Posts

Showing posts from September, 2022

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க தயாராகவே இருந்தார்கள் - நாமல் ராஜபக்ச !

Image
  ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க தயாராகவே இருந்தார்கள் - நாமல் ராஜபக்ச ! ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க அவர்கள் தயாராகவே இருந்தார்கள். ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் பின்னடித்தார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியிலும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து ராஜபக்சக்களின் ஆட்சியைக் கவிழ்க்கவே பாடுபட்டார்கள். அன்றும் சரி, இன்றும் சரி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் நலனில் அக்கறையின்றி செயற்படுகின்றனர். சுயலாப அரசியலே கூட்டமைப்பினரின் இலக்கு. இதைத் ...

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை ! 13 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது!

Image
  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை ! 13 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது! கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சந்தேக நபர் இன்று (வியாழக்கிழமை) அவிசாவளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் 2009 ஆம் ஆண்டு அஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலை சீருடையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. கொலையாளி தொடர்பான வழக்கு தற்போது அவிசாவளை மேல் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்கள் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க முடியாது

Image
  அரசாங்க ஊழியர்கள் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க முடியாது  அரசாங்க ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் போது பின்பற்ற வேண்டிய முறைமை தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சு விசேட  சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றுநிருபங்களை பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவோர் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தக்கூடிய குற்றவாளியாக கருதப்படுவரென்றும் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மயாதுன்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதுடன் தாபனக் கோவை இரண்டாவது பிரிவின் XLVII அத்தியாயத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது சரத்துக்களில் காணப்படும் முறைமையை பின்பற்ற தவறும் அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களே ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தக்கூடிய குற்றவாளியாகக் கருதப்படுவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் உரிமையை அனுபவிப்பதற்கு உரித்தற்ற அதிகாரிகளினால் மேற்க...

நுரைச்சோலை மின்நிலையத்தில் பராமரிப்புக்குழு இன்று ஆய்வு!

Image
  நுரைச்சோலை மின்நிலையத்தில் பராமரிப்புக்குழு இன்று ஆய்வு! நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் பழுது ஏற்பட்டுள்ள இடத்தை, பராமரிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கமைய, நாளை மறுதினத்திற்குள் திருத்தப்பணிகளில் முன்னேற்றம் ஏற்படும் என அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் 3ஆம் அலகில் இருந்து இழந்த 270 மெகாவோட் மின்சாரம் மீண்டும் தேசிய கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நுரைச்சோலையின் 3ஆம் அலகு செயலிழந்தமையினால் 270 மெகாவோட் மின்சாரம், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மற்றும் எம்பிலிபிட்டி ஏஸ் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு மின் உற்பத்திக்கான நப்டா கிடைக்கப்பெற்றதன் மூலம் 170 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் எம்பிலிபிட்டிய ஏஸ் தனியார் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 100 மெகாவோட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.

80 கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கியிருந்த நிலையில் இலங்கை வந்த உகண்டா பிரஜை கைது!

Image
 80 கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கியிருந்த நிலையில் இலங்கை வந்த உகண்டா பிரஜை கைது! ஐந்து கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் நாட்டிற்கு வந்த உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதான சந்தேகநபர் சுமார் 80 கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கியிருந்த நிலையில், உடலிலிருந்து இதுவரை 17 கொக்கெய்ன் உருண்டைகள் அகற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ..!

ஆய்வுகள் ஊடாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் - உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்

Image
 ஆய்வுகள் ஊடாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் - உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்  (ஏ.சி. றியாஸ், றியாத் ஏ.மஜீத்) ஆராய்ச்சியாளர்கள் என்ற அடிப்படையிலே நடைமுறை பிரச்சினைகளுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுகள் ஊடாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் ஒன்பதாவது சர்வதேச ஆய்வரங்கு நேற்று (28) பல்கலைக்கழக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள்  அறபு மொழி பீடத்தின் "அறபு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சி" எனும் தொனிப் பொருளில் இவ்வாய்வரங்கு பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம்.மஸாஹிர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதில் உரையாற்றும் போதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், இலங்கையில் தற்காலத்தில் நிலவுகின்ற பொருளாதாரப் ப...

காட்டு யானைகளை விரட்ட வருடாந்தம் ரூ. 2,800 மில்லியன் செலவு!

