Posts

Showing posts from June, 2024
Image
  மதுபானம் என நினைத்து விஷ திரவத்தை அருந்திய சம்பவம் : 5 பேர் பலி ! on  Sunday, June 30, 2024 By  Shana கடலில் மிதந்த போத்தலில் இருந்து மதுபானம் என நினைத்து விஷ திரவத்தை அருந்திய “டெவன் 5” நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த ஆறு மீனவர்களில் மற்றொருவரும் தற்போது உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. டெவோன் 5 படகில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் சிங்கப்பூர் வணிகக் கப்பல் மூலம் இன்று (30) மீட்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் ஒருவரே தற்போது உயிரிழந்துள்ளதாக, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு !

Image
  இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு ! 190,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Image
  நாளை முதல் காலாவதியாகும் இலங்கை கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்திற்கு நீடிப்பு ! on  Sunday, June 30, 2024 By  Shana நாளை முதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார் இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது. எனவே இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு வசதியாக நாளை முதல் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு !

Image
  பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு ! பொது போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது இந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, பயணிகள் அல்லது பொருட்களுக்கான பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் சாலைகள், பாலங்கள், மதகுகள் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட சாலை, ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: இருவர் காயம் !

Image
  பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: இருவர் காயம் ! நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் - நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் - தியசிறிகம பிரதேசத்தில் நேற்று (29) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண் ஒருவரே இந்த காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையில் காணாமல் போன இஸ்ரேலிய யுவதி மீட்பு !

Image
  திருகோணமலையில் காணாமல் போன இஸ்ரேலிய யுவதி மீட்பு ! கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த தமர் அமிதாய் என்ற இஸ்ரேலிய யுவதியை இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த யுவதி காணாமல் போன சம்பவம் நாட்டிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தது. கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா வந்த யுவதி மேற்கொண்டு திருகோணமலை பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் . கடந்த 26ஆம் திகதி ஹோட்டலில் இருந்து வெளியேறிய அவர் திரும்பி வராததையடுத்து ஹோட்டல் உரிமையாளர் கடந்த 29ஆம் திகதி உப்புவெளி பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் விளைவாக நிலாவெளி பகுதியில் குறித்த யுவதி கண்டுபிடிக்கபட்டார் . கீறல்கள் மற்றும் சிறு காயங்களுக்கு உள்ளான அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறி விபத்து : மூவர் காயம் !

Image
  சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறி விபத்து : மூவர் காயம் ! அநுராதபுரம் – கலென்பிந்துனுவௌ வீதியில், அஸ்வயாபெத்தீவௌ மயானத்திற்கு அருகில்,  இடம்பெற்ற விபத்தில், மூவர் காயமடைந்துள்ளனர்.வீதியில் பயணித்த சிறிய ரக லொறியின் சக்கரமொன்றில் காற்று வெளியேறியதால், லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்தது. இதனால், லொறியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில், கலென்பிந்துனுவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டயானாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து இரண்டு நீதிபதிகள் விலகல் !

Image
  டயானாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து இரண்டு நீதிபதிகள் விலகல் ! நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் டயானா கமகே ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களால் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வெலிகம மாநகர சபையின் தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவினால் தாக்கல்செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் குமுதினி விக்கிரமசிங்க ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த வழக்கு ஆகஸ்ட் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவ...

பாடசாலைகள் மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் தரமற்ற உணவுகள் – நாடு முழுவதும் தீவிர சோதனை !

Image
  பாடசாலைகள் மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் தரமற்ற உணவுகள் – நாடு முழுவதும் தீவிர சோதனை ! பாடசாலைகள் மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவின் தரமற்ற நிலை குறித்த பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் முறைப்பாடுகளை அடுத்து பொது சுகாதார ஆய்வாளர்கள் நாடு முழுவதும் தீவிர சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக பொது சுகாதார ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். குறித்த சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவின் தரம் பற்றி பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ் அதிக சர்க்கரை அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை கட்டுப்படுத்தவும் அத்துடன் நொறுக்குத் தீனிகளை அகற்றவும் பாடசாலை சிற்றுண்டியகங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் இருந்தபோதிலும் அவை புறக்கணிப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பாடசாலை மற்றும் மருத்துவமனைகளின் சிற்றுண்டியகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அது தொடர்பில் 0112112718 என்ற எண்ணுக்கு முறைப்பாடுகளை தெரிவிக...

