Posts

Showing posts from June, 2022

கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 06 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம்....

Image
 கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 06 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம்.... கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்கள் 2022 ஜூலை 04 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 06 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.' இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (30) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Qatar Charity நிறுவனம் மீதான தடை நீக்கப்படவுள்ளது

Image
  Qatar Charity நிறுவனம் மீதான தடை நீக்கப்படவுள்ளது  கட்டாருக்கு விஜயம் செய்துள்ள மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டும் Qatar Charity நிறுவன பிரதிநிதிகளை நேற்று (29) சந்தித்துள்ளனர். Qatar Charity நிறுவனம் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. Qatar Charity என்பது கட்டார் அரசாங்கத்தின் முக்கிய தொண்டு நிறுவனமாகும். குறித்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, 2019 ஆம் ஆண்டு அந்நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது. தற்போது Qatar Charity மீதான தடையை நீக்குவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

கல்முனையில் தமிழ் பிரதேச அரச காணியை அத்துமீறி அபகரிக்கும் முயற்சி ! பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!

Image
  கல்முனையில் தமிழ் பிரதேச அரச காணியை அத்துமீறி அபகரிக்கும் முயற்சி ! பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!  ( காரைதீவு  சகா) கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச காணியை தனியார் ஒருவர் அத்துமீறி நுழைந்து கட்டுமான வேலைகளை செய்து அபகரிக்கும் முயற்சியை கண்டித்து நேற்று (29) புதன்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர். குறித்த அரச காணியில் தனியார் ஒருவர் தனக்கு உரிமை கோரி கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆர்ப்பாட்டத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தற்காலிகமாக கட்டிடம் அமைக்கும் பணியை நிறுத்தியதுடன் நீதிமன்றத்துக்கு குறித்த விடயத்தினை எடுத்து செல்வதாகக் கூறியதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என கூறப்படுகிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கல்முனை 01 C பிரிவில் உள்ள குறித்த அரச காணியான இங்கு மழை காலத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும்.. குறித்த காணியில் தனியார் ஒருவர் கட்டிடம் கட்ட முற்பட்ட வேளையில் முன்பும் அங்கு முறுக...

அக்கரைப்பற்றில் 20 இலட்சத்து 40ஆயிரம் பணமும் 13 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது

Image
  அக்கரைப்பற்றில் 20 இலட்சத்து 40ஆயிரம் பணமும் 13 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 20 இலட்சத்து 40 ஆயிரம் பணமும் 13 பவுண் நகைகள் உட்பட இரண்டு கையடக்கதொலை பேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாபார நிலையங்களை நடத்திவரும் தந்தை மற்றும் மகன் வசித்து வரும் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்டவர்கள் உறக்கத்திலிருந்த சந்தர்ப்பத்தில்   இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை இரண்டு மணியளவில் மனைவியின் கூக்குரல் கேட்டு எழுந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்த நகைகள் வங்கியில் வைப்பிலிடுவதற்காக வைத்திருந்த பணம் உட்பட கைத்தொலைபேசி உள்ளிட்டவையும் கொள்ளையிடப்பட்டதையும் தெரிந்துகொண்டார். வீட்டின் உரிமையாளர் பதிவு செய்தமுறைப்பாட்டினை அடிப்படையாக வைத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றி பெரும் – பஷில் நம்பிக்கை

Image
  எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றி பெரும் – பஷில் நம்பிக்கை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் பெரும் வெற்றி பெற முடியும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாவட்ட அளவில் கட்சி அமைப்பாளர்களை மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து கட்சி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரிக்கு முன்னர் நடத்த வேண்டும் எனவும், இதில் பெரும் வெற்றியை பெற்றுக்கொள்ள அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கட்சி உறுப்பினர்களுக்கு பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோயிலுக்கு சென்று திரும்பிய வயோதிபபெண் யானையின் தாக்குதலில் பலி

Image
  கோயிலுக்கு சென்று திரும்பிய வயோதிபபெண் யானையின் தாக்குதலில் பலி (மண்டூர் ஷமி)  கரடியனாறு  பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் குடாவெட்டை பகுதியில் நேற்று முன்தினம் யானையின தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபபெண் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்னர். ஈரளக்குளம் குடாவெட்டை பிரதேசத்தைச்சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான (62) குஞ்சித்தம்பி தேவராணி என்பவரே இந்த தாக்குதலில் அகப்பட்டு மரணமானவர்ராவார். சம்பவ தினத்தன்று மாலை வேளையில் தனது வீட்டிலிருந்து வழிபாட்டிற்காக ஈரளக்குளம் சிவன்கோயிலுக்கு சென்று காலையில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது பனைமரங்கள் நிறைந்த காட்டுக்குள் மறைந்திருநந்த யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் பிரதேச வாசிகளின் உதவியுடன் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கரடியநாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனை...

