Posts

Showing posts from April, 2025

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி உறுதி

Image
  மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி உறுதி இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தியிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (30) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன் போது இலங்கை பொருளாதார ரீதியில் சரிவடைவதற்குக் கடந்த ஆட்சியாளர்களின் அரசியல் முறையும், வீண்விரயமும், மோசடியுமே காரணமாக அமைந்திருந்தது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இப்போது நாடு மீண்டும் சரியான நிர்வாகத்தைக் கொண்டதாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதற்குச் சிறிது காலம் அவகாசம் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார். தற்போதைய அரசாங்கத்தின் மீது ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்...

வாடகை வீட்டில் கசிப்பு உற்பத்தி ; இருவர் கைது

Image
  வாடகை வீட்டில் கசிப்பு உற்பத்தி ; இருவர் கைது கம்பஹா, பலகல்ல பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் திவுலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மீரிகம பாதுராகொட பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் சோதனையில் குறித்த வாடகை வீட்டிலிருந்து கோடா (21 பீப்பாய்கள்) , கசிப்பு (400 போத்தல்கள்), எரிவாயு அடுப்பு மற்றும் சட்டவிரோத மதுபானம் (400 போத்தல்கள்) என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மினுவாங்கொடை நீதிமன்றில் இன்று புதன்கிழமை (30 ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபானசாலைகளுக்கு பூட்டு - வௌியான அறிவிப்பு

Image
  மதுபானசாலைகளுக்கு பூட்டு - வௌியான அறிவிப்பு மே தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து மதுவரித் திணைக்களம் இன்று (30) விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலக தொழிலாளர் தினத்திற்காக நாளை (1) மே தின பேரணிகள் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைக்கப்பட்ட ஹோட்டல் உரிமங்கள் (R.B. 07/08, புட்டிக் விலா அனுமதிப் பத்திர பகுதிகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் ) தவிர, அனைத்து சில்லறை மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அந்த அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் இன்று (30) மூடப்படும் நேரத்திலிருந்து மே 2 ஆம் திகதி திட்டமிடப்பட்ட திறப்பு நேரம் வரை மூடப்பட வேண்டும் என்று மதுவரித் திணைக்களம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்களைத் தடுக்கவும், வெற்றிகரமான சோதனைகளை நடத்தவும், '1913' துரித இலக்கம் மூலமாகவோ, 011 2 877 688 என்ற தொலைநகல் எண்ணுக்கு தொலைநகல் மூலமாகவோ அல்லது oicoptroxin/aexcise,gov.lk என்...

போலி ஆவணங்களை தயாரித்து காணி விற்பனை ; ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி கைது

Image
  போலி ஆவணங்களை தயாரித்து காணி விற்பனை ; ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி கைது போலி ஆவணங்களை தயாரித்து 03 கோடி ரூபா பெறுமதியான காணி ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படும் ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா - கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆவார். சந்தேக நபரான ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி நுகேகொடை நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு

Image
  பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -2.0% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   2025 மார்ச் மாதத்தில், இது -2.6% ஆக பதிவாகியிருந்தது. இதற்கமைய, உணவுப் பிரிவில், 2025 மார்ச் மாதத்தில் 0.6% ஆக இருந்த பிரதான பணவீக்கம், 2025 ஏப்ரல் மாதத்தில் 1.3% ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2025 மார்ச் மாதத்தில் -4.1% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பிரதான பணவீக்கம், 2025 ஏப்ரல் மாதத்தில் -3.6% ஆகக் அதிகரித்துள்ளது.

மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி

Image
  மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குருணாகல், பன்சியகம - வெஹெரயாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பன்சியகம - வெஹெரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி துஸ்பிரயோகம்; சந்தேக நபர்கள் கைது !

Image
  சிறுமி துஸ்பிரயோகம்; சந்தேக நபர்கள் கைது ! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆனணக்குழுவின் யாழ்ப்பாண அலுவலுகத்தின் நடவடிக்கையின் மூலமே வெளிகொணரப்பட்டுள்ளது. இச்சிறுமி 12 வயது வயதிலிருந்தே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார் என மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த கனகராஜ் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தி குறிப்பில், கடந்த 24 ஆம் திகதி அன்று இச்சிறுமி எமது அலுவலகம் வருகைதந்து தனக்கு ஏற்பட்ட துஷ்பிரயோகத்தை முறையிட்டார். எமது அலுவலகம் துரிதமாக செயற்பட்டு அன்றைய தினமே வடமாகாண நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் ஊடாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலயே சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என நாங்கள் மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்ல தேர்தலை சரியாக பயன்படுத்த வேண்டும் - இரா .சாணக்கியன்

Image
  தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என நாங்கள் மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்ல தேர்தலை சரியாக பயன்படுத்த வேண்டும் - இரா .சாணக்கியன் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என தமிழ் மக்கள் சொல்வதை நாங்கள் மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்வதற்கு இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் தெரிவித்துள்ளார். மன்னாரில் சனிக்கிழமை (26) மாலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கூட்டம் இடம் பெற்றது. மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வடக்கு கிழக்கில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கப் பெற்ற வாக்குகளை விட இம்முறை இடம்...

