Posts

Showing posts from August, 2022

மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது!

Image
  மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது! 36,500 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது. கப்பலிலிருந்து பெற்றோலை இறக்கும் பணிகள் இன்று (31) ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெற்றோலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுத்திகரிப்பு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். நாளாந்தம் 4,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் பெற்றோலை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேக டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளார்.

கோழி தீவனத்திற்கான பொருட்களின் விலை குறைக்கப்படும்!

Image
  கோழி தீவனத்திற்கான பொருட்களின் விலை குறைக்கப்படும்! கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, முட்டை உற்பத்தியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறினார். வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் கபில நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்து அரசாங்கம் அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, முட்டையொன்றை 50 ரூபாவிற்கும் குறைவான விலையில் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கோதுமை மா பற்றிய அறிவிப்பு!

Image
  கோதுமை மா பற்றிய அறிவிப்பு! பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதி தொடர்பில் ,அமைச்சருக்கும் கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. கோதுமை மா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அந்தக் கலந்துரையாடலில், கோதுமை மா உற்பத்தி விலை மற்றும் கொள்ளளவு தொடர்பில் கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் இருந்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது நிலவும் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு காரணமாக 50 கிலோ கிராம் கொண்ட கோதுமை மாவின் விலை 20,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்தியா ஊடாக கோதுமை மா இறக்குமதி நிறுத்தப்பட்டமையே இதற்கான காரணம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், துருக்கி ஊடாக கோதுமை மாவை கொண்டு வருவதற்க...

ஸஹ்ரான் - புலஸ்தினி உறவினை மறைத்தமை தொடர்பில் சஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு !(காணொளி)

Image
  ஸஹ்ரான் - புலஸ்தினி உறவினை மறைத்தமை தொடர்பில் சஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு !(காணொளி) (பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் தொடர்பில் ஆட்சேபனை பொலிஸாரினால் எழுப்பப்பட்ட நிலையில் எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு நேற்று (30) வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி வழக்கானது இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி ஸஹ்ரானின் மனைவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் முஹமட் அக்ரம் உட்பட சட்டத்தரணி சலாகுதீன் சப்றீன் மூவரும் ஆஜராகி இருந்தனர். இன்றைய விசாரணையின் போது மன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஸஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல்வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டிருந்தது. மேலும் ஸஹ்ரான் மற்றும் தப்பி சென்றதாக கூறப்புடும் புலஸ்தினி உறவு தொ...

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் ! - செங்கலடியில் போராட்டம்

Image
  வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் ! - செங்கலடியில் போராட்டம் (ரூத் ருத்ரா) 'இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' என்ற தொணிப் பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு தன்னாமுனை வீதி செங்கலடியில் இன்று (30) நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் நெறிப்படுத்துனர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் 100 நாட்கள் செயல் முனைவு போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் 30 ஆவது நாள் செயல் முனைவான போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனையில் நடைபெற்றது. மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஒன்று கூடிய மக்கள் தங்களது பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறுபட்ட பிரச்சினைள் தொடர்பாக கோஷங்களை எழுப்பியவாறும் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் மேலும் ; பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு வருமாறு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எ...

அரச நிறுவனங்களில் மின்சார வாகனம் – ஜனாதிபதி

Image
  அரச நிறுவனங்களில் மின்சார வாகனம் – ஜனாதிபதி அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெற்றோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூகம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வாகன போக்குவரத்து தடை - டெக்னிக்கல் சந்தி மூடப்பட்டுள்ளது !

Image
  வாகன போக்குவரத்து தடை - டெக்னிக்கல் சந்தி மூடப்பட்டுள்ளது ! மருதானை, டெக்னிக்கல் சந்தியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியத்தினால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டம் காரணமாக டெக்னிக்கல் சந்திக்கு அருகில் உள்ள நீதிமன்ற வளாகத்தை நோக்கி செல்லும் பாதை பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

Image
  60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். செப்டம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள...

