Posts

Showing posts from January, 2022

இன்றும் நாளையும் நடைப்பெறும் O/L நடைமுறைப் பரீட்சை!

Image
  இன்றும் நாளையும் நடைப்பெறும் O/L நடைமுறைப் பரீட்சை! 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விசேட நடைமுறைப் பரீட்சை இன்றும் (29) நாளையும் (30) நடைபெறவுள்ளது. அந்த வருடத்திற்கான நடைமுறைப் பரீட்சைகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் கொவிட் தொற்று காரணமாக நடைமுறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத பரீட்சார்த்திகளுக்கு விசேட நடைமுறைப் பரீட்சை ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பல நிலையங்களில் நடைமுறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகள் வலயக் கல்வி அலுவலகத்தின் அழகியல் துறைக்கு பொறுப்பான கல்வி பணிப்பாளருக்கு அறிவித்து குறித்த நடைமுறைப் பரீட்சைக்கு தோற்ற முடியும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

விபத்தில் முதியவர் பலி!

Image
  விபத்தில் முதியவர் பலி : மாவடிவேம்பில் சம்பவம்! மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்நத் ஜந்து பிள்ளைகளின் தந்தையான செல்லப்பா சண்முகம் (75) வதுடையவர் நேற்று மாலை (28) அன்று விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து மரண வீடொன்றிக்கு சென்று திரும்பியவேளை மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஆடை தொழிச்சாலையில் பணிபுரியும் நபர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் மோதியதில் குறித்த நபர் சம்ப இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சந்திவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணங்கள், இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடுப்பூசி அட்டை கட்டாயம்!

Image
  திருமணங்கள், இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடுப்பூசி அட்டை கட்டாயம்! திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கம்பஹா மாவட்ட கொவிட் குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை கொவிட் குழுக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள் என் கூறியுள்ள அமைச்சர், கொவிட் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டை மீண்டும் மூடுவது சாத்தியமில்லை எனவும், சுகாதாரத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் தீப்பற்றி எரிந்த வியாபார நிலையம் – மட்டக்களப்பில் சம்பவம்!

Image
  அதிகாலையில் தீப்பற்றி எரிந்த வியாபார நிலையம் – மட்டக்களப்பில் சம்பவம்! மட்டக்களப்பு மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. தீப்பரவல் காரணமாக வியாபார நிலையத்திற்குள் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது. எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தீப்பரவல் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார் இரா.சாணக்கியன்!

Image
  2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார் இரா.சாணக்கியன்! 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. Institute of Politics என்ற அமைப்பினால் குறித்த விருது இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருது வழங்கும் நிகழ்வானது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றிருந்தது. எனினும், மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் மற்றும் வேறு சில முக்கிய காரணங்களினால் இரா.சாணக்கியன் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை என அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த வாரம் Institute of Politics என்ற அமைப்பின் அலுவலகத்தில் வைத்து இரா.சாணக்கியனுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்

Image
  கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல் 2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக களக் கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 15 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. ஒழுக்காற்று காரணங்கள் போன்ற அவசர மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, கிராம உத்தியோகத்தர்களை உரிய காலத்தில் அல்லது வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இடமாற்றம் செய்யக் கூடாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் கிராம உத்தியோகத்தர்கள் காலை வேளைகளில் அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்டும் எனவும் எஞ்சிய நாள்களை களப்பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுநோய் காரணமாக ...

80 இலட்சம் பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் இருவர் கைது

Image
  80 இலட்சம் பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் இருவர் கைது - மட்டக்களப்பில் சம்பவம் 80 இலட்சம் ரூபாய் பெறூமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் மட்டக்களப்பு புல்லுமலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுரேஸ்குமார் தெரிவித்தார். நேற்று மாலை 7.00 மணியளவில் மகோயாவிலிருந்து புல்லுமலை பன்சலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் குறித்த கஜமுத்துக்களை கடத்திக்கொண்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த வேளை வவுணதீவு விசேட அதிரடிப் படையினரும் கல்லடி கடற்படை வீரர்களும் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து 30.8 கிராம் மற்றும் 4.5 கிராம் எடையுள்ள இரு கஜமுத்துக்களும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்கள் ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விடுவிப்பை எதிர்பார்த்து நீதிமன்றம் சென்ற பெற்றோருக்கு ஏமாற்றம்

