கல்முனை மாநகர பிரதேசத்த்தினுள் பசுமைத் திட்ட முயற்சிகள் முன்னெடுப்பு : அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஆராய்வு!
கல்முனை மாநகர பிரதேசத்த்தினுள் பசுமைத் திட்ட முயற்சிகள் முன்னெடுப்பு : அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஆராய்வு! (பாறுக் ஷிஹான்) கல்முனை தலைமையக பொலிஸ் பொலிஸ் நிலையத்திற்கு அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜயம் செய்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்திற்கு இன்று (31) சென்றிருந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் கலந்து கொண்டு பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். கல்முனை தலைமைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் புத்திக இதனை தொடர்ந்து இவரை கௌரவிக்கும் வகையில் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் ஒன்றினை வழங்கி வைத்தார். கல்முனை மாநகர பிரதேசத்தை பசுமைத் திட்டங்களின் கீழ் உள்வாங்குவதன் அவசியம் மற்றும் பசுமை தரும் மரங்களை நடுவதன் ஊடாக மக்களுக்கான நன்மைகள் தொடர்பில் வலியுறுத்தி...