Posts

Showing posts from May, 2024

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Image
  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 5,289 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 2,309 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 1,307 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொதுவேட்பாளர் குறித்து சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து !

Image
  பொதுவேட்பாளர் குறித்து சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து ! தமிழ் பொதுவேட்பாளர் குறித்து சுமந்திரன் ஏற்பாடு செய்துள்ள கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொது வேட்பாளர் தொடர்பான கருத்து பரிமாற்ற இந்தக் கூட்டத்திற்கு எனக்கொரு அழைப்பும் வரவில்லை. ஆனால் இவ்வாறான கருத்துப் பிரிமாற்ற கூட்டங்கள் என்பது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும். ஏனென்றால் தேசியத்தோடு இணைந்திருக்கும் எங்கள் சிவில் சமூகத்தினர் தமிழ் மக்கள் சார்பிலே ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவிற்கு வந்து விட்டார்கள். இதனை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் பல அரசியல் தரப்பினர்களுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறாக பொதுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் போது இந்த விவகாரத்தை பொது வெளியில் கொண்டு சென்று கருத்து பரிமாற்றம் என்று சொல்லி முரண்பாட்டிற்குரியதாக கொண்டு வந்து நிறுத்துவ...

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு !

Image
  விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு ! சிறுபோகப் பருவத்தில் நெற்பயிர்ச்செய்கை மானியத் திட்டத்தின் கீழ் 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 213,771 விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 167,362 ஹெக்டேயர் நெற்பயிர்ச் செய்கைக்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சுமார் 450,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இல்ல தீ வைப்பு சம்பவம்: சந்தேக நபரான ஆசிரியர் சி.ஐ.டியினரால் கைது !

Image
  ஜனாதிபதியின் இல்ல தீ வைப்பு சம்பவம்: சந்தேக நபரான ஆசிரியர் சி.ஐ.டியினரால் கைது ! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்தபோது அவரது கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, அங்குள்ள வளங்களை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவுன்துட்டுவ கிரந்திரிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது ஆசிரியரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கடந்தவருடம் மே (09) இரவு போராட்டக்காரர்களில் சிலர் அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து அங்குள்ள வளங்களுக்கு தீ, வைத்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 25 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுமுள்ளனர். அந்தவகையில் 36 வயதான மேற்படி ஆசிரியரும் நீதிமன்றத்தில்...

பேருந்து கவிழ்ந்து விபத்து – 27 பேர் காயம் !

Image
  பேருந்து கவிழ்ந்து விபத்து – 27 பேர் காயம் ! கொழும்பு- பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனியார் பேருந்து எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும், எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டி பேருந்தை நோக்கி வந்த போது, ​​பேருந்து சாரதி முச்சக்கரவண்டியை பேருந்தில் மோதவிடாமல் தடுக்க முயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இப்போது, ​​பேருந்து மண் திட்டுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்த 20 பேர் கஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தடை நீடிப்பு !

Image
  மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தடை நீடிப்பு ! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பான தடை உத்தரவை 12 ஆம் திகதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு !

Image
  சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு ! நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் உயரலாம் என மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் அஜித் களுதரகே தெரிவித்தார். இதேவேளை, இந்நாட்களில் மீன் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாததனால் மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக மன்றத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்தார்.

சுற்றுலா தளங்களின் தரவரிசையில் இலங்கைக்கு 2ஆம் இடம் !

Image
  சுற்றுலா தளங்களின் தரவரிசையில் இலங்கைக்கு 2ஆம் இடம் ! ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா, குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கலாசார பாரம்பரியம், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு புகழ்பெற்ற இடமாக இலங்கை திகழ்வதாக தி டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. குறித்த பட்டியலில், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தியா, நேபாளம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையினுள் மோட்டார் சைக்களில் நுழைந்து தாக்குதல்: ஒருவர் கைது !

Image
  வைத்தியசாலையினுள் மோட்டார் சைக்களில் நுழைந்து தாக்குதல்: ஒருவர் கைது ! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்தவர் ஒருவர் கேள்வி கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று (27) இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, மதுபோதையில் வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சையளிக்க கோரியுள்ளார். இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே வந்தீர்கள் என கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது மதுபோதையில் வந்த நபர், அலுவலக மேசை மீது இருந்த அச்சு இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார். இதனையடுத்து அங்கு ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் மற்றும் வ...

வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை !

Image
  வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை ! பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், அப்பிரதேசத்தின் கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஏனைய கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5 – 3 மீற்றர் வரை உயரலாம் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக கல்பிட்டி, கொழும்பு, காலி முதல் மாத்தறை வரை கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !

Image
  மின்சாரம் தாக்கி ஒருவர் பலி ! வாரியபொல வந்துரஸ்ஸ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வந்துரஸ்ஸ, மாவத்தை ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த நபரின் சடலம் மாவத்தை ஏரியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வந்துரஸ்ஸ கலயாய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் வைத்தியசாலையில் வைத்து குறித்த நபரின் பிரேதப் பரிசோதனை இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விலங்கு வேட்டைக்காக போடப்பட்டிருந்த சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் வந்துரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: 3 நிறுவனங்கள் போட்டியில் !

Image
  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: 3 நிறுவனங்கள் போட்டியில் ! ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அவற்றில் 2 வெளிநாட்டு நிறுவனங்களாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார். இதற்காக விலைமனு கோரலை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை தற்போது விலைமனுக்கோரல் சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக விலைமனு கோரலை சமர்ப்பிக்க வழங்கப்பட்டிருந்த காலப்பகுதி, கடந்த மார்ச் 5ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. எனினும் குறித்த காலப்பகுதியை 45 நாட்களால் நீடிப்பதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்திருந்தார். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்த...

A/L பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு !

Image
  A/L பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு ! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனினும், குறிப்பிட்ட ஒரு தினமோ அல்லது நேரமோ அறிவிக்கப்படவில்லை. இன்று அல்லது நாளை பெறுபேறுகள் வெளியாகும் என்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் எ பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீனவர்களை அவதானமாகச் செயற்படுமாறு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் !

Image
  மீனவர்களை அவதானமாகச் செயற்படுமாறு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் ! கிழக்கு-மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ரிமால் புயல் பங்களாதேஷை நோக்கி நகர்ந்துள்ளது. இது நாட்டின் கடற்பிராந்தியத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக காங்சேகன்துறையில் இருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துள்ளது. களனிகங்கை, களுகங்கை மற்றும் நில்வளா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் குறித்த பகுதிகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குக்குலே கங...

‘சர்வ ஜன பலய` புதிய அரசியல் கூட்டணி !

Image
  ‘சர்வ ஜன பலய` புதிய அரசியல் கூட்டணி ! ‘சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில் ‘சர்வ ஜன பலய புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய புதிய அரசியல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடடுள்ளன.

மாணவி து ஷ் பி ர யோ க ம்: ஆசிரியருக்கு விளக்கமறியல் !

Image
  மாணவி து ஷ் பி ர யோ க ம்: ஆசிரியருக்கு விளக்கமறியல் ! யாழில். பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து , பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து ,ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை குறித்த ஆசிரியரினால் , மேலும் சில மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோயில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது !

Image
  கோயில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது ! யாழ்ப்பாணம், ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட பணமும் சில பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பிலான விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .

இஞ்சியின் விலை அதிகரிப்பு !

Image
  இஞ்சியின் விலை அதிகரிப்பு ! இஞ்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 5,000 ரூபாவை எட்டியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 4,800 ரூபாவாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை, ஒரு கிலோ கிராம் போஞ்சிக்காயின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம்| எலுமிச்சையின் விலை 1,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 375 புதிய ஆசிரியர் நியமனங்கள் !

Image
  யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 375 புதிய ஆசிரியர் நியமனங்கள் ! கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆசிரியர் தொழில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பிக் கொண்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் மாணவர்களால் நிராகரிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, தொழில் கௌரவத்தைப் பேணுவது அனைத்து ஆசிரியர்களினதும் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நேற்று (25) இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். வடமாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் 375 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடையாள ரீதியில் சிலருக்கு நியமனங்களை வழங்கி வைத்தார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங...

கணவருக்கு விஷத்தை கொடுத்து கொன்ற குற்றச்சாட்டில் மனைவி கைது !