Image
  பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விடுவிப்பை எதிர்பார்த்து நீதிமன்றம் சென்ற பெற்றோருக்கு ஏமாற்றம்! பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏறாவூர் பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த இருவரது விடுவிப்பு நேற்று (28) இடம்பெறும் என எதிர்பார்த்து நீதிமன்றம் சென்ற பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். குறித்த வழக்கிற்கான நகர்த்தல் மனு நீதி மன்றில் நேற்று  சமர்ப்பிக்கப்படடவேளை மனுவில் கட்டளை எதுவும் வழங்கப்படவில்லை. குறித்த வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டத்தரணிகளினால் நகர்த்தல் மனு அனைத்து வழக்கு திறந்த நீதி மன்றில் அழைக்கப்பட்ட வேளை ,சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பான கடிதம் பொலிசாருக்கு  வியாழக்கிழமை (27) மாலை கிடைக்கப்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பான கடிதம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றுக்கு 25.1.2022 ஆம் திகதி தொலை நகல் மூலம் கிடைக்கப்பெற்று அது வழக்கேட்டில் இணைக்க்பட்டுள்ளதாகவும் அறிய முடிக்கின்றது.அதன் அடிப்படையில் குறி...

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மனுத்தாக்கல்!

Image
  2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மனுத்தாக்கல்! 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கினால் (வெள்ளிக்கிழமை) குறித்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். நிலவும் கொரோனா சூழ்நிலை காரணமாக உயர்தர மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி நிபுணர்களாலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கட்டார் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் உயிரிழப்பு

Image
  கட்டார் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் உயிரிழப்பு கட்டார் − டோஹா பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்புக்கு அருகே நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று முன்தினம் (26) இடம்பெற்றதாக டோஹா நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்மாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் முயற்சித்த போது, அடையாள அட்டையை காண்பிக்குமாறு, அங்கு கடமையிலிருந்த காவலாளி கோரியுள்ளார். இதையடுத்து, குறித்த இளைஞனுக்கும், காவலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையில், குறித்த இளைஞனினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த காவலாளி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இலங்கையர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை டோஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மின்வெட்டை அமுல்படுத்துவதா? இல்லையா?

Image
  மின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் இன்று மின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) மாலை தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். அத்தோடு, அனைத்து நிறுவனங்களுக்கும் நுகர்வோருக்கும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான தீர்மானம் இன்றுடன் காலாவதியாகியுள்ளதாகவும் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். முன்னதாக, போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதால் இன்று வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அண்மையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இன்றைய தினத்தின் பின்னர் எரிபொருள் கிடைப்பதை பொறுத்து நிலைமை மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் ரத்நாயக்க தெரிவித்தார். எவ்வாறாயினும் இலங்கை மின்சார சபையினால் பத்து நாட்களுக்கு போதுமான எரிபொருளைப் பெற்று, அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் திகதி நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நில...

பாணந்துறையில் அம்பியூலன்ஸ் மீது துப்பாக்கிச் சூடு

Image
  பாணந்துறையில் அம்பியூலன்ஸ் மீது துப்பாக்கிச் சூடு! பாணந்துறை கேதுமதி வைத்தியசாலைக்கு முன்னால் இன்று காலை அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரு மோட்டாா் சைக்கிள்களில் வந்த நால்வர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்துள்ளனர். அம்பியூலன்ஸ் வாகனம் மீது தொடர் துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பியூலன்ஸ் சாரதிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பாண்டியன் குளம் பகுதியில் கோர விபத்து ஒருவர் பலி- இன்னொருவர் படுகாயம்

Image
  பாண்டியன் குளம் பகுதியில் கோர விபத்து ஒருவர் பலி- இன்னொருவர் படுகாயம்! முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திர நிக்கசீல(47)என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் செல்வபுரம் பாண்டியன் குளம் பகுதியை சேர்ந்த விமல் விக்னேஷ்(28) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வெகோ ரக மோட்டார் வண்டி மற்றும் நெல் வெட்டும் இயந்திரம் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தில் மோதி குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டதுன் மேலதிக விசாரணைகள் பாண்டியன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்ன நாயக தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூதாட்டியை துஸ்பிரயோகப்படுத்தி கொன்ற நபருக்கு விளக்கமறியல்

Image
  மூதாட்டியை துஸ்பிரயோகப்படுத்தி கொன்ற நபருக்கு விளக்கமறியல்! பதுளை – வேவஸ்ஸ தோட்டத்தில் 60 வயது பெண்ணொருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். டஸ்பி என்ற ​பதுளை பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் 30 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (26) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் சமிந்த கருணாதாச உத்தரவிட்டுள்ளார். இந்த மாதம் 23ஆம் திகதி லெட்சுமணன் சந்ரலோகா என்ற பெண்ணே துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபரின் செருப்பு சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரத்தில் காணப்பட்டதை அடிப்படையாக கொண்டு, பொலிஸ் மோப்ப நாயின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தம் படிந்த ஆடைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

நேற்றிரவு கல்லடி பாலத்துக்கு அருகில் ஏற்பட்ட பதற்றநிலை!

