Posts

Showing posts from February, 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் வௌிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரம்

Image
  முன்னாள் ஜனாதிபதிகளின் வௌிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரம் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார். இன்று (27) நடைபெற்ற பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர், ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை - 3,572 மில்லியன் ரூபா மைத்திரிபால சிறிசேன - 2015 முதல் 2019 வரை - 384 மில்லியன் ரூபா கோத்தபய ராஜபக்ஷ - 2020 முதல் 2022 வரை - 126 மில்லியன் ரூபா ரணில் விக்கிரமசிங்க - 2023 மற்றும் 2024 வரை - 533 மில்லியன் ரூபா அனுர குமார திசாநாயக்க – செப்டம்பர் 2024 முதல் பெப்ரவரி 2025 வரை - 1.8 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 2013 ஆம் ஆண்டில் அதிகளவு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 1,144 மில்லியன் ரூபா என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அரச தாதியர் சங்கத்தினர் போராட்டம்

Image
  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அரச தாதியர் சங்கத்தினர் போராட்டம் (SOPITHAN) 2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளதையடுத்து , மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி தாம் எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது. இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, மேலதிக நேர வரம்பு பிரச்சினையை முன்வைத்து இன்று கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்...

நாமல் ராஜபக்ஷவிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

Image
  நாமல் ராஜபக்ஷவிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் A-330 விமானங்கள் 6 மற்றும் A- 350 விமானங்கள் 8 ஆகியவற்றை கொள்வனவு செய்தமைக்கான எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (26) காலை 09.00 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, நாமல் ராஜபக்ஷவிடமிருந்து 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலம் வழங்கிய பின்னர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இலங்கை எரிபொருள் சந்தையில் மற்றொரு நிறுவனம்

Image
  இலங்கை எரிபொருள் சந்தையில் மற்றொரு நிறுவனம் அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது.   இலங்கைக்கானஅமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நாட்டில் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம் இதுவாகும். RM Parks (தனியார்) நிறுவனம், இலங்கை முழுவதும் உள்ள 150 சில்லறை எரிபொருள் நிலையங்களின் வலையமைப்பை ஷெல் என மறுபெயரிட்டுள்ளது. இது இலங்கை பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தால் 2023 ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தமாகும்.

யாழில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டம்

Image
  யாழில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டம் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தபகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் அண்மையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அதன் போது வர்த்தக நிலையம் ஒன்றில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர் ஒருவர் கண்டறியப்பட்டு, அவருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைகளை நேற்று செவ்வாய்க்கிழமை (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தகர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த யாழ் நீதிமன்று , 30 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்த உத்தரவிட்டது.

சிறைச்சாலைகளில் நவீன பாதுகாப்பு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை

Image
  சிறைச்சாலைகளில் நவீன பாதுகாப்பு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொலைபேசி இணைப்பு தடுப்பு சாதனங்களின் (ஜேமர்) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் சம்பவத்தைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சிறைச்சாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். சிறைச்சாலைகளில் ஏற்கனவே ஜேமர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், கட்டிடங்களின் தன்மை காரணமாக தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாகத் துண்டிக்க முடியவில்லை என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜேமர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது பொருத்தப்பட்டுள்ள ஜேமர்களின் குறைபாடுகள் காரணமாக, கைதிகள் தொலைபேசி இணைப்புகள் மூலம் வெளியாட்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக...

மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம் : காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

Image
  மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம் : காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி மினுவங்கொடை, பத்தடுவன சந்தியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் இன்று (26) காலை 11.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவரின் கால் மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டு தற்போது கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் கெஹல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு கிராமத்தில் இலாகா என கூறி மக்களை தாக்கிய அதிகாரிகள் - சம்பவ இடத்துக்கு உடனடி விஜயம் செய்த எம்.பி ஶ்ரீநாத்

Image
  மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு கிராமத்தில் இலாகா என கூறி மக்களை தாக்கிய அதிகாரிகள் - சம்பவ இடத்துக்கு உடனடி விஜயம் செய்த எம்.பி ஶ்ரீநாத் மட்டக்களப்பு வாகரை எல்லை கிராமமான கட்டுமுறிவை அண்டிய பகுதிகளில் 25, 30 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களை இன்று (25.02.2025) வன இலாகா என்று கூறிக்கொண்டு வந்த அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியும், மானிடவியலுக்கு ஒவ்வாத நடைமுறைகளை அம்மக்களின் மீது திணித்தும் அம்மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும் அங்குள்ள மக்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இ.சிறிநாத் அவர்களுக்கு தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மக்களின் ஆதங்கங்களையும், குமுறல்களையும் கேட்டறிந்தது மேற்கொண்டார். இது தொடர்பாக பிரதேச செயலாளருக்கு உடனடியாக தெரிவித்துடன், பிரதேச செயலாளர் ஊடாக அப்பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகருக்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கு அம்மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றி ஆய்வு செய்யுமாறு பணிப்புரை விடுத்தார். மேலும் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டு மேலதிக ...

பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அர்ச்சுனா MP வேண்டுகோள்

Image
  பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அர்ச்சுனா MP வேண்டுகோள் தனது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய அவர் சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் நான் எதிர்கொள்ள நேர்ந்த சம்பவமொன்று எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கிணங்க பெப்ரவரி 12ஆம் திகதி இரவு யாழ். வலம்புரி ஹோட்டலில் என் மீதும், எனது செயலாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அது தொடர்பில் நான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும், நான் அறியாத வகையில் சடுதியாக எனக்கெதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் பாராளுமன்ற உறுப்பினரான எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் கொலை...

மனைவியுடன் தகாத உறவு - இரண்டு பேரை கடத்தி வெட்டி காயப்படுத்திய சந்தேகநபர்கள் கைது

Image
  மனைவியுடன் தகாத உறவு - இரண்டு பேரை கடத்தி வெட்டி காயப்படுத்திய சந்தேகநபர்கள் கைது இரண்டு பேரை கடத்தி, காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பாறைக்கு அருகில் கொண்டு சென்று கொடூரமாக வெட்டி அவர்களைப் படுகாயப்படுத்தி, பின்னர் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை, ஓவிலிகந்த - அங்கும்புர வீதியில் உள்ள காட்டுப்பகுதிக்கே அழைத்துச் சென்று இவ்வாறு கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டதாக நம்பி, தப்பி ஓடி பியகம மற்றும் லக்கல பகுதிகளில் மறைந்திருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொரியாவில் வசிக்கும் ஒருவரின் மனைவியுடனான தகாத உறவின் காரணமாக, 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடத்தல் மற்றும் சித்திரவதை மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது . மாத்தளை நகரத்தைச் சேர்ந்த சிகையலங்காரம் செய்யும் இருவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவர்கள் மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ...

மாடுகளை திருடி லொறியில் கடத்திச் சென்ற சந்தேக நபர் கைது

Image
  மாடுகளை திருடி லொறியில் கடத்திச் சென்ற சந்தேக நபர் கைது களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் மாடுகளை திருடி லொறியில் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புலத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலத்சிங்கள பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து லொறி ஒன்றை வாடகைக்கு எடுத்து திருடிய மாடுகளை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு மாடுகளையும், வாடகைக்கு எடுக்கப்பட்ட லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். திருடிய மாடுகளை பண்டாரகம, அட்டலுகம பகுதிக்கு கடத்திச் செல்ல சந்தேகநபர் திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

கடும் வெப்பத்தால் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Image
  கடும் வெப்பத்தால் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு நாடு முழுவதும் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக 2,278 குடும்பங்களைச் சேர்ந்த 7,194 பேர் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுர மாவட்டத்தில் 1,885 குடும்பங்களைச் சேர்ந்த 5,776 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 393 குடும்பங்களைச் சேர்ந்த 1,418 பேரும் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தின் மத்துகம மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபெல மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைளத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பாரவூர்தி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு பிணை

Image
  ஞானசார தேரருக்கு பிணை இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (25) பிணையில் விடுதலை செய்துள்ளது. ஞானசார தேரர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஒன்பது மாதசிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.