புதிய பேருந்து பயணக் கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகிறது!

Image
 புதிய பேருந்து பயணக் கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகிறது! புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று கையளித்திருந்தது. அண்மையில் போக்குவரத்து அமைச்சருக்கும், பேருந்து தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அது இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தது. எனினும், பேருந்து பயண கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும், ஆகக்குறைந்த கட்டணத்தை 40 ரூபாவினால் உயர்த்தவும் குறித்த கலந்துரையாடலின் போது பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்றைய தினத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதுடன், நாளைய தினம் முதல் அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோல் எனக் கூறி சிறுநீரை விற்ற நபர்

Image
  பெற்றோல் எனக் கூறி சிறுநீரை விற்ற நபர் நீர்கொழும்புப் பகுதியில் பெற்றோல் எனக் கூறி சிறுநீரை விற்பனை செய்த நபர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு சுமார் 375 மில்லி லீற்றர் 1000 ரூபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘பல்லா’ என அழைக்கப்படும் போதைக்கு அடிமையானவரே இந்த மோசடியில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றது “ஒரே நாடு, ஒரே சட்டம்” அறிக்கை

Image
  ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றது “ஒரே நாடு, ஒரே சட்டம்” அறிக்கை ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த செயலணியின் தலைவர் வண.கலகொட அத்தே ஞானசார தேரரால் இது கையளிக்கப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியானது 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த செயலணியின் தலைவராக வண.கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம்!

Image
  வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம்! மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அபராதம் விதிக்கப்பட மாட்டாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம தீ விபத்து சம்பவம்: 19 வயது யுவதியும் உயிரிழப்பு!

Image
 ஹோமாகம தீ விபத்து சம்பவம்: 19 வயது யுவதியும் உயிரிழப்பு! ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையான தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த யுவதியும் உயிரிழந்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி இந்த தீ விபத்து இடம்பெற்றிருந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் படுகாயமடைந்திருந்தனர். இதில் தாய் மற்றும் தந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மற்றைய மகள் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய யுவதி இன்று மதியம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த யுவதியின் தாய், தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா ஐஓசி நிறுவனமும் பெற்றோல் விற்பனையை வரையறுத்துள்ளது

Image
  லங்கா ஐஓசி நிறுவனமும் பெற்றோல் விற்பனையை வரையறுத்துள்ளது   எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் உடன் அமலுக்கு வரும் வகையில் பெற்றோல் விற்பனையை வரையறுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள்- ரூ.1,500  ஓட்டோ - ரூ.2,500  கார் - ரூ.7,000 

வைத்தியரை இடமாற்ற கோரி திருகோணமலையில் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

Image
  வைத்தியரை இடமாற்ற கோரி திருகோணமலையில் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் (ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்திய அதிகாரியை உடனடியாக இடமாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது வைத்தியசாலை எமக்கு வேண்டும்,நோயாளிகளை கவனிக்காத வைத்தியர் எமக்கு வேண்டாம்,நோயாளர்களின் நோய்களை கூறும்போது கிண்டலடிக்கும் வைத்தியர் வேண்டாம்,டொக்டர் சோபா எமக்கு வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தற்போது மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வரும் டொக்டர் சோபா கும்புரேகம என்பவர் அநாகரீகமான முறையில் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நோயாளர்கள் வைத்தியசாலைக்கு செல்லும் போது தேவையற்ற வசனங்களை நோயாளர்களை துன்புறுத்தும் விதத்தில் பாவித்து வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குறிப்பிட்டனர். இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தியசாலைக்கு உள்ளே சென்று கடமை ந...

வெளிநாடு செல்லும் தாய்மாருக்கு 'குடும்பப் பின்னணி அறிக்கை' அவசியமில்லை

Image
  வெளிநாடு செல்லும் தாய்மாருக்கு 'குடும்பப் பின்னணி அறிக்கை' அவசியமில்லை இரண்டு (02) வயதோ அல்லது அதற்கு மேற்பட்ட வயது பிள்ளைகள் உள்ள பெண்கள் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய குடும்பப் பின்னணி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனும் தேவையிலிருந்து விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்பான தேவையை நீக்கல் வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் தற்போது நிலவுகின்ற 'குடும்பப் பின்னணி அறிக்கை' சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றமையானது, பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச அறிக்கைகள் பலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறே ஒருசில சந்தர்ப்பங்களில் குறித்த அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக தேவையான...

எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாது என அறிவிப்பு!

Image
  எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாது என அறிவிப்பு! எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

Image
  எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி! எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பதவியை துறக்க தயார் – சஜித்திற்கு பகிரங்க சவால் விடுத்தார் ஹரின்!

Image
  பதவியை துறக்க தயார் – சஜித்திற்கு பகிரங்க சவால் விடுத்தார் ஹரின்! எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ பகிரங்க சவால் விடுத்துள்ளார். மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச, அவ்வாறு எரிபொருளை கொள்வனவு செய்தால், அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதற்கு தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் காணாமல் போன சிறுமி கிளிநொச்சியில் மீட்பு

Image
  யாழில் காணாமல் போன சிறுமி கிளிநொச்சியில் மீட்பு யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சிறுமி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்ட வீதியில் வசிக்கும் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பான நகரப் பகுதிக்கு தனது தேவைக்காக சென்றவேளை, கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கிளிநொச்சியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாரென சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பில் நாம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை தெரிவித்திருக்கின்றோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றனர். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது லொக் டவுன் அல்ல, ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் – ஹரின்

Image
  இது லொக் டவுன் அல்ல, ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் – ஹரின் ஜூலை 10 வரை முடிந்தளவு வீட்டிலிருந்து வேலை செய்வது அவசியம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.நேற்று நள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதை ஒரு பொது முடக்க சூழ்நிலையாகக் கருத வேண்டாம், எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு இது ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் செயல்முறையாகும், அதன் பிறகு நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார். கடைகள், மருந்தகங்கள் பல்பொருள் அங்காடிகள் போன்றவை. சாதாரண நாட்கள் போல் செயல்பட வேண்டும் என்றார்.

‘சஜித் கூறிய எரிபொருள் கப்பல் வந்தால் பதவி துறக்க தயார்’ – ஹரின் அதிரடி

Image
 ‘சஜித் கூறிய எரிபொருள் கப்பல் வந்தால் பதவி துறக்க தயார்’ – ஹரின் அதிரடி ” மூன்று  நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும்.” – என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். சஜித் பிரேமதாச, அவ்வாறு எரிபொருளை கொள்வனவு செய்தால், அமைச்சு பதவியை துறந்து செல்ல தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிரணிகள், அரசியல் நடத்துகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது!

Image
  சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது! சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நேற்று மாலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி இழுவை படகில் பயணித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, ஐந்து கடத்தல்காரர்கள், 6 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உட்பட 34 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வென்னப்புவ, நாத்தாண்டி, சிலாபம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த குழுவினர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் வெளியாகின!

Image
  மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் வெளியாகின! மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாயினை முன்மொழிந்திருந்தது. அத்துடன், 1 தொடக்கம் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் கட்டணத்தை 2 ரூபா 50 சதங்களாலும் அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதேவேளை, 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட நிலையான கட்டணத்தை ஆயிரத்து 100 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை 300 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், தற்போது 4 ரூபா 85 சதமாக உள்ள 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் கட்டணத்தை 12 ரூபா 50 சதங்களால் அதிகரிக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ள போதிலும், 10 ரூபாய் கட்டண திருத்தத்தை மாத்திரமே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்...

கஞ்சன விஜேசேகர மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் கட்டாரிற்கு விஜயம்!

Image
  கஞ்சன விஜேசேகர மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் கட்டாரிற்கு விஜயம்! மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் நேற்று (27) இரவு கட்டார் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் பயணித்துள்ளனர். இதேவேளை, எரிபொருள் பெற்றுக் கொள்வது குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இன்று (28) காலை பிரான்ஸ் சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அங்கிருந்த அவர் ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத கட்டணத்தில் திருத்தம்

Image
  புகையிரத கட்டணத்தில் திருத்தம் புகையிரத கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்த வேண்டும் – ஜனக ரத்நாயக்க

