தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாயவினால் நிறுத்தஇலங்கையில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாயவினால் நிறுத்தஇலங்கையில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லை. ஒரு நாடு நூறு சட்டங்கள். அதிலும் கிழக்கு வடக்கைப் பொருத்தமட்டில் ஒரு நாடு ஓராயிரம் சட்டங்கள். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாய அவர்களினால் நிறுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் நாங்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம். அவர் கொல்லப்பட்டு 17 வருடங்களின் பின்னராவது காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் அவரது கொலைக்கும், படுகொலை செய்யப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி பதாதைகள் வைக்கப்பட்டது. ஆனால் பொலிசாரினால் அண்மையில் அவை அகற்றப்பட்டிருந்தது. கொ...