7 கிரகங்கள் ஒரே வரிசையில் தென்படும் அரிய நிகழ்வு

Image
  7 கிரகங்கள் ஒரே வரிசையில் தென்படும் அரிய நிகழ்வு சூரிய மண்டலத்தைச் சேர்ந்த 7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு இத்தினங்களில் நிலவுவதாக, நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்று முதல் வரும் 28ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சூரியன் மறைந்த பின்னர் இலங்கைக்கும் இந்தக் காட்சி மிகத் தெளிவாகத் தெரியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். பூமியைத் தவிர, சூரிய மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து கிரகங்களையும் ஒரே பொதுவான பாதையில் இதன்போது பார்க்க முடியும் என்று பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.

போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி கைது

Image
  போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி கைது காலி, அம்பலாங்கொடை, குருந்துவத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் எல்பிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டதாக காலி பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது. எல்பிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே பாடசாலை மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியின் சகோதரன் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பாடசாலை மாணவியின் சகோதரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது மனைவி, பாடசாலை மாணவியின் உதவியுடன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; சந்தேக நபரை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

Image
  “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; சந்தேக நபரை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை கைதுசெய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071 - 8591727 அல்லது 071 - 8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான பெண்ணின் விபரங்கள் - பெயர் - பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி வயது - 25 தேசிய அடையாள அட்டை இலக்கம் - 995892480v முகவரி - இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் ஆலோசனைக் கூட்டம் !

Image
  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் ஆலோசனைக் கூட்டம் ! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதியின் உள்ளூராட்சி வேட்பாளர்களை தெரிவு செய்யும் ஆலோசனைக் கூட்டம் மந்திகை மடத்தடியிங் அமைந்துள்ள வடமராட்சி தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (19) மாலை இடம்பெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் குறித்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது. பொதுச் செயலாளராக நியமனமாகிய பின் முதலாவது கட்சியின் ஆலோசனைக் கூட்டம் என்பதனால் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த பின் கூட்டம் ஆரம்பமானது. கட்சியின் ஆதரவாளர்களால் எம்.ஏ. சுமந்திரனுக்கு பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கொளரவம் வழங்கி வரவேற்றனர்.

நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் !

Image
  நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் ! நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.   இந்த நாட்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய் புற்றுநோய்கள் கண்டறியப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் ஆனந்த ரத்நாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இதற்கிடையில், பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான முந்தைய அறிகுறிகள் காணப்படுவதாகவும் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை !!

Image
  மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை !! (Sopithan) ரணவிரு  சேவா அதிகார சபையினால் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ரணவிரு  சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.பி. கருணாநாயக்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (20) திகதி இடம்பெற்றது. நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதற்காக உயிர் நீத்த முப்படை வீரர்கள், காணாமல் போன, மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் நிர்வாக தேவையினை இலகு படுத்தும் முகமாக ரணவீரு சேவா அதிகார சபையினால் நடமாடும் சேவை நடத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் முப்படைவீரர்கள், அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிர்வாக சேவைகளை அவர்களின் இடத்திற்கே சென்று அவர்களுடைய தேவைகள், பிரைச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன் போது வீரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினைகள் மற்றும் அங்கவீனமுற்றவர்களு...

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Image
  துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் கொழும்பு - நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார் சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேசிய துணை அமைச்சர், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட்டம் !!