Image
  நேற்றிரவு கல்லடி பாலத்துக்கு அருகில் ஏற்பட்ட பதற்றநிலை! மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்வண்டிகள் சில போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பிரயாணிப்பதாக அனுமதிப்பத்திரம் உள்ள பஸ்வண்டி உரிமையாளர்கள் நேற்று (26) இரவு மட்டு கல்லடி பாலத்துக்கு அருகில் வீதியில் இறங்கி அனுமதிப்பத்திரமின்றி பிரயாணித்த பஸ்வண்டிகளை வழிமறித்தனையடுத்து அங்கு சிலமணி நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது. இதுபற்றி தெரியவருவதாவது , மட்டக்களப்பு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள் சிலர் சம்பவ தினமான நேற்று இரவு 8 மணிக்கு கல்லடி பாலத்துக்கு அருகில் வீதியில் இறங்கி போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பிரயாணிகளை சில பஸ்வணடிகள் ஏற்றி செல்வதாகவும் அதனை பொலிசார் தடுத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பை நோக்கி பயணித்த இரண்டு பஸ்வண்டிகளை வழிமறித்ததையடுத்து பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து பொலிசார் பதற்ற நிலையை தடுப்பதற்காக போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி பறப்பட்டுச் சென்ற 3 பஸ் வண்டிகளுக்கு வழக்கு தாக்குதல் செய்ததுடன் பஸ்வண்டிகளை...

A/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!

Image
  A/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு! க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பெறாத பரீட்சார்த்திகள் எவரேனும் இருப்பின், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்குச் சென்று, சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் அனுமதி அட்டையின் நகலை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அனுமதி அட்டையின் பெயர், பாடம் மற்றும் மொழி ஆகியவற்றை திருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தர 2021 பரீட்சை 2022 பெப்ரவரி 07 முதல் மார்ச் 05 வரை நாடளாவிய ரீதியில் 2,439 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு - சாய்ந்தமருது பொலிஸார் விசாரணையில் !

Image
  வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு - சாய்ந்தமருது பொலிஸார் விசாரணையில் ! வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள சாய்ந்தமருது 15 ஆம் பிரிவு புதுப்பள்ளி வீதியில் இடம்பெற்றுள்ளது. 75 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன. இவ்வாறு மர்மமாக சடலமாக மீட்கப்பட்டவரின் தலைபகுதியில் காயம் ஒன்று காணப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் பிள்ளைகள் திருமணம் முடித்து பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருவதுடன் இவ்வாறு மேற்குறித்த வீட்டில் தனித்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுவது தொடர்பான தகவல் வெளியானது

Image
  எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுவது தொடர்பான தகவல் வெளியானது! சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களையடுத்து சந்தேகத்துக்கிடமான அரைவாசி பாவித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை பாவனையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் அது தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளதுடன் அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தேசிய பத்திரிகைகளில் விளம்பரங்களை பிரசுரிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் மக்களுக்கு அதனை தெளிவுபடுத்தும் வகையில் விரிவான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ருவன் பெர்னாண்டோ சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கிணங்க அவ்வாறான அறிவித்தல்களை ஊடகங்கள் மூலம் வெளியிடுவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நீதிமன்றத்திடம் உறுதியளித்துள்ளது. அரைவாசி பாவிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கு சில சமையல் எரிவாயு விற்பனையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையிலேயே நேற்று நீதிமன்றம் இந்த உ...

மற்றொரு தலைவர் இராஜினாமா

Image
  மற்றொரு தலைவர் இராஜினாமா! விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர எபா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் இனி மனசாட்சிப்படி செயற்பட முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். மேலும் குறித்த இராஜினாமா கடிதத்தை பெப்ரவரி 24 திகதியிட்டு விவசாய அமைச்சருக்கு அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு உற்சவம் – இந்தியர்களுக்கு அனுமதி இல்லை

Image
  கச்சத்தீவு உற்சவம் – இந்தியர்களுக்கு அனுமதி இல்லை! இம்முறை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தில் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இதை தெரிவித்தார். உள்ளூர் யாத்திரிகர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வருடாந்த உற்சவத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பிராணி!

