Posts

Showing posts from July, 2023

பியர் தயாரிப்புகளுக்கு அரிசியைப் பயன்படுத்த தடை!

Image
பியர் தயாரிப்புகளுக்கு அரிசியைப் பயன்படுத்த தடை! #Sri Lanka   #rice   #Food   விலங்குத் தீவனம் மற்றும் பியர் தயாரிப்புகளுக்கு அரிசியைப் பயன்படுத்தவதை உடனடியாக நிறுத்துவதற்கு கமத்தொழில் அமைச்சு முடிவு செய்துள்ளது.  தற்போது நிலவுகின்ற வரட்சி நிலைமையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் முகமாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.  இது தொடர்பாக ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு குழுவிற்கு அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயம்!

Image
இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயம்! #Sri Lanka   #weather   #Food   #Tamil Food   இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.  இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சநிலை காரணமாக தற்போதுள்ள கையிருப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் விவசாய அமைச்சு ஈடுபட்டுள்ளது.  இதன்காரணமாக விலங்கு உணவுகளிற்கு அரிசியை பயன்படுத்துவதை தடை செய்ய அமைச்சு தெரிவித்துள்ளது.  சீரற்ற காலநிலை காரணமாக நெல்விளைச்சல் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது தங்கள் வயல்களிற்கான போதிய நீர் இன்மையால் விவசாயிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.  குறிப்பாக உடவலவ நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.  உடவலவபகுதியில் 75000 ஏக்கர் நிலத்தில் பயிர்ச்செய்கை இடம்பெறுகின்றது இதில் 65000ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கை இடம்பெறுகின்றது.  யால பருவத்திற்கான அறுவடை விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் குற...

தேசிய கீதத்தை பிழையாக பாடிய பிரபல பாடகி: எச்சரித்த விதுர விக்ரமநாயக்க

Image
  தேசிய கீதத்தை பிழையாக பாடிய பிரபல பாடகி: எச்சரித்த விதுர விக்ரமநாயக்க #Sri Lanka கொழும்பில் நேற்று ஆரம்பமான ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியின் ஆரம்ப விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட விதம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.  உமாரா சின்ஹவன்ச பாடிய இந்தப் பாடல், இதுவரை பாடப்பட்டதை விட வித்தியாசமான முறையில் பாடப்பட்டதாகவும் ஒரு முக்கிய வரியை தவறாக உச்சரித்து இலங்கை தேசிய கீதத்தை பாடியதாக விமர்சிக்கப்படுகிறது.  கிரிக்கெட் அமைப்பு, போட்டி அமைப்பாளர்கள் மற்றும் பாடகர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.  இதேவேளை காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைக் குறிப்பிட்டு, புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளார். தேசிய கீதத்தை ராப் அல்லது ரீமிக்ஸ் செய்ய முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.  தேசிய கீதத்தை பாடுவதற்கு ஒரு நிலையான முறை இருப்பதாகவும், இந்த போக்குகளுக்க...

மன்னாரில் மலையக மக்களின் உரிமை நடைபவனிக்கு ஆதரவு நிகழ்வு

Image
  மன்னாரில் மலையக மக்களின் உரிமை நடைபவனிக்கு ஆதரவு நிகழ்வு #Sri Lanka   #Mannar   #Lanka4 வேர்களை மீட்டு உரிமை வென்றிட மாண்புமிகு மலையக மக்களின் நடைபவனி க்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(30) மதியம் 3 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. தலைமன்னாரில் ஆரம்பமான மாண்புமிகு மலையக மக்களின் 200 வது வருட வருகை பூர்த்தி நிகழ்வைத் தொடர்ந்து தலைமன்னார் பேசாலை ஊடாக நேற்று (30) காலை மன்னாரை குறித்த நடை பவனி வந்தடைந்தது .  இந்த நிலையில் குறித்த மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் முகமாக குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது. இவ் நிகழ்வில் நான்கு மத தலைவர்கள்,மலையக மக்கள்,சமூக ஆர்வலர்கள் மன்னார் வாழ் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மலையக மக்களுக்கான தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.  குறித்த நிகழ்வில் மலையக மக்களை சமமான பிரஜைகளாக அங்கி கரிங்கள்,மலையக மக்களின் உணர்வுகளை மதித்து நடங்கள்,மலையக மக்களின் பிள்ளைகளுக்கு உரிய கல்வியை கொடுங்கள்,மலையக அரசியல் தலைவர்களே மலையக மக்கள் தலை நிமிர வழி செய்யுங்கள், மலையக மக்களுக்கு தனித்தனியாக குடியிருப்புகளை அ...

வவுனியாவைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

Image
  வவுனியாவைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் #Mannar   #Tamil Nadu   #Lanka4   #Refugee இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர்.  தகவல் அறிந்த மரைன் போலீசார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.  பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோர்வே தூதரகம் இலங்கையில் தனது செயற்பாடுகளை இன்றுமுதல் நிறுத்துகிறது!

Image
  நோர்வே தூதரகம் இலங்கையில் தனது செயற்பாடுகளை இன்றுமுதல் நிறுத்துகிறது! #Sri Lanka   #Lanka4   #Norway இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31.07) முதல் மூடப்பட உள்ளது.  வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.  அதன்படி கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளது. இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் மேற்கொள்ள உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஸ்லோவாக்கியா, கொசோவோ மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களும் இந்த ஆண்டு நிறுத்தப்படும் என நார்வே அரசு அறிவித்துள்ளது.

மின்னேரியா அடுக்குமாடி குடியிருப்பில் சடலமொன்று மீட்பு!

Image
  மின்னேரியா அடுக்குமாடி குடியிருப்பில் சடலமொன்று மீட்பு! #Sri Lanka   #Death   #Lanka4 மின்னேரியாவில் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.  நேற்று (30.07) பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் மின்னேரிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்து காணப்பட்டதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.   சுமார் 05 அடி உயரம் கொண்ட இந்த நபர் கடைசியாக சிவப்பு நிற சட்டை மற்றும் நீல நிற சேலை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.  

அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

Image
  அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் #Sri Lanka   #Passport   #Lanka4 அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.  ஒரு இலத்திரனியல் கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்படுவதாகவும் வருடாந்தம் குறைந்தது  750,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சு கூறுகிறது. அதற்குத் தேவையான தொகை 15மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.  இதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை மீள ஆரம்பமாகும் வரை சாதாரண கடவுச் சீட்டை அச்சிட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவை புரட்டி போட்ட டொக்சூரி புயல்; 7 லட்சம் பேர் பாதிப்பு

Image
  சீனாவை புரட்டி போட்ட டொக்சூரி புயல்; 7 லட்சம் பேர் பாதிப்பு #India   #China   #world news   #Flood   #Heavy_Rain   #Tamilnews   #Cyclone சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளை புரட்டி போட்ட டொக்சூரி புயலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். வியாழன் அன்று பிலிப்பைன்ஸை தாக்கிய டொக்சூரி புயலின் போது பலத்த காற்று வீசியதால் வீடுகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை பிடுங்கி வீசப்பட்டன. தொடர்ந்து, தென்கிழக்கு சீனாவை டொக்சூரி புயல் தாக்கியது.

காலிமுகத்திடலில் உணவு வர்த்தகர்களை ஒழுங்குபடுத்துவதற்கு முடிவு

Image
  காலிமுகத்திடலில் உணவு வர்த்தகர்களை ஒழுங்குபடுத்துவதற்கு முடிவு #Sri Lanka   #Kegalle   #Lanka4   #beach காலிமுகத்திடலில் உணவு வர்த்தகர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.  உணவுப்பொருட்கள் அசுத்தமாக இருப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் பிரதம பொது சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன தெரிவித்தார்.  எதிர்காலத்தில் கொழும்பு மாநகரசபையின் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு மாத்திரமே கல்லுமுதூரை அண்மித்த பகுதிகளில் வர்த்தகம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

Image
  புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை! #Sri Lanka   #Susil Premajayantha   #Lanka4 புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.   களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.  இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இதேவேளை, நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்கள்!

