Posts

Showing posts from May, 2022

வரிச் சட்டங்களை திருத்த அனுமதி

Image
  வரிச் சட்டங்களை திருத்த அனுமதி வரிச் சட்டங்கள் பலவற்றை திருத்துவதற்குத் தேவையான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Image
  மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று (31 காலை பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பெண் எவ்வாறு உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

“ ஆயிஷாவை ஸ்பரிசம் செய்​தேன் துடித்தாள் சகதியில் அமிழ்த்திவிட்டேன்” - சந்தேக நபர் வாக்குமூலம்

Image
  “ ஆயிஷாவை ஸ்பரிசம் செய்​தேன் துடித்தாள் சகதியில் அமிழ்த்திவிட்டேன்” - சந்தேக நபர் வாக்குமூலம் அவள் வீடு திரும்புவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓடி மறைந்திருந்தேன். கோழி இறைச்சியை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த போது அலாக்காக தூக்கிச்சென்று, உடல் முழுவதும் ஸ்பரிசம் செய்தேன், முரண்டுபிடித்தாள் அதனால், சகதில் அமிழ்த்தினேன் என அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலமளித்துள்ளார். எனது இச்சையை தீர்த்துக்கொள்ளவே தூக்கிச்சென்றேன். எனினும், முரண்டுபிடித்தால், வன்புணர்வதற்கு எடுத்த முயற்சி கைகூடவில்லை. முகத்தில் துணியொன்றினால் மூடி, தூக்கிச்சென்றேன். ஸ்பரிசம் செய்தேன். இதனை யாரிடமாவது சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில், சதுப்பு நில சேற்றில் முகத்தை அமிழ்த்தி சிறுமியின் உடலின் முதுகுப்பகுதியில் தன் முழங்காலினால் ஊன்றி உயிர்போகும் வரையிலும் அமிழ்த்திகொண்டிருந்தேன் சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலைத் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான ‘பல்லி குட்டி' என்றழைக்கப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர...

மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு - வவுனியாவில் சம்பவம்

Image
  மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு - வவுனியாவில் சம்பவம் வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வசந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் பொலிஸார், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவைடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது அப் பகுதியில உள்ள மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து இரவு 7.30 மணியளவில் குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார். கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டதுடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்...

மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை!

Image
  மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை! நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் அடுத்த சில நாட்களிலும் சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யுமென அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேநேரம், அனுராதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

பட்டதாரிகளுக்கு வீசா வழங்கும் பிரித்தானியா

Image
  பட்டதாரிகளுக்கு வீசா வழங்கும் பிரித்தானியா உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவர்கள் புதிய வீசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு செல்வதற்கு விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஐந்து வருடங்களில் உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டின் பிரஜையும் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடையவராக கருதப்படுவதுடன், விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கு வேலை வாய்ப்புகள் அவசியமில்லை எனவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பட்டத்தின் தகைமைக்கமைய விண்ணப்பதாரர்களின் வீசா காலம் நீடிக்கப்படுமெனவும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

Image
  40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நேற்று கொழும்பை வந்தடைந்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளது

சகோதரனும் சகோதரியும் அடித்துக் கொலை

Image
  சகோதரனும் சகோதரியும் அடித்துக் கொலை நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். அதே நேரத்தில் அவரது மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய ஒருவரும் அவரது 25 வயது சகோதரியும் ஆவர். சந்தேக நபர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு 700 மில்லியன் உதவி? வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது.

Image
  இலங்கைக்கு 700 மில்லியன் உதவி? வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது.   உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது. எனினும் இது தொடர்பில் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். உலக வங்கி இலங்கைக்கு அவசரகால கடன் அல்லது புதிய கடன்களை வழங்கி ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தவறாக கருத்து வெளியிட்டள்ளன. உலக வங்கி இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்காக பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது. மேலும் உணவு, கல்வி, விவசாயம் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, ஏற்கனவ...

