Posts

Showing posts from August, 2024

இலங்கை சிறைச்சாலைகளில் 331 பட்டதாரிகள் : சிறைச்சாலையில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Image
  இலங்கை சிறைச்சாலைகளில் 331 பட்டதாரிகள் : சிறைச்சாலையில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். இவர்களில் 66 பேர் சிறை தண்டணை விதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், 256 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் சிறைச்சாலையில் 185,056 கைதிகள் இருந்துள்ள நிலையில் அவர்களில் 14,952 பேர் உயர்தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். இது தவிர, சாதாரண தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களில் 44,614 பேரும், எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 64,684 பேரும், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 34,673 பேரும், 1-5 தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 20,188 பேரும் சிறைச்சாலையில் உள்ளனர். இதேவேளை, பாடசாலைகளுக்கு செல்லாத 5,370 கைதிகள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது !

Image
  சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது ! கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுராகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன், இளைஞன் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர். பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 101 லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “சேதவத்தை கசுன்”இன் உதவியாளர்கள் இருவர் கைது !

Image
  பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “சேதவத்தை கசுன்”இன் உதவியாளர்கள் இருவர் கைது ! பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “சேதவத்தை கசுன்” என்பவரின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ், சேதவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 04 தோட்டாக்கள் மற்றும் 21 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இருவரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “சேதவத்தை கசுன்” என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை பல்வேறு பிரதேசங்களில் விற்பனை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இன்று நாட்டை பொறுப்பேற்க 38 பேர் முன்வந்துள்ளனர்: அந்த நிலைக்கு நாட்டை உருவாக்கியவர் ஜனாதிபதி ரணில் !

Image
  இன்று நாட்டை பொறுப்பேற்க 38 பேர் முன்வந்துள்ளனர்: அந்த நிலைக்கு நாட்டை உருவாக்கியவர் ஜனாதிபதி ரணில் ! அன்று ஆட்சியை ஏற்க ஒருவரேனும் முன்வரவில்லை. ஆனால் இன்று நாட்டை பொறுப்பேற்க 38 பேர் முன்வந்துள்ளனர். அந்த நிலைக்கு நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியென பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜித சேனாரத்ன எம்.பி. இதனைக் குறிப்பிட்டார். அவா் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இன்று 39 பேர் முன்வந்துள்ளனர். அவர்கள் பெருமளவு செலவு செய்து பிரசாரம் செய்கின்றனர். 2022 இல் இவர்கள் எவரும் நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. அன்று நான் எதிர்க்கட்சி தலைவருடன் இருந்தேன். அவரை அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினோம். அன்று ஹர்ஷ டி சில்வா போன்றவர்கள் அதிகாரத்தில் கை வைத்தால் சுட்டுவிடும் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு அச்சம் காட்டினர்.மக்கள் வரிசைகளில் நின்றுநின்று உழன்று போயினர். துறைமுகத்துக்கு வந்த கப்பல்கள் திரும்பிச் சென்றன...

ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் , வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு !

Image
  ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் , வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ! ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 1,482 அதிகரித்துள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று வரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 1,482 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவற்றில் 1,419 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதி மீறல்களுடன் தொடர்புடையதெனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 07 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியீடு !

Image
  தபால் மூல வாக்களிப்பின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியீடு ! ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பன வாக்களிப்பின் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை தாக்கி இளைஞர் பலி!

Image
  காட்டு யானை தாக்கி இளைஞர் பலி ! ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொக்கல, ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திமுதுகம பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தவர் எனவும் ​தெரிவிக்கப்படுகின்றது.

விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் உயிரிழப்பு !

Image
  விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் உயிரிழப்பு ! யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கைதடி வடக்கை சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.  காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை விஷ ஜந்து இவரை தீண்டியுள்ளது. அதனை அடுத்து அவரை அங்கிருந்து மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். 

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 12 kg ஹெரோயின் மாயம் !

Image
  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 12 kg ஹெரோயின் மாயம் !  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 240 மில்லியன் ரூபா பெறுமதியான 12 kg ஹெரோயின்  காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெரோயின் கையிருப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பான கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்தது. அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்து அரச புலனாய்வு சேவை அதிகாரி போன்று தோற்றமளிக்கும் நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ‘தரிந்து யோஷித’ எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர் ஒருவரே ஹெரோயின் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சந்தேக நபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்...