Image
  இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பிராணி! தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ - சமுத்திரராமய விகாரைக்கு அருகில் வசிக்கும் தாரக தயான் என்பவரின் வீட்டிற்கே குறித்த அரியவகை அணில் நேற்று வந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெள்ளை நிற உடலையும், சிவந்த கண்களையும் கொண்ட இந்த அணில் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசவாசிகளால் தேசிய மிருகக்காட்சிசாலைக்கும் களுத்துறை வடக்கு பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். மேலும், இந்த அணிலை அதிசயம் என்று கூறுவதுடன், பெருமளவானோர் வருகைத்தந்து பார்வையிடுகின்றனர். சுமார் ஒரு அடி நீளமுள்ள இந்த அணில் தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை பள்ளக்காடு கிராமத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளது

Image
  அம்பாறை பள்ளக்காடு கிராமத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளது! அம்பாறை ,தீகவாபி பள்ளக்காடு கிராமத்தில் உள்ள குப்பை மேட்டிலுள்ள  பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரண்டு யானைகள் கடந்த வார இறுதியில் இறந்துள்ளதாக  அமபாறை மாவட்ட வனவிலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் 20 யானைகள் குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்களை  சாப்பிட்டு இறந்துள்ளதுடன் ,. கிழக்கு மாகாணத்தில்  திறந்தவெளி குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் , பொலிதீன்  கழிவுகள் தேங்குவதாலும் அப்பகுதியில் அதிகளவில் யானைகள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறந்த யானைகளை  பரிசோதித்த போது, குப்பை மேட்டில் இருந்து பெருமளவிலான அழியாத பிளாஸ்டிக் பொருட்களை  விழுங்கியுள்ளதாகவும்  யானைகள் சாப்பிட்டு ஜீரணிக்கும் சாதாரண உணவு எதுவும் அங்கு தெளிவாகத் தெரியவில்லை எனவும் வனவிலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார மேலும் தெரிவித்தார். 

கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

Image
  கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்! A vision Srilanka  கற்பிட்டி, கண்டக்குளி கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலமொன்று நேற்று மாலை கரையொதுங்கியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் சடலமொன்று கிடப்பதாக மீனவர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து அதுதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலம் அடையாளம் காண முடியாத வகையில் உருக்குலைந்து காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன், குறித்த சடலம் வெளிநாட்டவர் ஒருவருடையதாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் எனினும் அதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாகவும் பொலிஸார் கூறினர். இவ்வாறு உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில் கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசா...

மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் இன்றுடன் முடிவடைகிறது - மின்சார சபை

Image
  மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் இன்றுடன் முடிவடைகிறது - மின்சார சபை மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எண்ணெய், இன்றைய தினத்திற்கு (26) மாத்திரமே போதுமானதாக உள்ளதென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் கையிருப்பு இன்றுடன் நிறைவடைவதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் இன்றைய தினத்திற்கு மாத்திரமே போதுமானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். முற்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் எண்ணெய் இன்றைய தினம் (26) கிடைக்காவிடின், மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா

Image
  இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து எம்.எம்.சி பெர்டினான்டோ இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோழி இறைச்சி – முட்டை விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

Image
  கோழி இறைச்சி – முட்டை விலைகளில் ஏற்பட்ட மாற்றம் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக, கால்நடை வளங்கள், பண்ணை மேம்பாட்டு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். 27 ரூபாய் வரையில் அதிகரித்திருந்த முட்டை விலை, தற்போது 21 ரூபாய் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் முட்டை உற்பத்தியை அதிகரிக்க, தீர்வை வரியின்றி விலங்கு உணவை இறக்குமதி செய்ய நிதி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கமைய, தீர்வை வரியற்ற விலங்குணவுகள் கொண்டுவரப்பட்டு, பண்ணைகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன. எனவே, உற்பத்தியாளர்கள், இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றின் விலைகளை தாமாகவே குறைத்துள்ளனர் என்று, இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்கள் பயணித்த வாகனம் விபத்து

Image
  வைத்தியர்கள் பயணித்த வாகனம் விபத்து யாழில் வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை, மாம்பழம் சந்திக்கு அருகில் நேற்று (25)  இரவு குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் யாழில் இருந்து வேகமாக பயணித்த குறித்த வாகனம் மாம்பழம் சந்திக்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலுடன் மோதி தடம்புரண்டது. அதனையடுத்து அவ்விடத்தில் கூடியவர்கள் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்தவர்களை மீட்டெடுத்தனர். அவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகி இருந்தனர். அதேவேளை, அவர்கள் வாகனத்திலிருந்த வைத்திய இலட்சினை ஸ்ரிக்கரை கிழித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளானவர்கள் தனியார் விருந்தினர் விடுதியில் விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பும் போது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்தனர். பின்னர் வாகனத்துடன் அங்கிருந்து விபத்துக்குள்ளானவர்கள் செல்ல முற்பட்ட போது , அங்கிருந்தவர்கள் அதற்கு அனுமதிக்காது பொலிஸாருக்கு அறிவித்தனர்....