கல்முனை தமிழ்ப்பிரிவுப் பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு : பிரதமர்

Image
  கல்முனை தமிழ்ப்பிரிவுப் பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு : பிரதமர் கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன  உறுதியளித்துள்ளார். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை தானும் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும் சந்தித்து கலந்தரையாடிய வேளையிலேயே இதனை பிரதமர் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். இன்றைய தினம் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பில், கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலகம் தொடர்பான குழப்பநிலை மற்றும் அண்மைய பொது நிருவாக அமைச்சின் இணையத்தளத்திலிருந்து கல்முனை தமிழ்ப்பிரிவு அகற்றப்பட்டமை, நீண்டகாலமாக இருந்து வருகின்ற கணக்காளர் நியமிக்கப்படாத பிரச்சினை, காணிப் பிரச...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை; 49 % பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளருக்கு!

Image
  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை; 49 % பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளருக்கு! இலங்கையின் தேசிய விமான சேவைகள் நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி இந்த நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமே இருக்கும். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தொடர்ந்தும் நட்டம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வருகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இது ஏறக்குறைய 401 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் தெரிவித்தார். அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாணின் விலையை 60 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் !

Image
  பாணின் விலையை 60 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் ! நாளாந்தம் அதிகரித்து வரும் கோதுமை மாவின் விலையை மூன்று நாட்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், ஒரு இறாத்தல் பாணின் விலை 60 ரூபாவினாலும், பனிஸ், கறி பனிஸ் போன்ற சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் நெருக்கடி காரணமாக சந்தையில் மாவின் விநியோகம் பாதியளவு குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார் தற்போது கோதுமை மா கிலோ ஒன்று 350 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சந்தையில் மாவிற்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விலையில் மாவை வாங்கி பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பட்சத்தில் தற்போது 190 ரூபாவாக உள்ள பாண் இறாத்தல் ஒன்றின் விலை 250 ரூபாவாக உயரும் எனவும், பனிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாய் வரை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம்!-மின்சக்தி அமைச்சர்

Image
  மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம்!-மின்சக்தி அமைச்சர் மின்கட்டண அதிகரிப்பு மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் சபையின் செலவீனங்களை ஒப்பிடும் போது இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்று என மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்காக 7600 கோடி  அதிகமான தொகை செலுத்த வேண்டும் என கூறினார். மேலும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மட்டும் செலுத்த வேண்டிய தொகை 3100 கோடி ரூபாய் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மின்சார சபையினால் செய்யக்கூடிய சில பணிகள் வேறு திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்த அமைச்சர் சபையில் உள்ள மாபியாக்களை எதிர்த்து தாம் தனித்து நின்று போராடிய சந்தர்ப்பங்களும் உண்டு எனவும் தெரிவித்தார். மின்சார சபை மற்றும் பெற்றோலிய...

கொழும்பில் பூனை மலத்துடன் வழங்கப்படும் உணவு!

Image
  கொழும்பில் பூனை மலத்துடன் வழங்கப்படும் உணவு! ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 28 ஆம் திகதி சுமார் 30 உணவகங்களில் பேரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. இதன்போது, இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்தச் சுற்றிவளைப்பில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு சந்தேகநபர்களும் கொழும்பு, அளுத்கடை மற்றும் கங்கொடவில நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனையின் போது, ​​சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் இறைச்சி மற்றும் மீன் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

அடுத்த உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் - யுனிசெப் !

Image
  அடுத்த உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் - யுனிசெப் ! தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தமது பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பெற்றோர்கள் அந்த குழந்தைகளை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பும் போக்கு காணப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லரேயா அட்ஜெய், கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிலை தொடருமானால் குழந்தைகள் விடயத்தில் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தலைகீழாக மாறக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். அத்தோடு நாட்டில் வாழும் மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் குறிப்பிட்டார். தற்போதைய நெருக்கடி நிலையில் பாடசாலைகள் உரிய முறையில் இயங்காதமை காரணமாக நெருக்கடிக்கு முன்னர் அவர்கள் பெற்றுக்கொண்ட மதிய உணவை கூட இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்காது - முன்னாள் பிரதம நீதியரசர் !