காத்தான்குடியில் நான்கு கடைகளுக்கு சீல் வைப்பு ; 54 பேர் மீது வழக்கு தாக்கல் !

Image
  காத்தான்குடியில் நான்கு கடைகளுக்கு சீல் வைப்பு ; 54 பேர் மீது வழக்கு தாக்கல் ! மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள் மீது நேற்று புதன்கிழமை (28) மாலை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பாரிய திடீர் சோதனையின் போது நான்கு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், 54 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பெயரில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசீர் தீனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குறித்த தேடுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த, பழுதடைந்த, காலாவதியான, பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த, வர்த்தக நிலையங்களில் வர்த்தகர்கள் 9 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ந...

12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து காயப்படுத்திய தந்தை கைது !

Image
  12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து காயப்படுத்திய தந்தை கைது ! பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து காயப்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவர் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக லியன்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார். 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 12 வயதுடைய மகளே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்த மகள் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த மகளின் தாயார் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லியன்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து ; மூவர் கைது !

Image
  பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து ; மூவர் கைது ! கண்டி, பிலிமத்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனெரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,  காயமடைந்த மாணவன் பாடசாலை முடித்து விட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது பிலிமத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து மூன்று மாணவர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். பின்னர், காயமடைந்த மாணவன் பிரதேசவாசிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இந்த தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் மூன்று மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹக்கீம்,ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் , அவர்கள் ஏமாற்று தலைமைகள்- : கிழக்கில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் !!

Image
  ஹக்கீம்,ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் , அவர்கள் ஏமாற்று தலைமைகள்- : கிழக்கில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் !! (பாறுக் ஷிஹான்) ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற சுவரொட்டிகள் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இலங்கையின் 9 ஆவது ஜனதிபதி தேர்தல் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்   2024 ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்ப்புகள் எழுந்த வண்ணமுள்ளன. ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவினை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியிருந்தனர். மேலும் கிழக்கில்  ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம்இ ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம...

உரிய வேளையில் கட்டணம் செலுத்த தவறின் மின் துண்டிப்பு !

Image
  உரிய வேளையில் கட்டணம் செலுத்த தவறின் மின் துண்டிப்பு ! மின்சார பாவனைக்கான மாதாந்த மின்பட்டியல் கட்டண விபரம் பாவனையாளர்களின் கையடக்க தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் 30 நாட்களின் பின் மின் கட்டணம் செலுத்த தவறும் பட்சத்தில் பட்டியல் நிலுவைக்காக 1.5 சதவீத வட்டி பட்டியலில் பற்று வைக்கப்படும். இது தொடர்பாக பாவனையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் உடனுக்குடன் அனுப்பப்படுமென, கல்முனை பிராந்திய பிரதம மின்சார பொறியியலாளர் தெரிவித்தார். இந்நிலையில் மின்சார பட்டியல் கிடைத்து 30 நாட்களின் பின்னர் 10 நாள் காலக்கெடு வழங்கிய பின்னரும் கூட உரிய நேரத்தில் மின்சார கட்டணத்தை செலுத்த தவறினால் அதன் பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார். மின்சார பாவனையாளர்களின மாதாந்த கட்டண அறவீடு மின்சார சபையின் சட்ட திட்டத்துக்கமையவே மேற்கொள்ளப்படுவதாகவும், அவர் கூறினார். கவனக்குறைவாக இருந்து மின் துண்டிக்கப்பட்ட பின்னர் அலுவலகத்துக்கு வருகை தந்து நிலுவையையும் இடைநிறுத்தல் கட்டணத்தையும் செலுத்துவது கவலைக்கு உரியதெனவும், அப்பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்...

இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை: 36 வயது பெண் கொடூர கொ லை !

Image
  இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை: 36 வயது பெண் கொடூர கொ லை ! ஹொரணை பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதீபிகா குமாரி என்ற 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயல் வீட்டிலுள்ள நபர் ஒருவர் தனது சகோதரனுடன், குறித்த பெண்ணை சந்திப்பதற்காக கத்தியுடன் சென்றுள்ளார். திடீரென அந்த நபர், குறித்த பெண்ணை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்த நிலையில் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரின் மனைவி இன்னொருவருடன் சென்று வாழ்ந்து வரும் நிலையில், அதற்கு கொலை செய்யப்பட்ட பெண் உதவியதாக, சந்தேகநபர் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே குறித்த பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலிண்டருக்கு வாக்களிக்காவிட்டால் எதிா்காலத்தில் சிலிண்டரே இருக்காது – ரணில் !