25,000 ரூபா லஞ்சம் பெற்ற கிராம அதிகாரி கைது !

Image
  25,000 ரூபா லஞ்சம் பெற்ற கிராம அதிகாரி கைது ! பெண் ஒருவரிடம் 25,000 ரூபாவை லஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் ஹீரஸ்ஸகல கிராம அதிகாரியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு நேற்று (26) கைது செய்துள்ளது. ஹீரஸ்ஸகல கிராம சேவை பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஹிரஸ்ஸகல பிரதேசத்திற்குச் சென்று குறித்த கிராம உத்தியோகத்தர் அலுவலக வளாகத்தில் பணம் கொடுத்த போது அவரை கைது செய்துள்ளனர். முறைப்பாடு செய்த பெண்ணின் மகனின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் கிராம அதிகாரி இந்தப் பணத்தை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

விசர் நாய்க் கடிக்கு இலக்கான 4 வயது சிறுமி பலி !

Image
  விசர் நாய்க் கடிக்கு இலக்கான 4 வயது சிறுமி பலி ! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசர் நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் (26) உயிரிழந்தார். குமாரசாமிபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த நான்கு வயதான சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்முனையிலிருந்து கதிர்காமம், உகந்தைக்கு இ.போ.ச. பஸ் சேவை !

Image
  கல்முனையிலிருந்து கதிர்காமம், உகந்தைக்கு இ.போ.ச. பஸ் சேவை ! கதிர்காமம் ஆடிவேல் விழாவையிட்டு தினமும் கல்முனைக்கும் கதிர்காமம் மற்றும் உகந்தைக்கும் இடையில் கிரமமாக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக, கல்முனை சாலை முகாமையாளர் வி.ஜௌபர் தெரிவித்தார். எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் உகந்தைக்கும், 6ஆம் திகதி முதல் கதிர்காமத்துக்கும் இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் பயணிகள் முன்கூட்டி ஆசன பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். மேலும் இ.போ.ச. பஸ் வண்டியை முன்கூட்டி குழுவாக பதிவு செய்தால், தனியான பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும், அவர் தெரிவித்தார். இந்நிலையில் காலை 6.30 மணிக்கு கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கதிர்காமம் மற்றும் உகந்தைக்கு இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. இதேவேளை உகந்தை மற்றும் கதிர்காமத்திலிருந்து கல்முனைக்கு மாலை 4.00 மணிக்கு பஸ் சேவைகள் இடம்பெறும். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பஸ் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தீர்த்த உற்சவத்தில் கலந்துகொள்ளும் அடியார்களை அழைத்து வர கூடுத...

ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு !

Image
  ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு ! சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை நேற்று நடந்த அரசமைப்பு சபைக் கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது குறித்த பரிந்துரைக்கு எதிராக 5 வாக்குகளும், ஆதரவாக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த பரிந்துரை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பேருந்து நிலைய கழிப்பறையில் வயோதிபர் சடலமாக மீட்பு !

Image
  நுவரெலியா பேருந்து நிலைய கழிப்பறையில் வயோதிபர் சடலமாக மீட்பு ! நுவரெலியா பேருந்து நிலையத்தின் பொதுக் கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (26) மாலை கழிப்பறையில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், 1990 எம்புலன்ஸ் சேவை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, குறித்த நபர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர். நுவரெலிய - ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்தார். சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்க ஜனாதிபதி ரணில் மீண்டும் உத்தரவு !

Image
  மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்க ஜனாதிபதி ரணில் மீண்டும் உத்தரவு ! மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், ஜுலை இரண்டாம் வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் தருணத்தில் பண்ணையாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் சம்பந்தமாக ரணில் செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர், மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள், வனத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்திருந்தார். இதன்போது மயிலத்தமடு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரையை உறுதி செய்யுமாறு தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது. பண்ணையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.  அத்துடன் பண்ணையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கடந்த தடவை உத்தரவினைப்...

ஆசிரியர்கள், கிராம அதிகாரிகள், பதிவாளர்கள் பணிப்புறக்கணிப்பு: தேசிய அளவில் பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகள் !

Image
  ஆசிரியர்கள், கிராம அதிகாரிகள், பதிவாளர்கள் பணிப்புறக்கணிப்பு: தேசிய அளவில் பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகள் ! சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (26) ஆசிரியர் - அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் கற்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பல பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், பாடசாலைகளுக்கு வந்த சில மாணவர்கள் பாடசாலைகளுக்குள் நுழைய முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் “அத தெரண” செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (27) வழமைப் போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்...