நிலையான சம்பளம் பெறும் ஊழியர்களே அதிக ஆபத்தில் உள்ளனர் : ஹர்ஷ டி சில்வா

Image
  நிலையான சம்பளம் பெறும் ஊழியர்களே அதிக ஆபத்தில் உள்ளனர் : ஹர்ஷ டி சில்வா அரசாங்கத் துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, இந்த நெருக்கடியின் போது நிதி ரீதியாக பாதிக்கப்படும் நிலையான சம்பள ஊழியர்களே அதிக ஆபத்தில் உள்ளனர், அவர்களுக்குத்தான் அதிக ஆதரவு தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.இன்று (30) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “சொந்தமாகத் தொழில் செய்யும் ஒருவருக்கு, வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும்போது, ​​அவர்கள் விற்கும் பொருட்களின் விலையை அதிகரிக்கலாம். அவர்கள் பணவீக்கத்துக்கு ஏற்ப நிர்வகிக்கிறார்கள். அதேசமயம், நிலையான சம்பளம் பெறுபவர்கள்தான் இந்த நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். பொருட்களின் விலை உயர்வால், நிலையான சம்பளம் பெறும் தனி நபர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் உயர்வு இல்லை. அதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அரசுத் துறையிலும் நல்ல ஊதியம் பெறும் ஊழியர்களும், நல்ல ஊதியம் பெறாத சிலரும் உள்ளனர். எனவே இரு தரப்பினரையும் ஒரே மாத...

துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரிப்பு

Image
 துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரிப்பு  நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 18,000 ரூபாவாக இருந்த மவுண்டன் சைக்கிள் தற்போது 35,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் றிஸ்னி இஸ்மத் தெரிவித்தார். பெண்கள் பயன்படுத்தும் சைக்கிளின் விலையும் உயர்ந்துள்ளதாகக் கூறும் அவர், துவிச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றமையும் அவற்றிற்கு 55% வரி விதிக்கப்பட்டமையும் துவிச்சக்கர வண்டிகளின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார். ஆடம்பரப் பொருட்களின் பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட்டு வரியை பூச்சியமாகக் குறைத்தால் சுமார் 19,000 ரூபாவுக்கு துவிச்சக்கர வண்டியை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள்  மற்றும் அசெம்பிளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கின்றது.

டொலரின் இன்றைய பெறுமதி

Image
  டொலரின் இன்றைய பெறுமதி இலங்கையில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாக பதிவாகி உள்ளது. இலங்கை மத்திய வங்கி இதை அறிவித்துள்ளது. இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு!

Image
 ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு! எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. ரயில் திணைக்கள பிரதி பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தந்தையும், மகனும் அழைப்பு

Image
 மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தந்தையும், மகனும் அழைப்பு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மேலதிகமாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரையும் எதிர்வரும் புதன்கிழமை முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் வடரெகா சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.சிறைக் கைதிகள் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் இதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மேல் மாகாண பொலிஸ்மா ...

சசி வீரவன்சவின் பிணை மனு ஒத்திவைப்பு

Image
 சசி வீரவன்சவின் பிணை மனு ஒத்திவைப்பு சசி வீரவன்சவை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை நாளைய தினத்திற்கு (31) கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை விளக்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதவான் அமரசிங்க அழைப்பானை விடுத்துள்ளார். சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் 100,000 ரூபா அபராதமும் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த தண்டனைக்கு எதிராக சசி வீரவன்சவின் சட்டத்தரணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். (மக்கள் விமரிசனம்)

அட்டுலுகம சிறுமி மரணம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

Image
 அட்டுலுகம சிறுமி மரணம் தொடர்பில்  மேலும் ஒருவர் கைது! அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதற்கிடையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியை கொலை செய்த நபர் போதைக்கு அடிமையானவர் மற்றும் சிறுமியின் தந்தையுடன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்.  மேலும், சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். 28 வயதுடைய இளைஞன் சிறுமியை துன்புறுத்துவதற்காக சதுப்பு நிலத்தை நோக்கி இழுத்துச் சென்றதாகவும், அவர் சிறுமியை அடிக்கத் தொடங்கியதால் சேற்றில் முகத்தைப் பிடித்துக் கொண்டு அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட பகுப்பாய்வு சந்தேகிக்கப்படுகிறது.  சிறுமியைக் கொன்ற நபர், சிறுமியைக் கண்டுபிடிக்க கிராம மக்களுடன் தானும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை - குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!