Image
  சிலிண்டருக்கு வாக்களிக்காவிட்டால் எதிா்காலத்தில் சிலிண்டரே இருக்காது – ரணில் ! தேர்தல் பிரகடனங்களின்போது போலியான வாக்குறுதிகளை வழங்குவதானால் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை எனவும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினால் ஊடாகவே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” கூட்டணியின் பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்தத் தொிவித்த ஜனாதிபதி, ”நான் வங்குரோத்து அடைந்த நாட்டையே ஏற்றுக்கொண்டேன். அப்போது வரிசை யுகமும் உரத் தட்டுப்பாடும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவிய நாட்டையே காண முடிந்தது. ஆனால் இன்று எந்த தட்டுப்பாடும் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்த மாற்றத்தின் அடுத்த கட்டத்தையே ஜனாதிபதி தேர்தல் தீர்மானிக்க போகிறது. பொருளாதாரத்தைப் பலப்படுத்தியே வாழ்க்கை சுமையை குறைத்தோம். எாிவாயு, எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன. இந்த நிலையை தொடர்ந்து பாதுகாப்பதா அல்...

கடவுச்சீட்டு தொடர்பில் வௌியான விசேட அறிவிப்பு !

Image
  கடவுச்சீட்டு தொடர்பில் வௌியான விசேட அறிவிப்பு ! கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அரசாங்க அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று முதல் தினமும் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல நாட்களாக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நேற்று இரவை அதே இடத்தில் கழித்தனர். பல நாட்களாக இப்படியே தங்கி இருக்கும் மக்களுக்கு டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இவ்வாறு வரிசை உருவானது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை ஒக்டோபர் மாதம் வரையில் இந்நிலை நீடிப்பதால் அத்தியாவசிய காரணங...

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது !

Image
  மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது ! மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் சக்திவாய்ந்த அரசியல்வாதியை அவதூறாகப் பேசுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. கைது செய்யப்பட்ட சுமனரதன தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

75 இலட்சம் ரூபா பெறுமதியான 650 கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது !

Image
  75 இலட்சம் ரூபா பெறுமதியான 650 கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது ! இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டு சென்ற சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியான 650 கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸ் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலேரோ வகை கெப் வண்டியினால் இந்த கையடக்க தொலைபேசிகள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை கற்பிட்டியிலிருந்து கரம்ப கடற்படை பொலிஸ் வீதித்தடை ஊடாகச் சென்ற இந்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை சோதனையிட்ட போது ஐந்து பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாணக்கியன் சுமந்திரனது செல்லப்பிள்ளை.சம்பந்தன் ஐயாவின் செயல்வடிவம் சுமந்திரன் : கஜேந்திரன் MP !

Image
  சாணக்கியன் சுமந்திரனது செல்லப்பிள்ளை.சம்பந்தன் ஐயாவின் செயல்வடிவம் சுமந்திரன் : கஜேந்திரன் MP ! (பாறுக் ஷிஹான்) மக்களை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள்.மக்கள் இவ்வாறானவர்களது பசப்பு வார்த்தைகளை கண்டு ஏமாற கூடாது.தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் .சாணக்கியன் சுமந்திரனது செல்லப்பிள்ளை.சம்பந்தன் ஐயாவின் செயல்வடிவம் சுமந்திரன் அவர்கள்.கூட்டமைப்பினுள் பிளவு என்பது அவர்கள் பதவிக்காக சண்டை பிடிப்பதாக இருக்கலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அண்மையில் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை சாணக்கியன் எம்.பி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தீர்மானிக்கும் என்பதை அடிக்கடி கூறி வருகின்றார்.இவர்கள் இந்தியாவின் முகவர்கள் என்பது உங்கள் எல்லோருக்க...

கல்முனை தொகுதி தேர்தல் குழு தலைவராக ஹரீஸ் எம்.பி. நியமனம் !

Image
  கல்முனை தொகுதி தேர்தல் குழு தலைவராக ஹரீஸ் எம்.பி. நியமனம் ! (நூருல் ஹுதா உமர்) ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள கல்முனை தேர்தல் தொகுதியின் தேர்தல் நடவடிக்கை செயற்குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் மருதமுனை தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவின் கல்முனை தொகுதியில் வெற்றியை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள், பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது. இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன : சுமந்திரன் MP !