Image
  ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட்டம் !! ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதி பிரதான வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை பொலிஸார் இருவரும் இடைநிறுத்தி, வர்த்தகரை தலைக்கவசத்தால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். அதனையடுத்து, வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வந்தாறுமூலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த வர்த்தகர் ஏறாவூர் - மயிலம்பாவெளி பகுதியிலுள்ள கிராம சேவகர் காரியாலயத்துக்கு முன்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்திச் சென்றதையடுத்து, அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸார் இருவரும் முந்திச் சென்று வர்த்தகரை இடைமறித்துள்ளனர். தாம் இருவரும் பொலிஸ் அதிகாரிகள் என்றும் “நீ பிழையாக மோட்டார் சைக்கிளை செலுத்தியிருக்கிறாய்” என்றும் வர்த்தகரிடம் கூறியதை தொடர்ந்தே, பொலிஸார் வர்த்தகரை தாக்கியுள்ளனர். அதன் பின்னர், அங்கு...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான "SUWA ARANA" நோய்த்தடுப்பு பராமரிப்பு மையத்தின் குணப்படுத்தும் தோட்டத்தைக் கையளிக்கும் விழா

Image
  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான "SUWA ARANA" நோய்த்தடுப்பு பராமரிப்பு மையத்தின் குணப்படுத்தும் தோட்டத்தைக் கையளிக்கும் விழா சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினமான கடந்த சனிக்கிழமை 15ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா, "Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான "SUWA ARANA" நோய்த்தடுப்பு பராமரிப்பு மையத்தின் குணப்படுத்தும் தோட்டத்தைக் கையளிக்கும் விழாவில் கலந்துகொண்டார். Suwa Aranaவை இயக்கும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க, புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலில் இத்தோட்டத்தின் பங்கு தொடர்பாக எடுத்துரைத்தார். அத்துடன், புற்றுநோயானது மனம், உடல் மற்றும் உயிரை பாதிக்கிறது என்பதை வலியுறுத்தினார். மேலும், இந்த குணப்படுத்தும் தோட்டமானது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆறுதல், புதுப்பித்தல், வலிமையைக் கண்டறிவதற்கான அமைதியான இடமாக விளங்குகிறது. நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் ...

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் திருத்தப்படும் : ஜனாதிபதி !

Image
  ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் திருத்தப்படும் : ஜனாதிபதி ! 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 01.01.2020 க்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியங்கள், பொது நிர்வாக சுற்றறிக்கை எண் 1 இன் படி, 2020 ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய சம்பள அளவுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக திருத்தப்படும் என தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

Image
  அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு   2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாத அடிப்படை சம்பளம் ரூ.24,250-லிருந்து ரூ.40,000-ஆக ரூ.15,750 அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.  தற்போதைய தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் ஒருங்கிணைக்கப்படும், இதனால் குறைந்தபட்ச சம்பளத்தில் நிகர அதிகரிப்பு ரூ.8,250 ஆகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் : ஜனாதிபதி !

Image
  டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் : ஜனாதிபதி ! 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் என்றும் டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான புதிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன் டிஜிட்டல் மேம்பாட்டிற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

எல்போட் எடுக்காமலே எல்போட் அரசாங்கம் தத்தளிக்கிறது - சாணக்கியன் எம்.பி

Image
  எல்போட் எடுக்காமலே எல்போட் அரசாங்கம் தத்தளிக்கிறது - சாணக்கியன் எம்.பி (Sopithan) ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 05 மாதம் நடந்துள்ளது. இன்னும் தமிழர்களுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் உருவாகவில்லை எனவும் அடுத்த மாதம் வரை காத்திருந்துவிட்டு இனி போராட்டங்கள் தொடரும் எனவும் கருத்து தெரிவித்தார். மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 18 வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி நிகழ்வானது பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் தலைவர் அகிலன் தலைமையில் பெரியகல்லாறு கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன் போது கழக ரீதியில் விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, கடந்த வருடம்( 2024 )தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர் தரத்திற்கு தோன்றி பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து மடல்களும், பாராட்டு பத்திரங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்ப...