Image
  முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்காது - முன்னாள் பிரதம நீதியரசர் ! அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்காது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல, அவர் சேவையிலிருந்து விலகிய ஜனாதிபதி என முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு சேவையில் இருந்து விலகிய ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை எனவும் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்ப...

தேசியப் பட்டியலில் முதல் வெற்றிடத்திற்கு ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படவுள்ளார் - சஜித் தெரிவிப்பு !

Image
  தேசியப் பட்டியலில் முதல் வெற்றிடத்திற்கு ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படவுள்ளார் - சஜித் தெரிவிப்பு ! ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் முதல் வெற்றிடத்திற்கு ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  அத்தோடு நாட்டின் ஊழல் தடுப்பு வேலைத்திட்டத்தின் தலைவராக செயற்படுவதற்கு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க நேற்று பொதுமணிபோப்பில் விடுதலை செய்யப்பட்டார்.  இதனை அடுத்து ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊழலுக்கும் மோசடிக்கும் எதிராகப் போராடிய மக்கள் தலைவரான ரஞ்சன் ராமநாயக்கவுக்குக் கிடைத்த சுதந்திரம் குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும் முழுநேர அரசியலில் ஈடுபட அவருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர...

நாட்டை தன்னிறைவு அடையச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு! – பிரதமர்

Image
 நாட்டை தன்னிறைவு அடையச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு! – பிரதமர் உணவு உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து நாடு முழுவதும் தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வானிலிருந்து ஒரு சொட்டு நீரைக் கூட கடலுக்குச் செல்ல விடப்போவதில்லை என்ற பராக்கிரம பாகுவின் கருத்தியலின் பிரகாரம் செயற்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். அடுத்த 100 நாட்களுக்குள், கிராம மட்டத்தில் உணவு பாதுகாப்பு குழுக்களை நிறுவி, பயிர் செய்கையை அதிகரிக்குமாறும் மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதமர் பணிபுரைவிடுத்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாகாண மாநாட்டில் பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெற்று நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களை ஒருபோதும் செயல்படுத்தக்கூடாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பனவின் உதவிகள் கிடைக்கவும் இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கும் கிராம மட்டத்திலிருந்து திட்டம் தயாரிக்கப...

கடைக்கு வந்த நபரை மன்னா கத்தியால் வெட்டிக் கொலை செய்து தீ வைத்த பெண்!

Image
  கடைக்கு வந்த நபரை மன்னா கத்தியால் வெட்டிக் கொலை செய்து தீ வைத்த பெண்! நபரொருவரை மன்னா கத்தியில் வெட்டிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிபில நாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பெண் நடத்தும் கடைக்கு வந்த நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (25) பிற்பகல் குறித்த நபர் நாகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பெண்ணின் கடைக்கு வந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த பெண்ணுக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் சந்தேக நபர் மன்னா கத்தியால் குறித்த நபரை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடையில் இருந்து பெற்றோல் போத்தலை எடுத்து இறந்தவரின் உடலில் வைத்து தீ வைத்து கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித...

வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருள் இல்லை!

Image
  வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருள் இல்லை! எந்தவித அனுமதியும் பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இந்த விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், இன்றைய நிலவரப்படி 1,250க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், இன்று சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக தகவல்கள்  தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு, குருநாகல், ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

பிரதமராக கோட்டா! தமக்கு ஆட்சேபனை இல்லை என்கின்றனர் ஆளும்கட்சியினர் !

Image
  பிரதமராக கோட்டா! தமக்கு ஆட்சேபனை இல்லை என்கின்றனர் ஆளும்கட்சியினர் ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்க விருப்பமா என வினவினார். அதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, எங்களுக்கு விருப்பம் தான். கண்டிப்பாக வாக்களிப்போம். மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவிக்கையில் கோட்டாபய ராஜபக்ச விரைவில் இந்த நாட்டுக்கு வரவேண்டும். அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் 69 இலட்சம் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி. அப்படியானால் அவர் பிரதமர் ஆவதை யாருக்கு தான் பிடிக்காது? நான் அதற்கு எதிரானவன் இல்லை, அவர் கேட்டால் அவருக்கு வாக்களிப்போம் என தெரிவித்தார்.