Image
 காட்டு யானைகளை விரட்ட வருடாந்தம் ரூ. 2,800 மில்லியன் செலவு! யானை – மனித மோதல்கள் அதிகரித்து வருவதையடுத்து யானைகளை கலைப்பதற்காக தேவைப்படும் யானை வெடிகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 2,800 மில்லியன் ரூபாவை செலவிட்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வருடாந்தம் அதற்கென 14 இலட்சம் யானை வெடிகள் தேவைப்படுவதாகவும் அவை உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்தது. காட்டு யானைகள் விவசாய காணிகள் மற்றும் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் வேளையில் அவற்றை அங்கிருந்து கலைப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் மக்களுக்கு இலவசமாகவே யானை வெடிகளை வழங்கி வருகிறது. தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ..!
Image
  விலைகுறைகிறதாம்~எரிபொருள் விலை~மகிழ்ச்சி தகவல்.! பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டு தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள விலை சூத்திரம் மற்றும் உலக சந்தை விலைகளின் அடிப்படையில் இவ்வாறு லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் விலையை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வரி மற்றும் லாபங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த விலை குறைப்பினை மேற்கொள்ள முடிந்த போதிலும் இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் ஐந்து சந்தர்ப்பங்களில் இதனை செய்யத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஒரு லீட்டர் 95 ஒக்டேன் ரக பெட்ரோலில் 174 ரூபாவும், ஒரு லீட்டர் 92 ஒக்டேன் ரக பெட்ரோலில் 65 ரூபாவும், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்யில் 85 ரூபாவும் அரசாங்கம் லாபமீட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த லாபமானது வரி வருமானத்திற்கு மேலதிகமானது என அவர் தெரவித்துள்ளார். தற்போதைய விலை சூத்திரத்தின் பிரகாரம் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் மக்களின் பணத்...

மேலும் அதிகரிக்கும் பாணின் விலை !

Image
  மேலும் அதிகரிக்கும் பாணின் விலை ! நுவரெலியா மாவட்டத்தில் பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்த பெருந்தொகையானோர் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் பாசிர் மொஹமட் தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலை உயர்வு, தட்டுப்பாடு, பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான பேக்கரிகளை நடத்தி வந்தவர்களில் பெரும்பாலானோர் தமது தொழிலை நிறுத்தியுள்ளனர். பேக்கரி தொழிலில் பணியாற்றிய பலரின் வேலைகள் பறிபோயுள்ளன. பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை உயர்வால், பாண் வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை. தற்போதைய நிலவரப்படி பாண் ஒன்று 500 ரூபாய் வரை உயரும். ஏழைகளின் உணவாக இருந்த பாண் தற்போது ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களின் உணவாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக பேக்கரி தொழில் செய்து வருகிறேன். தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் பேக்கரியை மூட முடிவு செய்துள்ளேன். பேக்கரியில் வேலை செய்தவர்களுக்கு என்ன நடக்கும் என தெரியவி...

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தம்புள்ளை, மாத்தளையில் முன்னெடுப்பு!

Image
  பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தம்புள்ளை, மாத்தளையில் முன்னெடுப்பு! பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்றைய தினம் (27) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தம்புள்ளை, மாத்தளையில் மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இரா.சாணக்கியன், அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

Image
  அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ! ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச பணியாளர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்துறை அமைச்சின் செயலாளரால் இன்று இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்தாபனக் குறியீட்டின் பிரிவுகளின் 6 மற்றும் 7ஆம் அத்தியாயங்களின் விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் பொது அதிகாரிகள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10% தள்ளுபடியுடன் டொலர்களுக்கு விற்கப்படும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகள் !

Image
  10% தள்ளுபடியுடன் டொலர்களுக்கு விற்கப்படும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகள் ! நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு டொலர் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு பெற்றுக்கொண்டால் 10% தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் 40,000 டொலர்களை செலுத்தி குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளார் என நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. துபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் வியாட்புர வீடமைப்புத் தொகுதியில் 02 படுக்கையறைகள் கொண்ட வீடொன்றை இன்று கொள்வனவு செய்து அதன் பெறுமதி 158 இலட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டை டொலர்களில் கொள்வனவு செய்யும் போது 10% தள்ளுபடி வழங்கியதன் அடிப்படையில் 142 இலட்சம் ரூபாயிற்கு...

தற்போதைய பிரச்சினைகள் எதுவும் எனது ஆட்சிக் காலத்தில் இல்லை - மைத்திரிபால சிறிசேன !

Image
  தற்போதைய பிரச்சினைகள் எதுவும் எனது ஆட்சிக் காலத்தில் இல்லை - மைத்திரிபால சிறிசேன ! தற்போதைய பிரச்சினைகள் எதுவும் தமது ஆட்சிக் காலத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அப்போது பொருட்களின் விலை குறைவாகவும், சம்பளம் அதிகமாகவும் இருந்தது. மக்கள் கடவுளின் உதவியால் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் அனைத்துக் கட்சி அரசுகள் உருவாகவில்லை. எனவே, மிகவும் முற்போக்கான கட்சிகளை ஒன்று திரட்டி கூட்டமைப்பை உருவாக்கி மக்கள் நேய ஆட்சியை உருவாக்குவேன் என நம்புகிறேன்.கொழும்பைச் சூழவுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரிக்கப்படுவது நல்லதொரு சூழ்நிலை அல்ல. அதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சி அதிகரிக்கவே செய்யும்’’ என்றார்.