மட்டக்களப்பு ஏறாவூரில் வீட்டினுள் நுளைந்த கொள்ளையர்கள்!

Image
  மட்டக்களப்பு ஏறாவூரில் வீட்டினுள் நுளைந்த கொள்ளையர்கள்! மட்டக்களப்பு ஏறாவூர் 05ஆம் குறிச்சி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பட்டப்பகலில் வீட்டினுள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண் குடும்பஸ்த்தர்களை அச்சுறுத்தி நகைகயை கோரியுள்ளனர். மோட்டார் வண்டியின் இலக்கங்களை மறைத்து வந்து வீட்டினுள் நுளைந் கும்பல் வாள், கத்தி, தடியுடன் நுளைந்து குடும்பஸ்தினரை அச்சுறுத்தி நகைகளைக்கோரியுள்ளனர். குறித்த வீட்டிற்கு அயலவர்கள் வந்தவேளை குறித்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளனர். இச் சம்பவற்கள் அங்கிருக்கும் சிசிரீவி கமராக்களில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேல் மாகாணத்தில் தாதியர்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு!

Image
  மேல் மாகாணத்தில் தாதியர்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு! மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பதவி உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று (புதன்கிழமை) காலை முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர் பதவி உயர்வில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சரினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதாகவும் எவ்வாறாயினும் குறித்த அமைச்சரவை அனுமதியில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக 13, 000 தாதியர்களுக்கான பதவி உயர்வு இல்லாமல் போயுள்ளதாகவும் சுகாதார துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர். குறித்த கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் இதற்கு முன்னரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் அரிசி சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்

Image
  சீனாவின் அரிசி சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவ சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனை கூறினார். சீனாவில் அதிகளவான இரசாயன உரங்கள் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ள 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொவிட் தொற்றில் நிரம்பும் வைத்தியசாலைகள் – அதிகரிக்கும் ஒக்சிஜனின் தேவை

Image
கொவிட் தொற்றில் நிரம்பும் வைத்தியசாலைகள் – அதிகரிக்கும் ஒக்சிஜனின் தேவை கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (IDH) நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவிக்கின்றார். அத்துடன், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கான ஒக்சிஜனின் தேவையும், படிப்படியாக அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் கூறுகின்றார். நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்கள், ஒக்சிஜன் வழங்க வேண்டிய நோயாளர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது. வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளில், 50 முதல் 60 வீதமான பரிசோதனைகளில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது என அவர் கூறுகின்றார். இந்த நிலையில், எதிர்வரும் ஓரிரு வாரங்களில் பெருமளவிலான நோயாளர்கள் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பதிவாக முடியும் என கணிக்க முடிவதா...

வெல்லாவெளி, விவேகானந்தபுரத்தில் கைக்குண்டுகள் மீட்பு !

Image
 வெல்லாவெளி, விவேகானந்தபுரத்தில் கைக்குண்டுகள் மீட்பு  களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி, விவேகானந்தபுரத்தில் வெடிக்காத நிலையில் இரு கைக்குண்டுகள் இரண்டு இன்று 25.01.2022ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.  வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இக்குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.  மீட்கப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து பொதுமக்களுக்கு அபாயத்தை உண்டாக்கக்கூடிய வெடிபொருட்களை தேடிக்கண்டு பிடித்து மீட்டு, செயலிழக்கச் செய்து மக்களை பாதுகாக்கும் பணியினை சிறப்பாக முன்னெடுத்து வருவது வரவேற்கத்தக்க விடயமாகும்.

15 வயது சிறுமியுடன் தகாத உறவு; பிறிதொரு யுவதியுடன் ரகசிய திருமணம்!

Image
  15 வயது சிறுமியுடன் தகாத உறவு; பிறிதொரு யுவதியுடன் ரகசிய திருமணம்! 15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயேகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 19 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு யுவதியை இன்று (26) திருமணம் செய்யவிருந்த நிலையில், சிறுமியின் உறவினர் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று (25) குறித்த இளைஞன், மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் முச்சக்கர வண்டி பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சந்தேக நபரின் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் சிறுமியை கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் வீட்டுக்கு அழைத்து பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த இளைஞன் மற்றுமொரு யுவதியை திருமணம் செய்யவுள்ளமை தெரியவந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்ப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.