Image
  தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன : சுமந்திரன் MP ! தமிழ் தேசிய கூட்டமைப்பு (இலங்கை தமிழரசுக் கட்சி) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பு (இலங்கை தமிழரசுக் கட்சி) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிதியானது குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றது. பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதி, மற்றும் பல்வேறு அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலாகத்தால் இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.  இதற்கு உதவியாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக்காக மு...

மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் , ஒக்டோபர் 16ஆம் திகதியே கடவுச்சீட்டு புத்தகங்கள் கிடைக்கப்பெறும் : அமைச்சர் அலிசப்ரி !

Image
  மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் , ஒக்டோபர் 16ஆம் திகதியே கடவுச்சீட்டு புத்தகங்கள் கிடைக்கப்பெறும் : அமைச்சர் அலிசப்ரி ! கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியே கடவுச்சீட்டு புத்தகங்கள் கிடைக்கப்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவிதமான தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே போட்டியிடுகின்றேன் - பொதுவேட்பாளர் அரியநேத்திரன் !

Image
  தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே போட்டியிடுகின்றேன் - பொதுவேட்பாளர் அரியநேத்திரன் ! தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன் இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் நாம் இந்த ஐனாதிபதி தேர்தலை சந்திக்கிறோம் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் . யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், திலீபன் எதற்காக உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை அர்ப்பணித்தாரோ அத்தகைய தேவை இன்னும் இருந்துகொண்டு இருக்கிறது .எமக்கான தீர்வு கிடைத்தபாடில்லை. அந்த தீர்வை நோக்கிய பயணமாக தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக ஐனாதிபதி வேட்பாளராக தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன். ஐனாதிபதியாக வருவதல்ல நோக்கம். இந்த தேர்தல் மூலம் எமக்கான தீர்வை பொற்றுக்கொள்ள தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாவிருக்கின்றோம் என்பதை காண்பிப்பதற்காக போட்டியிடுகின்றேன். எமது மக்கள...

போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது !

Image
  போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது ! இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களின் பெயர்களை பயன்படுத்தி போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 03 இலட்சம் ரூபா பெறுமதியான 27 வகையான கிரீம்கள் மற்றும் லோசன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுபோக நெல் கொள்வனவு - அமைச்சரவை அனுமதி !

Image
  சிறுபோக நெல் கொள்வனவு - அமைச்சரவை அனுமதி ! 2024 சிறுபோகச் செய்கையின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறுபோகச் செய்கையின் நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டி வீதத்தின் அடிப்படையில் வணிக வங்கிகள் ஊடாக உயர்ந்தபட்சம் 6,000 மில்லியன் ரூபாய்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடனை வழங்குவதற்காக ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெல் கொள்வனவின் போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் தொடர்ந்து வரும் பெரும் போகத்தில் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி அவர்களும், விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. * 2024 சிறுபோகச் செய்கையின் நெல் அறுவடையை அரசு கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தில் பங்கெடுப்பதற்கு இயலுமாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 500 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடு செய்தல். * நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நாட்டரிசி ஒரு கிலோக்கிராமிற்கு 105/- ரூபாய்களும், சம்பா ...

டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு !

Image
  டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு ! போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், பிரதிவாதி டயனா கமகேவின் கைரேகைகளை எடுத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுவரி ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு !

Image
  மதுவரி ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு ! உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று பிரதான அரச வருமான மூலங்களில், பாரிய நிலுவைத் தொகை இருப்பதாக வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். இந்த மூன்று நிறுவனங்களிலும் நிலுவையில் உள்ள வரித் தொகை 90 பில்லியன் ரூபாய் மாத்திரமே என சுட்டிக்காட்டிய அவர், உலகில் எந்தவொரு நாட்டின் மொத்த வரி வருமானத்தில் 3% – 5% வரையானது நிலுவையில் உள்ள வரி என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். மேலும், இந்த மூன்று நிறுவனங்களும் 2023 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக அதிக வருமானமாக, 3 டிரில்லியன் ரூபாயைத் தாண்டி வருமானம் பெற்றுள்ளதுடன், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்மைக் கணக்கில் மேலதிகத்தை உருவாக்க முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி மேலும் கூறியதாவது; “நிதி அமைச்சின் க...