Image
  கணவருக்கு விஷத்தை கொடுத்து கொன்ற குற்றச்சாட்டில் மனைவி கைது ! பெலியத்த கொஸ்கஹகொட பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயும் அவரது சகோதரரும் இணைந்து குறித்த பெண்ணின் கணவரை விஷத்தைக் கொடுத்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 20ஆம் திகதி வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பிரேதப் பரிசோதனையின் போது விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இந்நிலையில் கைதான இருவரிடம் பொலிஸார் விசாரணை செய்த போது , கணவரின் குடிநீர் போத்தலில் தங்கம் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனமான பதார்த்தத்தைக் கலந்ததாகத் தெரியவந்துள்ளது.  பெலியஅத்த கொஸ்கஹாகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலையால் 07 பேர் உயிரிழப்பு ; மழையுடனான காலநிலை தொடரும் :அவதானத்துடன் செயற்படுங்கள் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் !

Image
  சீரற்ற காலநிலையால் 07 பேர் உயிரிழப்பு ; மழையுடனான காலநிலை தொடரும் :அவதானத்துடன் செயற்படுங்கள் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ! தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும். சீரற்ற காலநிலை மற்றும் அதனால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் இதுவரை 7 பேர் (நேற்று மாலை வரை) உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிந்து விழல், வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட பாதிப்புக்களினால் நாடளாவிய ரீதியில் 12,197 குடும்பங்களும் 45,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2,797 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்காணிப்பில் 188 நபர்கள் பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை தொடரும் தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும். மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. சப்ரகமுவ மாகாணத்திலும் க...

ஊழியர் சேமலாப நிதியப் பணிகளில் மத்திய வங்கி ஊழியர்கள் 300 பேர் : மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு !

Image
  ஊழியர் சேமலாப நிதியப் பணிகளில் மத்திய வங்கி ஊழியர்கள் 300 பேர் : மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு ! இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் 1200 பேரில் சுமார் 300 பேர் ஊழியர் சேமலாப நிதியத்துடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான நடைமுறை சட்டதிருத்தத்தின் பின்னர் அப்பணிகள் பிறிதொரு கட்டமைப்புக்கு மாற்றப்படவேண்டியிருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கிவரும் அட்வகாட்டா அமைப்பினால் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  "மொத்தமாக 1200 மத்திய வங்கி ஊழியர்களில் நிரந்தர ஊழியர்கள் 150 பேர் உள்ளடங்கலாக சுமார் 300 பேர் ஊழியர் சேமலாப நிதியம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் மத்திய வங்கியினால் இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் கருதவில்லை" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  கடந்த காலங்களில் பங்குகள் மற்றும் பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்ட பொருத்தமற்ற முதலீடுகள் கார...

‘றீமால்’ புயல் இன்று மாலை வலுவடையும் !

Image
  ‘றீமால்’ புயல் இன்று மாலை வலுவடையும் ! மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டது. இது நேற்றையதினம் (24) வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘றீமால்’ என்று பெயர் சூட்டப்பட்டது. தற்போது குறித்த புயல் மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், றீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக இன்று மாலை வலுப்பெற உள்ளது. அதன் பின்னர், நாளை (26) நள்ளிரவு தீவிர புயலாக வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த மேற்கு வங்காள விரிகுடா கடற்கரையை கடக்கக்கூடும். கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன. இதேவேளை இலங்கையைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் நிலவும் கடும் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் ப...

கிளிநொச்சியில் 1286 இலவச காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி !

Image
  கிளிநொச்சியில் 1286 இலவச காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி ! “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் 04 பிரதேச செயலகங்களையும் உள்வாங்கி 1,700 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார். இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை (25) இரணைமடு பிரதேசத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிரசவிப்பு !

Image
  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிரசவிப்பு ! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் டாக்டர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் சரவணன்,குழந்தை நல வைத்திய நிபுணர் டாக்டர் ரி.மதன் ஆகியோர் இங்கு கருத்து தெரிவித்தனர். இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந...

மின் கட்டணத்தை குறைக்குமாறு சஜித் கோரிக்கை !

Image
  மின் கட்டணத்தை குறைக்குமாறு சஜித் கோரிக்கை ! கனமழை காரணமாக நீர்மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனல வெவ ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில், மின்சார அலகொன்றின் விலையை குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு 2 தடவைகள், மின்சார சபையிடம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. என்றாலும் அந்த முன்மொழிவுகள் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 15-20 சதவீதமாக இருந்த நீர்மின் உற்பத்தி மட்டம் இம்மாதம் 20 ஆம் திகதி ஆகும் போது 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் ஒன்றிணைந்து இந்த நன்மையை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.