494 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை அழிக்க நடவடிக்கை

Image
  494 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை அழிக்க நடவடிக்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட, வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற 494 கிலோ 48 கிராம் ஹெராயின், நாளை (28) காலை 10.00 மணிக்கு INSEE சிமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான எரியூட்டியில் அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   குறித்த போதைப்பொருட்கள் புத்தளம், பாலவி பகுதிக்கு அதியுயர் பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து 15.12.2025 அன்று நடத்திய சோதனையின் போது 6 வெளிநாட்டினரிடமிருந்து மேற்படி போதைப்பொருளில் ஒரு பகுதியான 250 கிலோ 996 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. 19.04.2022 அன்று இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 7 வெளிநாட்டு சந்தேக நபர்களிடமிருந்து ஏனைய பகுதியான 243 கிலோ 052 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டிலிருந்து சட்டவிரோத போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக, பதில் பொலிஸ்மா அதிபரின...

காலி கோட்டையிலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி !

Image
  காலி கோட்டையிலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி ! காலி கோட்டையில் இருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் காலை 7.40 மணியளவில் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புகல, குருந்துவத்த பகுதியைச் சேர்ந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 21 வயதுடைய முதலாம் ஆண்டு மாணவரான ஜனித் கமகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தனது நண்பர்கள் குழுவுடன் காலி கோட்டைக்குச் சென்ற நிலையில் காலி கோட்டையில் உள்ள பழைய கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கோட்டை சுவரில் நடந்து செல்லும் போது அவர் கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோட்டை சுவரில் இருந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணவன், பொலிஸ் அதிகாரிகளால் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின் றனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை !

Image
  வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை ! பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (27) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், எனவே மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

லக்கலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

Image
  லக்கலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் மாத்தளை, லக்கலை, ஹெட்டிப்பொல பிரதேசத்தில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து கடந்த புதன்கிழமை (23) காலை இடம்பெற்றுள்ளது. தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும் காரானது தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இராணுவ வீரரை ஏசிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை

Image
  இராணுவ வீரரை ஏசிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புத்தரின் தந்த தாதுவை காட்சிப்படுத்தும் “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வுக்குச் செல்லும் வரிசைக்கு அருகில் நின்ற இராணுவ வீரர் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஏசுவது போன்று காண்பிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்த காணொளி பதில் பொலிஸ்மா அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கண்டி மாவட்டம் இலக்கம் 1க்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையில் குற்றம் இழைத்துள்ளதாக கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது கடும் ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

வத்திக்கான் தூதரகத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்

Image
  வத்திக்கான் தூதரகத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) காலையில் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வே அவர்களைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடியதைத் தொடர்ந்து தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் குறிப்பு எழுதி, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

வரிகள் குறித்து அமெரிக்க இலங்கை பேச்சுவார்த்தை - உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டது அரசாங்கம்

Image
  வரிகள் குறித்து அமெரிக்க இலங்கை பேச்சுவார்த்தை - உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டது அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிகள் குறித்து இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க விஜயத்தின்போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- இலங்கையின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதித்துவ தூதுவர் ஜேமியேசன் கீறிரை ஏப்பிரல் 22ம் திகதி வோசிங்டனில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நிதியமைச்சராகவும் பதவிவகிக்கும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் அறிவுறுத்தலின் படி அமெரிக்க அதிகாரிக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களையும் அவர்கள் கையளித்தனர். இலங்கை கடந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் ,எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும் முழுமையான பொருளாதார மீட்சியைடைவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் தூதுக்குழுவினர் ஜேமியேசன் கிறீரிடம் எடுத்துரைத்தனர். வர்த்தக நிலுவை மற்றும் வரி மற்றும் வரி அல்லாத தடைகளை குறைப்பது குறித்து அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உ...

நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் இருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேநீர் ; பொலிஸில் முறைப்பாடு

Image
  நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் இருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேநீர் ; பொலிஸில் முறைப்பாடு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் இருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் மதுபானத்துக்கு பதிலாக தேநீர் ஊற்றி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்ற பதிவாளர் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த முறைப்பட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் இருந்த சில வெளிநாட்டு மதுபான போத்தல்களை அழிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதனால், வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் இருந்த 81 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 150 பியர் போத்தல்கள் அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது, வெளிநாட்டு மதுபான போத்தல்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அதில் மதுபானத்துக்கு பதிலாக தேநீர் ஊற்றி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற பதிவாளர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி !

Image
  பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி ! பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள இந்நிலையில், “பேராயர் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபட்டதால், அவரை தமது எதிர்கால நடவடிக்கைகளில் புறக்கணிக்க வத்திக்கான் முடிவெடுத்துள்ளதாக” செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. சகோதர செய்தித்தளமொன்றில் இச் செய்தி வெளியாகியுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், குறித்த இணையதளம் அவ்வாறான செய்தியை பிரசுரிக்கவில்லை என factseeker உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறித்த இணையதளத்தின் லோகோவை பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பணிப்பாளர் பாதிரியார் ஜூட் கிருஷாந்திடம் FactSeeker வினவியத்தில், “சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்ற அந்த செய்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார். அதேபோல், வத்திக்கானின் உத்தியோகபூர்வ இணையதளத்திலோ அல்லது வத்திக்கானுடன் நெருக்க...

