Posts

Showing posts from June, 2025

மட்டக்களப்பு, கரடியனாறில் உணவு ஒவ்வாமையினால் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Image
  மட்டக்களப்பு, கரடியனாறில் உணவு ஒவ்வாமையினால் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி மட்டக்களப்பு,  கரடியனாறு பகுதியில் பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால்  வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (30) அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து சம்பவதினமான இன்றைய தினம் பகல் 195 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை உட்கொண்ட  சில மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக 16 மாணவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக பொதுசுகாதார பாசோதகர்கள் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து பாடசாலையில் முன் பெற்றோர்கள் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேவேளை கடந்த மாதம் இதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு 25 மேற்பட்ட  மாணவர்கள் வாந்தி, மயக்கம் காரணமாக வைத்தியசாவையில் அனும...

ஷிரந்தி ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டாம் என வெளியாகிய தகவல் தொடர்பில் மல்வத்து மகா விஹாரையின் அறிக்கை!

Image
  ஷிரந்தி ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டாம் என வெளியாகிய தகவல் தொடர்பில் மல்வத்து மகா விஹாரையின் அறிக்கை! முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதைத் தடுக்க தலையிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் கூற்றுக்களை கண்டியில் உள்ள மல்வத்து மகா விஹாரை மறுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மல்வத்து மகா விஹாரையிடம் அத்தகைய கோரிக்கையை விடுத்ததாகக் கூறும் சமூக ஊடக அறிக்கைகள் குறித்து இந்த விளக்கம் வந்துள்ளது. இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்ட மல்வத்து மகா விஹாரை, இந்த செய்தி தவறானது மற்றும் அடிப்படையற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம், அத்தகைய சந்திப்பு அல்லது தொலைபேசி உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளது. பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்துள்ளது. மல்வத்து மகா விஹாரையின் பிரதிப் பதிவாளர் வணக்கத்திற்குரிய மகாவெல ரத்தனபால தேரர், மல்வத்து பீடத்தின் பிரதம தேரரின் உத்தரவின் பேரில் இந்த விளக்கத்த...

கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

Image
  கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோக வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டில் 304 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று டி.ஐ.ஜி. வருண ஜெயசுந்தர சுட்டிக்காட்டினார். ஒரு சம்பவம் நடந்த பின்னரே சுமார் 90% சிறுவர்கள் பாதுகாப்பற்றவர்களாகக் கண்டறியப்படுவதாக அவர் மேலும் கூறினார். அம்பாறை மாவட்டத்தில், மொத்தம் 101 குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். இது பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் குழந்தைகள் தொடர்ந்து சுரண்டப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. பெரும்பாலான சம்பவங்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என்று குறிப்பிட்ட டி.ஐ.ஜி ஜெயசுந்தர, பெற்றோர்கள் தங்கள் சிறுசர்களை பாதுகாப்பதில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். Sharp rise in reports of child abuse in Eastern Province, over 300 cases recorded

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் முழுமையான தகவல்களை என்னால் வழங்க முடியும்- இராமநாதன் அர்ச்சுனா

Image
  சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் முழுமையான தகவல்களை என்னால் வழங்க முடியும்- இராமநாதன் அர்ச்சுனா இன்று (30) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டார். இதன்போது கருத்து வௌியிட்ட அவர், விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே என்ன இருந்தது, அவைகள் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் முழுமையான தகவல்களை தன்னால் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார். ஆனால், அதற்காக என் மீது போதைப்பொருள் வழக்கில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தாவது, “என்னை நீக்குவதற்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை நான் நீதிமன்றத்துடன் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு பயமாக உள்ளது. அந்த 323 கொள்கலன்களுக்குள் என்ன இருந்தது என்பதற்கான பட்டியலை எனக்குத் தர முடியும். அது எங்கிருந்து வந்தது, எந்த நாட்டிலிருந்து வந்தது? என்...

இன்றைய நாணய மாற்று விகிதம் !

Image
  இன்றைய நாணய மாற்று விகிதம் ! இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (30) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.1589 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.8348 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 418.6956 ரூபா மற்றும் கொள்வனவு விலை 404.4336 ரூபாவாகும். யூரோ ஒன்றின் விற்பனை விலை 358.1229 ரூபா எனவும் கொள்வனவு விலை 345.2878 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரம் !

Image
  இன்றைய தங்க விலை நிலவரம் ! இன்று திங்கட்கிழமை (30) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.30,250 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.244,200 1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.33,000 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.264,000 இன்றைய தங்க விலை நிலவரம் !

வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள அரசாங்கம் திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகளை உருவாக்கி வருகின்றது - நாமல் ராஜபக்ச

Image
  வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள அரசாங்கம் திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகளை உருவாக்கி வருகின்றது - நாமல் ராஜபக்ச தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதை மறைப்பதற்காக அந்த விடயத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுகளை உருவாக்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி பௌத்தபீடாதிபதிகளின் உதவியை நாடியுள்ளார் என வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார். இந்த தகவலை முற்றிலும் பொய்யானது என மறுத்துள்ள நாமல் ராஜபக்ச கௌரவத்திற்குரிய மதத்தலைவர்களை அரசியலிற்குள் இழுக்கும் அவமானகரமான முயற்சி இது என தெரிவித்துள்ளார் தனது பதவிக்காலத்தின் முதலாவது ஆண்டில் , தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள அரசாங்கம் தற்போது தனது தோல்விகளை மறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.அதனை மறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கு...

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் நியமனம்

Image
  பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் நியமனம் பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனையில் கொப்புரு மீன் கொம்பு குத்தியதில் மீனவர் பலி

Image
  வாழைச்சேனையில் கொப்புரு மீன் கொம்பு குத்தியதில் மீனவர் பலி மட்டக்களப்பு, வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்த நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு வாழைச்சேனை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 24 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மூன்று பேருடன் சென்ற மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய கொப்புரு மீனை இயந்திரப் படகில் ஏற்றுவதற்க்கு முயற்சித்த போது மீனின் கொம்பு வயிற்றுப் பகுதியில் குத்தியதில் அவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபரை ஏனைய மீனவர்கள் கரைக்கு கொண்டு வரும் போதே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பிறைந்துறைச்சேனை பகுதியை பிறப்பிடமாகவும், பாலைநகர் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 47 வயதுடையவர் ஆவார். மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலத...

செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் - எம்.ஏ.சுமந்திரன்

Image
  செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் - எம்.ஏ.சுமந்திரன் யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உண்மை கண்டறியப்பட வேண்டுமானால், இந்த மனிதப் புதைகுழிகளை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும். அதனால்தான் ‘அணையா விளக்கு' போராட்டம் அறிவிக்கப்பட, உடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும் பெருந்தொகையாக கட்சி அடையாளங்களைத் தவிர்த்து அதிலே கலந்து கொண்டார்கள். வெளிநாட்டிலே இருந்த காரணத்தினால் என்னாலும் வேறு சிலராலும் இதில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த மனிதப் புதைகுழியும் வடக்கு, கிழக்கிலே அடையாளப்படுத்தப்பட்டுள்...

வாகன விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியை உயிரிழப்பு !

Image
  வாகன விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியை உயிரிழப்பு ! ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர், அவரது கெப் வாகனத்தின் கதவை திடீரென திறந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று அதில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது கணவன் காணமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பொகுணுவிட ஹங்ச உயன பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய சுமனாவதி என்ற மூன்று குழந்தைகளின் தாயார் ஆவார். மோட்டார் சைக்கிள் பொகுணுவிட பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப் வாகனத்தின் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்தவர் பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் மோதி உயரிழந்துள்ளார். ஓய்வுபெற்ற இராணுவ விசேட தேவையுடைய சிப்பாயும் முச்சக்கர வண்டி சாரதியுமான சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்...

குறி சொல்லும் கோவிலுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு !

Image
  குறி சொல்லும் கோவிலுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு ! குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மின்சார திருத்த சட்டமூலம் தொடர்பில் பிரதி சபாநாயகர் வௌியிட்ட தகவல் !

Image
  மின்சார திருத்த சட்டமூலம் தொடர்பில் பிரதி சபாநாயகர் வௌியிட்ட தகவல் ! மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், நாடாளுமன்றின் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் ஒப்புதலைப் பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், நீதிமன்றத்தின் தீர்ப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவாறு சில பிரிவுகள் திருத்தப்பட்டால் இந்த மீறல்கள் பொருந்தாது எனவும் பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

O/L பரீட்சை பெறுபேறு ஜூலை 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும்

Image
  O/L பரீட்சை பெறுபேறு ஜூலை 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும்  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு  எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் சமீப நாட்களாக பரவி வரும் பல்வேறு செய்திகள் தவறானவை என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

திருகோணமலை - ஈச்சிலம்பற்றில் சிறிய ரக லொறி விபத்து ; சாரதி படுகாயம்

Image
  திருகோணமலை - ஈச்சிலம்பற்றில் சிறிய ரக லொறி விபத்து ; சாரதி படுகாயம் திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் சிறிய ரக லொறி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளது. தோப்பூரில் இருந்து வெருகல் நோக்கி சிறிய ரக லொறியில் வியாபாரத்திற்காக பென்சி பொருட்களை ஏற்றிசே சென்ற போது சிறிய ரக லொறி இலங்கைத்துறை முகத்துவாரம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிறிய ரக லொறி சாரதியான தோப்பூரைச் சேரர்ந்த 35 வயதுடைய நபர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் போயிருந்த மீனவர்களின் சடலங்கள் மீட்பு !