சுகாதார நிபுணர்கள் பொது மக்களுக்கு விடுக்கப்படும் கோரிக்கை!

Image
  சுகாதார நிபுணர்கள் பொது மக்களுக்கு விடுக்கப்படும் கோரிக்கை! தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவிருப்பதால், கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை தாமதமின்றிப் பெறுமாறு சுகாதார நிபுணர்கள் நேற்று பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதுவரை, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 20 வயதுக்கும் மேற்பட்ட 14.4 மில்லியன் பேரில் 8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பூஸ்டரைப் பெற்றுள்ளனர். 20 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஆறு மில்லியன் மக்கள் இன்னும் பூஸ்டர் டோஸ் பெற உள்ளனர். எனவே, தற்போது நாட்டில் ஏராளமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் நான்காவது டோஸ் பரிந்துரைத்துள்ளதாகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக இருந்தால் நான்காவது டோஸ்ஸை பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மொட்டு கட்சியின் ஆதரவாளர்களை பேர வாவியில் தள்ளிய பெண்ணிற்கு விளக்கமறியல்!

Image
  மொட்டு கட்சியின் ஆதரவாளர்களை பேர வாவியில் தள்ளிய பெண்ணிற்கு விளக்கமறியல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்றை கடந்த மே 9 ஆம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய சந்தேகநபரை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

கள்ளக்காதல் காரணமாக 54 வயது பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை! 37 வயதான நபர் ஒருவர் கைது!

Image
  கள்ளக்காதல் காரணமாக 54 வயது பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை! 37 வயதான நபர் ஒருவர் கைது! வெலிமடை சாப்புகட பகுதியில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் அவரது மகள் வெலிமடை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று (24) குறித்த பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. புரங்வெல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் வேறு ஒருவருடன் இணைந்து ஹோட்டல் ஒன்றினை நடத்தி வந்ததாகவும், அந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அந்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த நபர் குறித்த பெண்ணை கொலை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்! அமைச்சு பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு முதலிடம் !

Image
  புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்! அமைச்சு பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு முதலிடம் ! புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால வரவு – செலவுதிட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது. திருத்தப்பட்ட இடைக்கால வரவு – செலவுதிட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள போதிலும், இதுவரையில் எவ்வித இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்கள் பலர் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக டீசலை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பில் விவசாய அமைச்சருடன் பேச்சுவார்த்தை!

Image
  மட்டக்களப் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக டீசலை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பில் விவசாய அமைச்சருடன் பேச்சுவார்த்தை! (மட்டக்களப்பு விசேட நிருபர்) மட்டக்களப் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் விவசாய அமைச்சரை நேற்று முன்தினம் (23) திகதி சந்தித்துள்ளனர். கொழும்பில் உள்ள விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் கலந்துரையாடப்பட்டதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டம் முந்தி பயிற்செய்கை பண்னும் மாவட்டமாக இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் டீசலை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், விவசாயிகளுக்கு இலவசமாக டீசலை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்திவருவதாகவும் அமைச்சர் இதன்போது விவசாயிகளுக்கு வாக்குறுதியளித்ததாக கலந்து கொண்ட விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவிற்கான தபால் பொதிகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தபால் திணைக்களம்

Image
 ரஷ்யாவிற்கான தபால் பொதிகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தபால் திணைக்களம் ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தபால் பொதிகள் இன்று (25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 3 மாதங்களாக தபால் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நேரடி விமான சேவைகள் செயல்படாத காரணத்தால், பொதிகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவில்லை. தற்போது ​​தபால் பொருட்களை கொண்டுசெல்வதற்காக தனியார் விமான நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கம்!

Image
 இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கம்! ஆசிய கிண்ணத் தொடரின் இந்திய அணி குழாமில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். மணிக்கட்டு காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக சுப்மன் கில் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.