Posts

Showing posts from June, 2023

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு!

Image
  உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு! கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிப்பட்ட பிரேரணை, சட்டமூலமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ளடகப்பட்டுள்ள சில சரத்துகளை திருத்துவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சரத்துகள் திருத்தப்பட்டால் தற்போது கலைக்கப்பட்டுள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிர்ணயிக்கும் கால எல்லை வரை மீண்டும் ஸ்தாபிக்க சந்தர்ப்பம் கிடைக்கும். இந்த சட்டமூலம் ஜூன் 26 ஆம் திகதியிடப்பட்டு வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் தலைத்தூக்கும் மலேரியா : எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பிரிவு !

Image
  இலங்கையில் மீண்டும் தலைத்தூக்கும் மலேரியா : எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பிரிவு ! நாட்டில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை, மலேரியா நோய்யற்ற நாடு என 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது. இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 20 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவர் வெளிநாட்டவர்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். ஏனைய 17 பேர் இலங்கை பிரஜைகள் என்பதுடன், அவர்கள் ருவாண்டா, தெற்கு சூடான், உகாண்டா, தான்சானியா, சியரா லியோன் மற்றும் எக்குவடோரியல் கினி ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டவர்கள் என தெரிய வருகின்றது. இதேவேளை, மலேரியா நோயாளர்கள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 071 – 284 1767 மற்றும் 0117 626626 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு 24 நேரமும் அழைப்பை மேற்கொண்டு மலேரியா தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

சாரதி அனுமதி பத்திரம் குறித்த அறிவிப்பு!

Image
  சாரதி அனுமதி பத்திரம் குறித்த அறிவிப்பு! ஆறு மாத காலத்துக்காக வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நாளை (30) வரையான காலப்பகுதியில் வௌியிடப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியான நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் நீர்ச்சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் !

Image
  மோட்டார் சைக்கிள்களில் நீர்ச்சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் ! (நூருல் ஹுதா உமர்). சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை (surfing board) ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. அறுகம்பை ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினால் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை அறுகம்பை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டு, ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்றனர். மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் வியாபார நடவடிக்கைக்காக சுற்றுலாப்பயணிகளின் surfing board களை சைக்கிள்களில் ஏற்றிச் செல்வதற்காக வாடகைக்கு விடுகின்றனர், இதனால் சுற்றுலாத்துறையை மாத்திரம் நம்பி தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என முச்சக்கரவண்டி உரிமை...

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட அறிவிப்பு!

Image
  அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட அறிவிப்பு!  எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பாராளுமன்றத்தின் 16 ஆவது நிலையியற் கட்டளைகளுக்கு அமைய ஜூலை மாதம் 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதியை தலையிடுமாறு அவசர கடிதம் : இலங்கை மருத்துவ சங்கம்!

Image
  ஜனாதிபதியை தலையிடுமாறு அவசர கடிதம் : இலங்கை மருத்துவ சங்கம்! மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் வைத்தியர்கள் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன, "இது மிக உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது உண்மையில் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம். இது இடம்பெறாதது வருத்ததிற்குரிய விடயமாகும். இந்த ஒழுங்குமுறை செயல்முறை முற்றிலும் உடைந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம். நேற்று நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளோம். பல வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால் தரம் குறைந்த மருந்துகள் முறையான மதிப்பீடு இன்றி நாட்டுக்கு வருவதை ...

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பாக வெளியான அறிவிப்பு!

Image
  வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பாக வெளியான அறிவிப்பு! விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்கும் சுகாதார அமைச்சின் தீர்மானம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சேவையில் ஈடுபடும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் குறித்த தீர்மானம் பிரேரணை ஒன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய அரசாங்கத்தினால் பணிபுரியும் விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் 63 வயது வரை நீடிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், குறித்த மனுவை செப்டம்பர் 1ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் பலி : வாகரை பொலிஸ் பிரிவில் சம்பவம்!

Image
  கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் பலி : வாகரை பொலிஸ் பிரிவில் சம்பவம்!   (மண்டூர் ஷமி) வாகரை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கட்டுமுறிவு பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்னத்தட்டுமுனை வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த (14) வயதுடைய நவரெட்ணராசா கிதுசன் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார். சம்பவ தினத்தன்று உறவினர்களுடன் கட்டுமுறிவு காட்டு பிரதேசத்திற்கு மிருக வேட்டைக்கு சென்று கொண்டிருக்கும் போது காட்டுப்பற்ரையில் கையிலிருந்த கட்டுத்துவக்கு சிக்குண்டு வெடித்ததில் குறித்த சிறுவன் சம்ப இடத்திலேயே பலியானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாணைகளின் போது தெரியவந்துள்ளது. வாழைச்சேனை நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற கோரளைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ்சானந்தன் அவர்கள் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரதே பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காலி முகத்திடலில் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் யாசகர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்!