Image
  எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்த வேண்டும் – ஜனக ரத்நாயக்க அந்நியச் செலாவணி வருவாயில் 60% க்கும் அதிகமாக சம்பாதிக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்கள் மாதாந்த மின் கட்டணத்தை அமெரிக்க டொலர்களில் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

பெற்றோர் மீது சூனியம் - நபர் ஒருவரின் தலை துண்டிப்பு

Image
  பெற்றோர் மீது சூனியம் - நபர் ஒருவரின் தலை துண்டிப்பு அக்குரஸ்ஸ, திப்போடுவ பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாளினால் அந்த நபரின் தலை கழுத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது . இந்தக் கொலைச் சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் மகளும் மனைவியும் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலையை செய்த 29 வயதுடைய நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபர் உயிரிழந்தவரின் வீட்டை ஒட்டியுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளதாக துண்டிக்கப்பட்ட தலையை குறித்த நபர் எடுத்துச் சென்றுள்ளதுடன் அதனை நில்வலா கங்கையில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொல்லப்பட்ட நபரின் வீட்டில் நேற்று (26) இரவு தொவிலாட்டம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கொலையாளியின் பெற்றோர் மீது சூனியம் செய்யப்பட்டதாக கூறி குறித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 59 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினர் போல் பொய் வாக்குறுதிகளை நான் வழங்கவில்லை - பிரதமர் ரணில்

Image
 ராஜபக்ச குடும்பத்தினர் போல் பொய் வாக்குறுதிகளை நான் வழங்கவில்லை - பிரதமர் ரணில் "இலங்கையில் கடந்த தேர்தல் காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் வழங்கிய பொய் வாக்குறுதிகளால்தான் நாடு இன்று மோசமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. நானும் அவர்கள் போல் பொய் வாக்குறுதிகளை வழங்கி 'படுமுட்டாள்' என்ற பெயரைக் கேட்க விரும்பவில்லை." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 'நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இவ்வருடத்துக்குள் தீர்வு கிடைக்குமா?' என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று பிரதமரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கடந்த தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் வழங்கிய பொய் வாக்குறுதிகளை நம்பித்தான் அவர்களின் கட்சிக்குப் பெரும்பாலான மக்கள் வாக்களித்து அவர்களை ஆட்சிப்பீடம் ஏற்றினார்கள். ஆனால், இறுதியில் நடந்தது என்ன? எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. ஆணை வழங்கிய மக்களே ராஜபக்ச குடும்ப ஆட்சி வேண்டாம் என்று போராட்டத்தை ஆரம்பித்தார்கள். நானும் ராஜபக்ச குடும்பத்தினர் மாதிரி பொய் வாக்குறுதிகளை...

சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர் கைது - யாழ். இளவாலையில் சம்பவம்!

Image
 சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர் கைது - யாழ். இளவாலையில் சம்பவம்! யாழ்., இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் தாயார் நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்த நேரம் பக்கத்து வீட்டு நபர் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்தார் என்று பாதிக்கப்பட்ட சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார். தாயார் இந்த விடயம் தொடர்பில் இளவாலைப் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் வாயைப் பொத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்ற குறித்த நபர், சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்தார் என்று இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனையிலிருந்து அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட இயந்திரப்படகு கைப்பற்றல்.

Image
 வாழைச்சேனையிலிருந்து அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட இயந்திரப்படகு கைப்பற்றல். வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட இயந்திரப்படகு 54 பேருடன் மட்டக்களப்பு, பாலமீன்மடு கடலில் வைத்து  இன்று அதிகாலை  கைது செய்யப்பட்டுள்ளது இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இயந்திரப்படகு மற்றும் அதிலிருந்து நீண்ட நாட்களுக்கு தேவையான அத்தியவசியப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான 54 பேரையும் இயந்திரப்படகையும் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

Image
 விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்! யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்தனர். அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள முண்டியடித்தனர். அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் , விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும் , ஏனையோருக்கு வழங்க முடியாது எனவும் கூறினார்கள். அத்தனையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் பதிவுகளை முன்னெடுத்தனர். அதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் , கோப்பாய் பிரதேச செயலரும். புத்தூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாருக்கும் அறிவிக்கப்பட்டது அதனை அடுத்து மண்ணெண்ணெய் விவசாயிகளுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்க உள்ளோம். ஏனையோருக்கு விநியோகிக்க முடியாது என இராணுவத்தினருக்கு தெரிவித்ததை அடுத்து , இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளை இடை நிறுத்தினார்கள்.