மட்டக்களப்பில் இரவில் பஸ்ஸில் தனித்திருந்த 15 வயது சிறுமி : பொலிஸார் விசாரணை ! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பயணிக்கக் காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்த 15 வயது சிறுமியை செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடியைச் சேர்ந்த சிறுமியே பஸ்ஸில் தனித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாயார் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர், தந்தையின் பராமரிப்பில் இருந்துவந்த இச்சிறுமி, நேற்றிரவு வீட்டை விட்டு வெளியேறி, கல்முனையில் இருந்து பொலன்னறுவைக்கு பயணிக்கும் தனியார் பஸ்ஸில் ஏறியுள்ளார். அந்த பஸ்ஸின் சாரதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பஸ்ஸை நிறுத்திவிட்டு, பஸ்ஸினுள் இருந்த நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர், பஸ்ஸில் தனியாக அமர்ந்திருந்த சிறுமியை அவதானித்த ஒருவர் சந்தேகம் கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து, பொலிஸார் அந்த பஸ்ஸில் அமர்ந்திருந்த சிறுமியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, விசாரித்துள்...