Image
  காலி முகத்திடலில் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் யாசகர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்! காலி முகத்திடலில் தங்கியுள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டை  தியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.  காலி முகத்திடலில் யாசகம் கேட்பவர்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் கஷ்டங்களைக்  கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்காக துறைமுக அதிகாரசபை மற்றும் பொலிஸாருடன் இணைந்து கூட்டு வேலைத்திட்டமொன்றை  அமுல்படுத்தப்படுத்தவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. காலி முகத்திடலில் சுமார் 150 யாசகர்களால் மக்களுக்கு பெரும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவம் , கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த  யாசகர்களுக்கு ரிதியகம மையத்தில் தங்கியிருக்கும்போது அவர்களுக்கு தங்குமிடம் ,  உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அதனுடன் இண...

காதலி உயிரிழந்த சோகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்!

Image
  காதலி உயிரிழந்த சோகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்! காதலி உயிரிழந்த சில நாட்களின் பின்னர் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது. பலாங்கொடை, வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக குறித்த இளைஞரின் காதலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனமுடைந்து கடும் விரக்தியுடன் பொழுதைக் கழித்து வந்த இளைஞர் காதலியின்றி தன்னால் வாழ முடியாது எனக் கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னர் தனது காதலியின் பிரிவு குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றையும் பதிவேற்றியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

500 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி!

Image
  500 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி! அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இரு கட்டங்களாக இந்த கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கான அபிவிருத்தி வேலைத்திட்ட கொள்கையின் கீழ் உலக வங்கியின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த மே மாதம் 17ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த வேலைத்திட்டத் கீழ் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இரு கட்டங்களாக வழங்கப்படவுள்ள இந்த கடனுதவியில் முதல்கட்டமாக 371.2 மில்லியன் டொலர் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இந்தக் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி, இலங்கை மத்திய வங்கியின் இணக்கப்பாடும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த கடனுதவியைப் பெற்றுக் க...

மண் அகழ்வை நிறுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எச்சரிக்கை!

Image
  மண் அகழ்வை நிறுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எச்சரிக்கை! மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு உள்ளிட்ட சில விடயங்களை நிறுத்துமாறு உாிய அமைச்சாின் பணிப்பாளருக்கு தெரிவிக்குமாறு மகாவலி அதிகாரிகளிடம் பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் சிங்கள மொழியில் பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் கருத்து வௌியிடுகளை இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தொிவித்த அவா், இன்று நாட்டின் நிலை என்ன? பொருளாதார நிலை என்ன? வெளிநாட்டு மக்கள் நிலை என்ன? என்ற விடயங்களை கதைக்க வேண்டும். அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பக்கமாக கருத்து தெரிவிக்கின்றனர். நான் புலிகளில் இருந்து வந்தவன், எங்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் யுத்தம் செய்தோம். இது நான் முதல் இருந்த நிலையை வைத்து இப...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணம் அதிகரிப்பு!

Image
  வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணம் அதிகரிப்பு! வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணம் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மேன்முறையீடுகள்!

Image
  அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மேன்முறையீடுகள்! அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு இதுவரையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சபையின் உறுப்பினரான கமல் பத்மசிறி இந்த விடயத்தை குறிப்பிட்டார். மேன்முறையீடுகள் மாத்திரமன்றி ஆட்சேபனைகளுக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த ஆட்சேபனைகளை பெயர் குறிப்பிடாமல் சமர்ப்பிக்கலாம் எனவும் நலன்புரி நன்மைகள் சபையின் உறுப்பினரான கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, நலன்புரி தொடர்பான மேன்முறையீடுகளை சமர்ப்பித்த பின்னரும், சலுகைகளுக்கு தகுதியுடைய உரிய தரப்பினர் பட்டியலில் இல்லை எனின் அந்த விடயத்தில் தலையிடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைத்துக் கொள்ளப்பட...