Image
  அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்கள்! #Sri Lanka   #Health   #strike   #Lanka4 சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக  அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த போராட்டம் வரும் (03.08) திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக  சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அச் சங்கத்தின்  தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார்.   இதேவேளை, 100,000 கான்டாக்ட் லென்ஸ்கள் கொள்வனவு செய்வதற்கான முறைகேடு தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர்  சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் விடுதலை

Image
கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் விடுதலை #Sri Lanka   #Colombo   #Arrest   #Police   #Protest   #Lanka4   பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பொரளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரை இன்றைய தினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது பிணையில் செல்ல அனுமதித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய இராணுவப் பயிற்சி விமான விபத்தில் 4 வீரர் மாயம்

Image
  அவுஸ்திரேலிய இராணுவப் பயிற்சி விமான விபத்தில் 4 வீரர் மாயம் #Australia   #United_States   #world news   #Lanka4   #Military அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மாகாணத்தில் இராணுவப் பயிற்சியின் போது, வடகிழக்கு கடலோரப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. அந்த ஹெலிகாப்டர் நீரில் மூழ்கியதில், அதில் இருந்த நான்கு ஆஸ்திரேலிய ராணுவ விமானக் குழுவைக் காணவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில், ‘எம்ஆர்எச்-90 தைபான் வகை ஹெலிகாப்டர் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானக் குழுவை சேர்ந்த 4 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை.  மாயமான அந்த 4 பேரை தேடும் பணி தொடர்வதால், அமெரிக்க - அவுஸ்திரேலிய தாலிஸ்மேன் சேபர் கூட்டுப்பயிற்சியானது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றார்.

நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு!

Image
  நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு! நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளார். அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்கான பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்துமாறு  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் கூறுகையில், புதிய முறைமை நடைமுறையாகும் வரையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது. குறைந்த வருமானம் கொண்டோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உட்பட ஏனைய நோய் நிலைமைகளுக்கு உள்ளானவர்களுக்காக, தற்போது வழங்கப்படுகின்ற நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.  அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவானது நேரடியாக வங்கிகளிலேயே வைப்புச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  අඩු ආදායම්ලාභී ජ්‍යෙෂ්ඨ පුරවැසි, වකුගඩු රෝගී හා ආබාධ සහිත පුද්ගලයින් සඳහා දැනට පවතින සුබසාධන ප්‍රතිලාභ ගෙවීම් නොවෙනස්ව පවතින අතර ඉදිරියේ දී ගෙවීම් ප්‍රතිලාභියාට බැර කරන බැවින් බැංකු ගිණුමක් විවෘත කර ප්‍...

பெற்ற பிள்ளையை கத்தியால் குத்திய தந்தை!

Image
  பெற்ற பிள்ளையை கத்தியால் குத்திய தந்தை! தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான  சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேய்கனே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பொரலுவெவ - ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (28) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் ஏற்பட்ட சண்டையின் போது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சந்தேகநபரான தந்தை இதுவரை கைது செய்யப்படவில்லை, கொபேகனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தல் : முக்கிய புள்ளியின் உதவியாளர் கைது!

Image
  டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தல் : முக்கிய புள்ளியின் உதவியாளர் கைது! டுபாயில் இருந்து போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் பாதாள உலக தலைவரின் முக்கிய உதவியாளர் ஒருவரை கலால் திணைக்களம் கைது செய்துள்ளது. 40 கிராம் ஹெரோயின், வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 3 ரவைகளுடன் அவர் கைது செய்யப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நபருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி அனுரகுமார அலுத்கே தெரிவித்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியம்!

Image
  நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியம்! நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தெங்கு உற்பத்தி குறைவடைந்துள்ளது. வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது நாட்டிற்கு தேவைப்படுகின்றன. இந்தநிலையில் உரப்பற்றாக்குறை நிவர்த்திக்கப்படாவிட்டால் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை வருகிறது 'கஞ்சர்'!