Image
 Update.. சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை - குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை! பண்டாரகமை - அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

Image
 சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு! சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் பண்டாரகமை பொலிஸார் முதற்கட்ட அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாணந்துறை நீதவான் நீதிமன்றில் காவல்துறை முன்வைத்த சமர்பணங்களை ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கமைய, சிறுமியின் சடலத்துக்கான பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறுகிறது. இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை அடுத்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும் என பண்டாரகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் 5 காவல்துறை குழுக்கள் பல்வேறுப்பட்ட கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணை

Image
 காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர  விசாரணை (பாறுக் ஷிஹான்) காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது. சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை(29) மதியம் 2.30 மணியிலிருந்து குறித்த சிறுமி மாயமாகி உள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பாடசாலையில்  தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் வழக்கு விசாரணையின் பின்னர்  குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்  தங்கவைக்கப்பட்டிருந்தார். மேலும் இச்சம்பவத்தில் காணாமல் சென்ற சிறுமி நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்கவார். குறித்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலையில் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (29)பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாக...

தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வார விடுமுறை!

Image
 தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வார விடுமுறை! மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கடந்த வாரம் பொலிஸ் மா அதிபருக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை தேவை என அறிவித்திருந்தார். விடுமுறைக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கடமைகளை உள்ளடக்கியதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேருந்து நிலையத்தில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

Image
 கொழும்பு பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேருந்து நிலையத்தில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கலாம் - அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம்

Image
  எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கலாம் - அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் அஜித் எஸ்.குணசேகர இதனை தெரிவித்துள்ளார். இறக்குமதியாளர்களுக்கு அடுத்த மாதத்திற்குத் தேவையான மூலப்பொருளை இறக்குமதி செய்ய வங்கிகள் மூலம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் கிடைத்தால், அடுத்த ஆறு மாதங்களுக்கு தொழிலை தொடர முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இன்று கோழி உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளதுடன் பண்ணைகள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சிறுமியைக் கர்ப்பமாக்கிய கோயில் ஐயருக்கு விளக்கமறியல் - உடந்தையான தாய்க்கு பிணை

Image
 சிறுமியைக் கர்ப்பமாக்கிய கோயில் ஐயருக்கு  விளக்கமறியல் - உடந்தையான தாய்க்கு பிணை  பாறுக் ஷிஹான் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 நாட்கள்  விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பிணை வழங்கி கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியின் தந்தை கடந்த 26.05.2022ம் திகதியன்று வழங்கிய முறைப்பாட்டிற்கமைய கல்முனை பொலிஸ் பிரிவில் சேனைக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பிரதான சந்தேக நபரான கோயில் பூசாரியும் அவரது தாயும் கைதாகினர். பின்னர் 2022.05.27ம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த இரு சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரான கோயில் பூசாரியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையான பூசாரியின் தாயை 5 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார். பிரதான சந்தேக நபரான பூசாரி பெரிய நீலாவணைப் பகுதியிலுள்ள கோவில் பூஜைக்காகச் சென்று...

உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் செய்வேன் ; அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் ரணில் உறுதி!

Image
உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் செய்வேன் ; அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் ரணில் உறுதி! உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து முன்னெடுத்து வருகின்றேன். எனவே அச்சம் கொள்ள வேண்டாம் , 21 ஆவது திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் அனைத்து விடயங்களையும் கையாண்டு வருகின்றார். இவ்வாரத்தில் கட்சி தலைவர்களுக்கு முழுமையான வரைபு அனுப்பி வைக்கப்படுவதுடன் அடுத்த பாராளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இராஜாங்க அமைச்சு பதவிகள் மற்றும் 21 ஆவது திருத்தம் குறித்து அமைச்சர்கள் மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 21 ஆவது திருத்தம் மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். எந்தவொரு அமைச்சு பதவிகளுக்கும் ஊதியமோ கொடுப்பனவோ வழங்கப்பட மாட்டாது. அதே போன்று சுதந்திர கட்சிக்கு உரிய இராஜாங்க அமைச்சுக்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய...