வன்முறை: சுகத் திஸாநாயக்க உள்ளிட்ட 6 பேருக்கும் 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை

Image
இரத்தினபுரி வன்முறை: சுகத் திஸாநாயக்க உள்ளிட்ட 6 பேருக்கும் 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை #Sri Lanka   #Court Order   #Prison   1997ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட இரத்தினபுரி பிராந்திய சபையின் முன்னாள் தலைவர் சுகத் திஸாநாயக்க உட்பட 6 பிரதிவாதிகளுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 5 வருட கடூழியச் சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.  முர்து பெர்னாண்டோ, எஸ். நீதிபதிகள் துரைராஜா, அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.  இரத்தினபுரி பிரதேசத்தில் நாலந்த எல்லாவல கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வன்முறையின் போது கடையொன்றுக்கு தீ வைத்ததாக குற்றம் சுமத்தி இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக இரத்தினபுரி மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்தார்.  2007 ஆம் ஆண்டு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிகளுக்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.  குற்றவாளிகள் 6 பேர...

உக்ரைன்-ரஷியா போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக ஜோ பைடன் உறுதி

Image
உக்ரைன்-ரஷியா போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக ஜோ பைடன் உறுதி #Russia   #Ukraine   #War   #Lanka4   ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 16 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.   இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போரின் தற்போதைய நிலவரம், உக்ரைனின் எதிர் தாக்குதல் போன்றவை குறித்தும், ரஷியாவில் வாக்னர் என்ற தனியார் கூலிப்படையினர் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியது குறித்தும் இருவரும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு பொருளாதாரம், மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட ஆதரவை தொடர்ந்து வழங்குவதாகவும் ஜோ பைடன் அப்போது உறுதியளித்தார்.

கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர் நடைபெறும் என்று வடகொரியா எச்சரிக்கை

Image
  கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர் நடைபெறும் என்று வடகொரியா எச்சரிக்கை #world news   #Attack   #North_Korea   #Missile   #Lanka4 கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர்ந்து தனது பாதுகாப்பு திறனை அதிகரித்து வந்தது. இதனை சமாளிப்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை வடகொரியா கடுமையாக சாடியுள்ளது.   இந்தநிலையில் வடகொரிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுத போர் ஏற்படும் சூழ்நிலைக்கு தள்ளுகின்றன.  நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை வடகொரியா இனியும் பொறுத்துக் கொள்ளாது. எனவே இதேநிலை தொடர்ந்தால் இதுவரை இல்லாத வகையில் அணு ஆயுத போர் நடைபெறும். அது பேரழிவு தரக்கூடியதாகவும், மீள முடியாததாகவும் இருக்கும்' என வடகொரியா எச்சரித்துள்ளது.

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

Image
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம் #Sri Lanka   #Colombo   #Meeting   #Thailand   இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை கொழும்பில் ஆரம்பமானது.  கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற அதன் ஆரம்ப அமர்வில் இலங்கை தூதுக்குழுவின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க தெரிவிக்கையில்,   இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து திருப்தி அடைய முடியும் என்றும், அது ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவின்படி நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறும் என்றும், அதற்கான ஒப்பந்தம் 2024 மார்ச்சில் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  2024ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள இறுதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் மேலும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தா...

சிறைச்சாலை உத்தியோகத்தரின் சீருடையை அணிந்து சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலாக தப்பிச் சென்ற கைதி!

Image
  சிறைச்சாலை உத்தியோகத்தரின் சீருடையை அணிந்து சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலாக தப்பிச் சென்ற கைதி! வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணைகளை கொழும்பு  விளக்கமறியல்  சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொண்டுள்ளார். இதன்படி பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வு பிரிவினரால் மற்றுமொரு விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர, தப்பிச் சென்று பிடிபட்ட கைதியின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாகவும், கைதி தொடர்பான ஆவணங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளது. சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் சீருடையை கைதி அணிந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் ஊடாக தப்பிச் சென்றுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் குழுவினால் கைதி மருதானை ரயில் நிலையத்த...

'லக்சியனே மந்திரய' : 9 மாடிகள் ; 4000 மில்லியன் ரூபா செலவு ; பல்வேறு அரச நிறுவனங்களும் ஒரே இடத்தில் ; தினமும் 3000 - 5000 பேருக்கு சேவை !