இன்றைய வானிலை !

Image
  இன்றைய வானிலை ! மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்ட...

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 361 பேர் கைது !

Image
  நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 361 பேர் கைது ! நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 111 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 167 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 82 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 122 கிராம் 447 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 168 கிராம் 513 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 154 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 300 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம் !

Image
  தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம் ! உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றுடன் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசு நிறுவனங்கள், பொலிஸார், முப்படைகள், பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தபால்மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் இந்த நான்கு நாட்களில் தங்கள் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் மேலும் நீட்டிக்கப்படாது என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை பலி !

Image
  அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை பலி ! அக்கரைப்பற்று - பொத்துவில் A-04 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. அக்கரைப்பற்று - பொத்துவில் A-04 பிரதான வீதியில் தாண்டியடி பகுதியில் அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற கார் ஒன்று, வீதியில் சென்ற மாடு மீது மோதி நேற்று (23) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்த நேரத்தில் காரில் சாரதி, அவரது மனைவி மற்றும் குழந்தையும் இருந்துள்ளதுடன், காயமடைந்த குழந்தை திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்தது. அட்டாளைச்சேனை 05 ஐ வசிப்பிடமாகக் கொண்ட 9 மாதக் குழந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் தீர்மானம் !

Image
  பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் தீர்மானம் ! பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை வௌியிட்டார். பாடசாலை மாணவர்களிடையே இரத்த சோகையைக் குறைக்கும் நோக்கில், உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் போசாக்கான உணவுகளை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே ஏற்படும் இரத்த சோகையை நீக்க இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்துடன் தயாரிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி, பாடசாலை மாணவர்களின் மதிய உணவில் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும்.

அமெரிக்க தீர்வை வரி பேச்சுவார்த்தை வெற்றி - ஜனாதிபதி !

Image
  அமெரிக்க தீர்வை வரி பேச்சுவார்த்தை வெற்றி - ஜனாதிபதி ! இலங்கை மீது அமெரிக்கா விதித்த 'உயர் தீர்வை வரியை' திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், இந்த விடயம் தொடர்பாக இரு தரப்பினரும் கூட்டு அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று (23) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். "பலர் எம்மிடம் கேட்கிறார்கள், நீங்கள் திருடாவிட்டாலும் அதனை செய்தவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று. இது குறித்து இன்று காலையும் நான் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசினேன். எங்கே சிக்கல் உள்ளது என்று. எதிர்காலத்தில் பல வழக்குகள் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே இந்த நிறுவனம் வலிமையாக உள்ளதை நாம் உணர்கிறோம். "மக்கள் எங்களுக்கு வாக்களித்து, சட்டத்தை மதிக்கும் நாட்டை எதிர்பார்த்திருந்தால், திசைகாட்டி அரசாங்கம் அந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது." என்றார்.

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினால் சோதனை - விசேட அறிவிப்பு !

Image
  பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினால் சோதனை - விசேட அறிவிப்பு ! பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள் தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே. எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அ...

பணி நீக்கம் செய்யப்பட்ட பேருந்து நடத்துனர் ஒருவரிடம் இலஞ்சம் பெற முயற்சித்த இருவருக்கு விளக்கமறியல் !

Image
  பணி நீக்கம் செய்யப்பட்ட பேருந்து நடத்துனர் ஒருவரிடம் இலஞ்சம் பெற முயற்சித்த இருவருக்கு விளக்கமறியல் ! அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணி நீக்கம் செய்யப்பட்ட பேருந்து நடத்துனர் ஒருவரிடம் இருந்து இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் ஒருவரையும் அங்கு கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனையில் அமைந்துள்ள பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றி வரும் கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர், தன்னிடம் 01 லட்சம் ரூபாய் இலஞ்சம் கோருவதாக பணிநீக்கம் செய்யப்பட்ட பேருந்து நடத்துனர் ஒருவர் கொழும்பிலுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (22) கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து கிழக்கு மாகாண...

கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது !

Image
  கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது ! தலைமன்னார் - உறுமலை கடற்கரைப் பகுதியில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது. இதன்போது சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 8 கிலோ 960 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார், உறுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தங்கம் மற்றும் படகுடன் சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத்தில் கைதுசெய்யப்பட்ட இருவரும் விடுவிப்பு !

Image
  ஈஸ்டர் தினத்தில் கைதுசெய்யப்பட்ட இருவரும் விடுவிப்பு ! ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளின்போது அப்பகுதியில் நடமாடியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உட்பட இருவரே கொழும்பு கடற்கரை வீதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் நேற்று (22) கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தபோது, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு பூஜை வழிபாடுகள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியதாக தெரிவித்து மேற்படி சந்தேக நபர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக குறிப்பிட்டனர். மேற்படி நபர்கள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது எனவும் அவர்கள் தொடர்பான உத்தரவு அவசியமற்றது எனவும் பொ...