Image
  காணாமல் போயிருந்த மீனவர்களின் சடலங்கள் மீட்பு ! களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (28) காலை மீன்பிடிக்கச் சென்றிருந்த போது அவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்திருந்தனர். இறந்தவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நதுன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நதுன் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பிரதேசவாசிகள் படகுகள் மூலம் அவர்களைத் தேடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் பலி

Image
  அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் பலி பொத்துவில் வீதியில் இன்று (28) அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்தாதல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.   இதில் வண்டியின் சாரதி மற்றும் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் திருக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மறு நுழைவு விசாவின் செல்லுபடிக் காலத்தை நீடித்தது இஸ்ரேல்

Image
  மறு நுழைவு விசாவின் செல்லுபடிக் காலத்தை நீடித்தது இஸ்ரேல் இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்பார்ப்புடன் மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வருகைதந்தோரின் மறு நுழைவு விசா செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு இஸ்ரேல் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை தீர்மானித்துள்ளது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாகவே இஸ்ரேல் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இஸ்ரேலில் இருந்து மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வருகைதந்தவர்கள், மறு நுழைவு விசா காலாவதியான பின்னரும் எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரையான நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும், நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை

Image
  சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும், நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை (ருத்திரன்) வாழைச்சேனை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும் நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி அரசினை வலியுறுத்தி சனிக்கிழமை (28) பேத்தாழை வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய நிகழ்வில் முன்னாள் அமைச்சருக்கு விடுதலை வேண்டி பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தனர். இவ் நடவடிக்கையானது மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம் பெறவுள்ளதாக கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் கொழும்பு குற்றத் தடுப்பு பு...

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தண்டனை இடமாற்றம்

Image
  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தண்டனை இடமாற்றம் யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவினால் இந்த இடமாற்றமானது இன்றுமுதல்(28) அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான செய்திகள் அண்மைக் காலமாக வெளிவந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம் !

Image
  CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம் ! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்

Image
  நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் 'clean srilanka' திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டத்தின் தொடக்க விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) கலந்துகொண்டார்.   தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றவகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அது நிலையானதாக முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். வீதி விபத்து, வாகன இறக்குமதிக்காக செலவிடும் பாரிய செலவு போன்ற பாதகமான நிலைமைகளைச் சமாளிக்க நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை ஒரு புதிய நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசேட தேவைகள் உள்ள ச...

யாழில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது!

Image
  யாழில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது! யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் இன்று சனிக்கிழமை (28) கரையொதுங்கியுள்ளது. மணல்காட்டை சேர்ந்த 38 வயதுடைய மீனவரின் சடலமே கரையொதுங்கியுள்ளார். சடலமாக கரையொதுங்கிய மீனவர் மணல்காட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை (26) அதிகாலை கட்டுமரத்தில் தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார். கடலுக்கு சென்ற மீனவர் வழமையாக காலை 09 மணியளவில் கரை திரும்பி விடுவார். ஆனால் அன்றைய தினம் அவர் கரை திரும்பாததால் , சக தொழிலாளிகள் அவரை தேடி கடலுக்கு சென்ற வேளையில், அவரது கட்டுமரம் மாத்திரம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது. அதனை மீட்டு மீண்டும் கரை சேர்த்த தொழிலாளிகள் காணாமல்போன மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. அதேவேளை, சட்டவிரோத கடலட்டை தொழில் செய்பவர்களின் படகு கட்டுமரத்தில் மோதி விபத்தினை ஏற்படுத்தி இருக்கலாம் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவின் மற்றுமொரு அதிரடி தீர்மானம்

Image
  அமெரிக்காவின் மற்றுமொரு அதிரடி தீர்மானம் பல்வேறு நாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறல் தொடர்பில் செயற்படுத்தப்பட்டு வந்த சுமார் 24 திட்டங்களுக்காக அமெரிக்க நிதி வழங்கல் நடவடிக்கையை நிறுத்துவதற்கு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.   நிதியுதவியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள திட்டங்களில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடங்குவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூரிய மின் சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் மனு தாக்கல் !

Image
  சூரிய மின் சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் மனு தாக்கல் ! சூரிய மின் சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு செலுத்தப்படும் கட்டணத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்த்து, சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்கள் குழுவினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மேல் நீதிமன்ற நீதிபதி கே. பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றில் ஆஜரான மனுதாரர்கள் கூறியதாவது, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார நிறுவனம் (LECO) ஆகியவை செலுத்தும் கட்டணத்தை அமைச்சரவை தன்னிச்சையாக குறைத்துள்ளது. மின்சாரச் சட்டத்தின் கீழ், இவ்வாறான கட்டண மாற்றங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) ஒப்புதல் அவசியம். ஆனால், மின்சார கட்டண மாற்றம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இருந்து எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை. இலங்கை பொதுப் ப...

துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் !

Image
  துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் ! முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார். பின்னர், முன்னாள் அமைச்சரை கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் கடந்த 19ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இன்று (26) வர...