இலங்கை – வியட்நாம் இடையில் கல்வித்துறை ஒப்பந்தம் !

Image
  இலங்கை – வியட்நாம் இடையில் கல்வித்துறை ஒப்பந்தம் ! இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையில் உயர் கல்வி ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான உயர்கல்வித் துறையை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 2017 முதல் 2020 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தங்களுடன் 2024-2026 வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

இரு போகங்களுக்கு இலவச உரம் : கைத்தொழில் அமைச்சர் !

Image
  இரு போகங்களுக்கு இலவச உரம் : கைத்தொழில் அமைச்சர் ! நெற்செய்கை விவசாயிகளுக்கு எதிர்வரும் இரண்டு போகங்களுக்காக எம். ஓ. பி. உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் மூலம் 55,000 மெற்றிக்தொன் எம். ஓ. பி. உரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளார். அதேவேளை, நாட்டில் தற்போது உரத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது என்றும் யூரியா மற்றும் எம். ஓ. பி. உரங்கள் போதியளவு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை - சீனா விமான சேவை மீள ஆரம்பம் !

Image
  இலங்கை - சீனா விமான சேவை மீள ஆரம்பம் ! சீனாவின் சோங்கிங்கை (Chongqing Airline) தளமாகக் கொண்டு செயல்படும் சோங்கிங் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கொழும்புக்கும் சீனாவுக்குமிடையிலான நேரடிவிமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. சீனாவின் சோங்கிங்லிருந்து 78 பயணிகளுடன் இந்த நிறுவனத்தின் OQ2393 இலக்க விமானம் நேற்று முன்தினம் (24) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச நிலையத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து விமானத்திற்கான சம்பிரதாய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதாக ஏயார்போர்ட் என்ட் எவியேஷன் செர்வீசஸ் (Airport and Aviation Services (Sri Lanka) (Pvt.) Limited) நிறுவனம் தெரிவித்தது. சோங்கிங் மற்றும் கொழும்புக்குமிடையே வாரத்தில் மூன்று விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக இந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு !

Image
  ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ! இன்று (26) பிற்பகல் நடத்தப்படவிருந்த ஆசிரியர் - அதிபர் போராட்டத்தில் ஈடுபட உள்ள பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஜோசப் ஸ்டார்லிங், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, வணக்கத்துக்குரிய யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க மற்றும் இவர்களுடனான உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (26) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொறுப்பான ஒரு அரசு அதிகாரியுடன் சட்டப்பூர்வமாக பெற்ற அனுமதியின் அடிப்படையில் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல்: சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

Image
  பறவைக் காய்ச்சல்: சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை ! கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு சமைக்கப்படுவதை உறுதி செய்வதோடு , பச்சையாகவோ அல்லது வேகவைக்கப்படாத கோழி இறைச்சியை உட்கொள்வதையும் தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் (H9) குறித்து சுகாதார அமைச்சகத்தின் கவனத்துடன் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இந்த விழிப்புணர்வை வழங்கியுள்ளது . தற்போது, ​​மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி துறை, H5 மற்றும் H7 விகாரங்களைக் கண்டறியவும், H9 இன்ஃப்ளூயன்ஸா விகாரத்தையும் கண்டறியவும் PCR பரிசோதனை வசதிகளை நிறுவியுள்ளது. பறவைகளையோ அவற்றின் எச்சங்களையோ தொட வேண்டாம் என்றும், கோழிப்பண்ணைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் தங்கள் பகுதிகளில் காணப்பட்டால், உடனடியாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை பலி !

Image
  நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை பலி ! உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வெளிநாட்டு பிரஜை நேற்று (25) மாலை நீராடச் சென்ற வேளையில் நீரோட்டத்தில் சிக்கியதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகளின் தலையீட்டினால் கடலில் இருந்து மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 61 வயதான மலேசிய நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனைவி பணம் அனுப்பாததால் ஆறு வயது மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல் !

