப்படும். அதற்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் 268, 625 பேரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 55, 288 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அந்த வகையில் மொத்தமாக 3 லட்சத்து 23 ஆயிரத்து 913 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். கடந்த வருடத்தில் இந்த பர...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பம் !

Image
 கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பம் ! முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் செவ்வாய்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31)அன்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்தவாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் செப்டெம்பர் (05)நேற்று குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கமுடியவில்லை. அதனடிப்படையில் குறித்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மனிதபுதைகுழி அமைந்தபகுதி குற்றப் பிரதேசமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த புதைகுழிப்பகுதிக்கு பாதுகாப்பு கூரைகள் அமைக்கப்பட்டு இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ, தொல்லியல் துறைசார்ந்தோர், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா, முன்னாள் வடமாகாண...

இலங்கைக்கு எந்நிலையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் - ஜப்பான் பிரதிநிதிகள் குழு உறுதி!

Image
 இலங்கைக்கு எந்நிலையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் - ஜப்பான் பிரதிநிதிகள் குழு உறுதி! இலங்கை விரைவான பொருளாதார ஸ்திரப்படுத்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. சர்வதேச ஒத்துழைப்புக்கு மத்தியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஜப்பான் நாட்டின் பிரதிநிதிகள் குழுவினரிடம் குறிப்பிட்டார். இலங்கைக்கு வருகை தந்துள்ள தகஷிதி யுசுகே தலைமையிலான மேலவை அமைச்சர் சபையின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நிதியமைச்சில் இடம்பெற்றது. இலங்கை விரைவான பொருளாதார ஸ்திரப்படுத்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. சர்வதேச ஒத்துழைப்புக்கு மத்தியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ளாது. பொருளாதாரப் பாதிப்பில் இருந்து இலங்கை மீட்சிப்பெறுவதற்கு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஜப்பான் ஆரம்பத்தில் இருந்து இலங்கைக்கு சாதகமாக செயற்படுவது வரவேற்கத்தக்கது என நிதி இராஜாங்க அமைச்...

அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 6,7 திகதிகளில் - பாராளுமன்ற செயலாளர் நாயகம்!

Image
 அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 6,7 திகதிகளில் - பாராளுமன்ற செயலாளர் நாயகம்! சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ராேகணதீர தெரிவித்தார்.    பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடியது.  இதன்போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் சமர்ப்பித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் 8ஆம் திகதி மாலை 5,30 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.   அத்துடன் பாராளுமன்றம் எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்கும் பாராளுமன்ற நடவடிக்கைக...

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு,நுகர்வோருக்கு வழங்க முடியும் - வர்த்தக அமைச்சர்..!

Image
 ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு,நுகர்வோருக்கு வழங்க முடியும் - வர்த்தக அமைச்சர்..! கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் தொழில்துறையினருடன் இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு நுகர்வோருக்கு வழங்க முடியும் எனவும், எனினும் தொழில்துறையினர் அந்தச் சலுகைகளை மக்களுக்கு வழங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கோழி மற்றும் முட்டை உற்பத்திக்காக செலவிடப்பட்ட நிதியை மீளாய்வு செய்யுமாறு சுகாதார மற்றும் கால்நடை உற்பத்தி திணைக்களத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலில்,  இன்று (02) முதல் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்ய இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.