Image
  'லக்சியனே மந்திரய' : 9 மாடிகள் ; 4000 மில்லியன் ரூபா செலவு ; பல்வேறு அரச நிறுவனங்களும் ஒரே இடத்தில் ; தினமும் 3000 - 5000 பேருக்கு சேவை ! கம்பஹா மாவட்ட செயலக நிர்வாக வளாகமான 'லக்சியனே மந்திரய' செவ்வாய்க்கிழமை (27) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளது.  1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கம்பஹா மாவட்ட செயலக நிர்வாக வளாகம் புகழ்பெற்ற 'அக்ரா' மாளிகையில் செயற்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அதன் இடப் பற்றாக்குறை காரணமாக அதனருகில் 9 தளங்கள் கொண்ட புதிய நிர்வாக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டடத்தை கட்டுவதற்கான அடிக்கல் 2019 மார்ச் 12ஆம் திகதி நடப்பட்டது. இக்கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு 4000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதனை திறந்துவைப்பதன் மூலம் கம்பஹா மாவட்டத்தின் பிரதான அரச நிறுவனங்கள் ஒரே இடத்துக்கு கொண்டுவரப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே இடத்துக்கு கொண்டு வருவதன் மூலம் மக்...

வெளிநாடுகளுக்கோ, வெளிப்பிரதேசங்களுக்கோ தேவையின்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் செல்லக்கூடாது : முக்கிய சந்திப்பிற்கு தயாராகிறார் ஜனாதிபதி!

Image
  வெளிநாடுகளுக்கோ, வெளிப்பிரதேசங்களுக்கோ தேவையின்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் செல்லக்கூடாது : முக்கிய சந்திப்பிற்கு தயாராகிறார் ஜனாதிபதி! அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாட்டு பயணங்களையும், கொழும்பிலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கான பயணங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.  இந்த சந்திப்பையடுத்து இம்மாதம் 30, ஜூலை 1 மற்றும் 2ஆம் திகதிகளில் ஆளுந்தரப்பு எம்.பி.க்களை கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்தோடு ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அறிவித்தல் வெளியிடப்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும், இது தொடர்பில் பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் ...

மின்தூக்கி உடைந்து கீழே வீழ்ந்து முன்னாள் சுகாதார அமைச்சர் சிரில் உயிரிழப்பு !

Image
  மின்தூக்கி உடைந்து கீழே வீழ்ந்து முன்னாள் சுகாதார அமைச்சர் சிரில் உயிரிழப்பு ! முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பி. சிரில் விபத்தொன்றில் உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் தனது வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்தூக்கியின் உதவியுடன் மூன்றாவது மாடியின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக தனது சாரதியுடன் மேல் தளத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது மின்தூக்கி உடைந்து கீழே வீழ்ந்தது. இதன்போது முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சாரதி இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முன்னாள் அமைச்சர்  உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பி. சிரிலுக்கு 89 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் குறையவுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை!

Image
  மீண்டும் குறையவுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை! எதிர் வரும் ஜூலை மாதம், நான்காவது முறையாகவும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இறுதியாக 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவாக விற்பனையாகிறது. அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேங்காய் பறித்து தருவதாக சிறுமியை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோக முயற்சி : சந்தேக நபர் கைது!

Image
  தேங்காய் பறித்து தருவதாக சிறுமியை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோக முயற்சி : சந்தேக நபர் கைது! (பாறுக் ஷிஹான்) வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று அங்க சேட்டை செய்த முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் போது தனது வீட்டின் வளவில் விளையாடிக்கொண்டிருந்த சுமார் 8 வயதினை உடைய சிறுமியை அவ்வழியால் மாடு மேய்த்து கொண்டிருந்த 64 வயது மதிக்கதக்க முதியவர் தேங்காய் பறித்து தருவதாக அழைத்து சென்று அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக சிறுமியின் உறவினரால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய சந்தேக நபரான முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நீதிமன்ற நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக சிறுவர் பெண்கள் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் : இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் !

Image
  இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் : இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ! இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புகள் உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் நாளை திங்கட்கிழமை (26) இஸ்ரேல் செல்லவுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாதியர் துறையில் 389 இலங்கையர்கள் பணி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் : திட்டவட்டமாக தெரிவித்தது அமெரிக்கா!

Image
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் : திட்டவட்டமாக தெரிவித்தது அமெரிக்கா! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரதானி வில்லியம் பேர்ன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழுவினர் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் தங்கியிருந்ததன் பின்னணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளான சுரேன் சுரேந்திரன் (பிரித்தானியா), கலாநிதி சோமா இளங்கோவன்(அமெரிக்கா), கலாநிதி எலியஸ் ஜெயரா...