Image
  மனைவி பணம் அனுப்பாததால் ஆறு வயது மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல் ! தனது ஆறு வயது மகளுக்கு கழிவறையை துப்புரவு செய்யும் திரவத்தை (டாய்லெட் கிளீனர் திரவத்தை) வாயில் பலவந்தமாக ஊற்ற முயன்ற தந்தை கைது செய்யப்பட்டள்ளார். வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரின் மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளார் என ஹங்கம பொலிஸார் தெரிவித்தார். சந்தேக நபர் ஹுங்கம படாட பிரதேசத்தில் வசிக்கும் தொழிலாளி ஆவார். பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (119) கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபர் அவ்வேளையில் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கழிவறையை துப்புரவு செய்யும் திரவம் பருகப்பட்டதா என்பதை பரிசோதிப்பதற்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் ஆறு வயது சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

பாழடைந்த வீட்டில் 49 வயது நபரின் சடலம் மீட்பு !

Image
  பாழடைந்த வீட்டில் 49 வயது நபரின் சடலம் மீட்பு ! பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தஹம் வெவ பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரின் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து அதிகளவு இரத்தம் வடிந்துள்ளது.  சடலம் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் தூக்கில் தொங்கி இறந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறித்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக சடலம் பொலன்னறுவை மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதலனுடன் பேய் மாளிகை பார்க்கச் சென்ற பெண் : சவப்பெட்டியில் பூதவுடலாக நடித்த கணவரால் தாக்கப்பட்ட சம்பவம் !

Image
  கள்ளக்காதலனுடன் பேய் மாளிகை பார்க்கச் சென்ற பெண் : சவப்பெட்டியில் பூதவுடலாக நடித்த கணவரால் தாக்கப்பட்ட சம்பவம் ! நவகமுவ பிரதேசத்தில் 'பேய் மாளிகை' பார்க்கச் சென்ற பெண் ஒருவர் அவரது கணவரால் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் அவரது கள்ளக்காதலனுடன் பேய் மாளிகை பார்க்கச் சென்றுள்ள நிலையில், அங்கு கணவன் சவப்பெட்டியில் பூதவுடலாக நடித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, ​​21 வயதுடைய மனைவியைத் தாக்க முயன்ற கணவர் உட்பட, மோதலில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் இன்று (24) உத்தரவிட்டுள்ளார். நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த திருமணமான தம்பதியினர் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சட்டரீதியாக விவாகரத்து பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது உறுதி செய்யப்பட்டது !

Image
  ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது உறுதி செய்யப்பட்டது ! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் திங்கட்கிழமை (25) அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதனை முன்னெடுத்துச் செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டம் திங்கட்கிழமை (25) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று பொது வேட்பாளர் தொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் எமக்குள் இடம்பெற்று இருந்தது. இதுவரை காலமும் கொள்கை ரீதியாக பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர் தரப்பில் நிறுத்துவது என்று இருந்த விடயம் திங்கட்கிழமை (25) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழர் தரப்பில் உள்ள சிவில் அமைப்புகளுடன் பேசி ஏனையவர்களைய...

வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் !

Image
  வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ! வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் திங்கட்கிழமை (24) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தொழில்சாலையில் பணி புரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்ற நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அப் பகுதி மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீர்தாரை வீசி நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் தீ விபத்தில் தொழிற்சலை முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் நாசமாகியுள்ளது.இந்நிலையில் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்...
Image
  1700 ரூபா நாள் சம்பளத்தை வழங்குமாறு கோரி தோட்டத் தொழிலாளர்கள் அமைதி வழிப் போராட்டம் ! on  Monday, June 24, 2024 By  kugen தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபா நாள் சம்பளத்தை தோட்டக் கம்பெனிகளை உடனடியாக வழங்குமாறு கோரி பசறை எல்டப் கிகிரிவத்தை தோட்ட தொழிலாளர்கள் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  எல்டப் கிகிரிவத்தை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (24) காலை 9. 30 மணியளவில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர் .  அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய தங்களுக்கு உடனடியாக 1700 ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் வேணடு்கோள் விடுத்தனர். இவ் அமைதி வழி போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் அசோக் குமார் தலைமையில் இடம்பெற்றதோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாநில இயக்குனர் கனகராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகத்தர்களும் அவ்விடத்துக்கு வருகை தந்ததோடு தோட்ட உயர் அதிகாரியுடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுப்பட்டனர்.

இன்றைய நாணய மாற்று விகிதம் !

Image
  இன்றைய நாணய மாற்று விகிதம் ! இன்று திங்கட்கிழமை (ஜூன் 24) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.5658 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 309.8847 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் ,