Image
  இலங்கை வருகிறது 'கஞ்சர்'! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குக்ரி வகை ஏவுகணை தாங்கிய கடற்படைக் கப்பலான 'கஞ்சர்' இன்று சனிக்கிழமை (29) திருகோணமலைக்கு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது. 'கஞ்சர் ' கடற்படைக் கப்பலை இலங்கையில் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் கப்பல் தரித்து நிற்கும் போது இலங்கை கடற்படைக் கப்பலுடன் கடல்சார் கூட்டுப் பயிற்சியும் 31 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலை 30 ஆம் திகதியன்று பாடசாலை மாணவர்கள் மற்றும் இலங்கை மக்கள் பார்வையிட முடியுமென இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன்போது யோகா அமர்வு, கடற்கரையை சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. சர்வதேச யோகா தினத்தை அனுஸ்டிப்பதற்காக ஐ.என்.எஸ் வாஹிர் என்ற கப்பல் ஜூன் 19 முதல் 22 வரை இலங்கையில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு கீரியோடை வாவிப்பகுதியில் பெண்கள் குளிப்பதை CCTV மற்றும் Drone மூலம் படமெடுக்கும் அரச கட்சி உறுப்பினர்கள்!

Image
  மட்டக்களப்பு கீரியோடை வாவிப்பகுதியில் பெண்கள் குளிப்பதை CCTV மற்றும் Drone மூலம் படமெடுக்கும் அரச கட்சி உறுப்பினர்கள்! மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரச அமைச்சர் ஒருவரின் ஆதரவில் இடம்பெறும் மீன் வளர்ப்பு திட்டத்தினை இன்றைய தினம் அதிரடியாக பார்வையிட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன். மிகவும் வெக்கக் கேடான விடையம் அங்குள்ளவர்கள் Drone கமரா மூலம் அவ் ஊர் மக்கள் குளிப்பதை வீடியோ வேறு எடுக்கின்றனர் என்ற குற்றச் சாட்டும் மக்களால் முன்வைக்கப்பட்டது. காணிக்கொள்ளை, மணல் கொள்ளைகளை தொடர்ந்து இவ்வாறான ஈனமான செயல்களிலும் அரச சார் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சியை சேர்ந்த சகாக்கள் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்கள் விழிப்படைய வேண்டும். கீரியோடை வாவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் கமராவை வைத்து பார்க்கும் அளவிற்கு மோசமான செயலை இப்போது தான் முதல் முதலாக பார்க்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் வாவியில் வளர்ப்பு மீன் திட்டம் என...

வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஊடகவியலாளர் தரிந்து : கைதுக்கு எதிராக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்!

Image
  வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஊடகவியலாளர் தரிந்து : கைதுக்கு எதிராக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்! ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் கைதுக்கு எதிராக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று சனிக்கிழமை (29) காலை முன்னெடுக்கப்பட்டது. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் திருட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (28) பொரளை பகுதியில் இடம்பெற்றபோதே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரினால் மூர்க்கத்தனமாக இழுத்து கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் பொரளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இதேவேளை ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கையில் விலங்குடன் கைதுசெய்யப்பட்டு 17 மணித்தியாலங்கள் கடந்த நிலையில், மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவில் மீன் டிப்பர் விபத்து!

Image
  காரைதீவில் மீன் டிப்பர் விபத்து! (அஸ்ஹர் இப்றாஹிம்) ஹம்பகந்தோட்டையில் இருந்து கடல் மீன்களை ஏற்றிக். கொண்டு மாளிக்காட்டிலுள்ள மீன் சந்தையை நோக்கி பயணித்த மீன் டிப்பர் இன்று அதிகாலை காரைதீவு பெரிய பாலத்தில் கம்பிகளை உடைத்துக் கொண்டு தடம் புரண்டுள்ளது. இவ்விபத்தின் போது டிப்பரிலிருந்த மீன் பெட்டிகள் சிதறுண்டதுடன் பயணித்தவர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவ்விபத்து சம்பந்தமாக காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.