எரிபொருட்களின் தரம் குறித்த முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை !

Image
  எரிபொருட்களின் தரம் குறித்த முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை ! எரிபொருட்களின் தரம் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய எரிபொருள் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பில், இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தரப் பரிசோதனைக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். பெற்றோல் மற்றும் டீசல் தரம் குறைவாக இருப்பதாக, நுகர்வோரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கடந்த மாதத்தில் மட்டும் தமக்கு கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். நாட்டில் 1,200 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளதாகவும் 100 இடங்களில் இருந்து 100 முறைப்பாடுகள் கிடைத்திருந்தால், நாட்டின் 10 சதவீத நிரப்பு நிலையங்களில் தரம் குறைந்த எரிபொருள் உள்ளதென கருதமுடியும் என்று குறிப்பிட்டார். எரிபொருளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் ஒரு லீற்றர...

விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது !

Image
  விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது ! சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோகிராம் எடையுள்ள 08 தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்ல முற்பட்ட விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (27) பிற்பகல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நீக்க நடவடிக்கை !

Image
அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நீக்க நடவடிக்கை ! கொழும்பில் உள்ள பல விசேட பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலிதற்றதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு சட்டமா அதிபரால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. எனினும், கொழும்பின் மத்திய பொருளாதார வலயத்தின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பால், பாரியளவில் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். கொழும்பில் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களினால் ஏற்படும் பொருளாதார சேதங்கள் அதிகமாக உள்ளபோதும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதன் மூலம் வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதற்கிணங்க, அதியுயர் பாதுகாப்...

சியோன் தேவாலய குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மற்றும் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வு.

Image
  சியோன் தேவாலய குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மற்றும் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வு. கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் நீத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு  சார்ள்ஸ் மண்டபத்தில் மட்டக்களப்பு எகட் கரிடாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாஸன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.  இங்கு தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு 30 இலட்சம் ருபா நிதி பகிரப்பட்டது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிதீயுதவியினை வழங்கி வைத்தார்.  இந் நிதியுதவியானது குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கத்தோலிக்க மக்கள் போப் பிரான்ஸிஸ் ஆண்டகை அவர்களை சந்தித்ததன் நிமித்தம் பதிக்கப்பட்ட  இலங்கை மக்களுக்கான நிதியுதவியை அவர் அண்மையில் வழங்கி வைத்தார். அவரின் வேண்டுகளின் பேரில் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று வழங்குவதன் ஒரு கட்டமாக இன்று இந்நிதியுதவி...

புகையிரத சாரதி உறங்கியமையினால் தண்டவாளத்தை விட்டு விலகி கட்டடத்திற்குள் புகுந்த ரயில் !

Image
  புகையிரத சாரதி உறங்கியமையினால் தண்டவாளத்தை விட்டு விலகி கட்டடத்திற்குள் புகுந்த ரயில் ! தெமட்டகொடவில் புகையிரம் ஒன்று கட்டிடம் ஒன்றின் மீது மோதிய சம்பவம் பதிவாகியுள்ளது. தெமட்டகொட புகையிரத தளத்தில் பயணித்த குறித்த புகையிரதம் அங்கிருந்த பழைய கட்டிடம் ஒன்றின் மீது மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புகையிரத சாரதி உறங்கியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து புகையிரத திணைக்களத்தின் ஊடாக உள்ளக விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை

Image
  வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக செட்டியார்தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய இந்த மாதத்தின் முதல் பகுதியில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 73 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கமைய 27 நாட்களுக்குள் 24 கரட் தங்கம் 8 ஆயிரத்து 500 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. இதேவேளை இந்த மாதத்தின் முதல் பகுதியில் 22 கரட் தங்கம் ஒரு பவுண், ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 22 கரட் தங்கம் ஒரு பவுண், ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கமைய 22 கரட் தங்கம் ஒரு பவுண் 7ஆயிரத்து 750 ரூபாவால் குறைவடைந்துள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தமையே தங்கத்தின் விலை குறைவடைந்தமைக்கு காரணம் என செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் அத...

வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருகிறது : இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்

Image
  வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருகிறது : இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்  சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்ஜிகே தெரிவித்துள்ளார். அதிகரித்த வட்டி வீதம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், வாகனங்களின் விலை குறைவடைந்த போதிலும் உதிரிபாகங்கள், வாகன திருத்தல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

முட்டை விலையில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம்?