தாமதமின்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் - சுமந்திரன்

Image
  தாமதமின்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் - சுமந்திரன் 19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடுகையில் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் பின்னடைவானது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஆகவே 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதி வடிவம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தம் முன்னேற்றத்தை காண்பிக்கும் நிலையில் இந்த 21 ஆவது திருத்தம் அதனை விட பின்னடைவான திருத்தமாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஜனாதிபதியினால் அமைச்சுப் பதவிகளை வகிக்கமுடியாது என 19 ஆவது திருத்தம் கூறுகின்ற போதிலும், 21 ல் அவர் அமைச்சுப் பதவிகளை வகிக்க இடமளிக்கப்பட்டிருக்கின்றது என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அத்தோடு முதலில் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப் படுத்திவிட்டு, பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்துக் கவனம் செலுத்தலாம் என கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் குறிப்பிட்டார்...

76 கஜமுத்துக்களுடன் 67 வயதானவர் கைது !!

Image
  76 கஜமுத்துக்களுடன் 67 வயதானவர் கைது !! அம்பாறையில் 76 கஜமுத்துக்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இதில் ஒரு முத்து ஒரு மில்லியன் முதல் ஐந்து மில்லியன் ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களில் மிகப்பெரியதொகை இதுவாகும். கைது செய்யப்பட்ட 67 வயதுடைய சந்தேக நபரிடம் அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மோடியிடம் பாதுகாப்பு கேட்ட இலங்கை எம்.பி !

Image
  மோடியிடம் பாதுகாப்பு கேட்ட இலங்கை எம்.பி ! இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்பதால், தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு வழங்குமாறு இந்தியப் பிரதமர் ​ந​ரேந்திர மோடியிடம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பில், தான் திருப்தி அடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

பாத்திமா ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி வழங்குவதாக ஜனாதிபதி உறுதி !

Image
  பாத்திமா ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி வழங்குவதாக ஜனாதிபதி உறுதி ! பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். பாரிய குற்றம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். சிறுமியின் மரணம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டர் செய்தியில் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் சிறுமியின் சடலம் நேற்று (28) அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Image
 ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளமையினால் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. அதன்படி, கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை ஜப்பான் நீக்கியுள்ளது. அடுத்த மாதம் 10-ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டப்பட்ட விதிமுறைகளின்படி சுற்றுலா பயணிகளின் அனுமதி வழங்குவதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலும், ஒகினாவாவில் உள்ள நஹா விமான நிலையத்திலும் சர்வதேச விமானங்கள் ஜூன் மாதம் முதல் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் படிப்படியாக சுற்றுலா பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தனை மறுசீரமைக்க வேண்டும் – மின்சக்தி அமைச்சர்

Image
 மின் கட்டணத்தனை மறுசீரமைக்க வேண்டும் – மின்சக்தி அமைச்சர் மின் கட்டணத்தனை மறுசீரமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் கட்டணங்களை திருத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாத்திமா ஆயிஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்!

Image
 பாத்திமா ஆயிஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்! காணாமல் போயுள்ள 9 வயது பாத்திமா ஆயிஷாவை தற்போது நான்கு பொலிஸ் குழுக்கள் தேடி வருகின்றன.இதற்கமைய சிறுமியின் தந்தையிடம் விசாரணைக் குழு நீண்ட நேரம் விசாரித்து வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளார்.  ஆனால் அவள் வீடு திரும்பவில்லை. கடைக்கு அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் அவர் கடைக்கு வருவதும் மீண்டும் வெளியே செல்வதும் பதிவாகியுள்ளது.  சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு மேலதிகமாக பானந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதேவேளை, பானந்துறையில் வசிக்கும் சிறுமியின் நெருங்கிய உறவினர் ஒருவர் தொடர்பிலும் விசாரணைக் குழு கவனம் செலுத்தியுள்ளது. புறக்கோட்டை பிரதான பேருந்து நிலையத்தில் பெண் ஒருவருடன் சிறுமி இருப்பதாக முகநூல் பக்கம்...