Image
  முட்டை விலையில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம்? முட்டை விலை தொடர்பில் நாளை(28) மீண்டும் கலந்துரையாடப்படவுள்ளதாக, கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் இது தொடர்பான நாளை(28) கலந்துரையாடல் நடத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். முட்டை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள உற்பத்திச் செலவு நியாயமானதா என்பது குறித்து இதன்போது பரிசீலிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி கட்டுப்பாட்டு விலையில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் ஹேரத் மேலும் தெரிவித்தார்.

வானுயர்ந்த கோபுரங்களை நிர்மாணிப்பதனால் நாடு அபிவிருத்தி அடைந்து விடாது!

Image
  வானுயர்ந்த கோபுரங்களை நிர்மாணிப்பதனால் நாடு அபிவிருத்தி அடைந்து விடாது! வானுயர்ந்த கோபுரங்களை நிர்மாணம் செய்வதனால் நாடு அபிவிருத்தி அடைந்து விட்டதாக கூற முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கதிர்னால் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார். ஜனநாயக ரீதியில் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது எதிர்ப்பை காண்பிக்க அது சந்தர்ப்பமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இலங்கையில் ஒருவர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் அவர் தற்பொழுது வறியவராக மாறியுள்ளார். பெரிய பாதைகளை அமைத்து உலகிற்கு பெரிதாக காட்டினாலும், பெரிய கோபுரங்களை அமைத்து, பெரிய விமான நிலயங்கள் அமைத்து பிரச்சாரம் செய்தாலும், அந்த விமான நிலையத்தில் ஒரு விமானமும் தரையிறங்குவதில்லை. இலங்கையில் பலர் இன்று உண்ண உணவின்றி தவிக்கின்றனர். சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றனர். நத்தார் காலத்தில் கொழும்பை அழகாக சோடிப்பார்கள். எனினும் சாப்பிட எதுமில்லாத அழகிய நகரமாகவே இருக்...

எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயார் என அறிவித்தது லங்கா ஐ.ஓ.சி!

Image
  எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயார் என அறிவித்தது லங்கா ஐ.ஓ.சி!   எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கான தீர்மானம் வலுசக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் உள்ளூர் சந்தையில் அதனை நேரடியாக பிரதிபலிக்க முடியாது. மேலும், தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் கடந்த காலங்களில் அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டன. வெளிநாட்டு நாணய நெருக்கடி எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக நாணய கடிதங்களை விடுவிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுத்ததாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்

நான் தான் சிறப்பாக செய்தேன்” என்பதன் இரண்டாம் கட்டமே இன்றுள்ளது!

Image
  நான் தான் சிறப்பாக செய்தேன்” என்பதன் இரண்டாம் கட்டமே இன்றுள்ளது!         “நான் தான் சிறப்பாக செய்தேன்” என்பதன் இரண்டாம் கட்டமே இன்றுள்ளது ! இரண்டு வருடங்களுக்கு முன்னர் பணத்தை இறைத்து செயற்கையாக கட்டமைக்கப்பட்ட பிரச்சாரப் பொறிமுறையின் ஊடாக மொட்டு முழு நாட்டையும் முட்டாளாக்கியதாகவும்,அந்த தந்திரத்தால் முழு நாடும் கண்மூடித்தனமாக ஏமாந்ததாகவும்,அதன் கோர விளைவாக வங்குரோத்து நாடு உருவாகியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இவ்வாறான போலி அரசியல் கட்டமைப்புடன் அதிகாரத்தை பெற்ற மாவீரன் இந்நாட்டை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று அதன் இரண்டாம் கட்டமாக பொம்மை ஆட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நான் தான் சிறப்பாகச் செய்தேன் எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி நாட்டை அழிவுக்குத் தள்ளினார் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று அதன் இரண்டாம் கட்டம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பு மாவட்டம் கெஸ்பேவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் ...

இலங்கையில் மரக்கறிகள், மீன் உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பு

Image
  இலங்கையில் மரக்கறிகள், மீன் உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கட்டுப்பாட்டு விலை இல்லாததால், வியாபாரிகள் பல்வேறு விலைகளுக்கு பாண் விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சில பிரதேசங்களில் பாண் ஒன்றின் விலை 220 ரூபாவாக உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் நேற்று மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.அறுவடை குறைவினால், மெனிங் சந்தைக்கு மரக்கறியின் வருகை குறைவடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பேலியகொட மத்திய மீன் சந்தையில் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். சந்தைக்கு மீன் பொருட்கள் கிடைப்பது தற்போது குறைந்த அளவிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதேவேளை, 5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இம்மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கூறப்பட்ட போதிலும் சில சதொச கிளைகளில் இதுவரை ப...